மகளின் கைப்பற்றி தட்டி கொடுத்த குருமூர்த்தி மருமகனின் தோள் தட்ட, அவரின் கையை தட்டிவிட்டான் மருமகன்.

“ம்ப்ச் என்ன பண்றீங்க நீங்க?” சம்யுக்தா கணவனை அதட்ட,

“சம்யுக்தா” என்றார் தந்தை.

“நீங்க இவரை கண்டிக்க மாட்டேங்கிறீங்கப்பா? என்னவோ பண்ணுங்க” மகள் முகத்தை திருப்பி கொண்டாள்.

ஒரு வாரமாக அவளும் பார்த்து கொண்டு தானே இருந்தாள். முழுதும் சர்வாச்சார்யா கட்டுப்பாடே! அவன் என்ன சொன்னாலும் குருமூர்த்தி கேட்கிறார். 

‘என் அப்பாகிட்ட மருமகன்  கெத்தை காட்ட நினைக்கிறானா மலைமாடு!’ மகளுக்கு இப்போதும் கோவம்தான்.

 

சிவப்பிரகாசம் தம்பதி குருமூர்த்தியிடம் விடைபெற்று கொள்ள, அவரின் தங்கைகள் கணவனுடன் தலையசைப்பு தான். 

இளையவர்கள் சித்தப்பா என்று முறையோடு அழைத்து விடைபெற, “மாமா” என்றழைத்து சுஹாசினி விடைபெற்றாள்.

அடங்காதவனுக்கு இப்படி ஒரு தங்கமான தங்கச்சி! குருமூர்த்திக்கு புன்னகை.

கார் கிளம்பிய பின், சம்யுக்தா திரும்பி, திரும்பி தந்தையை பார்த்தாள்.

சில, பல நிமிடங்களுக்கு பிறகு சர்வாச்சார்யாவின் மாளிகைக்குள் கார் நுழைந்தது.

சம்யுக்தாவிற்குள் நிச்சயம் பதட்டம். “இது என் வாழ்க்கை மட்டுமில்லை. அப்பா, இவரோடதும் கூட. நல்லபடியா வாழ்ந்துடணும்” என்று பெண் உறுதி எடுக்க, அவளை தன்னோடு சேர்த்து பிடித்து கொண்டான் சர்வாச்சார்யா.

இருவரும் ஒன்றாக வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தார்கள்.

சாமியறைக்கு சென்று விளக்கேற்றிய பின், பெரியவரின் அறைக்கு மனைவியை அழைத்து சென்றான் சர்வாச்சார்யா.

தொலைக்காட்சிகளில் பெரியவரை பார்த்திருக்கிறாள். அவரின் மீது எல்லோருக்கும் நல்ல மரியாதை உண்டு.

சம்யுக்தா மனதார அவரிடம் வேண்ட, சர்வாச்சார்யா அவரின் முன் தலை தாழ்ந்து நிமிடமே நின்றான்.

“தாத்தான்னா ரொம்ப பிடிக்கும் போல” அவனின் குடும்பம் சார்ந்து, சம்யுக்தா முதன் முறையாக ஒன்றை தெரிந்து கொண்டாள்.

வீட்டில் செய்ய வேண்டியதை எல்லாம் முடித்து, மணமக்கள் ஓய்வாக அமர்ந்தனர்.

விருந்தினர்கள் ஒவ்வொருவராக விடைபெற, சிவப்பிரகாசம் குடும்பத்தினர் புதுமண தம்பதியை சுற்றி அமர்ந்து கொண்டார்கள்.

நடந்து முடிந்த திருமணம் பற்றி சில நிமிடங்கள் பேசியவர்கள், வர போகும் ரிஷப்ஷன் பற்றியும் பேச ஆரம்பித்தார்கள்.

சர்வாச்சார்யா கழுத்து பட்டனை கழட்டி விட்டு, இருக்கையில் நன்றாக தலை சாய்த்து கொண்டான்.

“ராஜா. நீ போய் ரெஸ்ட் எடுப்பா” என்று இரு அத்தைகளும் சொல்ல,

“லன்ச் முடிச்சுட்டு போறேன் அத்தை” என்றான் நாயகன்.

