கர்ணா அவன் பைக்கில் வந்து கோயில் முன் இறங்கியவனை செல்வம் வாயை பிளந்து பார்த்து கொண்டு இருந்தான். அவன் அப்படி பார்க்கும் படிதான் கர்ணாவும் வந்து இருந்தான் அவன் யார் என்று தெரியக்கூடாது என்று நினைத்தவன் வெள்ளை சட்டை அணிந்து கையை முட்டி வரை மடக்கி விட்டவன் கருப்பு பேண்ட் என்று ஹெல்மெட்டை கழற்றி விட்டு பாக்கெட்டில் இருந்த கூலிங் கிளாசை வேற போட்டு கொண்டு என்று வந்து நின்றதும் செல்வம் “ எலெக்ஷன்ல நிக்க போறாங்களா என்ன “ என்று மனதில் மட்டும் நினைத்து கொண்டு அவன் அருகே செல்ல கர்ணா “ எங்க ராதா அவங்க வந்துட்டாங்கள?“ “ ம்ம்ம் சார், உள்ளே கோயில்ல இருக்கா சன்னிதானத்தில குழந்தையோட உட்கார்ந்துட்டு இருப்பா பாருங்க சார் “ என்று சொன்னவன் அங்கேயே சுற்றி பார்த்து கொண்டு நிற்க, கர்ணா “ நீ வரலையா…” என்று கண்ணில் மாட்டியிருந்ததை கழற்றி பாக்கெட்டில் வைத்தபடி கேட்க, செல்வம் “ இல்ல சார், வெளிய இருந்து நான் பாத்துக்குறேன் நீங்க போய் பேசிட்டு வாங்க “ என்று சொல்லவும் கர்ணா தலையாட்டியபடி கொயிலுக்குள் சென்று விட்டான். அங்கே ஒரு தூணின் அடியில் வெள்ளை புடவையை அணிந்து கையில் குழந்தையுடன் ராதா அமர்ந்திருக்க அவள் அருகே சென்று கர்ணா நின்றதும் ராதா எழ போக அதை கை காட்டி தடுத்தவன் அவளை விட்டு தள்ளி அமர்ந்து கொண்டான்.
கர்ணா அமர்ந்ததும் ராதா அவள் இரண்டு வயதான பெண் குழந்தையை அவள் மார்போடு அனைத்தபடி “ சொல்லுங்க சார் உங்களுக்கு என்ன தெரிஞ்சுக்கணும் “என்று கேட்க, கர்ணா “மூனு வருஷம் முன்னாடி வாணி, கீதா இவங்களோட நீ போன பாட்டி நினைவு இருக்கா “ என்று அவளை பார்க்க கண்களை மூடி நன்றாக யோசித்தவள் “ ம்ம்ம் சார் நினைவு இருக்கு பீச்ல தான் பார்ட்டி அங்க இருந்து என்ன மூனு பேர் சேர்ந்து அவனுங்க கெஸ்ட் அவுசுக்கு கூட்டி பபோயட்டாங்க அதுனால மத்த ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சுன்னு எனக்கு தெரியாது சார் “
“ எந்த கெஸ்ட் அவுஸ்னு சொல்ல முடியுமா “
“ அது சார், நினைவு இல்ல “ என்று அவள் தலைகுனிய கர்ணா “ சரிம்மா அது விடுங்க அந்த பார்டிக்கு வந்த யாரையாவது அடையாளம் காட்ட முடியுமா “ என்று கேட்க , யோசித்த ராதா “ அது சார் அந்த பார்டிக்கு நாங்க போனதும் ஒரு பொண்ணு தான் முன்னாடியே பணம் கொடுத்துச்சி அந்த பொண்ணு பேரு தெரியாது அன அவங்கள நான் வேலை பார்க்கிற கடைக்கு எப்பவாது வரத பாத்துருக்கேன் “ என்று ராதா சொன்னதை கேட்டு மகிழ்ந்த கர்ணா”உங்க ஸ்டோர் சிசிடிவில அந்த போண்ணு பேஸ் இருக்கும் தானே “ என்று ஆர்வத்துடன் பேச அதற்கு ராதா “அவுங்க மன்த் ஸ்டாட்டிங் தான் வந்திருப்பாங்க, இப்பொ மன்த் மிடில் சார் எங்க சூப்பர் மார்கெட் ரெக்கார்டிங் எல்லாம் டென் டேஸ்ல ஆட்டோ டெலிட் ஆகிடும் சார் “ உடனே கர்ணா “ அப்போ அந்த பொண்ணு திருப்பி கடைக்கு வந்தா போட்டோ எடுத்துட்டு எனக்கு இன்ஃபார்ம் பண்ண முடியுமா “ என்று கேட்க அதற்கு ராதா “ சார் கேமரா போன் இல்ல சின்ன போன் தான் இருக்கு “ உடனே கர்ணா “ தட்ஸ் ஓகே , நீங்க போட்ட எடுக்கலன்னா பரவாயில்லை எனக்கு கால் பண்ணுங்க “ என்று அவள் நம்பரை வாங்கியவன் இவன் கார்டை நீட்டி “ எப்போ பாத்தாலும் கால் பண்ணுங்க இது கொஞ்சம் சீரியஸ் “ என்று சொல்லவும் தலையாட்டி வாங்கிகொண்டாள் .
