இரவு 45

அந்த அறையே ஏசி இன்றியும் ஜில்லென்று இருக்க அதை தாண்டி மயூரிக்கு வேர்க்கத் தொடங்கியது.  இரவு உடையாக டாப் மற்றும் பேண்ட் போட்டிருக்க தாலியை தவிர மற்ற எல்லா நகைகளையும் கழற்றி மேசையில் வைத்து விட்டு தலையில் இருந்த மல்லிகை பூவை கழற்றப் போக அப்போது தான் விமானத்தில் ஏறும் முன் சரளா சொன்னது நினைவு வந்தது, பூவை தலையில் வைத்துவிட்ட சரளா “ காலையில தான்ம்மா பூவ எடுக்கணும் நீ பாட்டுக்கு அங்க போனதும் கழட்டி வச்சிடாத அப்புறம் இந்த வளையலையும் கழட்டாத  ம்மா, பார்த்து இருங்க “ என்று சொல்லி அனுப்பியிருக்க மேசையில் இருந்த வளையலை திரும்பி பார்த்தவள் “ அதான் கழற்றியாச்சே பூவை மட்டும் வச்சிக்கலாம் “ என்று அதை மட்டும் கழற்றாமல் முகத்தில் இருந்த அலங்காரம் எல்லாம் களைத்துவிட்டு கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்தவள் பதட்டத்துடனே இருந்தாள்.  அந்த பதட்டத்தை குறைக்க போனை எடுத்து கேம் விளையாடத் தொடங்கிவிட ஆர்யன் அப்போது தான் அறைக்குள் கையில் சூடாக ஆவி பறக்க சூப்புடன் வந்தான்.

அவனை நிமிர்ந்து பார்த்த மயூரி நேரத்தையும் பார்க்க மணி விடியற்காலை மூன்றரை என்று காட்டியது, “ இந்த நேரத்துல யாரு உங்களுக்கு சூப் கடை திறந்து வச்சிருந்தா ஆரி, “ என்று பேசியபடி அவன் கையில் இருந்த சூப்பை வாங்க ஆர்யன் சிரித்த முகமாக “ நான் எப்படியே வாங்கிட்டு வந்தேன். பசிக்குதுன்னு சொன்னல இதை குடி “ என்று போட்டு இருந்த ஜாக்கெட் மப்லரை கலட்டி வைத்தவன் மயூரியிடம் பன் பாக்கெட்டை நீட்டி “ இதை தான் இருந்துச்சி, கொஞ்சம் அஜஸ் பண்ணிக்கோ  “என்று  சொல்லி சென்றவன் பாத்ரூம் சென்று வந்தான். மயூரி அருகில் அமர்ந்து அவனும் சூடாக சூப் குடிக்க தொடங்க மயூரியும் இருந்த பசியில் வேறு எதுவும் பேசவில்லை.

பின் இருவருமாக சூப் குடித்து முடித்து விட்டு அமர மயூரி “ இப்போ தான் கண்ணு நல்லா தெரிது ப்பா “ என்று கால் நீட்டி சாய அவளை பார்த்த ஆர்யன் “ இப்போ ஓகேவா மயிலு ரூம் ஹீட் எல்லாம் ஓகேவா இல்ல என்னும் டெம்பரெச்சர் ஏத்தவா மயிலு “ என்று அவள் முகம் பார்க்க மயூரி கண்களை இறுக்க மூடியபடி “ அம்மா என்ன இப்படி தான் கூப்பிடுவாங்க ஆரி, “ அதை கேட்ட ஆர்யன் “ அத்தை மயில்னா உன்ன கூப்பிடுவாங்க “ என்று அவள் அருகே அவனும் சாய்ந்து கொள்ள மயூரி அதே நிலையில் இருந்தபடி “ நான் லட்சுமி ம்மாவ சொல்லல எங்க அம்மாவை சொன்னேன் “ என்று சொல்ல அதை கேட்டு அவள் பக்கம் திரும்பிய ஆர்யன் “ உனக்கு உன் அம்மா நினைவு எல்லாம் வரத் ஸ்டாட் ஆகிருச்சா மயிலு “  என்று சந்தோஷமாக கேட்க மயூரி “ எங்க அம்மாவோட சில நினைவுகள் மட்டும் எனக்கு எப்பவும் நினைவு இருக்கும் ஆர்யன் அதுல இந்த மயில்ன்னு கூப்பிடுறதும் ஒன்னு மற்றபடி எதுவும் நினைவு இல்ல “ என்று மயூரி சொல்வதை கேட்டு அவளை ஆர்யன் தோள்மீது சாய்த்து கொண்டபடி “ அந்த சாக்லேட் பட்டாம் பூச்சிகூட உங்க அம்மா நினைவுல ஒன்னா மயிலு “