“சரி காபி குடி” என,

“எங்களுக்கும் வேணும்” என்று வீட்டினர் சொல்ல, எல்லோருக்கும் காபி வரவைக்கப்பட்டது.

‘ரொம்ப டையார்ட்டா தெரியுறார். போய் ரெஸ்ட் எடுக்கலாம் தானே?’ சம்யுக்தா அடிக்கடி அவனை திரும்பி பார்த்து கொண்டாள்.

“நாங்க பண்றோம்ன்னு சொன்னா கேட்காம எல்லா ஏற்பாட்டையும் நீயே இழுத்து போட்டுக்கிட்ட தங்கம்” என்று பெரிய அத்தை அங்கலாய்த்தபடி, அவனின் காலுக்கு சுடுதண்ணீர் வைத்தார்.

சின்ன அத்தை அவனுக்கேற்ற சூட்டில் காபியை ஆற்றி கொடுக்க, வசுந்தரா தம்பதி எங்களுக்கு இது பழக்கம் தான் என்று மருமகளுக்கு இமை சிமிட்டி சிரித்தார்கள்.

“அண்ணி” என்று சுஹாசினி ஏதோ கேட்க, சம்யுக்தா அவளுக்கு பதில் சொன்னபடி, சர்வாச்சார்யாவிற்கு சின்ன குஷனை எடுத்து கொடுத்தாள்.

சர்வாச்சார்யா கழுத்துக்கு வைத்து கொண்டவன், ரிஷப்ஷன் ஏற்பாடு பற்றி சொல்ல,

“மாமா. நாங்களே பார்த்துகிறோம். எங்களை கொஞ்சம் நம்பலாம்” என்றான் ஆகாஷ்.

“டேய். நம்பாம தான் செய்றேனா என்ன? வாயை உடைச்சிடுவேன் ராஸ்கல்” என்றான் நல்லவன்.

“பின்ன நீ பண்றதுக்கு பேர் என்ன? அலங்காரம் கூட எங்களை பார்க்க விடலை. அந்த ராகவ் செய்றதை நாங்க செய்ய மாட்டோமா?” என்று கார்த்திக் கேட்க,

“நான் ராகவை கோவமானா பீப் வார்த்தையில் திட்டுவேன். உங்களை திட்ட முடியுமா? என்ன இருந்தாலும் நீங்க மருமகர்” என்றான் நக்கலாக.

“அடிக்கடி சொல்லு. அப்படியாவது எனக்கு ஞாபகம் இருக்கட்டும்” என்று சுஹாசினியை பார்த்து நொடித்து கொண்டான் கார்த்திக்,

வாடி லவ் பண்ணலாம் என்றால், கல்யாணத்துக்கு அப்புறம் பார்த்துக்கலாம் என்கிறாள் மாமா மகள்!

“டேய் அண்ணா. ஞாபகம் இல்லாமலா சுஹாக்கு மிட் நைட் ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்கிற? அவளுக்கு சேராதுன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறான் மாமா. என்னன்னு கேளுங்க”  என்று கார்த்திக்கின் உடன்பிறந்த தம்பி ஆதி.

“எங்களை பாலோ பண்ணிட்டே இருப்பியாடா? அவளுக்கு எது சேரும், சேராதுனு எனக்கு தெரியும் நீ மூடு” என்றான் கார்த்திக் கடுப்புடன்.

“சுஹா எனக்கும் முறை பொண்ணு தான். மறந்துடாத” என்று ஆதி எச்சரிக்க,

“டேய். அவ உனக்கு அக்காடா தடியா” என்றான் கார்த்திக்.

“ப்ரோ. நான்சென்ஸா பேசாத. சுஹா எனக்கு முறைப்பொண்ணு மட்டும் தான்” 

“இவன் தொல்லை எனக்கு தாங்க முடியலை, சீக்கிரம் கல்யாணத்தை வைச்சு தொலைங்கடா” என்று சர்வாச்சார்யா காதில் இரைந்தான் கார்த்திக்.

நாயகன் அதை  தூசி போல் தட்டிவிட்டு, பேச்சை தொடர, மதிய உணவு நேரமும் வந்துவிட்டது.

