Tuesday, August 4, 2026

    நெஞ்சம் பேசுதே

    நெஞ்சம் பேசுதே 16                 வாசுதேவகிருஷ்ணன் தனது நிலையை தெளிவாக எடுத்துச் சொல்லியபின்பும் திருமகள் அவனை புரிந்து கொள்ளாமல் முகம் திருப்பிக் கொண்டது பெரிதாக பாதித்தது அவனை. அவன் குணத்திற்கு அவன் தானாக இறங்கிவந்து அவளிடம் விளக்கம் கொடுத்ததே பெரியது.                 அதையும் அவள் கண்டுகொள்ளாமல் போக, "இதற்குமேல் என்னால் எதுவும் செய்ய முடியாது." என்று முடிவெடுத்துக்...
    நெஞ்சம் பேசுதே 12                                    அளவுகடந்த கோபத்தில் இருந்தாள் திருமகள் நாச்சியார். அதீதமான கோபம். கோதை கூறிய செய்தியின் தாக்கம் கொஞ்சமும் குறையவே இல்லை இந்த நிமிடம் வரை. வாசுதேவகிருஷ்ணன் என்ன நினைத்து உதவினானோ, திருமகளைப் பொறுத்தவரை அது பெருங்குற்றமாகிப் போனது.                   அதுவும் தன்னிடம் அதைப்பற்றி ஒன்றுமே கூறாமல் விட்டது இன்னும் வேதனை கொடுக்க, அப்படியென்ன...
    நெஞ்சம் பேசுதே 21          திருமகள் நாச்சியார் அவளது அறையில் உறங்க, வீட்டின் முற்றத்தில் அவள் நினைவுகளுடன் நிலவை துணையாக கொண்டு உறங்க முயன்றான் வாசுதேவ கிருஷ்ணன்.         இரவு வெகுநேரம் கழித்து உறங்கினாலும், காலை தன் வழக்கமான நேரத்திற்கு விழித்தெழுந்தவன் திருவிடம் சொல்லிக் கொள்ளாமலே அவள் வீட்டிலிருந்து வெளியேறி இருந்தான்.         உறக்கத்தில் இருப்பவளை தொந்தரவு செய்ய வேண்டாமென அவன் நினைக்க,...
    நெஞ்சம் பேசுதே 28               திருமகளின் கழுத்தில் முகம் வைத்து, மொத்தமாக அவளை அணைத்தபடி உறங்கிப் போயிருந்தான் வாசுதேவகிருஷ்ணன். ஒருமணி நேரத்திற்கும் மேல் அவன் உறங்கி கொண்டிருக்க, இன்னும் அவன் கைப்பிடியில்தான் இருந்தாள் திருமகள்.               இப்படி தன்னை வளைத்துக் கொண்டிருப்பவன் மீது கோபம் கொண்டாலும், சோர்ந்திருந்த அவன் முகம் கண்டபின் சண்டையிடவும் மனம் வரவில்லை. "அப்படி...
    நெஞ்சம் பேசுதே 27               மருத்துவமனையில் இருந்து தன் பிள்ளையுடன் நேரே தன் தாய் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தாள் கோதை. முழுக்க முழுக்க திருமகள் நாச்சியாரின் முடிவு இது. அன்று ஈஸ்வரி "எங்கிட்டே தான் வந்தாகணும்.." என்று சூளுரைத்தபோதே முடிவெடுத்துவிட்டாள் அவள்.             அன்று இரவே கணவனிடம் பேச, வார்த்தைகள் இல்லாமல் மனைவியைக் கட்டிக்கொண்டு தன் ஒப்புதலை...
    நெஞ்சம் பேசுதே 22         எப்படியோ ஒருவழியாக திருமகள் நாச்சியாரை சரிகட்டி, வாசுதேவன் தன்னுடன் அழைத்து வந்துவிட, வீட்டை நெருங்க நெருங்க ஒரு இனம்புரியாத அச்சம் வியாபித்துக் கொண்டது திருமகளை.         விசாலத்திடம் சொல்லிக்கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறியது இந்த நிமிடம்தான் உரைத்தது அவளுக்கு. கால்கள் தயக்கத்துடன் தந்தியடிக்க, உள்ளே செல்வதா.. இல்லை, இப்படியே ஓடிவிடுவோமா என்று ஏககுழப்பம் பெண்ணுக்கு.       விசாலத்தின் வாய்...
