கடந்து செல் காதலுடன்! 26

கந்தன் துணைஇதழ்கள் வாசித்தபின் இன்றும் விரிந்தது

அவள் காரில் நிலைத்திருக்கும் வாசகத்தில் மாற்றமில்லை. அதை படிக்கும் அவள் பழக்கத்திலும் மாற்றமில்லை

பயணங்கள் அதிகம் ஆகிவிட்டது. அதனாலே என்னமோ இவள் வாசிப்பும் கூடிவிட்டது.

இன்றும் பக்தி அதே அளவில் தான். ஆனால் சம்யுக்தா என்பவள் மாறிவிட்டாள்! வளர்ந்துவிட்டாள்!

முதுகலை, இளங்கலை இரண்டையும் அதே கல்லூரியில் படித்து முடித்தவள், இந்த ஓர் வருடமாக பெங்களூரில் இருக்கும் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறாள்.

விமான நிலையம் வந்தடைந்தது அவள் பயணித்த கார்

சம்யுக்தா முகம் நிறைந்த புன்னகையுடன், “வரேன்ண்ணாஎன்று ஓட்டுனரிடம் விடைபெற்று விமான நிலையத்திற்குள் நுழைந்தாள்.

பெங்களூர் செல்லும் விமானத்தின் நடைமுறைகளை முடித்து கொண்டு அமர்ந்தவள், தந்தைக்கு அழைத்தாள்.

குருமூர்த்தி அழைப்பை ஏற்கவில்லை. அப்பாக்கு அதிகமான வேலையோ? ம்ப்ச். நான் லீவ் போட்டு அப்பாக்கு ஹெல்ப் பண்ணியிருந்திருக்கணும்‘ 

ஏற்கனவே ஓர் நாள் விடுமுறை எடுத்தாகிவிட்டது. இதற்கு மேல் முடியாது. வந்து சேர் என்று அவளின் மேலாளர் கண்டிப்பாக சொல்லிவிட்டார்.

இரண்டொரு நாளில் அவள் திரும்ப வந்தாக வேண்டும்’ என்பதால் சம்யுக்தா தனக்கு தானே சமாதானம் சொன்னபடி காபி வாங்க சென்றாள்

காபியின் கசப்பு அவளுக்கு மட்டும் இனிப்பாக இறங்கியது. உள்ளத்தின் மகிழ்ச்சி காபியில் பிரதிபலிக்குமா

சம்யுக்தா முகத்தில் மென் புன்னகை

எம்பையர்” 

ம்ம். நினைத்த நேரம் கூடுதல் மலர்வு.

எம்பையர்! தந்தை மகளின் சாம்ராஜ்யம்

வருடங்கள் சில கடந்துவிட்டன. மாற்றங்களும் நிகழ்ந்துவிட்டன!

பணம்! உலகின் முதன் முதலாளி!

பவர்! அடுத்த மந்திரம்!

குருமூர்த்தியிடம் பணத்திற்கு குறைவில்லை. பவருக்கு பஞ்சமில்லை. ஆனால் எதுவரை?

சம்யுக்தா அதற்கான எல்லையை உணர்ந்த தினம் குருமூர்த்தி மருத்துவமனையில் காயங்களுடன் அமர்ந்திருந்த நாள்!

குருமூர்த்தியின் தனிப்பட்ட அடையாளம் மாறாதவரை எதுவும் மாறப்போவதில்லை.

மிக ஆழமான தழும்பை மனதில் ஏற்ற பெண், ஓர் நாள் தந்தை முன் நின்றாள்.

சாப்பிட்டியா?” குருமூர்த்தி மகளை பார்த்ததும் எப்போதும் கேட்கும் முதல் கேள்வியை கேட்டார்.

சாப்பிட்டேன்ப்பாஎன்ற சம்யுக்தா தேங்கி நிற்க

என்கிட்ட எதாவது சொல்லணுமா?” என்று கேட்டார் தந்தை.

இருவரும் பழைய நாட்களுக்குள் சென்று விட்டிருந்தனர். ஆம் இடையில் ஏற்பட்ட சிறு நெருக்கம் இடையிலே காணாமல் போனது.

குருமூர்த்தி சொல்வார் மகள் செய்வாள்! அவ்வளவுதான்!

நான் உன்னை நம்பினேன்! நீ என் நம்பிக்கையை காப்பாத்தலைதந்தையின் கோவத்தை, ஏமாற்றத்தை விலகளில் காட்டினார்.

