Tuesday, June 18, 2024

    முள்வேலியா? முல்லைப்பூவா?

    “அதுதான் நேத்தெல்லாம் யோசிச்சேன். ஹாஸ்பிட்டல்ல வந்து படுக்கவும்தான் இரண்டும் கல்யாணத்துக்கு சரின்னே சொல்லுச்சுங்க”, என்று இழுத்தார் கமலம். “சஹானா கிட்ட கேட்டேன் பாட்டி. கொஞ்சம் இஷ்டம் இருந்துச்சு. விட்டிருந்தா கொஞ்ச நாள் கழிச்சு நாங்களே கூட பேசி இதே முடிவுக்கு வந்திருப்போம். பாட்டி அவசரப்பட்டதுல சீக்கிரமே பேசிட்டோம்னு சொன்னா”, வருண் அவன் நம்பும் கதையைக் கூறினான். “ஹ்ம்ம்…...
    அத்தியாயம் – 16 வெற்றிகரமாக முதல் சண்டையை இழுத்துவிட்ட மறு நாள் காலை மெதுவாகவே கண்விழித்தாள் சஹானா. கமலம் தான் தவறுதலாய் எதுவும் சொல்லிவிட்டால மன்னித்துக்கொள்ள சொல்ல, சுதர்ஷன் அதற்கும் கமலத்தை எகிறினான். சூழல் சரியில்லை. மற்றொரு நாள் வருகிறேன் என்று சஹானா கிளம்பிவிட கமலம் சொல்லியும் சுதர்ஷன் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அவளை விட்டுவர கிளம்பிவிட்டான். காரில் பெருத்த ஒரு...
    பின், சீரியசாக, “வருண். உங்கிட்ட நான் சொல்லிட்டு போயிட முடியும்னு நினைச்சியாடா?”, என்று கேட்க, “அதெல்லாம் கொஞ்ச மாசம் கழிச்சு புரிஞ்சுது சஹி. ஆனா உன்னால அந்த அளவுக்கு யோசிச்சு அதை செயல்படுத்தவும் முடிஞ்சுதேன்னு எனக்கு ஆச்சரியம். எந்த நிலைமையிலையும் என்னால சத்தியமா உன்னை மாதிரி போயிருக்க முடியாது சஹி”, என்று நிறுத்தியவன், “ஜெயிக்கலைன்னு...
    அத்தியாயம் – 15 “தர்ஷூவா? அது யாரு”, வருண் கேட்கவும், “ம்ம்… அவருக்கு நான் வெச்ச செல்ல பேரு”, என்று அடிக்கண்ணால் ஒரு பார்வை சஹானா சுதர்ஷனைப் பார்க்க, ஒரு நொடி அவனுக்கே ஜெர்க்கானது. “அஹ்… அம்… யா சனா”, என்று அவனும் அவன் பங்குக்குத் தோன்றியதை அடித்து விட, “இருங்கப்பா… நான் கொஞ்சம் ஸ்டெடியாகிக்கறேன்”, என்று நெஞ்சில் கைவைத்தபடியே...
    மறு நாள் காலை வருண் எட்டு மணிக்கெல்லாம் மருத்துவமனைக்கு வந்துவிட்டான். “டேய்…ஏண்டா? பாட்டி கண் முழிச்சதும் சொல்றேன்னு சொன்னேனே?”, சுதிர் கேட்கவும், “ம்ப்ச்… அவங்க வயசுக்கு என்னை வந்து ஹாஸ்பிட்டல்ல பார்த்தாங்களே. அவங்க கண் முழிக்கும்போது நானும் இருக்கணும். இந்தா ரேகா குடுத்துவிட்டா”, என்று காலைச் சிற்றுண்டி இருந்த காசரோலையும் காஃபி ஃப்ளாஸ்க்கையும் சஹானாவிடம் கொடுத்தான். டாக்டர்கள் வந்து...
    அத்தியாயம் – 14 கோவை மருத்துவமனையின் ஐ.சி.யூ வாசலில் காத்திருந்தார்கள் சுதர்ஷனும் சஹானாவும். கடந்த மூன்று மணி நேரம் திக் திக் நொடிகளாகக் கடந்திருந்தது. பாட்டி சரிந்திருந்த விதத்தைப் பார்த்ததும் ஸ்ட்ரோக் என்பது புரிந்தது. கோல்டன் ஹவர் என்று சொல்லப்படும் முதல் ஒரு மணி நேரத்திற்குள் போட வேண்டிய ஊசியைப் போட்டால்தான் இதன் வீரியத்திலிருந்து தப்ப முடியும். ஊட்டியின்...
