ஜெய் கத்தியதைக் கேட்டு, அதிர்ந்த மயூரி “ என்ன ஜெய் சொல்ற? லட்சுமி அம்மாவை கண்டுபிடிக்க கூடாதுன்னு நினைச்சியா? “
“ அவங்களை கண்டுபிடிக்க கூடாதுன்னு நினைக்கல்லை மயூ கண்டுபிடிக்க விடாம செஞ்சதே நான்தான். அவங்களை மட்டும் இல்லை, உன்னுடைய உண்மையான குடும்பத்தை அவங்களையும் கண்டுபிடிக்க விடாம செஞ்சதும் நான்தான் “ அதைக் கேட்டு, ஆத்திரம் பெருகிய மயூரி அவன் சட்டையை பிடித்து, “ நான் உனக்கு என்னடா பாவம் பண்ண?’ ஏன் என் அம்மா அப்பாவைக் கண்டுபிடிக்க விடாம பண்ணிண?’ “ என்று அழுக, அவள் அழுகையை பார்த்த ஜெய் “ அழாத மயூ ஏன் அழுற? அதான் உனக்குன்னு நான் இருக்கிறேன்ல? அது போதாதா? உனக்கு நாம்ம இங்க இருந்து வேற ஊருக்குப் போய்டலாம், மயூரி அங்கே போய் சந்தோஷமா இருக்கலாம்.’ “ என்று சிரிக்க, அவன் முகத்தை பார்க்க பார்க்க மயூரிக்கு கோபம் வர அவன் கழுத்தை பிடித்து, நெரித்தபடி, “ எனக்கு! நீ வேண்டா, நீ என் ஃபிரண்ட் ஜெய் இல்லை, நீ வேண்டா, எனக்கு போ ! “ என்று அவன் கழுத்தை போட்டு நெரிக்க, ஜெய் மூச்சு விட முடியாமல் தடுமாறினாலும், சிரித்த முகமாக, “ நான் உயிரோட இருக்க வர நீ என் கூடத்தான் இருக்கணும், மயூ “என்று கத்தியவாறு அவள் கையை தட்டி விட, அதில் மயூரி தடுமாறியவள் தலை சுற்றி, கீழே விழுந்தாள். இவள் விழுந்த இடத்தில் கூர்மையான கல் ஒன்று இருக்க அதில் அவள் நெற்றியில் குத்தி, மயங்கி விழுந்து இருந்தாள்.
இவை அனைத்தையும் நினைத்த மயூரி வேறு எதுவும் யாரிடமும் பேசவில்லை டாக்டர், அவளை முழுவதும் பரிசோதனை செய்து விட்டு “இப்போ நீங்க ஓகே கண்டிசன்ல தான் இருக்கிங்க மயூரி? ஆனா உங்க ஹெல்த், அது இம்ப்ரூவ் வேணும், ஹெல்த்தியா சாப்பிடுங்க, கொஞ்சம் எக்சசைஸ் பண்ணுங்க, ஒரு இரண்டு நாள் பாத்துட்டு டிஸ்சார்ஜ் பண்ணிரலாம் ” என்று சொல்லி சென்றார். அதன் பிறகுதான் மயூரிக்கு மூச்சே வந்தது.
இங்கு ஜெய் உடம்பை அவன் ஆசை படி அவன் தாத்தா கல்லறை அருகிலேயே புதைத்து விட்டனர். பாஸ்கர்தான் ஜெய்யுக்கு இறுதி சடங்கு அனைத்தும் செய்து முடித்தார். ஜெய்யின் கடைசி ஆசையாக மயூரிக்கு ஒரு கடிதம் எழுதிக்கொடுத்திருந்தான். பாஸ்கர் அதை கையில் வைத்துப் பார்த்துவிட்டு, ஒரு பெருமூச்சு விட்டபடி மயூரியைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றான்.
