இனியெல்லாம் சுகம்
அத்தியாயம் 04
சரவணன் மறுபுறம் அமர்ந்திருப்பான் என்றோ இப்படி விருட்டென எழுந்து நெடும் உயரமாக முன் நிற்பான் என்றோ சற்றும் எதிர்பாராத லலிதா திடுக்கிட்டு விழித்தாள். இதயம் அதிர்ச்சி கலந்த பயத்தில் படபடத்தது துடித்தது.
மன்னிப்பு வேண்ட நினைத்தாலும் ஒட்டிய உதடுகள் பிரிய மறுக்க, பின் எங்கே வாய் தாண்டி வார்த்தைகள் வரும்.
கடந்த ஒரு வாரமாக இவனும்...
அத்தியாயம் 05
லலிதா எந்த அளவிற்கு ஒதுக்கம் காட்டினாலோ அதற்கு மாறாக வாஞ்சையுடன் சீராட்டினார் சொர்ணம்.
ஏன், என்னவென்று தெரியாது சரவணன் மீது மட்டும் சிறிது வெளிப்படையாகவே பாசம் காட்டினார் சொர்ணம்.
வேலையிடத்தில் அவனுக்குத் தேவையான சிறு சிறு உதவிகளைச் செய்தார். பெரும்பாலான மாலை நேரங்களில் சரவணன் சைட்டில் இருந்தால், தன் வீட்டில் போடும் தேநீரை அவனுக்குக் கொடுத்துவிட்டு...
அத்தியாயம் 09
வீட்டிற்கு விரைந்த சரவணன், அரை மயக்க நிலையில் கிடக்கும் சாரதாவையும் உடன் அன்னையையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றான்.
மருத்துவமனையில் சிகிச்சை நடந்து கொண்டிருக்க, கதிர்வேலுக்கு அழைத்து தகவல் தெரிவித்தான்.
மனைவியின் உடல்நிலையை விசாரித்த கதிர்வேலோ நான் தற்போது ஊரில் இல்லை, விரைந்து வருகிறேன், அது வரையிலும் கவனித்துக் கொள்ளுமாறு கூறினார்.
சரவணனிற்கு மனது சமாதானம் அடையவே...
அத்தியாயம் 12
தங்கராசு, வெறுமையாகக் கிடைக்கும் தோப்பை சுத்தப்படுத்த, வேலையாட்களை அழைத்து இருந்தான்.
வேலைகள் நடக்க, எட்டிப் பார்த்த லலிதா, இவ்வளவு நேரமாக வீட்டில் இருக்கிறானே? என்ற யோசனையுடன் அருகில் வந்தாள்.
“மாமா நீங்க வேலைக்குப் போகலை? இங்க என்ன செய்றீங்க?” என்க, “இனி அந்த வேலைக்குப் போகலை, வேற வேலை பார்க்கணும். இப்போதைக்கு நிலத்தை உழுது தக்காளி...
அத்தியாயம் 14
காவ்யா வாழ்த்திச் சென்ற பின், மனமெங்கும் மணக்கோலத்தில் தன் மங்கை வந்து நிறைய, இனிய கனவில் சுற்றி வந்தான் சரவணன்.
கண் திறந்திருந்தும் பகல் கனவில் சுற்றி வருபவனுக்குக் காலுக்குக் கீழ் கிடக்கும் பலகையும் அதன் அடியில் நீட்டிக் கொண்டிருக்கும் கூர்மையான இரும்புக் கம்பியும் கண்ணுக்குத் தெரியவில்லை.
வலி உணர்ந்தவன் சற்று அலறிய பின்பே குனிந்து...
அத்தியாயம் 15
லலிதாவின் வீடு உறவுகளால் நிறைத்திருந்தது. சரவணன் குடும்பத்தோடு பெண் பார்க்க வருவதாக இருக்க, சபைக்குப் பெரியோர்களையும் சில முக்கிய உறவுகளையும் அழைத்திருந்தான் தங்கராசு.
முதலில் சரவணன் நேரடியாக தங்கராசுவிடம் பேசவே இல்லை, தான் கேட்டு, தங்கராசு வீம்புக்கே மறுத்தால் என்ன செய்வது என உஷாராக இருந்தான் சரவணன்.
ஆகையாலே அவன் தந்தை ரத்தினபாண்டியனைத்...
அத்தியாயம் 11
வெளி வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு, மாலை நேரமாக சைட்க்கு கிளம்ப நினைத்திருந்தான் சரவணன்.
ஆனால் தங்கராசு வந்திருப்பதாக முகிலிடம் இருந்து தகவல் வர, உடனே கிளம்பி விட்டான்.
காலையில் இருந்தே லலிதாவின் பார்வை, சரவணனைத் தேடி ஓய்ந்து முகிலைக் கண்டு ஏமாற்றமே அடைந்தது.
சரவணன், லலிதாவின் வீட்டருகே நெருங்க, சரியாக எதிரே வந்தான் தங்கராசு.
கண்டு கொள்ளாமல் தாண்டிச்செல்ல...
அத்தியாயம் 03
நண்பகலை நெருங்கும் நேரம், வேப்பமரத்தின் தணிந்த காற்றை அனுபவித்தபடி திண்ணையில் அமர்ந்திருந்தாள் லலிதா. மதிய சமையலுக்குத் தேங்காயைத் துருவி கொண்டிருந்தாள். சமையல், வீட்டு வேலைகளை எல்லாம் லலிதாவே செய்து விடுவாள்.
பெரும்பாலும் பாட்டிக்கு வேலைகளே அதிகம் வைக்காது, தாங்காத குறையாக லலிதாவே கவனித்துக் கொள்வாள். பாட்டிக்கு வெளி வேலைகள் மட்டும் தான், அதுவுமே இவள்...
அத்தியாயம் 02
காலையில் எழுந்ததுமே இந்த தங்கராசு மாமாவை எங்குச் சென்று தேடுவது? என்ற யோசனையில் தவித்துக் கொண்டு தானிருந்தாள் லலிதா.
இவள் நல்ல நேரமாக, அன்றைய காலைப் பொழுதே வீட்டிற்கு வந்தான் தங்கராசு.
“வந்துட்டான் தண்டச்சோறு, உழைச்சி ஒத்த ரூபாய் கூட வீட்டுக்குக் கொடுக்கிறதில்லை. சாப்பாட்டுக்கு மட்டும் நேரத்துக்கு வந்துடுவான். எல்லாம் என் வயித்துல வந்து பிறந்திருக்கான்...
அத்தியாயம் 13
அன்று இறுதியாகக் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு, அது மட்டுமின்றி கட்டிப்பாடு இல்லாது தன் மனதையும் வெளிக்காட்டிவிட்டனோ என நொந்து கொண்டாள் லலிதா.
கொடுத்த பணம் திரும்பி வந்தது, தங்கராசு பேசியது, அனைத்தும் உணர்ந்தும் சரவணன் மௌனமாக இருப்பது, தவிர்ப்பது தாங்க முடியவில்லை. அவ்வளவு தானா? என்ற ஏக்கம், வெளிக்காட்ட முடியாத வலி.
தன்மானமும் வீறுகொண்டு...