எனக்கான நன்மதிப்பை நானே தொலைத்துவிட்டேன்! அவர் கோவம் நியாயம்! சம்யுக்தா சுருங்கி கொண்டாள்.

ஏனோ வெகு நாட்கள் கழித்து இன்று தான் மகள் தன் முன் நிற்கிறாள் என்பதில் தந்தையும் கொஞ்சம் இளக்கம் கொண்டார் என்னமோ!

உட்காருஎன்று தன் அருகில் உள்ள இருக்கையை காட்டினார்.

சம்யுக்தா தடுக்கென நிறைந்த கண்களை இமை சிமிட்டி சமாளித்து கொண்டவள், “அந்த இடத்தை லீசுக்கு கொடுக்க வேணாம்ப்பாஎன்றாள்.

தன் பக்கம் அமராமல் நிற்கும் மகளை பார்த்த குருமூர்த்தி, “ஏன்?” என்று கேட்டார்.

சம்யுக்தா அவளின் எண்ணத்தை சொல்ல, குருமூர்த்தியிடம் மௌனம்.

சென்னை மாநகரம் வளர, வளர குருமூர்த்திக்கு தொந்தரவு அதிகம் ஆகிவிட்டது. அவருக்கு சொந்தமான அந்த ஓர் ஏக்கர் இடத்தை கேட்டு பல பெரிய நிறுவனங்கள் அவரை நச்சரித்தனர்.

மார்க்கெட் மதிப்பை விட நாங்க அதிகம் கொடுக்கிறோம். எங்களுக்கு கொடுங்கஎன்று ரியல் எஸ்டேட் ஆட்கள் ஒரு பக்கம்,

நீங்க விற்க வேண்டாம். லீசுக்கு கொடுங்க. நாங்க கம்பெனி ரன் பண்ணிக்கிறோம்என்று பன்னாட்டு நிறுவனங்கள் மறுபுறம் தொல்லை.

குருமூர்த்தி மிகவும் யோசித்து தான் ஓர் நிறுவனத்துக்கு லீசுக்கு கொடுக்கலாம் என்று மகளிடம் பேசியிருந்தார்.

ஆனால் சம்யுக்தா லீஸுக்கு வேண்டாம் என்றதுடன், அவளின் திட்டத்தை தந்தை முன் வைத்திருக்கிறாள்.

மிகப்பெரிய முதலீடு

யோசிக்கிறார்! சம்யுக்தா பொறுமையாக அவரின் முன் நின்றிருந்தாள்.

அண்ணாஎன்று மாசிலாமணி வந்தவர், “என்னாச்சு பாப்பா?” என்று சம்யுக்தாவிடம் கேட்டார்.

குருமூர்த்தி முன் சம்யுக்தா நிற்பதில் திகில் கொண்டார் மனிதர்.

தந்தை மகளுக்கும் இடையில்  ஒருவன் தூணாக நிற்கிறானே! அவனை கொண்டு ஏதும்

மணிஎன்று குருமூர்த்தி ஓர் பார்வை பார்க்க, சுதாரித்து கொண்டார் மாசிலாமணி.

நான் நாளைக்கு சொல்றேன்என்று குருமூர்த்தி மகளுக்கு பதில் சொன்னவர், அந்த நிமிடம் முதல் கொண்டே  மகள் சொன்னதை ஆராய ஆரம்பித்தார்.

அன்றிரவே, “நாம செய்யலாம்என்று மகளிடம் சொன்னார் குருமூர்த்தி.

தேங்க்ஸ்ப்பாசம்யுக்தா மகிழ்ச்சியுடன் அவரின் கையை பற்றி கொண்டாள்.

என் அப்பாவோட அடையாளம் மாறும்! நான் மாற்ற வைப்பேன்!” மகள் வைராக்கியம்!

IT போன்று பல்வேறு நிறுவனங்கள் ஒரே கட்டிடத்தில் வேலை பார்க்கும் அமைப்பை கொண்ட சாம்ராஜ்யம். “எம்பையர் எனும் டெக் பார்க்

இப்போதைக்கு ஓர் கட்டிடம் மட்டுமே நடைமுறைக்கு வருகிறது. அந்த ஒன்றே சில தளங்களை கொண்ட பெரிய கட்டிடம் என்பதால் நான்கு முதல் ஆறு பன்னாட்டு நிறுவனங்கள் வரை, அதில்  தங்கள் அலுவலகத்தை அமைத்து கொள்ளலாம்.

