இரவு 60

அந்த காரிடாரில் மாணிக்கம் பயத்தில் வேர்க்க தொடங்கிய முகத்தை கைகளால் துடைத்தபடி தீவிர சிகிச்சைப் பிரிவு அறையையே பார்த்து கொண்டு இருந்தார். அருகில் ஆர்யன் அவருக்கு துனையாக நின்று கொண்டு இருக்க மயூரி அங்கு போட பட்ட இருக்கையில் சரளவுடன் அமர்ந்திருந்தாள். மனமெங்கும் போராட்டம் யாருக்கும் எதுவும் செய்யாத லட்சுமிக்கு ஏன் இந்த நிலை என்று எண்ணியபடி அவருக்கு எதுவும் ஆக கூடாது என்று வேண்டிக்கொண்டிருந்தாள். விடியற்காலை நான்கு மணி அளவில் அடுக்குமாடி குடியிருப்பு காவலர் ஆர்யனுக்கு தொலைபேசியில் அழைத்து லட்சுமி மாடியில் இருந்து விழுந்ததை சொல்லியிருக்க பதறி போய் அவரை மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.

லட்சுமியை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை பார்த்துகொண்டு இருந்தனர். அனைவரும் பயந்து எதுவும் தவறாக நடக்கக் கூடாது என்ற வேண்டுதலுடன் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த டாக்டர் “ இங்க லட்சுமி பேசண்ட் ரிலேடிவ்ஸ்  யாரு ” என்று கேட்க, ஆர்யன் அவர் அருகில் சென்று “ நாங்க தான் டாக்டர் அவர்களுக்கு இப்போ எப்படி இருக்கு “ என்று கேட்க, “டாக்டர் “ ஒரு கை, ஒரு கால் உடஞ்சிருக்கு சோ ப்லேட் வச்சி ஆப்பரேட் பண்ணிருக்கோம். சரியான டைம்க்கு கூட்டிட்டு வந்திருக்கிறீங்க இல்லனா பிரச்சன ஆகிறுக்கும்.  தலையில் அடி பட்டிருந்தாலும்  ப்லட் க்லாட் எதுவும் ஆகல்லை சோ பிரச்சனை எதுவும் இல்லை “

“எப்போ எழுந்திரிப்பாங்க டாக்டர் “ என்று மாணிக்கம் கேட்க,

“ அவங்க முழிக்க டிவண்டி ஃபோர்  அவர்ஸ் ஆகும் “

டாக்டர் சொல்லியதை கேட்ட பிறகு தான் அங்கு இருந்த அனைவருக்கும் முகமே தெளிவடைந்தது. பின்னர் மாணிக்கத்தை அங்கே அமர வைத்து விட்டு ஆர்யன் சென்று டீ மற்றும் பால் குடிக்க வாங்கிக் வந்தான். சரளா தயங்கி தயங்கி மயூரி மற்றும் மாணிக்கத்திடம் “ நான் பால்கனி கதவை சாத்திட்டு தான் ம்மா படுத்தன் எப்படி லட்சுமி அக்கா திறந்தாங்கன்னு தெரியல்லை ம்மா” என்று தடுமாறிய குரலுடன் பேச அவர் கையை பிடித்து அருகில் அமர்த்திய மயூரி,” விடுங்க க்கா அத பத்தி இப்போ பேச வேணா. எப்படியோ லட்சுமி அம்மாவுக்கு ஒன்னும் ஆகல்லையே  அது போதும் ” என்று பெருமூச்சு விட்டாள் .

அங்கு வந்த  ஆர்யன் மயூரி கையில் பாலை கொடுத்துவிட்டு, மாணிக்கம் சரளவுக்கு டீயை கொடுத்துவிட்டு  “ மயிலு நீ அக்கா கூட வீட்டுக்கு போய்டு இங்க நாங்க பார்த்துக்கிறோம் நைட் அத்தை கூட அக்கா இருப்பாங்க “ என்று சொன்னதை தலையசைத்து கேட்டுக்கொண்டாள்.

