Wednesday, November 11, 2026

    கடந்து செல் காதலுடன்!

    வீட்டின் ஆண்கள் மட்டும் அடிக்கடி சர்வாச்சார்யா முகம் பார்த்தனர். கார்த்திக், ஆகாஷ் அவனிடம் ஏதோ பேசி கொண்டே வேறு இருக்க, "ராஜாவை சாப்பிட விடுங்கடா" என்று அதட்டினார் பெரிய அத்தை. "இருக்கட்டும் அத்தை. நூல் விட்டு பார்க்கிறாங்க. பிடிபடுதான்னு பார்ப்போம்" என்றான் சர்வாச்சார்யா கிண்டலாக. "சர்வா. மாமா" என்று இருவரும் ஒருசேர குரல் கொடுத்தார்கள். "சாப்பிடுங்க" என்ற சர்வாச்சார்யா, மனைவிக்கு...
    கடந்து செல் காதலுடன்! 49 "இதெல்லாம் நடக்கும்ன்னு முன்னாடியே தெரியும்" என்றான் சர்வாச்சார்யா. "நானும் கெஸ் பண்ணேன் தான். ஆனா இவ்வளவு சீக்கிரம் நடக்கும்ன்னு நினைக்கலை" சிவப்பிரகாசம் பெருமுச்சுடன் சொன்னார். தந்தையும், மகனும் அடுத்தென்ன முடிவெடுப்பது என்ற நிலையில் நின்றனர். "எனக்கு என் குடும்பம் முக்கியம் ராஜா, யாருக்கும் எந்த கஷ்டமும் இல்லாமல் தான் நாம இதை செட்டில் பண்ணனும்"...
    அதில் இருந்த உண்மை புரிந்த பெரியவர்களுக்கு கொஞ்சம் பக்கென்று தான் இருந்தது. இப்போது வந்த சிவப்பிரகாசம் முகத்திலும் கோவம் வெளிப்படையாக தெரிந்ததே! "நான் ஒருமுறை பண்ண தப்பே போதும். இனி நான் சர்வா மாமாக்கு எதிரா எதுவும் செய்ய மாட்டேன். உங்களுக்கு சப்போர்ட்டும் பண்ண மாட்டேன்" என்று ஆகாஷும் அவன் முடிவை சொல்லி வெளியேறிவிட்டான். நம் நாயகனோ...
                                                                                                                                                                                                                              கடந்து செல் காதலுடன்! 48 "இங்க என்ன நடக்குதுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?" என்று சிவப்பிரகாசம் கேட்க, "மாமா" என்று கார்த்தி, ஆகாஷ் எழுந்து நிற்க, அவர்களின் தந்தைகள் இவரை எதிர்பார்க்காமல் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார்கள். சிவப்பிரகாசம் முகம் ஒன்றும் சொல்லி கொள்ளும்படி இல்லை. இறுக்கமான முகத்துடன் மனிதர் அமர்ந்தவர், "நான் கேள்விப்பட்டது எல்லாம் உண்மையா?" என்று பொதுவாக...
    மகளின் கைப்பற்றி தட்டி கொடுத்த குருமூர்த்தி மருமகனின் தோள் தட்ட, அவரின் கையை தட்டிவிட்டான் மருமகன். "ம்ப்ச் என்ன பண்றீங்க நீங்க?" சம்யுக்தா கணவனை அதட்ட, "சம்யுக்தா" என்றார் தந்தை. "நீங்க இவரை கண்டிக்க மாட்டேங்கிறீங்கப்பா? என்னவோ பண்ணுங்க" மகள் முகத்தை திருப்பி கொண்டாள். ஒரு வாரமாக அவளும் பார்த்து கொண்டு தானே இருந்தாள். முழுதும் சர்வாச்சார்யா கட்டுப்பாடே! அவன்...
    கடந்து செல் காதலுடன்! 46 'இவர்கள் எல்லாம் காதலிக்கலாம்! இவர்கள் எல்லாம் காதலிக்க கூடாது!' ம்ஹ்ம். எல்லை வகுக்கிறார்களா? இல்லை. அடக்குமுறை! நீ இதைத்தான் பண்ணனும், நீ இதை பண்ண கூடாது!  சகமனிதர்களை அடக்க துடிக்கும் கூட்டம்! உன் தகுதிக்கு நீ ஆசைப்படலாமா? படக்கூடாது. அப்போ என்ன பண்ணனும்? நீ வேடிக்கை பாரு, நான் அனுபவிச்சிட்டு போறேன்! ஹாஹா! கடவுளும் காதல்...