அங்கு மயூரி கையை பிடித்தபடி ஆர்யன் அமர்ந்திருக்க, அவன் முகத்தை சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் மயூரி. அப்போது அங்கு மாணிக்கம், லட்சுமி மற்றும் சரளா என்று மூவரும் வந்தனர். லட்சுமி, மயூரியை பார்த்து விட்டு “மயூ மயூ! நீ எந்திரிச்சிட்டியா! உன்னைக் கடத்தி போனாங்க மயூ! கடத்திட்டாங்க மயூ!” என்று அதையே திரும்ப திரும்ப சொல்லியபடி இருக்க, மயூரி “ஒன்னும் இல்லை லட்சுமம்மா!! யாரும் என்னை கடத்தல்லை, பாருங்க! நான் நல்லாதானே இருக்கேன்!” என்று அவர் கையை தடவிவிட, அவர் அவளையே பார்த்தபடி அமைதியாகி விட்டார் ஆனால் அவள் கையை மட்டும் விடவில்லை. மாணிக்கம், “பாப்பா, எப்படிம்மா இருக்க! எங்களையெல்லாம் பயமுறுத்திட்டியேம்மா!” என்று பேசியவர் ஆர்யன் பக்கம் திரும்பி “ டாக்டர் என்ன சொன்னாங்க ஆரி? பாப்பாவுக்கு இனிமே ஒன்னும் இல்லை தனே? “ என்று விசாரித்துக்கொண்டார்.
இரண்டு நாட்கள் மயூரியை பரிசோதனை செய்துவிட்டு அன்று மாலை டிஸ்சார்ஜ் என்று சொல்லிவிட, மயூரி அப்போதுதான் மூச்சு வந்தது போலிருந்தது. அவள் வயிற்றைத் தடவியபடி “ பேபிம்மா! ரொம்ப பயந்துட்டேன் டா. தங்கியூ செல்லம். அம்மா கூடவே பாத்றம்மா இருந்ததற்கு” என்று பேசியவள் கண்களை மூடி சாய்ந்து அமர, அப்போது அங்கு பாஸ்கர் வந்தார். அவரைப் பார்த்துவிட்டு ஆர்யன் கோபமாக எழுந்து செல்லப்போக மயூரி அவன் கையைப் பிடித்து தடுத்து, “ ஆர்யன்… வேண்டாம்” என்று சொல்ல அதற்கு அவன் “ மயிலு…” என்று ஏதோ சொல்ல போக மயூரி மறுப்பாக தலையசைக்க ஆர்யன் அமைதியாகிவிட்டான்.
பாஸ்கர் அவளைப் பார்த்துவிட்டு “ இப்போ நீ எப்படி இருக்க, மயூரி?” என்று கேட்க அதற்கு “ ம்ம்ம்” என்று தலையசைத்தாளே தவிர வேறு எதுவும் பேசவில்லை. நிமிடத்திற்கு ஆயிரம் வார்த்தைகள் பேசும் பெண் இப்போது பேசாமல் தயங்கி நிற்பதைப் பார்த்து இவருக்கு வருத்தமாக இருந்தது. இவரும் என்னதான் செய்வார்? ஜெய்யின் தாத்தா இவருக்காக செய்ததற்கு நன்றிக்கடனாக இதை அவர் செய்துதானே ஆக வேண்டும் என்று நினைத்து கொண்டவராக “ ஜெய் சூசைட் பண்ணி இறந்துட்டான் மயூரி. அவன் இறக்குறதுக்கு முன் உனக்கு ஒரு லட்டர் எழுதியிருக்கான் ம்மா.” என்று கடிதத்தை நீட்ட அதை கைகள் நடுங்க வாங்கியவள் “வேறென்ன?” என்பது போல பாஸ்கரை பார்த்து அவர் “ அதுமட்டுமில்ல மயூரி, அவன் தாத்தா கம்பெனி, உன்னுடைய கேமிங் கம்பெனின்னு எல்லாத்தையும் உன் பெயரில் எழுதி வச்சிட்டான் மயூரி” என்று பத்திரத்தை அவளிடம் நீட்ட அதை கேட்டு ஆர்யன் மனதில் “ செய்யவேண்டியதை எல்லாம் செய்திட்டு இவன் பாவப்பட்ட சொத்து யாருக்கு வேணும்?” என்று எண்ணிக்கொண்டான்.
மயூரி “அதை வாங்கி பார்த்தவள் பாஸ்கரை பார்த்து, “ நான் வரும்வரை, , கம்பெனியை பார்த்துக்கொங்க நான் வந்த பிறகு இதை பத்தி பேசிக்கிலாம்.” என்று அதை வாங்கி அருகில் வைத்துவிட்டு, அவரை பார்க்க அவள் பார்வையை புரிந்தவராக “ சரிம்மா, உடம்பை பார்த்துக்கோ நான் போய்ட்டு வறேன்” என்று சென்றுவிட்டார்.
அவர் சென்றதும் ஆர்யன் “ இதெல்லாம் எதுக்கு, மயிலு நமக்கு வேண்டாமே?” “ என்று அவள் அருகில் அமர ஆர்யனை பார்த்து, மயூரி “ ஏன் ஆரி! அன்னைக்கு எனக்கு என்ன ஆச்சின்னு கேட்கவே இல்லையே?”
