Saturday, May 18, 2024

    முள்வேலியா? முல்லைப்பூவா?

    அத்தியாயம் – 8 மதியம் உணவருந்த வந்த சுதர்ஷன் பார்த்தது, சோகமாக அமர்ந்திருக்கும் அவன் அம்மம்மாவைத்தான். “எந்த சமஸ்தானம் உங்களுக்கு கப்பம் கட்டலை அம்மம்மா? இவ்வளவு சோகமா இருக்கீங்க?”, என்று புன்னகையுடன் அமர்ந்தான். “ம்ப்ச்… போடா பேராண்டி!”, முகம் திருப்பினார். “அச்சோ…அவ்வளவு சோகமா? என்னாச்சு சொல்லுங்க!”, மெல்ல அவர் கையை தன் கைகளுக்குள் எடுத்து வைத்துக்கொண்டான். சஹானாவைப் பத்தி நேரடியாக எப்படி...
    “பாண்டி ப்ரதர்ஸ்சை மாட்டி விடலை, நீ எம்.எல்.ஏவையும் சேர்த்து மாட்டிவிடற புரியுதா? நம்ம சிக்கினா விளைவு மோசமா இருக்கும்.  எம்.எல்.ஏவோட லிங்க் இருக்குன்னு எங்களுக்கும் தெரியும். இப்ப எதுக்குன்னும் தெரிஞ்சிடுச்சு.  வருண் என்னவோ, அந்த எம்.எல்.ஏகிட்ட ஆதரவு கேட்கலாம்னு சொல்லிட்டு இருந்தான்.என்ன டொனேஷன் நாம குடுத்தாலும், மாச மாசம் படியளக்கற அவனுங்களை பகைச்சிக்க மாட்டார்....
    அத்தியாயம் – 7 சஹானாவிற்கு அன்றைக்கு நைட் ஷிஃப்ட். வேறு ஒருவர் செய்ய வேண்டியது. அவர் குழந்தைக்கு திடீரென்று முடியாமல் போய்விட்டதால், சஹானா ஏற்றுக் கொண்டாள். இரவு மணி பத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. சண்முகம் கிளம்ப இருந்தவர், ரிசெப்ஷனில் அவளைப் பார்த்து திரும்பி வந்தார். “சஹானா, ம்ப்ச் இன்னிக்கு நீ எதுக்குமா இந்த ஷிஃப்ட் எடுத்த, லீவ் எடுத்தவனுக்கு பதிலா...
    அயாத்தனாவின் லாபியில் அமர்ந்தார் கமலம். செம்பருத்தி ஒரு வடக்கத்திய தம்பதியிடம் பேசிக்கொண்டு நின்ற சஹானாவை அளையாளம் காட்டியதும், ‘நீ போய் கார்ல இரு. நான் வேணும்னா போன் பண்றேன்”, என்று துரத்திவிட்டார். அமைதியாக சஹானாவை பார்த்தும் பார்க்காமலும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார். அந்த மனிதர் கேட்டதற்கு புன்னகை மாறாமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். ஒரு வழியாக அவர் மனைவி...
    அத்தியாயம் – 6 காலையில் வழக்கமாக தேயிலை தோட்டத்தின் எதாவது ஒரு பகுதியை பார்வையிடுவதை வழக்கமாக வைத்திருந்தான் சுதர்ஷன். அன்றும் அதைப் போல முடித்துவிட்டு உள்ளே நுழையவும், சண்முகம் எதிர்பட்டார். “சர்… பாட்டிம்மா வந்திருக்காங்க” என்றார் பவ்யமாக. அவரை ஆச்சரியப்பார்வை பார்த்தவன், “என்ன திடீர்னு? போன் கூட செய்யலை? நல்லா இருக்காங்கதானே?”, என்று விசாரித்தப்படியே விச்ராந்தையாக சோஃபாவில் அமர்ந்தான். “நல்லாத்தான்...
    “எங்க இருக்க சஹானா?”, கைபேசி அழைப்பை எடுத்தவுடன் சுதர்ஷனனின் குரல் அதிகாரமாக வந்தது. “ஏன்”, மொட்டையாகக் கேட்டாள் சஹானா. “ம்ப்ச்… பேசணும். சொல்லு” என்றான் சற்று எரிச்சலாக. “சரி… சொல்லு”, என்றாள் வேண்டுமென்றே. “சஹானா…” எச்சரிக்கும் குரலில் அழைத்தான் சுதர்ஷன். “ஹே… என்ன? போன் பண்ணது நீ. என்ன விஷயமோ சொல்றதுன்னா சொல்லு. இல்லையா ஆளை விடு” எரிந்து விழுந்தாள் சஹானா. இனிமையாகச்...
    அத்தியாயம் – 5 சஹானா இந்த ஒரு வாரமாக உற்சாகமாக இருந்தாள். அயத்தானா ரிசார்ட், ஊட்டியின் உயர்தர ரிசார்ட் வகை ஹோட்டல்.   ஹாஸ்பிட்டாலிடி எக்சிகீயுட்டிவ் வேலை. அதே வருவோரை வரவேற்று, புக்கிங் பார்த்து என்ற வழக்கமான வேலைகள்தான், பெயரில், அணியும் உடையில், பேசும் தொனியில் கொஞ்சம் பந்தா, கொஞ்சம் நாகரிகப் பூச்சு. உணவு, தங்குமிடம், பாதுகாப்பு எல்லாம்...