    “மை காட். எவ்வளவு கீழ்த்தரமா பேசியிருக்கான்! தேவையா உனக்கு இதெல்லாம் கேட்டுகறதுக்கு? யார் இதை ரெக்கார்ட் பண்ணி லீக் பண்ணது?” “நான் தான் ரெக்கார்ட் பண்ணேன். அதனாலதான் பேசவிட்டேன்”,அசராமல் ஒரு குண்டை வீசினாள் சஹானா. “ஏய்… என்ன பண்ணி வெச்சிருக்க? சைபர் க்ரைம்ல சொல்லி ட்ராக் பண்ணுவாங்க சஹானா. மாட்டினா அந்த எம்.எல்.ஏ சும்மா விடமாட்டான்”, தலையில்...
    அத்தியாயம் – 13 சனிக்கிழமை மாலை வருண் வீட்டில் பார்ட்டி நடந்துகொண்டிருக்க, அயத்தானாவில் வேலையில் இருந்தாள் சஹானா. வருண் பார்ட்டிக்கு அவளை அழைக்கவில்லை. செல்ல முடியாததன் காரணம் புரிந்திருந்தாலும், மனதோரம் என்னவோ லேசான ஒரு வருத்தம். இரவு ஒன்பது மணி போல நடமாட்டம் குறைந்து, சற்று இளைபாற முடிந்தது. ராகுல் அவளுடன் இருந்தான். “இன்னும் ஒரு மணி நேரம்...
    வருணே மனது கேட்காமல், “சஹி… சாரி… “, என்றான் இரங்கிய குரலில். “ம்ப்ச்… இல்லை வருண். நாம பேசணும். ஆனா இப்படி போன்ல இல்லை. யாருக்கு பதில் சொல்றேன், சொல்லலைன்னாலும், உனக்கு நான் கண்டிப்பா சொல்லணும். எலக்ஷன் முடியட்டும் பேசலாம். இப்ப என்ன உன் பொண்டாட்டி கூட சேர்ந்து இந்த பார்ட்டி ஏற்பாட்டை கவனிக்கணும். அவ்வளவுதான?...
    அத்தியாயம் -12 ‘அட நீதானா அந்தக் குயில் ‘ என்று நினைத்த சஹானா அழகான ஒரு புன்னகையை சிந்தி, “வெல்க்கம் சர், ஹால் இங்க இருக்கு”, என்று இராஜவேலை அழைத்துச் சென்றாள். “ஹ்ம்ம்… நீ தான் மும்பையிலர்ந்து வந்திருக்க புதுப்பொண்ணா? பங்கஜ் சொன்னார் அவர் கூட லன்ச் சாப்பிட்டியாமே? என்ன பேர் உனக்கு?”, ஏளனமான ஒரு புன்னகையை...
    சஹானா சொன்னதைக் கேட்டு, “பொறுப்பான பொண்ணு கண்ணு நீ” என்று நெட்டி முறித்தார். அதைப் பார்த்து ஒற்றை புருவம் தூக்கியவன், ஒரு லேசான தலையசைப்புடன் அவன் அறைக்குத் திரும்பிவிட்டான். அவள் குடும்பம், பெற்றோர், வருண் என்று பேச்சு சென்றது. சுதர்ஷன் பெற்றோரை சிறு வயதிலேயே விபத்தில் பறி கொடுத்தது, கமலம் வளர்த்தது, அவனது அமெரிக்கா வாழ்க்கை...
    அத்தியாயம் - 11 சுதிர் வருணின் அலுவலக அறையில் இருந்தான். வருண் அந்த வார இறுதியில் வைக்கப் போகும் பார்ட்டிக்கான திட்டமிடலுக்காக என்று எண்ணி வந்திருந்தான் சுதர்ஷன். அதைப் பற்றி எதுவுமே பேசாமல் வருண் நேரடியாக சுதர்ஷனிடம் தன் பிடித்தமின்மையைக் காட்டினான். “சுதிர், நான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா? எதுக்கு சஹியை இதுல இன்வால்வ் பண்ணீங்க? என்னென்னவோ சொல்றா?...
    செல்லும் வழியிலேயே வருணை கைப்பேசியில் அழைத்தாள். அவன் எடுத்ததும், “ஏண்டா… அறிவை அடமானம் வெச்சிட்டியா?” “மார்னிங் சஹி…எப்படி இருக்க?”, வருண் அவள் சொன்னது காதிலேயே விழாதது போல உற்சாகமாக பேசினான். “டேய்… உன் மொக்க ஐடியாவை இப்பத்தான் சுதர்ஷன் சொன்னான். அப்பறம்தான் நல்லாயிருந்த மார்னிங் கெட்டுப்போச்சு”, என்றாள் எரிச்சலாக. இவன் பேசி இரண்டு நாட்களாகியிருக்க, “என்ன ஐடியா சஹி?”, என்றான்...
    அத்தியாயம் – 10 விடியற்காலை ஐந்து மணி. சஹானா ஒரு ட்ராக் சூட், ஷூ சகிதம் கையில் போனோடு வெளியே வந்தாள். சூரியன் இருட்டை ஊடுறுவும் முயற்சியில் இருக்க, பனிப் படலம் அதோடு சண்டையிட்டுக்கொண்டிருந்தது. சன்ரைஸ் படம் எடுக்க முயலும் ஹோட்டல் கெஸ்ட் போல ஹூடியை இழுத்து தலைக்கு போட்டிருந்தவள் போட்டோ எடுக்க தோதான இடமாக பார்ப்பதுபோல...