“ ஆமா ஆர்யன் அது எங்க அம்மா எனக்கு வர போற தம்பியோ இல்ல தங்கச்சியோ அவங்களுக்கு நான் சொல்லி தரணும்னு எனக்கு சொல்லி தந்தாங்க “ என்று மயூரி சிரிக்க அதை கேட்டு ஆர்யன் “ தம்பியா,  தங்கச்சியான்னு உனக்கு நினைவு இல்லையா மயூரி “  அந்த கேள்வியில் மயூரி ஆர்யன் உள்ளே மேலும் நுழைந்து கொண்டபடி “ எங்க அம்மா வயித்துல பாப்பா இருக்கப்ப தான் நான் காணமா போய்ட்டேன் அதனால எனக்கு தெரியல “ என்று சிறிது நேரம் அமைதியாக அவன் அணைப்புக்குள் இருந்த படியே மயூரி “ அம்மா நினைவாவது எதோ கொஞ்சம் இருக்கு ஆரி ஆனா அப்பா நினைவு எதுவும் இல்ல ஆரி என் அப்பா என்ன எப்படி கூப்பிடுவாரு, எப்படி பாத்துப்பாரு, என்ன அவருக்கு பிடிக்குன்னு நிறைய கேள்விகள், ஆனா பதில் தான் தெரியல்லை ஆரி, அப்பா நினைவு வரும்போதெல்லாம் அங்கிள தான் நினச்சி பார்ப்பேன் இப்படி தான் எங்க அப்பாவும் இருப்பாரோன்னு “ என்று பேசியவளுக்கு தெரியவே இல்லை எப்போது ஆர்யன் மடிக்கு வந்தாள் எப்போது அவன் இறுகிய அனைப்புக்குள் சென்றாள் என்று . எதையும் உனறாமல் பேசிக்கொண்டே இருக்க மயூரியின் தலையை தடவி கொடுத்தபடி ஆர்யனும் அவள் பேச்சை கேட்டு கொண்டு இருந்தான். அப்போது  திடீரென்று பேச்சை நிறுத்திய மயூரி அப்போது தான் அவள் ஆர்யன் மடியில் அமர்ந்து இருப்பது உணர்ந்து நெளிந்து கொண்டு இறங்க போனால்.

அதை புரிந்த ஆர்யன் அவளை மேலும் அவனோடு சேர்த்து இருக்கியவன் மயூரியின் உச்சந்தலையில் முத்தம் வைக்க மயூரி ஆர்யனை நிமிர்ந்து பார்த்தாள். அவன், அவள் நெற்றியில் அடுத்த முத்தம் வைக்க, மயூரி கண்களை இறுக்க மூடி கொண்டாள்,  அடுத்து அந்த கண்களுக்கு முத்தம் வைத்தவன் பின் மூக்கு என்று கீழே அவள் உதட்டில் வந்து சேர திடீரென்று மயூரி உடல் விறைக்க காதுகளில் கங்காவின் அழும் சத்தம் கேட்க மயூரி உடல் நடுங்கி கொண்டு இருக்க, ஆர்யன் அவளின் உடல் மாற்றத்தை உணர்ந்தவனாக அவளை விட்டு வேகமாக விளக மயூரி அவள் காதுகளை இருக்க மூடியபடி “ அழாதீங்க கங்கா ம்மா அழாதீங்க…” என்று முனங்கியபடி இருக்க ஆர்யன் பயந்து போனவனாக “மயிலு..மயிலு என்ன ஆச்சு ம்மா கண்ண திறந்து பாரு மயிலு இங்க பாருடி “ என்று அவளை போட்டு உலுக்கியும் பயனில்லை மயூரி பாட்டுக்கு காதுகளை அடைத்து கொண்டு கண்களை இருக்க மூடி இருந்தாள்.