இதனை கொண்டு அவர்களின் வசதி மட்டுமில்லை மரியாதையும் கூடும்

இது ரொம்ப பெரிய செலவுப்பா. நம்மால சமாளிக்க முடியுமாசம்யுக்தா தயங்கி கேட்க,

முடியும்என்றார் குருமூர்த்தி உறுதியாக.

ஆனாலும் மகளுக்கு அச்சம்! அப்பாவை எக்குத்தப்பா சிக்க வைச்சிடுவேனா

அவரின் கையிருப்பு பணம், சேமிப்பு, நகைகள், எஸ்டேட், வீடுகள், இடங்கள் எல்லாம் சம்யுக்தாவிற்கு தெரியும் என்றாலும், அகலக்கால் வைப்பதால் ஏற்படும் பயம்

ஆனால் அந்த பயத்திற்கு அவசியம் இல்லை என்பதாக குருமூர்த்தி மகள் சொன்னதை விரைந்து முடித்து கொடுத்தார்.

எம்பையர்!” எனும் பிரம்மாண்டத்தை வெற்றிகரமாக சாதித்து  காட்டியிருந்தார்.

“உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லைன்னா போகுது. இங்க வேலை பார்க்கிறவங்களுக்காக நாம முறைப்படி பூஜை பண்ணனும்” என்று லிங்கம் சொல்லிவிட, நேற்றைய தினம் அதற்கான நாளாக அமைந்து போனது.

அடுத்த இரண்டு நாட்களில் திறப்பு விழா.

முதன் மந்திரி உட்பட பல அதிகார மையங்களுக்கு அழைப்பு விடுக்கும் பணி சென்று கொண்டிருந்தது.

சம்யுக்தா இருந்து தந்தைக்கு உதவ முடியா நிலை. 

“அடுத்தும் லீவ் கேட்கணும், பெரிய வேலை இருக்காது. நான் பார்த்துகிறேன். நீ கிளம்பு” என்று குருமூர்த்தி பேச்சை ஏற்று விமான நிலையத்தில் அமர்ந்திருக்கிறாள் சம்யுக்தா.

அந்த நேரம் லிங்கம் அவளை போனில் அழைக்க, இவர் ஏன் கூப்பிடுறார்? சம்யுக்தா உடனே போன் எடுத்தாள்.

“கிளம்பிட்டியாமா?” என்று கேட்டவர், “உன் அப்பன்கிட்ட பேசு. அவனோட எனக்கு முடியலை” என்றார்.

“என்னாச்சுங்கய்யா?” சம்யுக்தா புரியாமல் கேட்க,

“சண்முகத்தை திறப்பு விழாக்கு கூப்பிட மாட்டேங்கிறான். அவன் தான் நம்ம தொகுதி அமைச்சர். அவனை கூப்பிடலைன்னா எப்படி?” என்று பொரிந்தார் லிங்கம்.

“நான் எப்படி?” சம்யுக்தா திகைத்தாள். சண்முகத்திற்காக குருமூர்த்தியிடம் பேசுவதா?

“நீ எப்படின்னா? மகளுக்காக இவ்வளவு பெரிய வேலை செய்றவன் சண்முகத்தை கூப்பிட மாட்டானா? நீ சொல்லு. அவன் கூப்பிடுவான்” என்றார் லிங்கம்.

“அய்யா” சம்யுக்தா விழித்தாள்.

“சண்முகம் நமக்கு எவ்வளவு உதவி செய்றான். இந்த வேலைக்கு கூட அப்ரூவல் எல்லாம் அவன் தலையிட்டு தான் வேகமா கிடைச்சது. உன் அப்பனுக்கு இதெல்லாம் புரியாது. நான் பணம் கொடுத்தேன்னு நிக்கிறான். பணம் மட்டுமே வேலை செய்யாது. சொல்லி வை” என்று லிங்கம் போனை வைக்க, சம்யுக்தா தலை பிடித்து கொண்டாள்.

ஏற்கனவே சம்யுக்தா திறப்பு விழா அழைப்பை முன்னிட்டு குருமூர்த்தியின் கோவப்பார்வையை சந்தித்திருந்தாள்.

“இவங்க எல்லாரையும் கூப்பிட்டிருக்கோம்” என்று குணா ஓர் லிஸ்ட்டை பெண்ணின் கையில் கொடுத்தான்.

“வசுந்தரா மேடம்?” என்று சம்யுக்தா அவர் பெயர் இல்லாததில் சட்டென கேட்க,

“அவங்களை ஏன் கூப்பிடணும்?” என்ற கேள்வியுடன் குருமூர்த்தி மகளின் முன் நின்றார்.