பின் சரளாவை அழைத்து கொண்டு வீடு சென்றவள், அனைவருக்கும் உணவு செய்து சரளாவிடம் கொடுத்துவிட்டு, சோபாவில் அமர்ந்தவள் அப்படியே தூங்கிப் போனாள்.

அன்று இரவு மாணிக்கமும் மருத்துவமனையிலேயே தங்கிக்கொண்டார். தன் அக்காவை இந்த நிலையில் விட்டு செல்ல மனமில்லாமல் அவர் அங்கேயே இருந்தார். ஆர்யனிடம் வீட்டிற்கு செல்லும் படி சொல்லிவிட்டு அவனை அனுப்ப வெளியே சென்றிருந்தபோது தான் ப்ரியா மாணிக்கத்திற்கு கால் செய்தாள்.

மாணிக்கம் செல்லும் அவசரத்தில் போனை அங்கேயே வைத்து சென்றிருக்க சரளா தான் போனை எடுத்தார். “ ஹலோ…”  என்று சரளா தயங்கி போனில் போச, மறுபக்கத்திலிருந்து

“ஹலோ…., மாமா இல்லையா, நான்… ப்ரியா பேசுறேன் “

“ ஐயா, ஆர்யன் தம்பிய வீட்டுக்கு அனுப்ப போயிருக்கிறார் ம்மா. இங்க லட்சுமி அம்மாக்கு அடி பட்டு ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்க “

“ என்ன சொல்றீங்கள அக்கா,” என்று அதிர்ந்து ப்ரியா கேட்க சரளா “ அது ம்மா நைட் மாடியில இருந்து குதிச்சிட்டாங்க ம்மா , இப்போ பரவாயில்லை ன்னு டாக்டர் சொல்லியிருக்காங்க ம்மா “ என்று அனைத்தையும் சொல்லி முடித்து போனை வைத்து விட்டார். இங்கே அதிர்ந்து போன ப்ரியா தினகரனைப் பார்த்து தயக்கத்துடன் நடந்ததை கூறி முடித்தாள். அதை கேட்ட தினகரனுக்கு தலை சுற்றுவது போல் ஆகிவிட்டது. ஒரு நிமிடம் தலையை பிடித்தபடி அமர்ந்துவிட அதைப் பார்த்த ப்ரியா பயந்து போய் “ அப்பா என்ன பண்ணுது…” என்று தினகரனை பிடித்தாள்.

உடனே தினகரன் “ நான் சென்னைக்கு போறேன் ம்மா “ என்று எழுந்து கொள்ள அவர் கையை பிடித்த ப்ரியா “ இந்த நைட் எப்படி போவிங்க ப்பா நாளைக்கு காலைல போலாம்,”

“இல்லை ப்ரியா, இதுக்கு மேல என்னால முடியல்லை, என் தேவி அவள …என்ன செய்ய அவளுக்கு மட்டும் ஏன் இப்படி,” என்று தலையை மறுப்பாக அசைத்தவர் “இல்ல, நான் என் தேவிகிட்ட போறேன் என்னால அவளை விட்டு இனி இருக்க முடியாது. நான் அவளைப் பார்த்துத்துட்டே இருந்திறேன்.  நான் இப்போவே சென்னைக்கு போறேன் “ என்று உளறி அடம்பிடித்தார். அவர் அடத்தை பார்த்து வேறு வழியில்லாமல் அன்று இரவிலேயே காரில் தினகரன், ப்ரியா, அவளுடைய கணவன் மற்றும் குழந்தை என்று நான்கு பேரும் காரில் சென்னையை நோக்கிச் சென்றனர்.

காலை சென்னையை அடைந்த தினகரன் நேராக மருத்துவமனைக்கு சென்றான். அங்கு மருத்துவமனையில் லட்சுமியின் ஆக்சிஜன் மாஸ்கை அகற்றிவிட்டு இன்னும் சிறிது நேரத்தில் லட்சுமி விழித்து விடுவார் என்று சொல்லி நர்ஸ் சென்று இருக்க மாணிக்கம் மயூரி ஆர்யன்  மூவரும் அங்கே தான் ஆர்வமாக நின்றுகொண்டு இருந்தார்கள்.