“ அது மயிலு அங்க ஏதோ நடந்துட்டு போகட்டும் அதை திருப்பி உனக்கு நினைவு படுத்த வேண்டாம்ன்னு தான் மயிலு.” ஆர்யனின் பதிலில் சிரித்த மயூரி கையில் இருந்த ஜெய்யின் கடிதத்தை திறந்து பார்த்தாள்.
அதை திறந்ததும் “ ஹாய் மயூ, எப்படி இருக்க, நீ எப்படியும் கண்ணு முழிச்சிருவன்னு எனக்கு தெரியும். ஆனா என்ன நீ முழிக்கிறப்ப நான் உன்னை பார்க்க அங்க இருக்க மாட்டேன். தட்ஸ் ஓகே. எனக்கு உன்னை கஷ்டப்படுத்தனும்னு இல்லை மயூ, நீ ஹாப்பியா இருக்கனும் மயூ . அன நான் இருந்த உன்னை என் கூடவே வச்சிப்பேன் அப்போ நீ சந்தோஷமா இருக்க மாட்டியே அதான் உனக்காக உன்னை சந்தோஷமா வச்சிக்க தான் இந்த முடிவு. ஹாப்பியா இரு மயூ, ஆனா என்னை மறந்துடாத உன் ஜெய்ய மறந்திறாத மயூ மிஸ் யூ சோ மச் மயூ ” என்று எழுதியிருக்க அதன் பின்புறம் “ நான் கொன்ன பெண்களோட டீடியல்ஸ் அந்த பங்களாவில்ல பஸ்ட் ஃப்ளோர்ல ஒரு ரூம்ல டைரியில்ல எழுதி வச்சிருக்கேன். யார் யாரை எப்படி கடத்தினேன்னு அதை போலிஸ் கிட்டச் சொல்லிடு மயூ. அண்ட இது கூட உனக்காக தான். மயூ, நீ சொன்னது சரிதான். அந்த மாதிரி இடத்தில்ல கூட உன்னை யாருன்னு தெரியாத ஒருத்தவுங்க பத்திரமா பார்த்துக்கிட்டாங்க ஆனா எனக்கு எல்லாம் இருந்தும் அந்த நேரத்தில என்ன காப்பாத்த யாரும் இல்லாம போய்ட்டாங்க யார் நல்லவங்க யார் கெட்டவங்கன்னு தெரியல்லை மயூ. ரொம்ப கில்ட்டா இப்போ ஃபீல் பண்றேன். உனக்கு கிடைச்ச மாதிரி எனக்கு ஒரு லட்சுமி அம்மா, கிடைச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்ல மயூ!” என்று அந்த கடிதம் முடிந்திருக்க அதை படித்த மயூரி தேம்பி தேம்பி அழத் தொடங்க ஆர்யனுக்கு பயம் பிடித்துக்கொண்டது. பயத்தில் மயூரியை அணைத்தபடி “ மயிலு, அழாதம்மா, ஏன் அழுற? அப்படி என்ன எழுதியிருந்தான் அவன்? “ என்று அவளை அணைத்தபடி அவளை தேற்ற மயூரி ஆர்யனை அணைத்துப்பிடித்தபடி ஜெய்யை பற்றி அனைத்தையும் சொல்லி முடிக்க ஆர்யனுக்கே வருத்தமாக தான் இருந்தது.
பூமியில் பிறக்கும் போது குழந்தைகள் குழந்தையாக தான் பிறக்கின்றன. அவர்கள் வளர்ப்புதான் அவர்களை மனிதனாக மாற்றுவதும் சரி., மிருகமாக மாற்றுவதும் சரி. ராம் குமார் ஆனந்தை நல்ல வழியில் வளர்க்க தவறியதன் விளைவு: முப்பத்தி மூன்று உயிர்கள். அதோடு ஜெய்யின் வாழ்க்கையும்தான். ஒருவேளை ஜெய்க்கு நல்ல பெற்றோர் கிடைத்திருந்தால் இன்று இப்படி பாதியிலேயே உலகை விட்டு சென்றிருக்க மாட்டானோ.
நிலையில்லா உலகம் இது இதில் எதை தேடி அழைக்கின்றனர். பெற்ற பிள்ளை வேண்டாம் என் சந்தோஷம் தான் முக்கியம் என்று சிலர் உலகமே வேண்டாம் பிள்ளை போதும் என்றும் சிலர்.