Friday, May 2, 2025

    இன்பமுறச் செய்தாய்

    அத்தியாயம் 19 காலை நேரம், வேப்பங்குச்சியில் பல் தேய்த்தபடி பின்கட்டில் ராமநாதன் உலாத்திக் கொண்டிருந்தார். தொழுவில் பால் வியாபாரி அளந்து பாலைக் கேனில் ஊற்றி முடிக்க, ஒரு தூக்குவாளியைக் கொண்டு வந்து அவனிடம் நீட்டினார் வள்ளி. “நம்ம லட்சுமி கண்ணு போட்டுருக்குல்ல.. அந்தச் சீம்பால் இதுல இருக்கு. மீனா வீட்டுல பால் ஊத்தும் போது கொடுத்துடுடா...
    அத்தியாயம் 03 வாழ்வே மாயம் என்னும் நிலையில் சோகமாய் நடந்து வந்து கொண்டிருந்த குமரனை, “தலைவரே.. தலைவரே..” “அண்ணே” என இருவித அழைப்பில் இருவித குரல்கள் அவனை இழுத்திருந்தது. அங்கு குமரனின் தலைமையில் ஒரு இளைஞர் கூட்டம் உண்டு. அதை அவர்களே சங்கமென்று அறிவித்துக்கொள்ள, குமரனைத் தலைமை பொறுப்பிலும் அமர்த்திவிட்டனர். பொழுது போகவே சிறுவயதில் கபடி...
    அத்தியாயம் 17 ஊரில் பஞ்சாயத்து நடைபெற்றுக் கொண்டிருந்த அதே நேரம். சுறுசுறுப்பான காலை நேரம், மதுரை அரசு மருத்துவமனை இன்னும் பரபரப்பாக இருக்க, அனைவரையும் ஒரு நொடி அதிரச் செய்தது, கூக்குரலாய் ஒரு பெண்ணின் வலி நிறைந்த அழுகுரல். அது நந்தினியின் கதறல், பார்த்திருந்த அனைவரையும் கலங்கச் செய்தது. மருது அசோக்கை அழைத்து வந்து மருத்துவமனையில்...
    அத்தியாயம் 20 எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மீனாட்சியம்மன் கோயில் மண்டபம் கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டு, ஊரே கூடியிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் முகூர்த்த நேரம் வரவிருக்க, “டேய் மாப்பிள்ளை, ரெடியா?” என்றபடி உள்ளே வந்தான் குமரன். குமரனையும் இடித்துக்கொண்டு அறைக்குள் ஒரு சிறுவன் நுழைய, “என்ன மல்லுவேட்டி, வேட்டியோடு மல்லுக்கட்டிக்கிட்டு இருக்க?” என்றான் சிரிப்போடு குமரன். மாப்பிள்ளை மருது...
    அத்தியாயம் 08 ஊர் நடுவே இருக்கும் மீனாட்சியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்புப் பூஜையிருக்கும், வெகு விசேஷம். தங்கள் ஊர் மட்டுமின்றி பக்கத்து ஊர் முதல் பெரும்பாலான பெண்கள் அங்கு தான். உடன் வைதேகியும் அழைத்து வந்திருந்தாள். வைதேகி பள்ளிப்படிப்பு வரை மீனாவுடன் ஒன்றாகப் பயின்ற உயிர்த்தோழி. பின் அவள் கம்யூட்டர் கோர்ஸ் முடித்துவிட்டு, தையல் பயிற்சிக்கும்...
    அத்தியாயம் 11 குழந்தைகள் அங்குமிங்கும் விளையாடிக் கொண்டிருக்க, சில உறவுகள் ஆளுக்கொரு வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தார். இன்னும் மணப்பெண் அழைத்து வரவில்லை. ஆகையால் ஊர்க்கார்களும் அதன்பின் தான் வருவார்கள். குமரனின் கண்கள் மண்டபம் முழுவதும் சுழல, வரவேற்பில் நின்றிருக்கும் பெண்களிடம் பேசிக்கொண்டிருந்த மீனாவை கண்டுகொண்டான். சுற்றும் முற்றும் பார்த்தவன், “டேய் அரைபெடலு, இங்க வா” என்றழைத்தான். அருகே...
