இரவு 38

ஜெய் மயூரியை முறைத்தபடி “ஸ்டெல்லா திருச்சிக்கு அஞ்சி டிக்கெட் புக் பண்ணு இன்னைக்கு நைட் ஃபிலைட்ல “ என்று சொல்லவும் ஸ்டெல்லா “ சரி சார் “ என்று புக் செய்ய தொடங்க மயூரி “ நாம நாலு பேரு தானே “ என்று கேள்வியாக ஜெய்யை பார்க்க ஜெய் “ ஸ்டெல்லாவும் வர நம்ம கூட, அவதானே இத பத்தி விசாரிச்சது சோ அவ வந்தா நல்லா இருக்கும் “ என்று தோள்களை உலுக்க மாணிக்கம் “ ஸ்டெல்லா ம்மா உனக்கு வர சிரமம் எதுவும் இல்லையே? “ என்ற கேள்விக்கு ஒரு நிமிடம் அவள் போனில் இருந்து மாணிக்கத்தை நிமிர்ந்து பார்த்தவள் “ ஒரு பிரச்சனையும் இல்லை “ என்று சொல்லி தலையை குனிந்து மீண்டும் போனை பார்க்க ஆரம்பிக்க மயூரி, “அங்கிள், அவங்க வேலையே இதுதானே, நீங்க எதுவும் யோசிக்காம வாங்க போய் கிளம்பலாம்.” என்று கிளம்பியவர்கள் ஆர்யன் செய்து வைத்த சப்பாத்தியை அனைவரும் உண்டு முடித்து அனைவரும் திருச்சிக்கு ஃபிளைட் ஏறி விடியக்காலை அங்கு இறங்கி ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து ஃபிரஸ் ஆகி சிறிது ரெஸ்ட் எடுத்து என்று  காலை உணவும் அங்கேயே முடித்து வாடகை காரில் எட்டு மணிக்கு ஹோம்மின் முன்னால் நின்று இருந்தார்கள்.

அது ஒரு பெரிய ஹோம் நன்றாக வசதி படைத்தவர்களுக்காவே கட்டப்பட்டிருந்தது. அந்த ஹோமை பார்த்தவாறு உள்ளே செல்ல நுழைவாயிலில் ஒருவர் அமர்ந்திருந்தவர் இவர்கள் உள்ளே வரவும் தலை நிமிர்த்தி யார் என்பது போல பார்த்து “ சொல்லுங்க ….” என்று இவர்களை பார்க்க மயூரி “ வினோத்தை பார்க்கணும் “ என்று சுருக்கமாக சொல்லி முழிக்க அதற்கு அவர் “ நீங்க அவருக்கு என்ன  வேணும் இங்க தெரியாதவங்கள  பார்க்க விடமாட்டோம் “என்று கறாராக சொல்ல உடனே ஸ்டெல்லா அனைவரையும் நகர்த்தி முன் வந்தவள் “ சார் நாங்க அவர் சொந்தம் தான் “ என்று சிரித்த முகமாக நிற்க ஸ்டெல்லாவை கூர்மையாக பார்த்த படி

 “ நீங்க யாரு அவருக்கு “

“ சார் நான் அவர் பையன கட்டிக்க போற பெண்ணு “ என்று சொன்னவள் மாணிக்கத்தை காட்டி “ இவர் எங்க அப்பா “ மயூரியை காட்டி “ இவ என் தங்கச்சி , இவங்க கூட வந்த என் சொந்தக்கார பசங்க இப்போ தான் மேரேஜ் கன்பார்ம் ஆச்சி அதான் அவர் அப்பாவையும் பாத்து ஆசீர்வாதம் வாங்கனும்னு வந்திருக்கிறோம் நான் வேணும்னா அவர் பையனுக்கு கால் பண்ணி தரட்டுமா, என்ன இன்னேறம் தூங்கிட்டு இருப்பாங்க போன் பண்ண கொஞ்சம் கத்துவாங்க பறவாள நான் கட்டிக்க போறவர் தான “என்று ஸ்டெல்லா போனை எடுக்க அதற்கு அவர்