    கடந்து செல் காதலுடன்! 26 "கந்தன் துணை" இதழ்கள் வாசித்தபின் இன்றும் விரிந்தது.  அவள் காரில் நிலைத்திருக்கும் வாசகத்தில் மாற்றமில்லை. அதை படிக்கும் அவள் பழக்கத்திலும் மாற்றமில்லை.  பயணங்கள் அதிகம் ஆகிவிட்டது. அதனாலே என்னமோ இவள் வாசிப்பும் கூடிவிட்டது. இன்றும் பக்தி அதே அளவில் தான். ஆனால் சம்யுக்தா என்பவள் மாறிவிட்டாள்! வளர்ந்துவிட்டாள்! முதுகலை, இளங்கலை இரண்டையும் அதே கல்லூரியில் படித்து...
    சர்வாச்சார்யாவின் கண்கள் பெண்ணை மிக கூர்மையாக தாக்க, அவன் கை நீண்டு அவளை தன்னிடம் இழுத்தது. "என்ன?" என்றாள் சம்யுக்தா. "நான் உனக்கு வேணாம்ன்னா நேரடியா சொல்லுடி" என்று சீறினான். சம்யுக்தா முகத்தை திருப்ப, அவள் கன்னத்தை பற்றி தன்னை பார்க்க வைத்தவன், "உன் அப்பனும் முதல்ல இதையே சொல்லியிருக்கார். இப்போ நீ! அப்பனும், மகளும் என்னடி நினைச்சிட்டு...
    கடந்து செல் காதலுடன்! 25 குருமூர்த்திக்கு தண்டனை வழங்கப்பட்ட நாள் அன்று! வசுந்தரா தீர்ப்பெழுதி முடிக்க, குருமூர்த்தி நெஞ்சம் மகளை பார்க்க, பார்க்க விம்மியது. எங்கே மகளை கட்டிபிடித்து கொண்டு கதறிவோடுவோமோ என்று பெரும் பயம். மகளிடம் அழுவதில் பிரச்சனையில்லை. ஆனால் ஏற்கனவே அவள் மிரட்சியுடன் தான் என்னை பார்த்து கொண்டிருக்கிறாள். இதில் நான் அழவும் செய்துவிட்டால் நிச்சயம்...
    “இன்னும் தீரஜ் தம்பிய ஏன் விடலை. அந்த குருமூர்த்திக்கிட்ட பேசிட்டு, அவனை உடனே விட சொல்லு" என்று சிவப்பிரகாசம் அவரின் மேலதிகாரிக்கு சொல்லி அனுப்ப, அவன் போன வேகத்தில் திரும்பி வந்து, "முடியாதுன்னு சொல்லிட்டார்" என்றான். "அதெப்படி அவன் முடியாது சொல்வான்?" விநாயகம் கோவமாக கேட்டார். "ஏன்? என்னாச்சு? காரணம் ஏதும் சொன்னானா?" என்று சத்தியன் யோசனையாக...
    கடந்து செல் காதலுடன்! 24 குருமூர்த்தி அடுத்த நாள் அதிகாலையில் தான் கண்விழித்தார். சம்யுக்தா தந்தைக்கு அருகிலே இருந்தவள், அவரின் அசைவில் "அப்பா" என்றவளின் கண்களில் தன்னை போல் கண்ணீர் சூழ்ந்துவிட்டது. அவளின் உற்றவர்கள் இருவரும் அவளை முழு இரவும் தனியாக தவிக்க விட்டார்களே! குருமூர்த்தி அவளுக்கு எத்தகைய தந்தை என்பதை அவள் உணர்ந்து கொண்டது இந்த ஓர்...
    "உங்க தம்பி எங்க கட்டுப்பாட்டுல தான் இருக்கார். நாம ஒரு உடன்படிக்கைக்கு வரலாம்" என்று சொன்னார் லிங்கம். "உன்னை இப்போவே கொன்னு போட்டா  கேட்க ஆள் இருக்கா?" என்று நக்கலாக கேட்டான் அவன். "இல்லை தான். ஆனா உங்க தம்பி விஷயம் அப்படி இல்லை தானே?" என்று பதிலுக்கு கேட்டார் லிங்கம். "நீ சொன்னது தப்பு" என்றபடி உள்ளே...
    கடந்து செல் காதலுடன்! 23 'இன்னும் என்னென்ன ரகசியங்கள் என்னை சுற்றி இருக்கும்?' சம்யுக்தா இடிந்து போய் அமர்ந்திருந்தாள். சர்வாச்சார்யா யார் என்று தெரிந்ததில் இருந்து குருமூர்த்தியை விட்டு அசையவில்லை சம்யுக்தா. அவளின் மனது அமைதியை தொலைத்து, மறுகி கொண்டிருக்கிறது. என் வாழ்நாளிலே  செய்ய கூடாத பல தவறுகளை நான் இந்த சில நாட்களுக்குள் செய்திருக்கிறேன்! இருள் சூழ்ந்த அறையில் மெலிதாக...