பின் அவள் எதோ சொல்ல தயங்கி நிற்க அதை பார்த்த கர்ணா “ எதவது சொல்லனுமா “ என்று கேட்க அதற்கு ராதா “ என் கிட்ட போன் இருக்குன்னு அந்த செல்வத்துக்கு தெரிய வேனா சார் “ என்று தயங்கி தயங்கி அவள் சொல்ல, அதை புரியாமல் பார்த்த கர்ணா “ ஏன்ம்மா, எதவது பிரச்சனை பண்ணுவானா அவன் “ என்று கேட்க அதற்கு ராதா “ போன் இருக்குறது தெரிஞ்சா டெய்லி போண் பண்ணி தொல்லை தருவான் சார் இப்போ போன் இல்லாமலே மாசம்னா வந்துருவான் “ என்று அந்த பெண் முழுதும் சொல்ல தயங்க ,கர்ணா முகம் கடுமைக்கு மாற “ நான் சோல்லல நீ பயப்படாம போம்மா “ என்று சொல்லி வெளியே வந்தவன் செய்த முதல் வேலை செல்வத்தை உள்ளே தள்ளியது தான் பின் ராதவுக்கு வேறு ஏரியாவில் வாடகைக்கு வீடு வாங்கி கொடுத்து விட்டான். அதன் பின் கர்ணாக்கு எப்படியாவது இந்த கேஸை முடித்து விடலாம் என்று ஒரு நம்பிக்கையும் வந்தது.
இங்கு ஆர்யன் சோகமாக கன்னத்தில் கைவைத்து கொண்டு இருக்க, அவன் எதிரே கிருபா காஃபியை “அஹா, என்ன ருசி “ என்று அதை ரசித்து குடித்து கொண்டு இருந்தான். அவனை பார்த்த ஆர்யன் “ நண்பன் ஃபீல் பண்றேன்னு லாம் இல்லை, நமக்கு காஃப்பி தான் முக்கியம்ல? “ என்று கிருபாவை முறைக்க, கிருபா காஃப்பியை சூடாக குடித்து முடித்த பிறகே பேச தொடங்கினான்: “ நீ எங்க போக போறடா, ஆனா இந்த காஃப்பி சூடு போனா, வருமாடா? “ என்று ஆர்யனை பார்க்க, அவன் விட்டால் கிருபாவை பாய்ந்து மொத்தும் வேகத்தில் இருக்க, உஷாராக கிருபா “ சொல்லு மச்சான், என்ன ஆச்சு? “ என்று முகத்தை சீரியஸ்ஸாக வைத்து கேட்க, ஆர்யன் “ இந்த மயூரி என்ன அவாய்ட் பண்றா மச்சான். “
“ அதுக்குள்ள பிரேக்கப்பா டா?” என்று அவன் வாயில் கைவைக்க, ஆர்யன் “ எருமை, எருமை, இன்னும் லவ்வே சொல்லல டா, அதுக்குள்ள பிரேக்கப்னு வாயை வைக்கதடா “
“ஓ… ஒன் சைடா?” என்று கிருபா இழுக்க, “ அவளுக்கும் என்ன பிடிக்கும்டா, மச்சான், என்னன்னு தெரியல. ஒரு ஆறு நாளா என்ன அவாய்ட் பண்றா. அவ இருக்கும் போது நான் வீட்டுக்கு போனா, ஏதாவது சாக்கு சொல்லிட்டு போறது. நான் கால் பண்ண அட்டென்ட் பண்ணாம அரைமணி நேரம் கழிச்சு மெசேஜ்ல கொஞ்சம் பிஸின்னு மட்டும் அனுப்புறதுன்னு, என்ன பைத்தியம் ஆக்குறா,” “ என்று அவன் முடியை கையில் பிடித்தபடி டேபிளை வெறிக்க, கிருபா “பேச மாட்டேங்கிறாங்கன்னா என்னடா, பண்ண முடியும்? பேசம அவங்க வீட்டுக்கு போய் நேரடியா என்னன்னு பேசிடி. “
