இரவின் ஒளியில்
இரவு 56
என்னுடன் நீ இருந்தால் நரகம் கூட சொர்க்கமாய் இனிக்கிறதே!
தினக்கரன் பத்தாம் வகுப்பில் நல்ல முறையில் தேர்ச்சி அடைந்திருந்தான். அவனை அவன் அம்மா, அவன் படித்திருந்த பள்ளியை விட்டு மிகத் தள்ளி ஒரு பள்ளியில் சேர்த்திருந்தார். அன்று அவள் கம்பள் தந்து சென்றதோடு சரி, தேவியை அதன் பின் தினக்கரனால் பார்க்கவே முடியவில்லை. அவளைப்...
இரவு 55
காலம் கரைந்து போனாலும், இளமை மறைந்தாலும், வாழ்க்கை கைவிட்டு போனாலும், உன் மீது நான் வைத்த நேசம் என்றும் மறையாது.
கழுத்தில் போட்டு இருந்த பேன்டை சிறுது லூசாக்கி விட்டு அந்த பென்ஜில், சாய்ந்து அமர்ந்திருந்தார் தினகரன். அவருக்கு வீட்டிலேயே இருக்க பிடிக்காமல் தன் பேத்தியை ப்ளேஸ்கூலில் விட வந்தவர் சிறிது நேரம் இளைப்பாற...
இரவு 54
வானில் சூரியன் மஞ்சள் நிறத்தில் அதன் கதிர்களை பரவியிருந்தது, மாலை நெருங்க நெருங்க அதன் கதிர்களை சுருக்கி மஞ்சளிலிருந்து சிவப்பு வண்ணப் பந்து போல அழகாக அந்த நவீன யுக கட்டிடங்களுக்கிடையில் அதை மறைத்து இரவுக்கு வழிவிட்டு சென்றுகொண்டிருப்பதை மாடியில் இருந்து கண்ணிமைக்காமல் மயூரி மற்றும் லட்சுமி பார்த்துக்கொண்டு இருந்தனர். மயூரி வீட்டிற்கு...
இரவு 53
ஜெய் கத்தியதைக் கேட்டு, அதிர்ந்த மயூரி “ என்ன ஜெய் சொல்ற? லட்சுமி அம்மாவை கண்டுபிடிக்க கூடாதுன்னு நினைச்சியா? “
“ அவங்களை கண்டுபிடிக்க கூடாதுன்னு நினைக்கல்லை மயூ கண்டுபிடிக்க விடாம செஞ்சதே நான்தான். அவங்களை மட்டும் இல்லை, உன்னுடைய உண்மையான குடும்பத்தை அவங்களையும் கண்டுபிடிக்க விடாம செஞ்சதும் நான்தான் “ அதைக் கேட்டு,...
இரவு 52
ஒரு மனிதனுக்கு அளவில்லா காசு, அளவில்லா சுதந்திரம் இரண்டில் ஒன்று இருந்தாலே அது ஆபத்தில் தான் முடியும், இங்கு இரண்டுமே கிடைத்த ஜெய்யின் தந்தை ஆனந்த் எப்படி இருந்திருப்பார் . மது மாது சூது என்று அவரிடம் இல்லாத பழக்கம் இல்லை. அனைத்தையும் கற்று அதில் ஊறி போய் சுற்றினார் அவர் செய்யும்...
இரவு 51
ஸ்டெல்லா ஆபிஸில் வேலையை பார்த்து கொண்டே அடிக்கடி போனை எடுப்பதும் அதில் ஏதாவது மேசேஜ் வந்திருக்கிறதா என்று பார்ப்பதுமாக இருந்தாள். வாய் ஜெய்யை பொரிந்து தள்ளிக்கொண்டு இருந்தது அன்று அவன் இவளிடம் பேசியது வேறு நினைவுவர அதை எண்ணிய படி அவனை வறுத்து கொண்டு இருந்தாள். அன்று தீர்க்கமான விழியுடன் ஸ்டெல்லாவை பார்த்தவன்...