    கடிகார முள் நகர, நகர சம்யுக்தாவின் தவிப்பும் கூடியது. சர்வாச்சார்யா பற்றி எதுவும் தெரியவில்லை. குருமூர்த்தியும் கண் விழிக்காமல் இருக்கிறார். தந்தையை தாங்கியிருந்த தோள்களை விட அவளின் நெஞ்சம் அதிகம் வலித்தது. இதில் குருமூர்த்தியின் மேல் இருந்து அனல் அடிக்க ஆரம்பித்தது. அப்பாக்கு பீவர் வந்துடுச்சா? சம்யுக்தா அவரின்  நெற்றியில் கைவைத்து பார்த்து அதிர்ந்து போனவள், "சார், சார்,...
    கடந்து செல் காதலுடன்! 22 குருமூர்த்தியும், சம்யுக்தாவும் ஓர் அறைக்குள் அமர வைக்கப்பட்டிருந்தார்கள். அறைக்கு வெளியே கருப்பு உடை அணிந்த ஆட்கள் இருவர் காவலுக்கு இருந்தார்கள். 'ஏன் இவங்களை இங்க நிக்க வைச்சிருக்காங்க. ஒருவேளை எங்க பாதுகாப்புக்காக இருக்குமோ?' ஆனால் நான் வெளியே செல்ல முயன்ற போது என்னை தடுத்தார்களே? தடுத்தது கூட பாதுகாப்பு சம்மந்தப்பட்டது என்றால், அந்த குரலில் இருந்த...
    குருமூர்த்தி வாதாடும் நிலையிலா இருக்கிறார். ஓட்டமாக ஊருக்குள் ஓட, அவரை தடுக்க முயன்றவர்களை ஓட்டுனர் சமாளித்து கொண்டார். கோகுல் வீட்டை நெருங்க, நெருங்க குருமூர்த்தியின் இதய துடிப்பு கட்டுப்பாடில்லாமல் துடித்தது. ஆட்கள் அந்த வீட்டின் மேல் பாய்ந்து கொண்டிருக்க, மறுபக்கம் குருமூர்த்தி ஆட்கள் அவர்களை தடுத்து கொண்டிருக்க, காவலர்கள் வாசலில் நின்று யாரையும் உள்ளே அனுமதிக்காமல் தடுத்து...
    கடந்து செல் காதலுடன்! 21 குருமூர்த்தி அதிவேகமாக விமான நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். மனிதருக்கு மூளையும், காதும் குப்பென அடைத்து விட்டது. அவருக்கு முதலில் தன் பிள்ளைகளிடம் சென்றாக வேண்டும். தொடர்ந்து வந்த தொலைபேசி அழைப்பும் அவருக்கு கோவத்தை கொடுக்க, "என்னடா வேணும் உனக்கு?" என்று அழைப்பை ஏற்று கத்தியிருந்தார். எதிரில் இருந்தது சண்முகம். என்ன புரிந்து கொண்டாரோ, பதிலுக்கு...
    தங்களின் வாகனத்தை யாரேனும் பின் தொடர்கிறார்களா என்று சம்யுக்தா பின்னால் திரும்பி பார்த்து கொண்டே வர, "ரிலாக்ஸ். ஒன்னுமில்ல" என்று இவளின் கைப்பற்றி சொன்னான் சர்வாச்சார்யா. "ம்ம்" என்ற பெண்ணுக்கு அச்சம் உச்சத்தில் நின்றது. பயத்துடன், தடுமாற்றத்துடன் தான் இச்செயலில் இறங்கினாள்.  குருட்டு தைரியம் அவளுக்கு சிறிதளவு மட்டுமே! மற்றபடி இவனுக்கு உதவிட வேண்டும் என்பதே அவளை துணிய...
    கடந்து செல் காதலுடன்! 20 குருமூர்த்தி விமானத்தில் பயணித்து கொண்டிருந்தார். இன்னும் சில நிமிடங்களில் சென்னையை சென்றடைந்துவிடும் விமானம். "அண்ணா. என்னாச்சு?" என்று மணி அவரை கவனித்து கேட்க, "என் பொண்ணுகிட்ட பேசணும் மணி என்றார். "இறங்கினதும் பேசிடலாம்ண்ணா" மணி சொல்ல, "ம்ம்" என்றவருக்கு மனது ஒரு நிலையில் இல்லை. "நம்ம வீடு விஷயமா தான் சென்னை வரோம்ன்னு ஆபிஸ்ல சொல்லிட்டேன்ண்ணா. இங்க...
    குருமூர்த்தி மிகவும் இக்கட்டான நிலையில் நின்றார். "அந்த பையனை வைச்சுதான் நாம பேசணும்?" என்று வசுந்தரா தற்போதைய சூழ்நிலையை சொன்னார். "நான் மணியை அனுப்புறேன்" என்றார் குருமூர்த்தி. "இல்லை மூர்த்தி. நீங்க இரண்டு பேர் வந்தா தான் சரியா இருக்கும்" என்று லிங்கம் சொல்ல, "வீட்ல இருக்க சர்வாச்சார்யாவை யார் பார்த்துக்க?" என்று கேட்டார் குருமூர்த்தி. "அவங்க கவனம் மாறிடுச்சு மூர்த்தி" "இல்லை....
    error: Content is protected !!