“அப்போ ஆபீஸ்ல இருக்கும் போது பேசு. அவங்க தான் இப்போ டே ஷிஃப்ட் பாக்குறாங்கன்னு சொன்னியேடா? “
“ ஆமா ஆனா மோஸ்டிலி வர்க் ஃபரம் ஹோம் தான் பாக்குறா இப்போலாம் “ என்று முகத்தை சோகமாக வைக்க “ டேய் இப்படி மூஞ்ச வைக்காதடா, ஒழுங்கா ஏதாவது பண்ணி அவங்க கூட போய் சீக்கிரமா பேசு இல்லன்னா உன் தங்கச்சி உனக்கு வேற பொண்ண கட்டி வச்சிருவா “ என்று குண்டை போட அர்யன் “ என்னடா சொல்ற “ என்று ஹாக் ஆக
” ஆமாண்டா உன் தங்கச்சி தீவிரமா பொண்ணு பாக்குற இந்த வருசமே உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிரனும்னு, நானும் சொல்லி பார்த்தேன் அதுக்கு உன் தங்கச்சி என்ன சொல்றாங்க தெரியுமா ? உங்க வயசு தான என் அண்ணணுக்கும் நீங்க மட்டும் குழந்தை குடும்பம்னு இருக்கிங்க அவ மட்டும் இருக்க கூடாதான்னு வாய அடச்சிட்டா சோ எதுவா இருந்தாலும் சீக்கிரம்டா மச்சான்” என்று ஆர்யன் தோளை தட்டிவிட்டு எழுந்தவன் “ அப்புறம் இந்த வீக் எண்டும் நாங்க உன் வீட்டுல தான்டா “ என்று சொன்னதை கேட்ட ஆர்யன் “ இப்போ தான வந்துட்டு அத்தைய பார்த்துட்டு போனீங்க என் தங்கச்சி அடிக்கடி வரமாட்டலே வேலைன்னுல இருப்பா….டேய் பொண்ணு பார்த்துட்டு இருக்கான்னு தானடா சொன்ன “ என்று ஆர்யன் ஜெர்க் ஆக, அவனை பார்த்து சிரித்த கிருபா “ ஆமாடா, மச்சான் பொண்ணு பார்த்துட்டு தான் இருக்கா நாலு பொண்ணு போட்டோல எதுன்னு , ஆனா கற்பூரம்டா மச்சான் நீ “ என்று சிரித்து சொல்பவனை பார்த்து முறைத்த ஆர்யன் சோர்வாக எழுந்து ஆபிஸ்க்கு பைக்கில் செல்ல அப்போது தான் மயூரியும் எதோ வேலையாக ஆபிஸ் வந்தவள் அதை முடித்துவிட்டு வீடு செல்ல பார்க்கிங் வந்தாள்.
அவளை பார்த்த ஆர்யன் “ இப்போ விட்டா இவ கூட பேச வேற சான்ஸ் கிடைக்காது “என்று எண்ணியவனாக அவள் அருகே செல்ல மயூரி போனை பார்த்தபடி காரில் ஏறி அமர அதே நேரம் காரின் மறுபுறம் ஆர்யன் ஏறிக்கொண்டான்.
