நெஞ்சத்தின் நாயகன்
“யசோதா பொறுமையா உக்கார்”, என்று சக்கரவர்த்தி சொன்னதும் “என்னங்க? உங்களுக்கு என்ன பைத்தியமா? இவ்வளவு நடந்துகிட்டு இருக்கு. நீங்க பொறுமையா உக்காரச் சொல்றீங்க?”, என்று கேட்டாள்.
“எனக்கு மரியாதை கொடுக்குறதா இருந்தா உக்கார். இல்லைன்னா வெளிய போ”, என்று சக்கரவர்த்தி சொல்ல “உங்க கிட்ட போய் சொன்னேன் பாருங்க? நமக்கு இந்த சம்பந்தம் வேண்டாம். வாங்க...
அங்கே போனதும் தனிமை அவளை விட்டு ஓடியது. விக்ரம் பத்மா இருவரும் அவளிடம் சந்தோஷமாக பேச அர்ச்சனாவும் நிம்மதியானாள். அர்ச்சனா பத்மா இருவரும் சேர்ந்து சமைத்து மூவரும் சாபிட்டார்கள்.
அவள் தூங்குவதற்காக அவளுடைய வீட்டுக்கு கிளம்பும் போது “நான் வந்து உன் கூட துணைக்கு படுத்துக்கவா மா?”, என்று கேட்டாள் பத்மா.
“இல்லை மா வேண்டாம். அதெல்லாம்...
போன முறை விடுபட்டிருந்த அனைத்து நண்பர்களையும் திருமணத்துக்கு அழைத்திருந்தான் பிரபாகரன். அர்ச்சனாவுக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் தான் திருமணம் நின்றது என்று சொல்லி இருந்ததால் யாரும் அவளை தவறாக பேச வில்லை.
அழகு நிலையப் பெண் அர்ச்சனாவுக்கு அலங்காரம் ஆரம்பிக்க முன்பு அர்ச்சனாவுக்கு என வாங்கி வைத்திருந்த புடவையையே அவளுக்கு கொடுத்தான் பிரபாகரன்.
அவள் அதைக்...
அடுத்த நாள் காலையில் எப்போதும் போல் எழுந்து அலுவலகம் கிளம்பி கீழே வந்தான் பிரபாகரன். சாப்பிட அமர்ந்தவன் யசோதா முகத்தில் இருந்த கோபத்தில் புருவத்தை உயர்த்தினான்.
“நேத்து அவ்வளவு தூரம் பேசின பிறகு நல்லா தானே இருந்தாங்க. இப்ப என்ன ஆச்சுன்னு தெரியலையே?”, என்று எண்ணி “அம்மா என்ன ஆச்சு? உங்க முகமே சரியில்லை?”, என்று...
அத்தியாயம் 8
உந்தன் மூச்சுக் காற்றின்
வெப்பத்தை சுமந்து செல்கிறேன்
உந்தன் அருகாமையில்!!!
அப்போதும் அவன் தயங்க “உங்க கூட இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கணும்னு ஆசைப் படுறேன். இன்னும் நாலு நாள் கழிச்சு நிச்சயதார்த்தம். அப்ப தான் உங்களைப் பாக்க முடியும். அதான் சொல்றேன் வாங்க”, என்று அவள் சொல்லியதும் அவன் உருகிப் போனான்.
இருவரும் காம்பவுண்ட் கேட் திறந்து...
“நம்பிட்டேன் டா. சரி நான் நைட் கிளம்பி நாளைக்கு வரேன். உன்னைப் பத்தி உன் ஹாஸ்பிட்டல்ல விசாரிக்கிற மாதிரி வருவேன்”
“டேய் அங்க அர்ச்சனா இருப்பா டா”
“நான் உன்னைப் பத்தி விசாரிக்க போறதே அவ கிட்ட தானே?”
“அடப்பாவி, உன் ஆளைப் பாக்க நான் ஊருகாயா?”
“உன் கல்யாணமும் என் கைல தான் டா இருக்கு. அதனால அட்ஜஸ்ட்...
“எனக்கு தெரியும் அகில். உனக்கும் பிரபாவுக்கும் இடைல சண்டையே வராது. அதே மாதிரி அர்ச்சனாவும் உங்க தம்பிக்கு சொத்து கொடுக்க கூடாதுன்னு சொல்ல மாட்டா. ஏன்னா அர்ச்சனா உன்னை அவளோட கூட பிறந்த பிறப்பா தான் நினைப்பா. ஆனா அஞ்சலி நினைக்கணுமே?”, என்று சொல்ல அவளுக்கு திக்கென்று இருந்தது. அவரை நிமிர்ந்து பார்த்தாள். ஆனால்...