எல்லாம் ஒன்றாக அமர்ந்து உண்டு முடிக்கவும், சம்யுக்தாவை தனி அறையில் ஓய்வெடுக்க அனுப்பி வைத்தார்கள்.

உணவுண்ணும் நேரத்தில் இருந்தே சம்யுக்தாவிற்கு தந்தை ஞாபகம். அறைக்கு வந்ததும் குருமூர்த்திக்கு அழைத்து பேசிய பின் தெளிந்தாள் பெண். 

சர்வாச்சார்யா தூக்கம் தெளியவே பின் மாலை ஆகிவிட்டது. அவன் குளித்து கிளம்பி வர, சம்யுக்தாவும் குளித்து இளையவர்களுடன் அமர்ந்திருந்தாள்.

“மாம், அத்தைஸ்” என்று சர்வாச்சார்யா குரல் கொடுக்க, பெரியவர்கள் அத்தனை பேரும் ஹாலுக்கு வந்துவிட்டார்கள்.

“நாங்க அவர் வீட்டுக்கு கிளம்புறோம்” என்றான் நாயகன்.

“யார் வீட்டுக்கு?” என்று புரியாமல் கேட்க,

சம்யுக்தாவை கை காட்டி, “அவர் வீட்டுக்கு தான்” என்றான் ராஜாமகன். 

குருமூர்த்தி வீட்டுக்கா? சம்யுக்தா அதிர்ந்து விழித்தாள்.

“என்ன திடீர்ன்னு சர்வா?” என்று ஆரம்பித்து,

“அப்படியெல்லாம் போக கூடாது, முறைன்னு இருக்கு, நைட் சடங்கு இங்க தான் நடக்கணும், நம்ம வீட்டுல தான் ஏற்பாடு பண்ணியிருக்கோம்” என்று பல மறுப்புகள் எல்லா பக்கம் இருந்தும்.

“அத்தை இரண்டு நாள் முன்னாடி கூட, மேரேஜ் அன்னைக்கு நைட் ஹோட்டல்ல ஏற்பாடு பண்ணவான்னு கேட்டீங்க தானே?” என்று கேட்டான் நல்லவன்.

“ஆஹ். அது, அது வேற இது வேற தங்கம். முறை” என்று அவர் சமாளிக்க,

“அத்தை. ஹோட்டல்ல தங்கலாம். அவர் வீட்ல தங்க கூடாதா? முறை எல்லாம் அவர் வீட்டுக்கு கிடையாது. இரண்டு வீடும் என்னோட வீடுதான்” என்று முடித்துவிட்டான் நல்லவன்.

“நாம இங்கேயே” என்று சம்யுக்தா சொல்ல வர, 

“ராகவ்” என்று போன் எடுத்தவனை, அதன் பின் யார் நிறுத்தி வைக்க?

குருமூர்த்தி வீட்டை நோக்கி கார் சென்று கொண்டிருந்தது.

தந்தைக்கு அழைத்து தகவல் சொல்ல, அவர் என்னாச்சு, ஏன்? என்று கொஞ்சம் பதறித்தான் விட்டார்.

“அப்பா, அப்பா. ஒன்னுமில்லை. சும்மா வரோம்” என்று மகள் சமாதானமாக சொன்ன பின்னே, மனிதர் தெளிந்து,  “வாங்க, வாங்க” என்று பரபரப்புடன் போனை வைத்து ஓடினார்.

“ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாது” சம்யுக்தா கடுப்பாக சொல்ல,

“பிடிவாதத்தை பத்தி நீ பேசாதடி” என்றான் புது மாப்பிள்ளை.

“நான், நான் ஏன் பேச கூடாது?” சம்யுக்தா வேகமாக கேட்க,

“நான் வேணாம்ன்னு பிடிவாதமா இல்லை நீ?” என்று அவன் கேட்டான்.

“நீங்க வேணும்ன்னு பிடிவாதமா கேட்டதும் நான்தான்” என்று சிலுப்பி கொண்டாள் பெண்.

“கேட்காம இருந்திருந்தா தெரிஞ்சிருக்கும்” என்று அவன் ஒருமாதிரி சொல்ல.