 ஆர்யன் மயூரி விட்டு தள்ளி நின்று கண்களை மூடி திறந்தவன் அவளை குழந்தை போல் கையில் தூக்கி கொண்டு பால்கனி நோக்கி சென்றான். அங்கு இருந்த ஹாங்கிங் சேரில் அவளை அமர வைத்தான். பின் உள்ளே சென்று வந்தவன் மயூரியை பார்க்க அந்த குளிரில் உடல் நடுங்க அவள் முனங்கல் சிறிது குறைந்து இருந்தது. பின் அவள் அருகே சென்ற ஆர்யன் அவள் கால் அருகே ஒற்றை காலை மடக்கி அமர்ந்து “ மயிலு…” என்று அழைக்க மெல்ல கண் திறந்தாள்.  கண் திறந்தவள் ஆர்யன் முகம் பார்த்து கண்கள் கலங்கியவள் “ இதுக்கு தான் நான் உனக்கு வேனான்னு சொன்ன பார்த்தியா நான், எனக்கு என்ன ஆச்சுன்னு “ என்று தேம்பிட ஆர்யன், எழுந்து நின்று அவள் தாடை உயர்த்தி, அவள் கண்ணீரை துடைத்தபடி,

“ உனக்கு ஒன்னும் இல்லை மயிலு, ட்ரஸ்ட் மீ,” என்று சிறு சிரிப்பை உதட்டில் தவழ விட்டபடி, உள்ளே இருந்து கொண்டுவந்த ப்ளூடூத் ஹெட்செட்டை அவள் காதுகளில் மாட்டி, அவன் போனில் பாட்டை ஒலிக்கவிட்டவன், மீண்டும் மயூரியை தூக்கி, அவன் மடியில் அவளை அமரவைத்து, லேசாக அந்த ஹாங்கிங் சேரை அவன் காலால் தரையை ஊன்றி தள்ளிவிட்டான்.

அந்த சேர் லேசாக அசையத் தொடங்க, மயூரியின் கண்முன்னே பனி சூழ்ந்து இரவில், அந்த நிலவின் ஒளி பிரகாசமாக அந்த வானை நிறைக்க, அந்த ஒளியை மேகக் கூட்டங்கள் மறைத்தும், பின் விலகியும் என்று நிலவோடு விளையாடிக்கொண்டு இருந்தது. அந்த நிலவின் ஒளியில், மலைகள் மற்றும், அதை சுற்றி இருக்கும் மரங்கள் என்று அழகாக கண்ணை கவர அதோடு உடலை நடுங்கவைக்கும் குளிரோட காதில் இசை பாட தொடங்கியது.

 “பூக்கள் பூக்கும்
தருணம் ஆருயிரே
பார்த்த தாரும் இல்லையே உலரும் காலை
பொழுதை முழு மதியும்
பிரிந்து போவதில்லையே நேற்றுவரை நேரம்
போகவில்லையே உனது
அருகே நேரம்
போதவில்லையே எதுவும் பேசவில்லையே
இன்று ஏனோ எதுவும்
தோன்றவில்லையே
இது எதுவோ                                                                                                                                      இரவும் விடியவில்லையே
அது விடிந்தால் பகலும்
முடியவில்லையே
பூந்தளிரே…..”  என்று பாடல் இனிமையாக காதில் கேட்க அதில் அனைத்தும் மறந்து அந்த காட்சியில் திழைத்து ஆர்யன் மீது சாய்ந்து கொள்ள ஆர்யனும் குளிருக்கு ஏதுவாக மயூரியை அனைத்தபடி மனதில் டாக்டர் மேரிக்கு நன்றி சொன்னவன் அந்த தொங்கும் சேரை ஆட்டியபடியே இருந்தவன் மெல்ல மயூரியின் தோளில் முகம் புதைக்க மயூரி “ ஆரி…” என்று மென்மையாக அழைக்க அங்கே இனிதே தொடங்கியது வசந்தம்.

ஆர்யன் அருகில் படுத்து இருந்த மயூரியை கைகளால் தேடியபடி கண்களை திறந்து பார்க்க அருகில் அவளை காணவில்லை “எங்க போனா..” என்று எழுந்து சோம்பல் முறித்து போனை எடுக்க மணி மதியம் இரண்டு என்று காட்ட தலையில் கை வைத்த ஆர்யன் “ அச்சோ இவ்வளவு லேட்டா ஆகிறுச்சா மயிலுக்கு பசிச்சிருக்குமே “ என்று எழுந்து வேகமாக முகம் கழுவி வந்தவன் “ மயிலு….” என்று குரல் கொடுத்து கொண்டே உடையை எடுத்து மாட்ட கதவை திறந்து கொண்டு மயூரி கையில் உணவுடன் வந்தவள்