‘ஏன் கூப்பிடணுமா?’ சம்யுக்தா தந்தையின் கேள்வியில் ஆச்சரியம் கொண்டாள்.

“அவங்க நமக்கு செஞ்சதுக்கு மேலா, நாம அவங்களுக்கு செஞ்சுட்டோம். இனி அவங்களுக்கும், நமக்கும் என்ன இருக்கு?” என்று கேட்டார் குருமூர்த்தி.

மொத்தமா அவரிடம் இருந்து தொடர்பை துண்டித்து கொண்ட தந்தைக்கு என்ன பதில் சொல்வாள் மகள்.

வசுந்தரா இரண்டொரு முறை ஊட்டி வந்த போதும், குருமூர்த்தி அவருக்கான மரியாதையில் குறை வைக்கவில்லை. ஆனால் அப்பட்டமான விலகலை காட்டினார். வசுந்தரா என்ன புரிந்து கொண்டாரோ அதன் பின் அவரும் தொடர்பில் இருந்து விலகி கொண்டார்.

இதற்காகவாவது தந்தை அவரை அழைப்பார் என்று சம்யுக்தா நினைத்திருக்க, குருமூர்த்தி முடிந்தது முடிந்தது தான் என்று செயலில் காட்டுகிறார். 

“நம்ம முன்னேற்றத்துல அவங்க சந்தோஷபடுவாங்கப்பா” சம்யுக்தா மனது கேட்காமல் சொல்லிவிட,

“உண்மையிலே நமக்காக சந்தோஷ படுறவங்க, அங்க இருந்தே பட்டுக்கட்டும்” என்றார் தந்தை.

வசுந்தராவிற்கே அதுதான் என்றால் சண்முகத்தை மட்டும் எப்படி குருமூர்த்தி அழைப்பார்? சம்யுக்தாவிற்கு புரியவில்லை.

லிங்கம் சொல்வதும் நியாயம் தான். ஆனால் குருமூர்த்தி முன் எத்தகைய நியாயங்களும் எடுபடாது என்பதே உண்மை!

“மணி அங்கிள்கிட்ட பேசணும். அவர் பார்த்துக்கட்டும். எனக்கு இந்த தலைவலி வேண்டாம்” சம்யுக்தா ஓர் முடிவெடுத்த பின்னே அவளுக்கு நிம்மதியானது.

அவளின் விமானம் ஒரு மணி நேரம் தாமதம் என்று சொல்லியிருக்க, சம்யுக்தா போனில் தன் கவனத்தை வைத்தாள்.

“என்னாச்சு? யார் வராங்க?” என்று அக்கம், பக்கம் குரல்கள் கேட்டதில் சம்யுக்தா போனில் இருந்து தலை நிமிர்த்தினாள்.

இவள் இருக்கும் பகுதியில் ஓர் பரபரப்பு! காவலர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் படபடவென அந்த பகுதி முழுக்க தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டார்கள்.

தலைவர்கள் யாராவது வருவார்கள் என்று போனை பார்க்க போனவள், சட்டென ஏதோ உறுத்த நிமிர்ந்தாள்.

இந்த உடை! பாதுகாப்பு அதிகாரிகள் அணிந்திருக்கும் ஆடை, அதில் இருக்கும் அடையாளம் சம்யுக்தா கண்களை விரிய வைத்தது.

நோ! நோ! அவளின் இதய துடிப்பு வேகம் எடுத்தது.

‘அவங்க குடும்பத்துல இருந்து வேற யாராவது வருவாங்க’ அவளின் மனது வேகமாக சமாதானம் சொன்னது.

அப்படித்தான் இருக்கணும். இத்தனை வருஷம் பார்வையில் படாதவன் இனியா படப்போறான்!

ம்ஹூம். இத்தனை அடுக்கு பாதுகாப்பு அவனுக்கு மட்டும் தான்!

சிவப்பிரகாசத்தின் முடிசூடா ராஜா மகனுக்கான பாதுகாப்பில் எக்கச்சக்க கெடுபிடி. 

அவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு பாதுகாப்பு? என்று மீடியா வரைக்கும் இந்த விஷயங்கள் அலசப்பட்டிருக்கிறது. 

சென்னைக்கு ஏன் வரான்? அதுவும் இப்போ ஏன்? பெண் வேர்வையில் வழுக்கிய போனை இறுக்கமாக பிடித்தாள்.