    அத்தியாயம் 15 அதிகாலை நேரம் சூரியன் புலர்ந்து புது வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டிருக்க, மீனாட்சியம்மன் கோயில் மண்டபத்தில் பஞ்சாயத்து கூடியிருந்தது. பாஞ்சயத்து என்றால் நடுவர்கள், பெரியவர்களில் அனைவருமிருப்பர், புகார் கொடுத்தவரின் சமூகத்தினர் மட்டுமே கூட அனுமதி. அதிலும் வெளியூர்க்காரர்களுக்கு அனுமதியில்லை. காவல் நிலையத்திற்குச் செல்ல வேண்டிய பிரச்சனையைத் தங்களுக்காகப் பேசி முடிக்க விரும்புவர்கள் பஞ்சாயத்திற்கு வருவர்....
    அத்தியாயம் 12 புது மாப்பிள்ளை அசோக் இப்போது வேலைக்கு வருவதில்லை. சுந்தரமூர்த்தி அவனுக்குப் பதினைந்து நாட்கள் விடுமுறை கொடுத்து விட, புது மனைவியோடு விருந்தும் கொண்டாட்டமுமாகச் சென்றது அவன் நாட்கள். ஆறுதலுக்கு அசோக்குமில்லாது மீனாவும் கண்ணிலே படாது மிகவும் சோர்ந்து போனான் குமரன். சரியாக அவன் சுற்றும் இடங்களும் தன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இடங்களும் மீனாவிற்குத்...
    அத்தியாயம் 04 இரண்டு மூன்று வாரங்களில் எல்லாம் ஜெயராணி நோயுற்று படுக்கையில் விழுந்திருந்தார். அந்த நாட்களில் அத்தையைப் பார்க்காது மீனா தவித்துப் போனாள். ஜெயராணியின் வீட்டருகே சிறுவர்களோடு விளையாடிக் கொண்டிருந்த மீனா, வேலுநாச்சி வெளியில் செல்வதைக் கண்டு கொண்டாள்.  வீட்டில் அந்த நேரம் வேறு யார் இருப்பர் என்றெல்லாம் அவளுக்கு யோசிக்கத் தெரியவில்லை. அத்தையைப் பார்க்கும்...
    அத்தியாயம் 07 உச்சி வெயில் நேரம், சோலையின் கடையில் வேலையில்லாது கூடியிருந்தனர் அனைவரும். அதிலும் சுரேஷ் உடைமைகளோடு இருக்க, அவனை வழியனுப்ப என அனைவரும் வந்திருந்தனர். “கொஞ்ச நாளைக்கு அங்கிட்டுப் பாரு, அப்புறமா அப்பாகிட்ட சொல்லி இங்கிட்டு ஏதாவது வேலை ஏற்பாடு பண்ணிறலாம்” எனக் குமரன் ஆறுதலும் நம்பிக்கையும் தர, சுரேஷ் தலையாட்டினான். “நம்ம வீட்டுலன்னாலும்...
    அத்தியாயம் 10 மீனாவிற்குத் தேர்வுகள் முடியும் வரை குமரன் பணிக்குச் செல்லாமல் ஊருக்குள் சுற்றியதில் நிகழ்ந்த தன்மை, ராமநாதன் அவனைப் பார்த்தால் முகம் திருப்பாமல் செல்வது தான். எங்குப் பார்த்தாலும், “என்ன மாமா..?” என்றோ, “வணக்கம் மாமா..” என்றோ குரல் கொடுத்து விடுவான். முன்பெல்லாம் அவன் பேசமாட்டான், அவரும் கண்டும் காணாது போலே சென்றுவிடுவார். இப்போது...
