Wednesday, May 8, 2024

    IM 1

    IM 30 2

    IM

    IM 30 1

    Ilakkanam Marumo 2

    Ilak Mar

    IM 3

    இலக்கணம் – 3 “விக்ரம்.... என்னடா இது.... இப்பல்லாம் நீ ரொம்ப கோபப்படறே....... எதுக்கு அந்தப் பையனைப் போட்டு அப்படி அடிச்சே......” கேட்டுக் கொண்டே விளையாட்டு மைதானத்தின் படிக்கட்டில் அமர்ந்திருந்த நண்பனின் அருகில் அமர்ந்தான் வினோத். கோதுமை நிறத்தில் ஆறடி உயரத்தில் லட்சணமாய் இருந்த விக்ரமின் கண்களில் ஒரு வேட்டைப் புலியின் தீட்சண்யம் இருந்தது. அழகான முடியை...

    IM 27

    இலக்கணம் – 27 “அங்கிள், கொஞ்சம் உள்ளே வாங்க...” என்றதும் கனகு உள்ளே வர, “இந்த அப்ளிகேஷன்ல உள்ள வரிசைப்படி ஒவ்வொருத்தரா வர சொல்லுங்க...” என்றாள். “சரிம்மா...” என்றவர் ஹாலில் காத்திருந்தவர்களிடம் சென்று, ஒவ்வொருத்தராய் உள்ளே அனுப்பினார். கனகை அங்கேயே இருக்கும்படி சொல்ல அவரும் தொழில் சம்மந்தமான சில கேள்விகளை வந்தவர்களிடம் கேட்டார். குவாரி, கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலில் அவர்களின்...

    IM 4

    இலக்கணம் – 4 நாட்கள் அழகாய் நகர்ந்து கொண்டிருந்தது. சத்யாவுக்கு பிசினஸில் இருந்த ஆர்வத்தைக் கண்டு அவனிடமே சில பொறுப்புகளை விட்டுவிட்டு ஒதுங்கிக் கொண்டார் இளமாறன். இலக்கியாவுக்கு சத்யாவின் மீதுள்ள ஈடுபாடு பெற்றோர்களுக்கும் புரிந்ததால் படிப்பு முடிந்ததுமே கல்யாண விஷயத்தை முடிவு செய்துவிடக் காத்திருந்தனர். அன்று ஒரு வேளை விஷயமாய் சத்யா வெளியூர் சென்றிருக்க இளமாறனும் நேரத்திலேயே...

    IM 10

    இலக்கணம் – 10 மகளின் கல்யாண விஷயத்தில் மனம் நிறைந்திருக்க எல்லாவற்றையும் தானே பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தார் இளமாறன். லலிதாவும் கூட கணவனைக் கிண்டல் செய்தார். “மகளுக்கு கல்யாணம்னு வந்தா எல்லா அப்பாக்களுக்கும் பத்து வயசு கூடின போல முதுமையும் கவலையும் வந்து ஒட்டிக் கொள்ளும்.... உங்களுக்கு என்ன பத்து வயசு குறைஞ்சாப் போல சந்தோஷமா...

    IM 5

    இலக்கணம் – 5 மேடையில் இருந்து கீழே வந்த விக்ரமிடம் மாணவர்கள் சூழ்ந்து கொண்டு பாராட்டு தெரிவிக்க, நம்ப முடியாமல் அதே திகைப்புடன் அமர்ந்திருந்தாள் இலக்கியா. அவளை இழுத்துக் கொண்டு விக்ரமிடம் சென்ற வீணா, “நாட்டு நடப்பை அருமையா கவிதைல சொல்லிருக்கீங்க அண்ணா..... வாழ்த்துகள்.....” என்றாள். சிறு புன்னகையுடன் தலையசைத்தவன் அவளுக்கு அருகில் நம்ப முடியாத...

    IM 7

    இலக்கணம் – 7 மதிய உணவு முடிந்து மரத்தடியில் ஏதோ சூன்யத்தில் கண்ணைப் பதித்து யோசனையில் அமர்ந்திருந்த விக்ரம், அருகில் தயக்கத்துடன் ஒலித்த குரலில் திரும்பினான். இலக்கியாவும், வீணாவும் தயங்கிக் கொண்டே அவனுக்கு முன்னில் வந்து நின்றனர்.                                  இலக்கியாவின் விலாவில் இடித்த வீணா, “ஏய்.... சொல்லுடி.....” என்று தோழியின் காதைக் கடித்தாள். “உங்ககிட்டே ஒரு விஷயம் சொல்ல வந்தேன்......”...