“ஒரு நிமிஷம் மாப்பிள்ளை”, என்று அழைத்தார் சொக்கலிங்கம்.
“என்ன மாமா?”
“நீங்க எடுத்துருக்குற முடிவு எல்லாம் சரி தான். ஆனா இன்னொருத்தர் கிட்ட நீங்க வேலை பாக்க கூடாது. நம்ம கம்பெனியை எடுத்து நடத்துங்க. நாளைக்கே உங்க பேர்ல எழுதி வைக்கிறேன்”, என்று சொல்ல “அப்பா....” “என்னங்க”, என்று அஞ்சலி மற்றும் மஞ்சுளா இருவரும் கத்தினார்கள்.
“இல்லை மாமா...
“உங்களை இந்த அளவுக்கு கார்னர் பண்ண அவசியம் என்ன பிரபா? இத்தனைக்கும் அவர் உங்க வீட்ல இருக்கார், உங்க கம்பெனில தானே வேலை பாக்குறார். அப்புறம் என்ன?”
“அவன் ஸ்கூல் படிக்கும் போது அமைதியா தான் இருப்பான். ஆனா பொண்ணுங்களை லவ் பண்ணுறேன்னு டார்ச்சல் கொடுப்பான் போல? ரெண்டு பொண்ணுங்க என் கிட்ட வந்து சொல்லுச்சு....
“சார், நான் செக்யூரிட்டி மாரியப்பன் பேசுறேன்”
“என்ன மாரியப்பன் இந்த நேரம்?”
“சார், சின்னம்மா ஒரு மணிக்கு ஆஸ்பத்திரில ஒரு எமர்ஜென்சி கேஸ்னு சொல்லிட்டு போனாங்க. ஒரு மணி நேரத்துல வந்துருவேன்னு தான் சொன்னாங்க. ஆனா இன்னும் வரலை. உங்க கிட்ட எதுவும் சொன்னாங்களா?”, என்று கேட்டதும் பிரபாகரன் தூக்கம் தூரம் ஓடியது. அவசரமாக எழுந்து அமர்ந்தவன்...
அத்தியாயம் 11
கண்ணசைவில் கட்டிப்
போடுகின்றான் எந்தன்
மனம் தொட்ட நாயகன்!!!
“என்ன தப்பா பேசாதீங்க? இப்ப அவமானப் பட்டுப் போனது நான் தானே? சொக்கலிங்கம் மக ஓடிப் போய்ட்டானு தானே எல்லாரும் சொல்லுவாங்க? என் மானம் போகப் போகுது”, என்று எரிச்சலுடன் சொன்னார் சொக்கலிங்கம். மீனாட்சியும் சொக்கலிங்கமும் மோதிக் கொள்வது மஞ்சுளா மற்றும் அஞ்சலிக்கு கொண்டாட்டமாக இருந்தது.
“ஓஹோ என்...
அத்தியாயம் 6
சிற்பி வடித்த சிலை நீயோ?
ஓவியன் வரைந்த ஓவியம் நீயோ?
எது தான் நீ என்று தேடுகிறேன்!!!
“அவளுக்கு எவ்வளவு வன்மம் பாத்தியா டா? என் பொண்ணு கல்யாணத்தை நிறுத்தப் பாத்திருக்கா”, என்று வேதனையாக சொன்னார் சொக்கலிங்கம்.
“பொசஸ்ஸிவ்ல இதெல்லாம் நடக்குறது தான் சொக்கு. இனிமே கவனமா இருக்கணும்னு தான் உன் கிட்ட சொல்றேன். அப்புறம் பிரச்சனை உன்...
அத்தியாயம் 7
உன் வார்த்தைகள் சேகரித்து
உருவாக்கப் பட்டது தான்
எந்தன் காதல் புத்தகம்!!!
கார் சென்னைப் போக்குவரத்தில் கலக்க ஏசி காற்று அவளுக்கு மூச்சு மூட்டுவது போல இருந்தது.
“என்ன ஆச்சு அமைதியா வர?”, என்று கேட்டான் பிரபாகரன்.
“உங்களை எப்படிக் கூப்பிடணும்னு யோசிச்சிட்டு வரேன்”
“உங்க அம்மா உங்க அப்பாவை எப்படிக் கூப்பிடுவாங்களோ அப்படிக் கூப்பிடு”, என்று அவன் சாதாரணமாக சொல்ல...