அப்போது தான் தினகரன் அவன் குடும்பத்துடன் உள்ளே நுழைந்தான். அங்கு வந்த தினகரனை எதிர்பாராமல் அனைவரும் அவரை திரும்பி பார்க்க உள்ளே வந்த தினகரனோ யாரையும் கண்டுகொள்ளாமல் லட்சுமியை நோக்கி சென்று அவர் கையை பிடித்தபடி “ தேவி… தேவி… நான் தினா வந்திருக்கேன் கண்ணை திறந்து பாரு தேவி,” என்று பேசியபடி கண்ணைில் இருந்து கண்ணைீர் வழியே நின்றவரை  அங்கு இருந்த அனைவரும் தினகரனை வருத்தத்துடன் பார்த்தனர்.

அப்போது லட்சுமி கை விரல் லேசாக அசைய அதை உணர்ந்த தினகரன் “தேவி… தேவி… முழிச்சிட்டியா தேவி….” என்று லட்சுமி முகம் பார்க்க, தினகரன் பேசியதை கேட்டு அங்கு இருந்த அனைவரும் உடனே லட்சுமியை பார்க்க அப்போது லட்சுமியின் இமைகள் சுருங்கி பின் அசைத்து என்று மெல்ல விழிகளை சுழற்றி கண் திறந்தார்.

கண்களை திறந்த லட்சுமி அங்கு நின்றுகொண்டு இருந்த அனைவரையும் நெற்றி சுருக்கி ஒரு முறை பார்த்தவரின் பார்வை தினகரனிடம் வந்து இளைப்பாறி,  அவர் முகம் பார்த்து, அவரின்  வறண்ட உதடு மெல்ல திறந்து மூடி “தினா…” என்று சத்தம் எழுப்ப அங்கு இருந்த அனைவரும் அதிர்ந்து தான் பார்த்தனர்.

தினகரனோ இது உண்மை தானா என்பது போல லட்சுமியின் கையை இறுக பிடித்து கொண்டு “தேவி… தேவி…” என்று பேசியவருக்கு அதற்கு மேல் வார்த்தை வர மாட்டேன் என்று சதி செய்ய எச்சில் விழுங்கி பேச முயன்றவறாள் முடியாமல் போகவே கண்கள் கலங்க தனது தேவியையே இமைக்காமல் பார்த்தவர் மனம் எங்கும் “ இது கனவாக இருக்க கூடாது இறைவா அப்படி கனாவாக இருந்தாளும், இந்த கனவில் இருந்து  எழ கூடாது “ என்று பல எண்ணங்களுடன் பார்த்து கொண்டு இருந்தார்.

அப்போது லட்சுமியின் மறுபக்கம் வந்து நின்ற மாணிக்கம், “அக்கா…அக்கா,” என்று அழைக்க மாணிக்கத்தை பார்த்த லட்சுமி குழப்பமான முகத்துடன் “ தம்பி….” என்று அழைத்தவர், மீண்டும் அந்த அறையை சுற்றி பார்த்து விட்டு தினகரன் பக்கம் திரும்பி, “ தினா…நீயும் தம்பியும் ஏன் இப்படி இருக்கிங்க இவங்களாம் யாரு?, எனக்கு என்ன ஆச்சு? “ என்று அனைவரையும் சுற்றிச் சுற்றிப் பார்க்க லட்சுமி பேசியதை கேட்டு அனைவரும் அதிர்ந்து போய் அவரை பார்க்க லட்சுமி அங்கு இருந்த அனைவரையும் பார்த்து, யோசித்து, அவள் தலை வலிக்கத் தொடங்க உடனே அங்கே வந்த நர்ஸ் லட்சுமியை பார்த்துவிட்டு அங்கிருந்து அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டார்.