    “என்னோட லன்ச் சாப்பிட வரியா பேபி? சும்மா கம்பனி குடு”, என்று பங்கஜ் கேட்கவும் நொடியும் தாமதிக்காமல், “சாரி சர். கெஸ்ட் கூட நாங்க பழகக் கூடாது”, என்றாள் ஒரு வருத்தப் புன்னகையோடு. “ஹே…அதெல்லாம் மத்தவங்களுக்கு. டேனி…எனக்கு எங்க ஊர்காரியோட பேசிகிட்டே சாப்பிடணும். லன்ச் ஏற்பாடு பண்ணிட்டு சொல்லு. சீ யூ பேபி”, என்று லிஃப்ட்டை நோக்கி...
    அத்தியாயம் – 9 வருண் டிஸ்சார்ஜ் ஆகி வீடு வந்து இரண்டு நாட்களாகியிருந்தன. கஹுத்தில் காலரைப் போடுக்கொண்டு வீட்டிலிருந்தபடியே வேலை செய்து கொண்டிருந்தான். சற்றே பயந்து போயிருந்த அவனை ஆதரிக்கும் சிறிய எஸ்டேட் முதலாளிகளுடன் பேசி இது எதேர்சையாக நடந்து விபத்து.  பாண்டி ப்ரதர்ஸ் தாங்களால் என்று சும்மா கிளப்பிவிட்டு பயப்படுத்துகிறார்கள் என்று நம்பிக்கையாகப் பேசினான். ஆனாலும்...
    “ம்க்கும்…கேட்டுட்டுதான் மறுவேலை பார்ப்பாங்க!”, நொடித்தாள் ரேகா. “நீ ஏண்டா அவங்களை பேசவிட்டுட்டு அப்பறம் ப்ளீஸ் போட்டு கெஞ்சற? லிமிட் க்ராஸ் பண்றாங்கன்னு தெரிஞ்சா அதட்ட மாட்ட? எப்ப முதுகெலும்பு வளரப்போது உனக்கு?”, சஹானா முறைக்கவும், “சஹானா, அவரை திட்டாதே”, என்று அதட்டினாள் ரேகா. “ம்க்கும்… அவனுக்கு இல்லைன்னா, நீயாச்சம் கொஞ்சம் முதுகெலும்பு வளர்த்துக்கலாம். உன் மாமியாரை திரும்ப...
    அத்தியாயம் – 8 மதியம் உணவருந்த வந்த சுதர்ஷன் பார்த்தது, சோகமாக அமர்ந்திருக்கும் அவன் அம்மம்மாவைத்தான். “எந்த சமஸ்தானம் உங்களுக்கு கப்பம் கட்டலை அம்மம்மா? இவ்வளவு சோகமா இருக்கீங்க?”, என்று புன்னகையுடன் அமர்ந்தான். “ம்ப்ச்… போடா பேராண்டி!”, முகம் திருப்பினார். “அச்சோ…அவ்வளவு சோகமா? என்னாச்சு சொல்லுங்க!”, மெல்ல அவர் கையை தன் கைகளுக்குள் எடுத்து வைத்துக்கொண்டான். சஹானாவைப் பத்தி நேரடியாக எப்படி...
    “பாண்டி ப்ரதர்ஸ்சை மாட்டி விடலை, நீ எம்.எல்.ஏவையும் சேர்த்து மாட்டிவிடற புரியுதா? நம்ம சிக்கினா விளைவு மோசமா இருக்கும்.  எம்.எல்.ஏவோட லிங்க் இருக்குன்னு எங்களுக்கும் தெரியும். இப்ப எதுக்குன்னும் தெரிஞ்சிடுச்சு.  வருண் என்னவோ, அந்த எம்.எல்.ஏகிட்ட ஆதரவு கேட்கலாம்னு சொல்லிட்டு இருந்தான்.என்ன டொனேஷன் நாம குடுத்தாலும், மாச மாசம் படியளக்கற அவனுங்களை பகைச்சிக்க மாட்டார்....
    அத்தியாயம் – 7 சஹானாவிற்கு அன்றைக்கு நைட் ஷிஃப்ட். வேறு ஒருவர் செய்ய வேண்டியது. அவர் குழந்தைக்கு திடீரென்று முடியாமல் போய்விட்டதால், சஹானா ஏற்றுக் கொண்டாள். இரவு மணி பத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. சண்முகம் கிளம்ப இருந்தவர், ரிசெப்ஷனில் அவளைப் பார்த்து திரும்பி வந்தார். “சஹானா, ம்ப்ச் இன்னிக்கு நீ எதுக்குமா இந்த ஷிஃப்ட் எடுத்த, லீவ் எடுத்தவனுக்கு பதிலா...
    error: Content is protected !!