இரவு 50
காலை வெயில் சுள்ளென்று அடித்துக் கொண்டு இருக்க அதை வெறித்துப் பார்த்தபடி நின்று கொண்டு இருந்தான் ஆர்யன். முகத்தை மறைக்கும் அளவு தாடி வளர்ந்திருந்தது கண்ணில் கண்ணாடியுடன் கருவளயமும் புதிதாக இடம்பெற்றிருந்தது. முகத்தில் சிரிப்பு மறைந்து அதற்கு பதிலாக சோகம் குடியெறிருந்தது.
உதயமாகி கொண்டு இருந்த சூரியனை பார்த்துக் கொண்டு இருந்த ஆர்யனுக்கு அவன்...
இரவு 49
அந்த அறையில் எரியும் மஞ்சள் விளக்கை அணைத்து விட்டு, வெள்ளை விளக்கை எரிய விட அனைத்தும் தெளிவாக தெரிந்தது அறையின் ஒரு புறத்தில் வரிசையாக பெண்களின் ஆடைகள் ஹேங்கரில் தொங்க விட்டு இருக்க, அதன் அருகே டிரெஸ்ஸிங் டேபிளில் நிறைய மேக்கப் பொருட்கள் நிறைந்து இருந்தது அதோடு கருப்பு கலர் லென்ஸ் களும்...
இரவு 48
“ அன்னைக்கு எனக்கு அவர் யார்னு தெரியாது, ஆனா ஒரு மாசம் கழிச்சி நான் அவர் கம்பெனில பிஏ வா ஜாயின் பண்ண பிறகு தான் தெரியும் அவர் தான் அந்த கம்பெனி எம்டின்னு. “ என்று கர்ணாவை நிமிர்ந்து பார்த்தவள் “ அந்த பொண்ணு டெத்துக்கு அவர் தான் காரணமாக இருப்பாருன்னு...
இரவு 47
பகல் ஒளி வேகமாக மறைந்து கொண்டு இருக்க, மயூரி கத்தி கத்தி பார்த்துவிட்டு தொண்டை வறண்டு போக அமைதியாகியவள். பொறுமையாக மூச்சை இழுத்து விட்ட படி அவளை சுற்றிக் கேட்கும் சத்தங்களை கேட்கத் தொடங்கினாள். ஃபேன் ஓடும் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டு இருந்தது. வேறு எந்த சத்தமும் கேட்காமல் போக, “...
இரவு 46
அன்று நடக்க போகும் விபரீதம் தெரியாமல் மயூரி நன்றாக தூங்கி கொண்டு இருந்தாள். ஆர்யன் வாக்கிங் செல்ல மயூரியை எழுப்பி பார்த்துவிட்டு அவள் எழவில்லை என்றதும் இவன் மட்டும் தனியாக சென்றுவிட்டான். வாக்கிங் முடித்து வந்தவன் “ அப்பா மயில் முழிச்சிட்டாளா…” என்று ஷூவை கலட்டிய படி கேட்க “ இல்ல ஆரி...
இரவு 45
அந்த அறையே ஏசி இன்றியும் ஜில்லென்று இருக்க அதை தாண்டி மயூரிக்கு வேர்க்கத் தொடங்கியது. இரவு உடையாக டாப் மற்றும் பேண்ட் போட்டிருக்க தாலியை தவிர மற்ற எல்லா நகைகளையும் கழற்றி மேசையில் வைத்து விட்டு தலையில் இருந்த மல்லிகை பூவை கழற்றப் போக அப்போது தான் விமானத்தில் ஏறும் முன் சரளா...
இரவு 44
காரில் சம்மதமாக தலையாட்டிய மயூரி பின் நிதானித்து வேகமாக மறுத்து தலையாட்டியவள் “ என்ன, கல்யாணமா நான் இந்த ஆட்டத்துக்கு வரல ஆரி! “ என்று பயந்து காரை விட்டு இறங்க போக, அவள் கையை பிடித்து தடுத்த ஆர்யன், “ மயூரி, நீ எதுக்கு என்ன விட்டு தள்ளி போறன்னு ரீசன்...