அதன்பின் டாக்டர் மீண்டும் லட்சுமியை பரிசோதனை செய்து விட்டு லட்சுமியின் பழைய ரிப்போர்ட் மற்றும் புதிய ரிப்போர்ட் என்று அனைத்தையும் பார்த்தவர். அவருக்கு முன்னே அமர்ந்திருந்த தினகரன் மயூரி ஆர்யன் மூவரையும் பார்த்து” லட்சுமிக்கு இருந்த மெண்டல் இல்னஸ் சரியாகி அவருடைய நினைவுகள் திரும்பி வந்திருக்கு. அதுல ஏதோ ஒரு நினைவு ட்ரகர்ல தான் மாடில இருந்து குதிச்சிருக்காங்க.”

“ அப்போ லட்சுமி அம்மாவுக்கு எல்லாம் நினைவும் வந்திருச்சா? “ என்று மயூரி கேட்க அதற்கு மறுப்பாக, தலையசைத்த டாக்டர் “ அவங்களோட நினைவு வரத் தொடங்குவதற்கு முன்னரே இவங்க ஸ்ட்ரெஸ்ஸால மாடில இருந்து குதிச்சிட்டாங்க சோ அதோட விளைவா அவங்களோட ப்ரேயின்  அழுத்தத்தைத் தரும் நினைவுகளை அவுங்க நினைவுக்கு வறாம தடுத்து பாதுகாக்குற விதமா மறக்க மறக்க வச்சிருக்கு.  இப்போ அவுங்களுக்கு பாதி நினைவுகள் மட்டும் தான்  நினைவு இருக்கு “என்று சொல்லி முடிக்க, ஆர்யன் “ பாதி நினைவுனா புரியல்லை டாக்டர் “

“அது நான் அவங்க கிட்ட பேசின வரை அவங்க என் கிட்ட சொன்னது,  எதோ வேலைக்கு மும்பைக்கு ட்ரெயின் ஏறுனது வரை தான் நினைவு இருக்குன்னு சொல்றாங்க அதற்கு பிறகு நடந்த எதுவும் அவர்களுக்கு நினைவு இல்லன்னு சொல்றாங்க “ டாக்டர் சொல்லியதை கேட்டு கண்கள் பளபளக்க தினகரன் “ தேவிக்கு முழு நினைவும் வர வாய்ப்பு இருக்கா டாக்டர் “ என்று கேட்க, அதற்கு டாக்டர்

“ அந்த நினைவுகளை பேசி அத நினைவுபடுத்த முயற்சி செய்தா வாய்ப்பிருக்கு ஆனால் இந்த மாதிரி கேஸ்ல நினைவுகள் திரும்பி வராமலே கூட நிறைய பேருக்கு இருந்திருக்கு “ என்று டாக்டர் சொன்னதை கேட்டு அவர் கைகளை பிடித்த தினகரன் “ தாங்க்ஸ் டாக்டர்  தாங்க்ஸ்…தாங்க் யூ சோ மச் டாக்டர் “ என்று நன்றி சொல்லிவிட்டு வேகமாக எழுந்து செல்ல தினகரன் செய்வது எதுவும் புரியாமல் மயூரி, ஆர்யன் இருவரும் அவர்கள் பின்னாலேயே சென்றனர்.

இங்கு வெளியே மாணிக்கம் தன் அக்காவுக்கு எதுவும் பிரச்சனை இருக்க கூடாது என்று வேண்டியபடி இருக்க அவர்கள் அருகே ப்ரியா அவள் கணவர் மற்றும் குழந்தையோடு நின்று கொண்டிருக்க, அப்போது டாக்டர் அறையில் இருந்து வந்த தினகரன், லட்சுமி அறைக்கு வேகமாக செல்வதை பார்த்து என்ன ஆயிற்று என்று அவர்கள் பின்னாலேயே இவர்களும் சென்றனர். மாணிக்கம் டாக்டர் அறையையே பார்த்தபடி இருந்தவர் தினகரன் வேகமாக வெளி வந்து லட்சுமி அறைக்கு செல்வதை பார்த்து விட்டு வெளியே இருந்த மாணிக்கம் ப்ரியா அவளின் கணவன் என்று அனைவரும் சென்றனர்.