    நெஞ்சம் பேசுதே 18                   மாகாளியம்மன் கோவிலின் முன் ஊர்பெரியவர்களும், பஞ்சாயத்தார்களும், இன்னும் ஊர்மக்கள் பலரும் கூடியிருக்க மீண்டும் ஒரு பஞ்சாயத்து. ஆனால், இந்த முறை புகார் வந்திருப்பது தன் மகன் மீது என்பதால் ராகவன் இருக்கையில் அமராமல் மகனுடனே நின்று கொண்டார்.                  பஞ்சாயத்தார் "நீங்க வந்து உட்காருங்க ஐயா.. யாரா இருந்தா என்ன, விசாரிச்சு...
    நெஞ்சம் பேசுதே 09                 அன்று இரவில் வாசுதேவகிருஷ்ணன் "திரு.." என்று அழைத்துவிடவும், அப்படி ஒரு நிறைவு திருமகள் நாச்சியாருக்கு. என்னவோ பெரிதாக ஏதோ ஒன்றை சாதித்துவிட்ட உணர்வுடன் தான் உறங்கி எழுந்தாள் அவள். ஆனால், அடுத்தநாள் காலையில் வழக்கம் போல் தன் மௌன கவசத்தை அணிந்து கொண்டிருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.                 திருமகள் நாச்சியார் ஏக்கத்துடன் பார்த்து நின்ற போதும்,...
                  "நீ யார்.." என்று அவள் கேட்டுவிட்டால் என் முகத்தை எங்கே வைத்துக் கொள்வேன் என்ற பதைப்பு தான். ஆனால், அவர் நினைத்ததற்கு மாறாக திருமகள் அமைதியாக நின்றதே அதிர்ச்சி என்றால், அவர் வார்த்தையை மீறாமல் அவர் மகனை மணக்க சம்மதித்தது அடுத்த அதிர்ச்சி. அத்தனைப் பேரின் மத்தியில் அவள் மறுத்திருந்தால் எத்தனைப் பெரிய...
       திருமகளை கேட்கவா வேண்டும்... அத்தை கூறிய நிமிடம் சட்டென எழுந்து கொண்டாள். அவன் மீது இருந்த கோபங்கள் விலகி கொள்ள, அவன் மனைவியாக அவனுடன் ஆண்டாளின் முன் நிற்க ஏக்கம் கொண்டது மனது.                   இருவரும் உள்ளே சென்று மீண்டுமொருமுறை வணங்கி முடிக்க, இம்முறை அர்ச்சகர் கொடுத்த குங்குமத்தை வாசுதேவனிடம் நீட்டினாள் திருமகள். வாசுதேவன் அவள் செயலில்...
    நெஞ்சம் பேசுதே 08                         வாசுதேவகிருஷ்ணன் குளித்து வெளியே வர, அவனுக்கு முன்பாக அறையை விட்டு வெளியேறினாள் திருமகள். அவனுக்கான உணவை எடுத்து வைத்தவள் உணவு மேசையில் அவனுக்காக காத்திருக்க, அவளிடம் போராட முடியாமல் அமைதியாக உணவை முடித்துக் கொண்டு வெளியேறி விட்டான் அவன்.                  அவன் சென்றதும் தானும் அமர்ந்து உண்டவள் தனது அறைக்கு சென்று...
    நெஞ்சம் பேசுதே 01   மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் மாலடைந்து மதிலரங்கன் மாலை அவர்தன் மார்பிலே மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் மாலடைந்து மதிலரங்கன் மாலை அவர்தன் மார்பிலே மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால் மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால் மாலை சாற்றினாள்.....                       என்று வாய் அதன்பாட்டிற்கு முணுமுணுத்துக் கொண்டே இருக்க, எதிரில் இருந்த மேடையில் தம்பதி சமேதராக காட்சி கொடுத்த...
    நெஞ்சம் பேசுதே 26             வாசுதேவகிருஷ்ணன் மருத்துவமனையில் இருந்து கிளம்பியவன் வேகமாக தன் வீட்டை அடைய, வீட்டில் ராகவன் இருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் இருந்தது.         திருமகள் நாச்சியார் சமையலறையில் இருக்க, பூனைப்போல் நடந்து அவள் பின்னால் சென்று நின்றான் வாசுதேவகிருஷ்ணன். திரு அவனை கவனிக்காதவள் போல் வேலையைத் தொடர்ந்து கொண்டிருக்க, “திரு..” என்றான் வாசுதேவன்.        ...