    சப்பாத்தி, அடுத்து சாம்பார் , கூட்டு என்று சாப்பிட்டவள், அதற்கு மேல் முடியாது என்பது போல தயிர் கப்பை கையிலெடுத்து பின்னுக்கு நகர்ந்து அமர்ந்தாள். “என்ன அவ்வளவுதானா? குழந்தை கூட இதைவிட அதிகமா சாப்பிடும். ரசம் சாப்பிடு”, என்று உபசரித்தான். “இல்லை. அதிகமா சாப்பிட முடியாது, இப்படியே பழகிருச்சு. பட் சாப்பாடு வேஸ்ட் பண்ண வேணாம். பாக்...
    அத்தியாயம் – 4 இறுக்கமான ஜீன், குளிருக்கு இதமான புல் ஒவர் டாப், காலில் சாக்ஸ், ஏனோ தானோவென்று தூக்கி கட்டிய முடியிலிருந்து சில கற்றைகள் வெளியே வந்து மேக்கப் துடைத்த அவள் முகத்தை வருடியது. அழகிதான். புற அழகு உள்ளிருக்கும் அழுக்கை மறைத்திருக்கிறது என்ற நினைப்போடு ஒரு அலட்சியப் பார்வையை வீசினான் சுதர்ஷன். பலப்பல அளவிடும்...
    “சார்… நீங்க அந்த சர்வர் பொண்ணு பத்தி கேட்ட விவரம்..”, என்று வந்து நின்றார் சண்முகம். “சொல்லுங்க சண்முகம்”, என்று நடப்பிற்கு வந்தான் சுதர்ஷன். வீடு வரை வந்த ரேகாவிற்கு சஹானாவின் மேல் ஆத்திரம் பொங்கியது. சுதிர் ட்ரைவரை அனுப்பியவள், அடுத்த நிமிடம் சஹானாவின் வீடு நோக்கி காரெடுத்துச் சென்றாள். வருண் குருவிடமிருந்து தகவலைப் பெற்றான். சஹானா...
    அத்தியாயம் – 3 காலையில் எழுந்த ரேகா, அருகில் வருண் இல்லாதது கண்டு பெரிதாக எண்ணவில்லை. பாதி நாட்கள் அவன் விடியலிலேயே தோட்டத்திற்கு சென்றுவிடுவது வழக்கம்தான். அவசர கதியில் தன்னை சுத்தம் செய்தவள், கைப்பேசியை எடுத்து, அவள் நட்பு வட்டத்திற்கு அழைத்தாள்.  நேற்று சஹானாவைப் பார்த்ததைக் கூறி விவரம் சேகரிக்க சொல்லிவிட்டுத்தான் காலை உணவிற்கே கீழே இறங்கினாள். கேட்ட...
    சஹானாவின் வருகை அவளுக்கு சற்றும் பிடிக்கவில்லை. நன்றாகவே தெரிந்தது. ஆனால் இப்படி பயம் கொள்ளும் அளவுக்கு எதற்கு நடந்து கொள்கிறாள் என்று புரியவில்லை. சஹானாவைவிட ரேகா ஒரு வருடம் சின்னவள். பதினோராம் வகுப்புக்குத்தான் அவர்கள் பள்ளியில் சேர்ந்தாள். இவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு. அந்த ஒரு வருடத்துக்குள் என்னவெல்லாம் நடந்துவிட்டது. யோசனையிலிருந்து மீண்டவன் மணி பார்த்துவிட்டு குறுஞ்செய்தி...
    அத்தியாயம் – 2 கிளம்பி சென்றபோது இருந்த குதூகலம் முற்றும் தொலைந்து, கனத்த மௌனம் சூழ்ந்திருந்தது வருண் ரேகா வந்து கொண்டிருந்த உயர் ரக பென்ஸ் காரில். ஓட்டுனரை தவிர்த்து இருவர் மட்டுமே சீண்டிக்கொண்டு வந்த தருணங்கள் கனவு போல இருந்தது ரேகாவிற்கு. இரவு அவன் செய்யப் போவதாக சூளுரைத்ததெல்லாம் அவளைப் பார்த்து நகைப்பதைப் போல...
    கனமாக இருந்தவர்கள் பார்வை கபடாக இருந்தது. அதை புறந்தள்ளியவள் பொய்ப் புன்னகையை பூசிக்கொண்டு, “சம் கேனப்பீஸ் சர்?” என்றாள். உள்ளுக்குள், ‘பேசாம அப்படியே போயிருவோமா? இப்ப அங்க போய் நின்னு, அதுவும் ரேகா முன்னாடி’ என்று யோசிக்கும் போதே, “இந்தா பொண்ணு, எல்லாருக்கும் தரணும். ஒரு இடத்துலயே நின்னா எப்படி, அங்க முதலாளி இருக்கார் பார்,...
    அத்தியாயம் 1 கோத்தகிரி மேட்டுபாளையம் நெடுஞ்சாலையிலிருந்து ஒரு மூன்று கிலோமீட்டரில் உள்ளது அரவேணு கிராமம். உயர் தர தேயிலை ரகங்கள் வளரும் இந்த மலைப்பிரதேசத்தில் கிட்டதட்ட முப்பத்தியைந்து ஏக்கரில் அமைந்திருந்தது மதுரம் தேயிலை தோட்டம். சில வருடங்களாக நலிவுற்று இருந்தது நான்கு வருடங்களுக்கு முன்னர் கை மாறியதிலிருந்து மீண்டும் பொலிவைப் பெற்றிருக்கிறது. மதுரம் தேயிலை தோட்டத்து சமையல்...
    error: Content is protected !!