    IM 9

    இலக்கணம் – 9 நிலவுத் தோழிக்கு நிச்சயதார்த்தம்.... நெஞ்சம் நிறைய வாழ்த்திடவே நான் விண்மீன்கள் வாங்கி வந்தேன்.... உன் குறும்பாலும் குணத்தாலும் எங்கள் மனம் நிறைத்தது போல் நின் நெஞ்சம் நிறைந்தவர் மனதிலும் புன்னகை தீபத்தை ஏற்றிவைப்பாய்..... மணமகளாய்.... மனம் படிக்கும் தோழியாய்..... தாயாய்..... தாரமாய்.... தமக்கையாய் எல்லாமுமாய்.... அரவணைக்க அவதாரம் எடுத்து அன்பால் புது சாம்ராஜ்யம் அமைக்க ஆவலோடு வாழ்த்துகிறேன் தோழி..... ஆனந்தமாய் சுமங்கலியாய் அன்புப் பதியின் ஆருயிரில் கலந்து நீடூழி நீ வாழ்க...

    IM 11

    இலக்கணம் – 11 இளமாறனின் புகைப்படத்திற்கு மாலை போட்டு, முன்னில் அமைதியாய் தீபம் ஒன்று எரிந்து கொண்டிருக்க, ஊதுபத்தியின் புகையில் அந்த வீட்டின் சந்தோஷமும் புதைந்து போயிருந்தது. ஐந்தாவது நாள் காரியமாய் இளமாறனின் அஸ்தியைக் கரைத்துவிட்டு வந்திருந்தனர். கன்னத்தில் கண்ணீரின் அடையாளம். கண்கள் அழுதழுது வீங்கி இருக்க சோகமே வடிவாய் அமர்ந்திருந்தாள் இலக்கியா. எந்த நேரமும் அழுது...

    IM 23

    இலக்கணம் – 23                     “என்னடி சொல்லற, உன் அத்தான் விக்ரம் பத்தி விசாரிச்சாரா... அதுக்கு என்ன அவசியம்...” அலைபேசியில் இலக்கியா சொன்ன விஷயங்களைக் கேட்டு ஆச்சர்யக் கேள்வி கேட்டாள் வீணா. “ஆமாண்டி, நான் எப்பவோ ஒரு நாள் சொல்லி இருந்தேன் விக்ரம்க்கு ஏதாவது நல்ல வேலை வேணும்னு... அதை இப்போ கேக்குறார்... ஆனா அவர் குடும்பத்தைப் பத்தி...

    IM 16

    இலக்கணம் – 16 குழந்தை சங்கவி கட்டிலில் நல்ல உறக்கத்தில் இருக்க, அவளுக்கு  அருகில் அமர்ந்திருந்த விக்ரம், சத்யாவைப் பற்றி சொன்ன விஷயங்களை அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்தான் வினோத். இறுதி செமஸ்டர் முடிந்ததும் கல்லூரி ஹாஸ்டலை காலி செய்ய வேண்டி வந்ததால் இருவரும் ஒரு அபார்ட்மெண்டில் வாடகைக்கு தங்கி இருந்தனர். வினோத் ஒவ்வொரு அலுவலகமாய் இன்டர்வியூவிற்கு சென்று...

    IM 21

    இலக்கணம் – 21                     இலக்கியா அவளை எதிர்பாராத பார்வை பார்க்க புன்னகைத்த வீணா, “என்னடி முழிக்கறே... என்னை இந்த நேரத்தில் எதிர்பார்க்கலையா… வீட்டுல போர் அடிச்சது, சரி கொஞ்ச நேரம் உன்னோட இருந்துட்டுப் போகலாம்னு வந்தேன்...” என்றவள், ஹாலில் இருந்த பாட்டியைக் கண்டதும் அவரிடம் சென்றாள். “ஹாய் பாட்டி எப்படி இருக்கீங்க... உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு...”...

    IM 12

    இலக்கணம் – 12 காலை நேரமாதலால் அந்த பெரிய மாலில் கூட்டம் சற்று சுமாராகவே இருந்தது. இலக்கியாவும், வீணாவும் பிளவுஸ் தைப்பதற்கு அளவு கொடுத்துவிட்டு மாலுக்கு வந்திருந்தனர். வீணா விக்ரமை அலைபேசியில் அழைக்க அவன் அங்கிருந்த காபி ஷாப் ஒன்றில் இருப்பதாகக் கூறி அங்கு வரச் சொன்னான். இலக்கியாவை இழுத்துக் கொண்டு அங்கே சென்றாள் வீணா. “ஏய்.......

    IM 24

    இலக்கணம் – 24 “என்னை விடுங்கடா பாவிங்களா.......” கத்தினான் விக்ரம். “விடணுமா, கொஞ்சம் இரு... விட்டுர்றோம்...” சொல்லிக் கொண்டே அவன் இரண்டு கைகளையும் பின்னில் கொண்டு சென்று மடக்கிப் பிடித்த சத்யா வாயில் ஒரு பிளாஸ்டரை ஒட்டவும் திமிறினான். விக்ரமை சத்யாவும் அவன் நண்பனுமாய் நாற்காலியில் சேர்த்துக் கட்டி வைத்தனர். அவன்  முன்னில் வந்து நின்றான் சத்யா. “ஏண்டா...