ஆர்யனை அங்கு எதிர்பார்க்காத மயூரி திகைத்து என்ன பேசுவது என்று தெரியாமல் தடுமாற்றத்துடன் “ ஹாய் ஆர்யன் “ என்று வாராத சிரிப்பை வர வைத்து சிரிக்க, அவளை எதுவும் பேசுவதுாமல் ஆர்யன் முறைக்க, மயூரி என்ன செய்ய என்று புரியாமல் சுற்றி பார்த்தபடி “ எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு ஆர்யன் நம்ம அப்புறம் பேசுலாமா ? “ என்று அவனை பார்க்காமல் பேசு, அதில் மேலும் கடுப்பான ஆர்யன் “ அப்புறம்னா எப்போ மயூரி டேட் டைமிங் சொன்னா நல்ல இருக்கும் “ என்று கையை கட்டியபடி பேச,
மயூரி “ அதுவந்து … ஆர்யன் “ என்று அப்போதும் மயூரி ஆர்யனை பார்க்கமலே பேச, ஆர்யன் மயூரி கையை பிடித்து அவன் பக்கம் அவளை திரும்ப வைத்து “ இப்போ என்னடி உனக்கு பிரச்சன என்ன ஏன் அவாய்ட் பண்ற “ என்று அவள் கண்ணை பார்த்து பேச முயல, மயூரி அவன் பிடியில் இருந்து கையை உருவ முயன்றபடி அப்போதும் ஆர்யனை பார்க்காமலே இருக்க கோபத்தில் ஆர்யன் அவள் தாடையை பிடித்து அவனை பார்க்க வைத்து “ என்ன பார்க்க கூட உனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்காடி உனக்கு, வந்ததுல இருந்து என்ன பார்க்கமலே பேசுற, அப்படி நான் என்னடி உன்ன பண்ணேன் “ என்று அவள் முகம் பார்க்க மயூரியின் கண் கலங்கி போய் இருக்க அதை பார்த்து நிதானித்த ஆர்யன் அவள் தாடையை விட்டுவிட்டு பெருமூச்சு ஒன்றை விட்டவன் “ என்ன பைத்தியம் ஆக்குற மயூரி நீ “ என்று அவன் தலையில் கை வைத்து குனிந்து கொண்டான். அப்போது மயூரியின் விசும்பல் சத்தம் கேட்க ஆர்யன் கண்களை இறுக மூடி கொள்ள மயூரி “ நான் தான் பைத்தியம் ஆர்யன் அதான் தள்ளி போறேன் “ என்று மிக மெதுவாக முனங்க அதை கேட்டு ஆர்யன் அவளை பார்க்க அவள் அப்போதும் தலையை குனிந்து அழுது கொண்டு இருந்தாள்.
அவளை அந்த நிலையில் பார்த்த ஆர்யன் நிதானத்தை வரவைத்து “ நீ பைத்தியமாவே இருந்தாளும் பரவாயில்லை, எனக்கு நீ தான் வேனும் மயூரி “ என்று அவளை பார்க்க மயூரி முகத்தை மூடியபடி “ இல்ல நான் உனக்கு வேணா ஆர்யன், ப்ளீஸ் புரிஞ்சிக்கோ “ என்று அவள் கூற மயூரி அப்படி அழுவதை பார்க்க முடியாத ஆர்யன் அவள் இரு கைகளையும் பிடித்து கொண்டு “ மயூரி என்ன ஆச்சுன்னு சொல்லுடா,, சொன்னா தான எனக்கும் புரியும்? “ என்று அவளை பார்க்க மயூரி தலை குனிந்தபடி “ சொன்னதும் என்ன விட்டு போயிடனும் சரியா “
“ நீ முதல்ல சொல்லு மயூரி “ என்று ஆர்யனின் குரலில் மீண்டும் கோபம் துளிர்விட மயூரி “ அது நான் சின்ன வயசுல கங்கா ம்மா ரூம்ல மறஞ்சி பார்த்தேனா அது நினைவு வந்து இப்போ என்னால யாரையும் சேர்ந்து பாக்க முடியல அதே மாதிரி என்னும் என்னென்ன பிரச்சனை வரும்ன்னு தெரியல அதான் நான் உனக்கு வேணா ஆரி “ என்று மயூரி ஒளரி வைக்க முதலில் ஆர்யனுக்கு அவள் சொல்ல வருவது ஒன்றும் புரியவில்லை என்றாலும் பின் அவள் சொன்னதை திருப்பி மனதில் ஓட்டி பார்த்து அவள் சொல்ல வருவதை புரிந்துகொண்ட ஆர்யனுக்கு உதட்டில் புன்னகை துளிர்க்க மயூரி கைகளை விட்டுவிட்டு அவன் தலையை கோதினான்..