லட்சுமி அறைக்குள் சென்ற தினகரன் அங்கு குழம்பிய முகத்துடன் படுத்திருக்கும் லட்சுமியை பார்த்து அவர் அருகே சென்று லட்சுமி கையை பிடித்தபடி அமர்ந்தார். தினகரனை பார்த்த லட்சுமி “ தினா…இங்க என்ன நடக்குது எனக்கு என்ன ஆச்சி, ஏன் எனக்கு எதுவும் நினைவு இல்ல, அப்பறம் இவங்க எல்லாம் யாரு “ என்று அங்கிருந்த அனைவரையும் பார்த்து பாவமாக கேட்டார்.

தினகரன் கண்கள் கலங்கினாலும் சிரித்த முகமாக ஆர்யனைக் காட்டி “ இது உன் தம்பி பையன் பெரு ஆர்யன் இது அவன் மனைவி பெயர் ம..” என்று சொல்ல வந்தவர் நிறுத்தி எதோ யோசித்து பின் “ மயில்” என்று நிறுத்திக்கொண்டார்.

அதை கேட்டு ஒரு நிமிடம் தினகரனை அனைவரும் புரியாமல் பார்க்க, தினகரன் அங்கிருக்கும் யாரும் பேசுவதற்குள் ப்ரியா விடம் திரும்பி “ இவ லட்சுமி ப்ரியா நம்ம பொண்ணு இது நம்ம மருமகன் இது நம்ம பேத்தி “ என்று சொல்லி முடிக்க அங்கிருந்த அனைவருமே அதிர்ந்து தான் போனார்கள். மாணிக்கம் மற்றும் ப்ரியா அவர் கனவர் என்று இவர்கள் மூவருக்கும் அங்கு நடப்பது எதுவும் புரியாமல் தினகரனை பார்க்க அவர் அங்கிருந்த யாரையும் கண்டுகொள்ளாமல்

“ அது ஆர்யன் பொண்டாட்டிய பாக்க அடம் பிடிச்சி தனியா கார்ல சென்னைக்கு வந்தியா தேவி நீ வந்த கார் ஆக்ஸிடன்ட் ஆகிடுச்சி ம்மா அதுலதான் உனக்கு தலையில அடிப்பட்டு எல்லாம் மறந்துடுச்சாம் தேவி “ என்று சொல்லி முடிக்க லட்சுமி “ ஓ…சரி, உங்களுக்கு கலுத்துல  என்ன ஆச்சி தினா “ என்று பதறி போய் விசாரிக்க “ அது வந்ததும்மா எனக்கு உடம்பு சரியில்லாம சர்ஜரி பண்ணிருந்தாங்க தேவா இப்போ சரி ஆகிவிடுச்சி நீ பயப்படாதே தேவி ஓன்றும் இல்ல “ என்று லட்சுமியை பார்க்க லட்சுமி “ ஒன்றும் பிரச்சனை இல்லை தானே தினா “ என்று பதட்டத்துடன் கேட்க “ ஒன்னும் இல்லை தேவி நீ பயப்படாதே “ என்று அவர் கையை பிடித்து தட்டிக்கொடுக்க அதன் பின் தான் அனைவரையும் சுற்றி பார்த்தார் லட்சுமி.

அனைவரும் ஒரு வகை அதிர்ச்சியுடன் இவரை பார்ப்பதை பார்த்து விட்டு “ எனக்கு ஒன்னும் இல்லை பயப்படாதிங்க சீக்கிரமா எல்லாம் நினைவும் வந்துடும் சரிதான தினா..” என்று தினகரனை பார்க்க தினகரன் சிரித்த முகமாக ஆம் என்று தலையசைத்தார். பின் மற்றதை அப்புறமாக பேசுவதாக சொல்லி லட்சுமியை தூங்க வைத்து விட்டு அனைவரையும் அழைத்து கொண்டு வெளியே வந்தார்.