சிவபிரகாசத்தின் குரூப் கம்பெனி ஒன்றும் எம்பையரில் தளம் கேட்டு விண்ணப்பித்து இருந்தார்கள். 

குருமூர்த்தி நொடி கூட யோசிக்காமல் தன் மறுப்பை உடனே தெரிவித்துவிட்டார்.

குணா சொல்லித்தான் சம்யுக்தாவிற்கு இந்த விஷயம் தெரியும். அதுவும் பெங்களூர் கிளம்புவதற்கு சில நிமிடம் முன்பு.

அதற்கு முன்னே தெரிந்திருந்தால் மட்டும் சம்யுக்தா என்ன செய்திருக்க முடியும்? குணா சொன்னதை கேட்டு கொண்டு வந்துவிட்டாள். ஆனால் இப்போது அதுவே பெண்ணை உறுத்துகிறது.

இல்லை அவனா மட்டும் இருந்திட கூடாது! அவளின் வேண்டுதல்கள் யாவும் பொய்த்து போனது.

சம்யுக்தாவிற்கு நேரெதிராக  வந்து கொண்டிருக்கிறான் சர்வாச்சார்யா!

அதிகமே மாறிவிட்டான்! 

இத்தனை வருடங்களாக புகைப்படங்களில் கூட அவனை பார்த்ததில்லை.

மீடியாவிற்கும் அவன் முகம் காட்டுவதில்லை எனும் போது எங்கு சென்று பார்க்க?

சம்யுக்தா கலங்கும் கண்களை சிமிட்டி கொண்டவள், முகத்தை திருப்பி கொண்டாள்.

போதும். பார்த்தாச்சு இல்லை. அடங்கு. தன்னை தானே திட்டி கொண்ட பெண்ணை, கடந்து சென்றிருந்தான் நல்லவன். 

அவனுக்கான வழி பாதுகாப்பு அதிகாரிகளால் சூழப்பட்டிருந்தது.

சம்யுக்தாவிற்கு தன்னை சமாளித்து கொள்ள பல நிமிடங்கள் ஆனது!

மின்னலாக தன்னை வெட்டி சென்றவனின் சட்டையை பிடித்து உலுக்கும் கோவமும் பெண்ணுக்கு உண்டு!

ஏன் கோவம்? தெரியாது. நீ வேண்டாம் என்றவளும் இவள் தான். ஆனால் கடந்து சென்றுவிட்டவன் மேல் கோவம் கொள்கிறாள்! விசித்திரம்!

சம்யுக்தா ஓய்வறை சென்று முகத்தை தண்ணீரால் துடைத்து கொண்டு வந்தாள்.

பெண்ணின் விமானத்திற்கான அழைப்பு வந்துவிட்டது.

அப்போது சம்யுக்தா போன் ஒலிக்க, குணா.

“என்ன குணா?” என்று சம்யுக்தா எடுத்து கேட்க,

“பிளைட் ஏறலை தானே நீ?” என்று படபடத்தான் குணா.

“என்னாச்சு?” சம்யுக்தா அதிரும் இதய துடிப்புடன் கேட்டாள்.

“குருமூர்த்தி அய்யா எம்பையர்குள்ள இருக்கார்” என்றான் குணா.

சம்யுக்தா ஆசுவாசம் கொண்டவள், “அப்பா அங்க தானே இருக்கார். அதுக்கு ஏன் என்னை பயமுறுத்தற?” என்று குணாவிடம் கடுப்புடன் கேட்டாள்.

“ம்ப்ச். உன் அப்பா மட்டும் தான் உள்ள இருக்கார். அவர், அவரால வெளியே வர முடியாது”

“ஏன்? அப்பா ஏன் வெளியே வர முடியாது?” சம்யுக்தா அச்சத்துடன் கேட்க,

“உன் ஆளு வேலைதான். எங்களை எல்லாம் வெளியே அனுப்பிட்டு அவரை மட்டும் உள்ள பிடிச்சு வைச்சிருக்காங்க” என்றான் குணா.

“என், என்ன சொல்ற நீ? அவரா? இருக்காது குணா”

“சர்வாச்சார்யா சாரோட பாதுகாப்பு அதிகாரிங்க தான். எனக்கு தெரியும்” என்று அடித்து சொன்னான் குணா.

இதுக்கு தான் இங்க வந்திருக்கானா? கடவுளே!

நல்லவனுக்கு இப்போ என்ன கிறுக்கு பிடிச்சிருக்குன்னு தெரியலையே!