அமைதியாக எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அகிலன் கூட “இவ்வளவு பிரச்சனையோட இந்த கல்யாணம் நடக்கணுமா? இந்த அண்ணன் பிரச்சனையை விட்டுட்டு வேற பொண்ணை மேரேஸ்ஜ் பண்ணிக்கலாமே?”, என்று தான் எண்ணினான்.
தோட்டத்துக்கு வந்த பிறகு அர்ச்சனா மற்றும் பிரபா இருவரும் அமைதியாக நின்றார்கள். அர்ச்சனா கோபத்தில் இருந்தாள் என்றால் பிரபாவோ எப்படி பேச்சை ஆரம்பிப்பது...
“இப்ப நான் அவளைக் கல்யாணம் பண்ணலைன்னு சொன்னேன். உடனே அவ செத்துட்டாளா? இல்லை, நான் தான் உனக்கு கிடைக்கலை, நீ என்ன செத்துட்டியா? அவளுக்கு ரொம்ப நாளா மாப்பிள்ளை பாக்குறேன். அவளோட சம்மதத்தோட தான். அவ என்ன என்னையே நினைச்சிட்டு கல்யாணமே வேண்டாம்னு சொன்னாளா? இல்லையே? அத்தை உனக்கு மாப்பிள்ளை பாக்க சொல்லிருக்காங்க வினோ?...
“என்ன சொல்ற? அவன் உன் மாமா பையன் பிரபா. அது மட்டுமில்லாம அவன் இப்ப உன் தங்கச்சி புருஷன். அவனை ஏன் வர வேண்டாம்னு சொல்ற?”
“இல்லைப்பா... அது வந்து.... வேணுவால கம்பெனில சில புகைச்சல் உருவாகுற மாதிரி தோணுது”
“என்ன பிரபா சொல்ற?”
“ரெண்டு லேபர்ஸ்க் குள்ள பிரச்சனைன்னு தீர்த்து வைக்கப் போனா அந்த பிரச்சனையை ஆரம்பிச்சது...
அத்தியாயம் 2
எந்தன் விழியும் உந்தன் விழியும்
கலந்த போது தான் காதல்
என்னும் உயிர் உருவானதோ?!!!
மகளுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் என்று எண்ணி இன்று மீனாட்சி விரதம். ஆனால் அதை அர்ச்சனாவிடம் சொன்னால் அவள் திட்டுவாள் என்பதால் தான் சொல்ல வில்லை.
அருகில் இருந்த கோவிலுக்கு சென்று அர்ச்சனா பெயரில் அர்ச்சனைக்கு கொடுத்து விட்டு அந்த கடவுளைப்...
அத்தியாயம் 5
உன்னை நெருங்கி வர
முயல்கிறேன் உந்தன்
நினைவுகளை சுமந்து கொண்டு!!!
“இருந்தாலும் என்ன? உங்க கோபம் என்னன்னு சொல்லுங்க”, என்று கேட்டான் பிரபாகரன்.
“அவ குடும்பம்....?”, என்று இழுத்தாள் யசோதா.
“சொக்கலிங்கம் மாமா ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா மா? இந்த உலகத்துல அது சகஜம் தானே?”
“அதை தப்புன்னு சொல்லலை”
“அப்புறம் எது உங்க கண்ணை உறுத்துது?”
“அவர் அர்ச்சனா அம்மாவை வேண்டாம்னு...
அத்தியாயம் 3
பாவையவளின் விழி மொழியும்
இதழ் மொழியும் படைக்கிறது
பல கவிதைகளை!!!
“இந்த விஷயம் ரொம்ப நாள் மறைக்க முடியாது தான் பிரபா. ஆனா எல்லாம் முடிவு பண்ணிட்டா உன் அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டா. அவ கிட்ட பொறுமையா சொல்லிக்கலாம். உனக்கு ஓகே தானே?”, என்று கேட்டார் சக்கரவர்த்தி.
“எனக்கு சம்மதம் பா. மேற்கொண்டு பேசுங்க”, என்று அவன்...
தானும் அவளை இறுக அணைத்துக் கொண்டு அவள் கூந்தலில் முகம் புதைத்தான். இரவு நேரம், பேச்சற்ற மௌனம், நிலவின் ஒளி என அழகாக இருந்தது அந்த தருணம். அந்த நிலையை கலைக்க இருவருக்குமே மனதில்லை.
இந்த அமைதியையும் நிம்மதியையும் எத்தனை கோடி கொடுத்தாலும் வாங்கி விட முடியுமா என்ன? அதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும்? அந்த...