“ முழிச்சிட்டீங்களா ஆரி வாங்க சாப்பாடு சூடா இருக்கு சாப்பிடலாம் “ என்று அங்கு இருந்த சோபாவில் அமர அவளை பார்த்த ஆர்யன் “என்னையும் எழுப்பியிருக்கலாமே மயூரி “ என்று கேட்ட படி அவள் அருகில் அமர “ அது நைட் ரோம்ப அசதியா தூங்கினிங்க அதான் பாவம்ன்னு…….” என்று இழுத்து எதோ சொல்ல வந்தவள் ஆர்யனை பார்த்து கள்ள சிரிப்பு சிரித்த படி “ பாவம்ன்னு தூங்க விட்டேன் “ என்று கண்களை சிமிட்ட மயூரியின் காதைப் பிடித்த ஆர்யன் “ சேட்டை டி உனக்கு “ என்று வெட்க பட மயூரி “ வெட்க பட்டது போதும் கொஞ்சம் எங்களுக்கும் மிச்சம் வைங்க “ என்று அவன் காதுகளை பார்க்க ஆர்யன், கைவைத்து காதுகளை மறைத்த படி “ கண்ணு ஏன் காது கிட்ட வந்துச்சி நோண்டிடுவேன் நோண்டி வலிக்குதுடி “ என்று காதை தேய்த்து விட அதில் வயிற்றை பிடித்து சிரித்த மயூரி “ வரல , வரல சாப்பிடுங்க…” என்று சீண்டல் கொஞ்சம், நாணம் கொஞ்சம் என்று ஐந்து நாள் ஊட்டி பயணம் நன்றாகவே சென்றது இந்த ஜோடிக்கு.

ஐந்து நாள்  முடிந்து சென்னைக்கு வந்த இருவரின் வாழ்க்கையும் அழகாகவே சென்றது. மயூரி வீட்டில் இருந்த படியே வேலை பார்க்க  ஆர்யன் எப்போதும் போல ஆபிஸ் சென்று விடுவான். அங்கு சென்றும் அடிக்கடி மயூரியுடன் போனில் மயிலு மயிலு என்று ஒரு நாளைக்கு நூறு மயிலு போட்டு பேசிவிடுவான். மயூரியும் கூட சொல்லி பார்த்து விட்டால் “அங்கிள் முன்னாடி மயில்னு கூப்டாதிங்க” என்று ஆனால் அவன் கேட்டால் தானே.  இப்படியே மயூரி, ஆர்யன் மாணிக்கத்துடன் ஒரு குடும்பமாக அழகாக பொருந்தி போய்விட்டாள்.  அதுவும் இன்றி இப்போதெல்லாம் லட்சுமி மயூரியை பார்த்து சிரிப்பது அவள் கையை பிடித்து நடப்பது அவளுடன் கோயில் போவது என்று நன்றாக முன்னேற்றத்தை காட்டியிருந்தார்.  மேரி டாக்டரும் அவரை பார்த்து விட்டு சீக்கிரமாக அனைத்தும் சரி ஆகிவிடும் என்று சொல்லியிருக்க அனைவருக்கும் சந்தோஷம் சந்தோஷம் மட்டும் தான்.

இப்படி இருக்க அவர்களின் மகிழ்ச்சிக்கு தடையாக வந்தது அந்த சம்பவம். மயூரியை லட்சுமியின் கண் முன்னே கடத்திவிட லட்சுமி “ மயூரி…” என்று கத்தியபடி கீழே மயங்கி சரிந்தார். நாம் என்ன தான் நடக்க கூடாது என்று நினைத்து வேண்டினாலும் நடப்பதை நிறுத்தவா முடியும். நடந்து விட்டது லட்சுமி ஆஸ்பிட்டலில் இருக்க ஆர்யன் பைத்தியம் போல் ஸ்டேஸன் வீடு ஹாஸ்பிட்டல் என்று தெரு தெருவாக “ மயிலு..மயிலு…..” என்று சுத்தி வந்து கொண்டு இருந்தான். மீண்டும் ஒரு கடத்தல் இதிலிருந்து தப்பிக்க வருவால மயூரி இல்லை வரமலே போவாலா.

காடு போல் இருக்க அதன் நடுவில் ஒரு பழைய பங்கல பராமரிப்பு இன்றி இருக்க அந்த பங்கள இருப்பது தெரியாத அளவில் அதை சுற்றி மரங்கள் புதர்கள் என்று வளர்ந்து இருந்தது. அந்த பங்கலவின் அஙஅகு ஒரு அறையில் மயூரியின் கண்கள் கட்டி, கைகள் கட்டி இருக்க அவள் முன் செறில் அமர்ந்து கொண்டு அவளையை பார்த்து கொண்டு இருந்தாள். மயூரி கத்தி தூடுப்பதை கண்ணீல் துளிர்க்கும் ஓர் ஆர்வத்துடன் கலுத்தில் அணிந்திருந்த அந்த அறைநிலா டாலரை பிடித்த படி பார்த்து இருந்தாள் அவள் . ஒருவரின் துன்பத்தில் இன்பத்தை காணும் இவள் யார் ?.