“என்ன பண்ணியிருப்பீங்க?” சம்யுக்தா சந்தேகத்துடன் கேட்டாள்.

“ம்ஹ்ம். மூடை பொறுத்து எதாவது பண்ணியிருப்பேன்” என்றவன் மனைவியை தன் மடிக்கு இழுத்து கொண்டான்.

இருவருக்கும் இடையில் தடுப்பு ஏதும் இல்லாமல் போக, அவன் மடிக்கு முழுதும் இடம் பெயர்ந்திருந்தாள் பெண்.

சம்யுக்தா அதிர்ந்து முன்னால் பார்க்க, ஓட்டுநர் இருக்கைக்கும், இவர்கள் இருக்கைக்கும் இடையில் திரை இருந்தது.

ஆசுவாசம் கொண்ட பெண்ணின் முகத்தை பற்றி தன் பக்கம் திருப்பியவன், “இப்போ இருக்க மூட் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு” என்றான்.

“எப், எப்படி?” அவன் பார்வையில் பெண்ணுக்கு திணறல்.

“ம்ஹ்ம். உனக்கு முத்தம் கொடுக்க தோணல” 

சம்யுக்தா திணறல் நிற்க, “ஆனா அதுக்கு பதிலா வேற தோணுது” என்றான்.

“வேற, வேற என்ன?”

“ஒன்னை  தெரிஞ்சுக்கணும்ன்னு தோணுது” 

“எத. எதை தெரிஞ்சுக்கணும்” என்றவள் கரங்கள் அவனின் கழுத்தில் இழுத்து நழுவ பார்த்தது.

“உன்னோட இடுப்பு“

“ஹா. ஹான்“

“ஊட்டியில் உன்னை தூக்கும் போது ரொம்ப குட்டியா இருந்துச்சு” 

ஹஸ்கி குரலில் பெண்ணை வேர்க்க வைத்தான்.

“இப்போவும் அப்படித்தான் இருக்கா என்ன?” என்று கேட்டவன், இரு கைகளையும் சுதந்திரமாக அவளின் இடையை சுற்றி படரவிட்டான்.

சம்யுக்தா அவன் ஆராய்ச்சியில் திகைத்து, நாயகனின் பின் முடியை இறுக்கமாக பற்றி கொள்ள,

“என்னடி இது? வளரவே இல்லை. இப்போவும் குட்டி இடுப்பு தாண்டி” என்றான் அவன் பெண்ணின் காதுக்குள்.

“ஸ்ஸ்” சம்யுக்தா சிலிர்த்து, தவித்து போக, 

“இதை வைச்சு நான் என்னடி பண்ண?” என்று சிவந்தான் இளங்காளை.

“போ, போதும். விடு, விடுங்க” என்று சம்யுக்தா முனக,

“என் ஆசைக்கு இது போதாதுடி. நைட்டுக்கு மட்டும் உன் இடுப்பு மக்கர் பண்ணட்டும், நெரிச்சிடுறேன்” என்றான் இவன் மிரட்டலுடன்.

“என், என்ன இப், இப்படி?” சம்யுக்தா அவன் கையில் இருந்து திமிர,  

“ஏண்டி ராட்சசி. இப்போதான் கையில கிடைச்சிருக்க? நான் இதையெல்லாம் எப்படி தெரிஞ்சுக்க? இனி விலகி பாரு. என்னோடவே கட்டி போட்டுடுறேன். அதுவும் *** கட்டி போடுவேன்” என்று அவன் காதில் சொன்னதில் சம்யுக்தா மொத்தமாக சிவந்து போனாள்.

“ஏண்டா இவ்வளவு கெட்ட பையனா மாறி வந்திருக்க?” என்று கிசுகிசுத்த பெண் அவன் முடியை வலிக்க பற்றி இழுக்க,

“இன்னும் கிட்ட வந்து இழு. எனக்கு வலிக்கலை” என்றவன் பெண்ணை இன்னும் தன்னுடன் நெருக்கி கொண்டு மனைவியிடம் அதன் பின் செய்ததும் அத்தனையும் கெட்ட பையன் செய்யும் செயலே தான்!