ஆர்யன் செய்வதை புரியாமல் பார்த்த மயூரி “நான் சொன்னது புரிஞ்சிச்சா ஆரி உனக்கு “என்று அவன் முகத்தையே சந்தேகமாக பார்க்க. ஆர்யன் புரிந்தது என்று தலையை மட்டும் அசைத்தவன் பின் கண்களை மூடி திறந்து, முன்புறம் பார்த்து, பின் கீழே சீட்டை பார்பது என்று இருக்க மயூரி “ நான் என்ன சொன்னன்னு இவன் இப்படி ரியாக்ஷன் தறான் நான் சொன்னதுக்கு ஒன்னு ஃபீல் பண்ணனும் இல்லையா, இங்க இருந்து போயிருக்கணும் அத விட்டுட்டு இவன் என்னன்னா அங்க இங்கன்னு எதோ தேடுறான் “ என்று அவளை மறந்து மயூரி ஆர்யனையே பார்க்க ஆர்யன் திடீரென மயூரி முகத்திற்கு நேராக அவன் முகத்தை மிக நெருக்கமாக கொண்டு செல்ல, ஆர்யனின் திடீர் செயலில் பயந்த மயூரி பின்ன நகர போக அவளை நகரவிடாமல் ஆர்யன் அவளின் பின் தலையில் கைவைத்து பிடித்த படி அவளையே பார்த்தவன் “ இப்போ சொல்லு மயூரி என்ன ஃபீல் பண்ணுறியா “ என்று குறள் கரகரக்க ஆர்யன் கேட்டான்.
ஆர்யனின் செயலில் பயந்து திகைத்து இப்போது வெட்கம் வர மயூரியால் ஆர்யனை பார்க்கவே முடியவில்லை கண்களை அங்கும் இங்கும் அளைய விட்டவளாக “ ஆரி.. விடு என்ன “ என்று அவள் கையை வைத்து அவன் நெஞ்சில் கை வைத்து தள்ள போக மயூரியின் கையை அவன் நெஞ்சோடு பிடித்த ஆர்யன் “ நான் எப்படி ஃபீல் பண்றேன்னு புரியுதா மயூரி “ என்று அவள் கையை அழுத்தி பிடித்து கொண்டு அவளை பார்க்க ஆர்யனின் இதயம் ஜெட் வேகத்தில் துடிப்பது மயூரிக்கு தெளிவாக கேட்க அவள் ஆர்யனை வேகமாக நிமிர்ந்து பார்த்து “ என்ன ஆச்சி, இப்படி ஹார்ட் வேகமா பீட் ஆகுது “ என்று அவனுக்கு ஏதுவோ என்று பார்க்க அப்போது மயூரி ஆர்யனின் காதுகள் ரத்தம் என சிவந்து இருப்பதை பார்த்து “ உங்க காது கூட ரெட்டா சிவந்து இருக்கு ஆர்யன் “ என்று மயூரி சொன்னதை கேட்ட ஆர்யன் அவன் நிலை இளந்து எதோ கந்தவிசைக்கு இழுத்து செல்லும் இரும்பை போல மெதுவாக அவன் மயூரி தலையை பிடித்து இருந்த கையை கீழே இறக்கி மயூரியை அவனை நோக்கி இழுக்க, இவனும் அவள் முகம் அருகே செல்ல மயூரி ஆர்யன் செய்ய போவதை உணர்ந்தவளாக அவள் கண்களை இருக்க மூடி கொள்ள அப்போது எங்கோ வண்டியின் ஹாரன் சத்தம் கேட்டு சுயம் வந்த பதறி ஆர்யன் கண்களை திறந்து பார்க்க மயூரி கண்களை இறுக்கி மூடியபடி இருப்பதை பார்த்து சிரித்தவனாக அவள் நெற்றி முட்டி “ கல்யாணம் பண்ணிக்கலாம் மயூரி இந்த வீக் என்ட் “ என்று சொல்ல மயூரி “ ஆ…” என்று கண்களை திறந்து அவனை குழப்பமாக பார்க்க ஆர்யன் அவளை பார்த்து சிரித்தபடி “ நோ மோர் வெயிட்டிங் மயூரி கல்யாணம் பண்ணிக்கலாம் சரியா “ என்று தலையாட்ட மயூரி தலையும் தன்னால் போல் ஆடியது.
ஆர்யன் சொன்னது போல ஒரு வாரத்தில் மயூரியை திருமணம் முடித்து விட்டு கையோடு ஊட்டியும் அழைத்து சென்று விட்டான். மயூரியை யோசிக்க விடாமல் அனைத்தும் செய்து முடித்துவிட மயூரி ரெசார்ட் ரூமில் சம்மணமிட்டு அமர்ந்தபடி “என்னாடா நடக்குது இங்க?” என்ற ரேஞ்சில் பதட்டத்துடன் அமர்ந்து இருந்தாள்.