    அத்தியாயம் 02 மீனாட்சிபுரம், ஊரின் மையத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில். அதைச் சுற்றிக் குடியிருப்புக்கள், அதைச் சுற்றி வயல்வெளிகள், தோப்புகள் எனப் பசுமை விரிப்பு, அதைச் சுற்றி உயர்ந்த மலைமுகடுகள். வைகையின் கொடையால் செழித்த, அழகான கிராமம். அதன் அழகு சிதையாது அவசியத்திற்குச் சிறிது நவீனத்தையும் புகுத்திக்கொண்டனர். காலை நேரம், அவ்வீட்டின் பின்புறம் மாட்டுத் தொழுவத்தில்...
    அத்தியாயம் 20 ஊரே வந்து வாழ்த்தி விருந்துண்டுச் செல்ல, வராதது ஆறுமுகத்தின் குடும்பம் மட்டும் தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆறுமுகத்தின் மனைவி தவறி விட, மகளும் சொத்து மொத்தத்தையும் புகுந்த வீட்டிற்கு எழுதி வாங்கிக்கொண்டு சென்று விட்டாள். அதில் மிகுந்த வேதனையோடு மனமுடைந்து போன ஆறுமுகம் படுத்த படுக்கையாகி விட்டார். இப்போதெல்லாம் அடிக்கடி...
    அத்தியாயம் 14 உயிர் மூச்சைக் கையில் பிடித்துக் கொண்டு அசோக் பார்த்து நிற்க, வண்டியை நிறுத்திவிட்டு மீனா இறங்கவும் அவளுக்குப் பின்னிருந்து வைதேகி இறங்கினாள். மெல்ல சுரேஷை சுரண்டிய அசோக் காதோரம், “ஏன்டா இரண்டு புள்ளைங்களை லவ் பண்ணியா?” என்றான் வியப்பாக. சுரேஷ் முறைக்க, “இல்லைடா.. சட்டப்படி இரண்டு கல்யாணமெல்லாம் பண்ண முடியுமா?” என்றான் இன்னும்...
    அத்தியாயம் 05 காலை பதினோரு மணிப் பேருந்து, ஊருக்குள் வந்து திரும்பியது. பரீட்சைக்கான நுழைவுச் சீட்டைப் பெற வேண்டியிருக்க, அன்று கல்லூரிக்குக் கிளம்பியிருந்தாள் அழகு மீனாள்.  பயணிகளோடு பேருந்து திரும்ப, யாரோ குரல் கொடுத்ததில் நிற்க, பின் படிக்கட்டிலிருந்து குமரன் எட்டிப் பார்த்தான். கையில் மஞ்சப்பையோடு வேலுநாச்சி வெடுக்கு வெடுக்கென ஓடி வர, நின்று அழைத்து...
    இன்பமுறச் செய்தாய்! – மித்ரா அத்தியாயம் 01 “மதுர மரிக்கொழுந்து வாசம் என் ராசாத்தி உன்னுடைய நேசம் மதுர மரிக்கொழுந்து வாசம் என் ராசாத்தி உன்னுடைய நேசம்...” என்ற பாடல் அந்த நின்றிருந்த பேருந்திற்குள் ஒலி பெருக்கி வழியாக இசைத்துக் கொண்டிருந்து. “நூறு பூ இருபது ரூபாம்மா, அம்மா மொட்டு மல்லிம்மா.. நூறு பூ இருபது ரூபாம்மா....
    அத்தியாயம் 19 “பிடிக்கும்..ரொம்பப் பிடிக்கும். எப்போ பிடிக்க ஆரம்பிச்சதுன்னு தெரியாது. ஆனால் வெளியாளுங்க பொண்ணு பார்க்க வரும் போது தான் என்னால அதை உணர முடிஞ்சது. உன்னைத் தவிர வேற யாரையும் என்னால இந்த மாதிரி ஏத்துக்க முடியாதுன்னு அப்போதான் எனக்குப் புரிஞ்சது.  சின்ன வயசுலையே உன்னை ரொம்ப பிடிக்கும், ஆனால் அது என் ஜெயராணி அத்தை...
    error: Content is protected !!