    நெஞ்சம் பேசுதே 23               திருமகள் வாசுதேவனின் இல்லம் திரும்பி இரண்டு நாட்கள் கடந்திருந்தது. இரண்டு நாட்களும் பெரிதாக எந்த மாற்றத்தையும் விதைத்து விடவில்லை. எப்போதும் போலவே தன் அத்தையிடம் செல்லம் கொஞ்சிக்கொண்டும், வாசுதேவனை அவ்வபோது வம்பிழுத்துக் கொண்டும் தன்னியல்பு மாறாமல் சுற்றி வந்து கொண்டிருந்தாள் திருமகள் நாச்சியார்.              அதுவும் அன்று வாசுதேவன் "உன்னையே உன்னை...
    அதுவும் அன்னை இரண்டு பேரின் உயிரையும் முன்னே நிறுத்த மறுத்துப் பேச வழியில்லாமல் பட்டென தாலியைக் கட்டிவிட்டான். ஆனால், அத்துடன் முடிந்து விடுவது இல்லையே.. இனிதானே ஆரம்பம்... அது இனிதாக இருக்குமா.. என்ற சிந்தனை தான் ஓடிக் கொண்டிருந்தது வாசுதேவனின் மனதில்.                   திருமகள் நாச்சியாரை எதிர்கொள்ளவே கொஞ்சம் தயக்கமாகத் தான் இருந்தது வாசுதேவகிருஷ்ணனுக்கு. திருமகள் கூட...
    நெஞ்சம் பேசுதே 13                 மழை அடித்து ஓய்ந்த இடம் போல மயான அமைதியைச் சுமந்திருந்தது விசாலத்தின் வீடு. திருமகள் அழுது சோர்ந்து போனவளாக, வீட்டின் பின்கட்டில் சென்று அமர்ந்திருந்தாள். விசாலம் முற்றத்தில் இருந்த தூணில் சாய்ந்து அமர்ந்திருக்க, வாசுதேவகிருஷ்ணன் அவன் அறையை விட்டு வெளியே வரவே இல்லை.                 காலையில் திருமகளின் வீட்டிற்கு சென்றிருந்த ராகவன்...
                           வந்தவுடன் "என் கொழுந்தனை ஏன் அடிக்கிறீங்க.." என்று அவள் கேட்டதை மறக்க முடியவில்லை திருமகளால். அந்த ஒரு வார்த்தையிலேயே மொத்தமாக கோதையை ஒதுக்கியிருந்தது அவள் மனம்.                        அவள் அமைதியாக விசாலத்தின் அருகில் வந்து நிற்க, விசயத்திற்கு ஏகத் திருப்தி அவளது செயல். கோதையை பார்த்து நொடித்துக் கொண்டவர் "வா.." என்று மருமகளின் கையைப்...
    நெஞ்சம் பேசுதே 19                  திருமகள் நாச்சியார் வெளியே கிளம்பிய நேரம் விசாலம் சமையல் அறையில் இருந்திருக்க, ராகவன் ஏதோ வேலையாக சாரதியுடன் வெளியே கிளம்பியிருந்தார்.                   யாருமில்லாத நேரத்தில் இவள் வீட்டை விட்டு வெளியேறியது முதலில் தெரியவே இல்லை விசாலத்திற்கு. மருமகள் மகனுடன் அறையில் இருக்கிறாள் என்று நினைத்திருந்தார் அவள்.               வாசுதேவகிருஷ்ணன் வேலை இருப்பதாக அவனது...
    நெஞ்சம் பேசுதே 10                          "என்கிட்டே நீங்க நீங்களா இருக்கணும் இல்லையா மாமா.." என்று கண்ணீருடன் திருமகள் கேட்டு அமர்ந்திருக்க, அவளுக்கு உண்மையில் என்ன பதில் கூறுவது என்று புரியாத நிலையில்தான் இருந்தான் வாசுதேவன்.                      அவள் கேட்பதில் தவறென்ன என்று அவன் மனம் மங்கைக்கு ஆதரவாக சாய, தவறுகிறோமோ என்று தடுமாறி நின்றான் வாசுதேவகிருஷ்ணன். பேச்சை...
    காலை நன்கு விடிந்தபின்னும் அவள் அப்படியே அமர்ந்து தலையை கால் முட்டியில் புதைத்திருக்க, விசாலம் மருமகளுக்காக காத்திருந்தவர் பொறுக்க முடியாமல் அறைக்குள் நுழைந்திருந்தார். திருமகள் அமர்ந்திருந்த நிலையே இரவு நடந்ததை எடுத்து கூறிட, "நாச்சியா.." என்று வேகமாக அழைத்துக் கொண்டே அவளை நெருங்கியவர் "என்னம்மா.. ஏண்டி இப்படி இருக்க. என் கண்ணு என்னடி ஆச்சு.....
    error: Content is protected !!