Saturday, May 4, 2024

    இனியெல்லாம் சுகம்

    அத்தியாயம் 10 அதிகாலையில் எல்லாம் எழுத்து விட்டாள் லலிதா. வெளி வாசல் பெருக்கி, நீர் தெளிக்கும் நேரம் தான் சரவணனின் இருசக்கர வாகனம் அங்கிருப்பதைக் கண்டாள். என்ன நினைத்தாளோ, அனைத்தையும் அப்படியே போட்டுவிட்டு,  விறுவிறுவென சரவணனின் சைட்டில் இருக்கும் அவன் அறை நோக்கிச் சென்றாள். தகரக் கதவு திறந்திருக்க, உள்ளே நாற்காலியில் அமர்ந்தபடியே மேசை மீது கை வைத்து, அதன்...
    அத்தியாயம் 09 வீட்டிற்கு விரைந்த சரவணன், அரை மயக்க நிலையில் கிடக்கும் சாரதாவையும் உடன் அன்னையையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றான். மருத்துவமனையில் சிகிச்சை நடந்து கொண்டிருக்க, கதிர்வேலுக்கு அழைத்து தகவல் தெரிவித்தான். மனைவியின் உடல்நிலையை விசாரித்த கதிர்வேலோ நான் தற்போது ஊரில் இல்லை, விரைந்து வருகிறேன், அது வரையிலும் கவனித்துக் கொள்ளுமாறு கூறினார். சரவணனிற்கு மனது சமாதானம் அடையவே...
    அத்தியாயம் 08 அன்று நண்பகல் வேளையிலே தங்கராசு வெளியில் கிளம்புவதைச் சரவணன் கவனித்திருந்தான். மாலையில் வரையிலும் அவன் வந்த மாதிரி தெரியவில்லை. முகில் சென்று சாவியைக் கொடுக்கச் செல்ல, இடை மறித்த சரவணன், “எனக்குக் கொஞ்சம் கணக்குசரிபார்க்க வேண்டிய வேலையிருக்கு நான் முடிச்சிட்டு சாவியை கொடுத்துக்கிறேன், நீ கிளம்பு, போ” என விரட்டினான். முகிலோ கேலிச் சிரிப்போடு, “அதென்ன...
    அத்தியாயம் 07 லலிதாவின் வீட்டுவாசலில் பந்தல் வெய்து இருக்க, ஊரே கூடியிருந்தது. அவள் அன்னை வழிச் சொந்தங்கள், பாட்டியின் உடன் பிறப்புகள், அவர்கள் பிள்ளைகள், பேரன் பேத்திகள் வரை ஊரில் இருந்து வந்த சொந்தங்கள் அனைத்தும் நிறைந்திருந்தனர். ஒரே அழுகையும் சலசலப்பும் மட்டுமே! சரவணன் திண்ணையில் அமர்ந்திருந்தான். இரண்டாம் நாளாக இன்னும் அவன் வீட்டிற்குச் செல்லவில்லை. ரத்தின பாண்டியனும் வந்து...
    அத்தியாயம் 06 அதுவரையிலும் பயம் பிடித்து ஆடிக்கொண்டிருக்க, முற்றிலும் நொறுங்கி இருந்தாள் லலிதா. சரவணன் அருகே வர, ஆறுதல் வார்த்தையும் ஸ்பரிசமும் கூட இல்லாத போதும், தைரியமும் ஒன்று தானாக வந்து ஒட்டிக் கொண்டது போன்றிருந்தது. விந்தையாக இருந்த போதும், அலசி ஆராயாமல் அனுபவித்தாள் லலிதா. நீர் நிறைந்த விழிகள், காரிருளில் வைரமாக ஜொலிக்க, வார்த்தை வராது வாயடைத்த போதும்,...
    அத்தியாயம் 05 லலிதா எந்த அளவிற்கு ஒதுக்கம் காட்டினாலோ அதற்கு மாறாக வாஞ்சையுடன் சீராட்டினார் சொர்ணம். ஏன், என்னவென்று தெரியாது சரவணன் மீது மட்டும் சிறிது வெளிப்படையாகவே பாசம் காட்டினார் சொர்ணம். வேலையிடத்தில் அவனுக்குத் தேவையான சிறு சிறு உதவிகளைச் செய்தார். பெரும்பாலான மாலை நேரங்களில் சரவணன் சைட்டில் இருந்தால், தன் வீட்டில் போடும் தேநீரை அவனுக்குக் கொடுத்துவிட்டு...
    அத்தியாயம் 04 சரவணன் மறுபுறம் அமர்ந்திருப்பான் என்றோ இப்படி விருட்டென எழுந்து நெடும் உயரமாக முன் நிற்பான் என்றோ சற்றும் எதிர்பாராத லலிதா திடுக்கிட்டு விழித்தாள். இதயம் அதிர்ச்சி கலந்த பயத்தில் படபடத்தது துடித்தது. மன்னிப்பு வேண்ட நினைத்தாலும் ஒட்டிய உதடுகள் பிரிய மறுக்க, பின் எங்கே வாய் தாண்டி வார்த்தைகள் வரும். கடந்த ஒரு வாரமாக இவனும்...
    அத்தியாயம் 03 நண்பகலை நெருங்கும் நேரம், வேப்பமரத்தின் தணிந்த காற்றை அனுபவித்தபடி திண்ணையில் அமர்ந்திருந்தாள் லலிதா. மதிய சமையலுக்குத் தேங்காயைத் துருவி கொண்டிருந்தாள். சமையல், வீட்டு வேலைகளை எல்லாம் லலிதாவே செய்து விடுவாள். பெரும்பாலும் பாட்டிக்கு வேலைகளே அதிகம் வைக்காது, தாங்காத குறையாக லலிதாவே கவனித்துக் கொள்வாள். பாட்டிக்கு வெளி வேலைகள் மட்டும் தான், அதுவுமே இவள்...
    அத்தியாயம் 02 காலையில் எழுந்ததுமே இந்த தங்கராசு மாமாவை எங்குச் சென்று தேடுவது? என்ற யோசனையில் தவித்துக் கொண்டு தானிருந்தாள் லலிதா. இவள் நல்ல நேரமாக, அன்றைய காலைப் பொழுதே வீட்டிற்கு வந்தான் தங்கராசு. “வந்துட்டான் தண்டச்சோறு, உழைச்சி ஒத்த ரூபாய் கூட வீட்டுக்குக் கொடுக்கிறதில்லை. சாப்பாட்டுக்கு மட்டும் நேரத்துக்கு வந்துடுவான். எல்லாம் என் வயித்துல வந்து பிறந்திருக்கான்...
    இனியெல்லாம் சுகம்! – மித்ரா அத்தியாயம் 01 காலை இளங்கதிர் பளிச்சென்று முகத்தில் விழ, மல்லிகைப் பந்தலை நோக்கி வரும் வாய்க்கால் நீரைக் கோதி, முகம், கைகால்களைக் கழுவிக் கொண்டிருந்தாள் லலிதா.  கண்ணாடி போன்ற பளிச்சென்று, கலக்காத சுத்தமான கிணற்று நீர், மேனி தொட்ட இடமெல்லாம் சில்லென்று தழுவி அதன் குளுமையை அவளுள் கடத்திக் கொண்டிருக்க, கண் மூடி அனுபவித்து இருந்தாள்.  “லலிதா.. அடியே லலிதா” என்ற உரத்த குரலுக்கு...
    error: Content is protected !!