‘இந்த வயதிலும் வாழ்க்கை மாறுமா? காட்சிகள் மறையுமா?’ குருமூர்த்தியால் இன்னமும் நிகழ்காலத்தை நம்பத்தான் முடியவில்லை.
கடந்த காலத்தில், சில நூறு கிலோ மீட்டர் தள்ளி போகவே அவ்வளவு யோசனை!
சென்னையை விட்டு ஊட்டி செல்லத்தான் வேண்டுமா?
பழகின ஊரை விட்டு தெரியாத ஊருக்கு போறோம். அதுவும் பொம்பிளை புள்ளையை கையில பிடிச்சுட்டு போறோம். சமாளிச்சிடுவோமா? சில மாதங்களே யோசித்திருக்கிறார்.
அன்றைக்கு அந்த முடிவு பெரிதாக இருந்தது. ஆனால் இன்று அதைவிட பெரிய முடிவை எடுத்திருக்கிறார்.
ஆம் குருமூர்த்தி லண்டனில் இருக்கிறார்!
சர்வாச்சார்யா அவரை சந்தித்து பேசினான். “நாம லண்டன் போயிடலாம். இங்க வேணாம்” என்றான்.
“என்ன திடீர்ன்னு? அவ்வளவு தூரம் ஏன் போகணும்? திரும்ப ஏதாவது?” மனிதர் பதறி தான் போனார்.
இன்னொரு தீரஜ் முளைத்து விட்டானோ?
தீரஜ்கள் மீது அச்சமில்லை. மருமகன் மீது தான் அச்சம்!
மருமகனோ அவரை கோபத்துடன் பார்க்க, “டேய் தம்பி. லண்டனுக்கே போற அளவு என்ன பிரச்சனை? தொழில்ல ஏதும்? என்னை வைச்சு பேசுறாங்களா? சமாளிக்க முடியாதளவு தொல்லை கொடுக்கிறாங்களா என்ன? பரவாயில்லை விடு. பார்த்துக்கலாம். பணம் உனக்கு குறையிருக்காது. அப்படி ஏதும் குறைஞ்சா சொல்லு நைட்டுக்குள்ள ஏற்பாடு பண்ணிடுறேன். இல்லை ஆளுங்கதான் வம்புன்னா அதையும் சொல்லு, எல்லோரையும் ஒரு கை பார்த்துடலாம்” என்றார் மாமனார் படபடவென!
சர்வாச்சார்யாவிற்கு இப்போது கோவம் போய், புன்னகைத்து விடுவான் போல.
பணம் கொடுக்கிறாராமே?
தொழிலில் அவன் அடிப்படை தேவைகளே எவ்வளவு இருக்கும் என்று இவருக்கு தெரியுமா?
இதுல ஒரு கை வேற பார்க்கிறாராம்? மாற மாட்டார். நிச்சயம் இவரின் ரத்தம் குளிர போவதில்லை.
மனிதர் ஊட்டிக்கு செல்ல எடுத்த முடிவு மிகவும் சிறப்பானது. மகளுடன் அமைதியான வாழ்க்கை வாழ ஊட்டி சென்றவர், இப்போது மருமகனுக்காக திரும்ப களத்தில் குதிக்க தயாராக நிக்கிறார்.
“எதாவது சொல்லு, அமைதியா இருந்தா எப்படி? சரி நானே என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்குறேன்”
“ஏன் என்னை பார்த்தா உனக்கு ஆளா தெரியலையா? நான் ஏன் ஆள் சேர்க்க போறேன்? மணி, நானே போதும். நீ விஷயத்தை மட்டும் சொல்லு”
“ம்ப்ச். பெருசா ஒன்னுமில்லை. லண்டன் போக போறோம். அவ்வளவு தான்”
“நாடு விட்டு நாடு போறது உனக்கு சின்னதா? இது எவ்வளவு பெரிய முடிவு தெரியுமா? இந்தளவு உன்னை யோசிக்க வைச்சது யாருன்னு மட்டும் சொல்லு, மீதியை நான் பார்த்துகிறேன்”
“என்ன பண்ணிடுவீங்க?”
“ஏதோ பண்றேன்? அதைப்பத்தி உனக்கென்ன? நீ தொழில்ல மட்டும் கவனத்தை வை. இதுக்குள்ள எல்லாம் நீ வரக்கூடாது. தப்புடா தம்பி”
“ஹாஹா” சர்வாச்சார்யா அடக்க மாட்டாமல் சிரித்தான்.
ராகவ் வேறு மறுபக்கம் முகத்தை திருப்பி புன்னகைத்து கொண்டிருந்தான்.
“என்? என்ன?” குருமூர்த்தி அவன் புன்னகை முகத்தில், சிறிதளவு நிதானத்திற்கு திரும்பினார்.
“ராகவ். கேட்டுக்கிட்டியா மேன்?” என்று வேறு சிரித்தான் நாயகன்.
நல்லவன் தொழிலுக்குள் அடியெடுத்து வைக்கும் போதே சில இருண்ட பக்கங்களுக்குள்ளும் அடியெடுத்து வைத்துவிட்டான்.
தீரஜ்க்காக ஆரம்பித்து, பின் தொழிலுக்காக என்று அவனுக்கான ஆட்கள் உண்டு.
நம்பிக்கை, பலசாலி, புத்திசாலி என்று பல வகை ஆட்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான்.
சொன்ன நொடி வேலை நடக்கும். அதற்கு பணம் தேவைப்பட்டால் பணம், அடி தேவைப்பட்டால் அடி. அவ்வளவு தான்!
“நம்மபசங்களும்அவருக்குபேரன்கள்தானே? நமக்குகொடுக்கலைன்னாபோகுதுஅவங்களுக்குகொடுத்திருக்கலாம் இல்லை, என்னமோஅவர்மகன்மட்டும்தான்கம்பெனியைதூக்கிபிடிச்சுநிறுத்துறமாதிரிமொத்தஅதிகாரத்தையும்அவங்களுக்கேகொடுத்துட்டுபோயிருக்கார்” என்றுஇருவரும்ஓரிருமுறைகோவம்கொண்டிருந்தார்கள்.