இரவு 43
கர்ணா அவன் பைக்கில் வந்து கோயில் முன் இறங்கியவனை செல்வம் வாயை பிளந்து பார்த்து கொண்டு இருந்தான். அவன் அப்படி பார்க்கும் படிதான் கர்ணாவும் வந்து இருந்தான் அவன் யார் என்று தெரியக்கூடாது என்று நினைத்தவன் வெள்ளை சட்டை அணிந்து கையை முட்டி வரை மடக்கி விட்டவன் கருப்பு பேண்ட் என்று...
இரவு 42
அவளின் சின்ன கைகளால் மெல்ல அந்த அறையின் கதவை திறந்து எட்டி பார்க்க அந்த காரிடரில் பெண்களும் ஆண்களும் சிலர் தள்ளாடியபடி, சிலர் புகைபிடித்தபடி என்று நடந்து அவரவர் அறைக்குள் போவதும் வருவதும் என்று இருக்க அதை பார்த்து கதவை வேகமாக மூடிய மயூரி கதவில் காது வைத்து சத்தம் குறைய காத்திருந்தாள்....
இரவு 41
போலிஸ் ஸ்டேஷன் வாசலில் அனைவரும் நின்று கொண்டு இருக்க கான்ஸ்டபிள் ஒருவர் கையில் ஃபைலுடன் வந்து சரத்திடம் பெங்காலியில் “ நீ கேட்ட கேஸோட ஃபைல் இது, இதுல சரோஜ் என்ற ஒருத்தர பேர் தெரியாத மனநிலை பாதிக்க பட்ட ஒரு பொண்ணு அவர் செத்தது கூட தெரியாம ஒரு நாளுக்கு மேல...
இரவு 40
காலை, இரவு வேலை முடித்துவிட்டு மயூரி சோர்வாக நடந்து வந்தவள் நேராக அவள் அபார்ட்மெண்ட் உள்ளே சென்று அமைதியாக அமர்ந்து விட்டாள் . எப்போதும் வேலை முடிந்து வீடு வருபவள் மாணிக்கத்திடம் சிறிது நேரம் பேசி விட்டு தான் தூங்கப்போவாள். இப்படி இருந்த மயூரி நேற்றிலிருந்து ஏதேதோ லட்சுமி அம்மாவை பற்றி யோசித்து...
இரவு 39
ஜீப்பில் இருந்து கர்ணா இறங்கியபடி கான்ஸ்டபிளிடம் “ அந்த செல்வம் அடையாளம் சொல்லி வரைஞ்சிட்டாங்களா “ என்று ஸ்டேசன் உள்ளே நுழைந்த படி கேட்க அதற்கு கான்ஸ்டபிள் “ அந்த கொடுமைய என்னன்னு சொல்ல சார், நீங்களே நேர்ல வந்து பாருங்க “ என்று உள்ளே அழைத்து செல்ல “ என்ன சொல்ற...
இரவு 38
ஜெய் மயூரியை முறைத்தபடி “ஸ்டெல்லா திருச்சிக்கு அஞ்சி டிக்கெட் புக் பண்ணு இன்னைக்கு நைட் ஃபிலைட்ல “ என்று சொல்லவும் ஸ்டெல்லா “ சரி சார் “ என்று புக் செய்ய தொடங்க மயூரி “ நாம நாலு பேரு தானே “ என்று கேள்வியாக ஜெய்யை பார்க்க ஜெய் “ ஸ்டெல்லாவும்...
இரவு 37
வேகமாக சுற்றிக்கொண்டு இருக்கும் மின்விசிறிக்கு நேராக அமர்ந்திருந்தும், முகம் முழுக்க வியர்த்து கொட்ட கைகளை கட்டியபடி, எதிரில் அமர்ந்திருந்த கர்ணாவை பார்த்து கொண்டு இருந்தான் அந்த ஏரியா மாமா என்று செல்லமாக அழைக்கப்படும் செல்வம். கர்ணா அவனை மேலிருந்து கீழே அளந்தபடி “ அன்னைக்கு அந்த பெண்ணுகளை அந்த பார்டிக்கு அனுப்பி வச்சது...