    IM 22

    இலக்கணம் – 22 வீணா சொன்ன விஷயங்களை மனதுக்குள் அசை போட்டுக் கொண்டே யோசனையுடன் அமர்ந்திருந்தான் விக்ரம். வினோத்தும் அடுத்து என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்க அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள் வீணா. “என்னண்ணா... எதுவும் சொல்லாம யோசிச்சிட்டு இருக்கீங்க... நீங்க சொன்ன விஷயங்கள் எல்லாத்தையுமே ஒரு மாதிரி இலக்கியாவோட மூளைக்குள்ளே திணிச்சி...

    IM 6

    இலக்கணம் – 6 ரொமான்ஸ் நாட்டின் பேரழகன் அவன்...... புன்னகை மாநிலத்தின் பேரரசன் அவன்.... கற்பனை தேசத்தின் காவலன் அவன்..... உலகின் எட்டாம் அதிசயமாய் - எனை நொடிக்கு நொடி வியக்க வைக்கும்   அதிசயங்களின் நாயகன் அவன்...... கட்டிலில் படுத்துக் கொண்டு மனம் நிறையக் கனவுகளுடன் கண்களில் வழிந்த காதலுடன் சத்யாவின் புகைப்படத்துக்குக் கீழே மனதில் தோன்றியதை எழுதி முடித்த இலக்கியா, அவனை ரசித்துக்...

    IM 25

    இலக்கணம் – 25 இலக்கியாவை துப்பாக்கி முனையில் நடத்திக் கொண்டு வெளியே சென்ற சத்யா வெளிப்பக்கமாய் கதவைத் தாளிட்டான். அவர்கள் உள்ளிருந்து கூக்குரல் இட வெற்றிக் களிப்புடன் திரும்பியவனின் கையை இலக்கியா தட்டி விடவும் துப்பாக்கி கீழே விழ அவள் எடுத்துக் கொண்டாள். ஒரு நிமிடம் திகைத்துப் போனாலும் அவனை நோக்கி அவள் துப்பாக்கி நீட்டியதைக் கண்ட...

    IM 8

    இலக்கணம் – 8 தேர்வுக்காய் கிளம்பிக் கொண்டிருந்தனர் விக்ரமும் வினோத்தும். “டேய் விக்ரம்...... இன்னைக்காவது உன்னோட மனசில் உள்ளதை இலக்கியாகிட்டே சொல்லப் போறியா... இல்லை சொல்லாம திரும்ப வந்திடுவியா....” என்றான் வினோத். “ம்ம்..... எக்ஸாம் முடிஞ்சதும் அவகிட்டே பேசறேன் டா.... இன்னைக்கு கண்டிப்பா சொல்லிடறேன்....” என்றான் விக்ரம். “ம்ம்.... சரிடா..... உன் மனசுல உள்ளதை ஓபனா சொல்லிடு..... அப்புறம் அவ...

    IM 26

    இலக்கணம் – 26 இரு மாதங்களுக்குப் பிறகு... “அம்மா.... நான் கிளம்பறேன்...” கைப்பையை எடுத்துக் கொண்டே அடுக்களையை நோக்கிக் குரல் கொடுத்தாள் இலக்கியா. இப்போது அவள் தான் தந்தையின் தொழில் அனைத்தையும் பார்த்துக் கொள்கிறாள். தந்தை இருக்கும்போது அவருக்கு விசுவாசமாய் இருந்த கணக்கர் கனகை சத்யா வேலையை விட்டு நிறுத்தி இருந்தான். அவரை மீண்டும் சேர்த்துக் கொண்டவள் ஒவ்வொரு...

    IM

    இலக்கணம் – 14 காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த சத்யாவின் முகம் யோசனையில் இறுகி இருந்தது. மனதுக்குள் இருந்த டென்ஷன் வண்டி ஓட்டுவதில் தெரிய வேகமாய் சாலையில் கார் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. “ச்சே... இவளுக்கு எப்படி கல்யாண விஷயம் தெரிந்தது... யார் சொல்லி இருப்பார்கள்.... இந்தக் குதி குதிக்கிறாள்... ஏதேதோ சொல்லி சமாளித்து வருவதற்குள் போதும்...

    IM 20

    இலக்கணம் – 20 குழந்தை சங்கவி நல்ல உறக்கத்தில் இருக்க கவலையும் சோர்வுமாய் நடந்த விஷயங்களை நண்பன் வினோத்திடம் கூறிக் கொண்டிருந்தான் விக்ரம். அவன் மனது இலக்கியாவின் வார்த்தைகளின் தாக்கத்தில் பொசுங்கிப் போயிருந்தது. “இப்படி எல்லாம் நடந்திடுமோன்னு நினைச்சு தான் நான் அவகிட்டே சத்யா பத்தி சொல்லத் தயங்கினேன் வினோ... நடுவுல அந்த வீணா வேற லூசு...
    error: Content is protected !!