 “ இல்ல பரவலாக ம்மா ஏன் காலையிலயே டிஸ்டர்ப் பண்ணிட்டு நீங்க இந்த நோட்ல உங்க பேர் போன் நம்பர் எழுதிட்டு போய் பாருங்க “ என்று சொல்லிய பிறகே ஸ்டெல்ல நின்மதியாக வாயில் காற்றை ஊதி தல்லிய படி அவள் பெயர் போன் நம்பர் எழுதி விட்டு திரும்ப நால்வரும் இவளை ஆ…. என்று பார்க்க ஸ்டெல்லா நிமிடத்தில் முகத்தை எப்போதும் போல மாற்றி அவர்களுக்கு கண் காட்டிய படி ஸ்டெல்லா ரூம் நம்பர் கேட்டு உள்ளே அழைத்து சென்றாள். அவள் பின்னால் சென்ற ஜெய் மயூரி அருகே சென்று “ இதுக்கு தான் இவளும் வரட்டும்னு சொன்ன, எப்படி சமலிச்சா பாத்தியா “ என்று சொல்ல அதற்கு மயூரி  முகத்தை சுளித்து “ ரோம்ப தான் பெருமை “  என்று  சொல்லி முன்னே நடந்து செல்ல ஜெய்யும் சிரித்தபடி பின் சென்றான்.

அங்கு பல அறைகள் இருந்தன அனைத்தும் மூடப்பட்டிருந்தன அந்த இடமே மிக அமைதியாக இருக்க மாணிக்கம் “ என்ன ஒரு சின்ன சத்தம் கூட வரல்லை ஆளுங்க இருக்காங்கள? “ என்று அந்த காரிடாரை சுற்றி பார்த்த படி கேட்க முன்னால் நடந்துகொண்டே ஸ்டெல்லா “ எல்லாம் ஏசி ரூம் சார், அதுவும் இல்லாம சவுட்புருஃப் கூட ரொம்ப பணம் இருக்கவுங்க தான் இங்க சேர்ப்பாங்க அதான் இந்த அமைதி “என்று சொன்ன படி வினோத் இருந்த ரூமை தட்ட கை வைக்க அது திறந்து கொண்டது.

கதவை திறந்ததும் முதலில் ஏசி காற்று முகத்தில் அடிக்க அதோடு எதோ கேவலமான நாற்றமும் சேர்ந்து அடிக்க அனைவரும் முகத்தை மூடியபடி எட்டி பார்க்க அந்த அறையின் நடுவில் ஒரு பெட் போடப்பட்டிருக்க அதில் ஒருவர் முகம் முழுக்க இருந்த தாடியுடனும் தலை முடி அதிகம் வளர்ந்த நிலையிலும் அவர் எதிரே மாட்டியிருந்த டீவியில் சத்தமில்லாமல் ஓடிய நிகழ்ச்சியை வெறித்தபடி இருந்தார். அந்த பெட்டின் அருகே ஒரு சோபா இருக்க அதில் ஒரு நாற்பது வயது உடைய நபர் படுத்து குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தான். அந்த அறையே ஒரு வித நாற்றத்துடன் இருக்க அனைவரும் மூக்கை பிடித்தபடி வெளியே நின்றுகொண்டிருந்தனர். அப்போது ஸ்டெல்ல முகத்தில் கைக்குட்டையை வைத்து மூடியபடி கதவை தட்டிப் பார்க்க அவன் எழவே இல்லை வினோத் தான் யாரு என்பது போல திரும்பி பார்த்தார்.

ஆனால் அவன் முழிக்கவே இல்லை இதில் பொறுமை இழந்த ஸ்டெல்லா நேராக உள்ளே சென்று அவனை அருகில் இருந்த பேப்பரை வைத்து “  ஏய்… ஏய்… எந்திரி..” என்று எழுப்ப அவன் வேகமாக எழுந்து அமர்ந்தவன். ஸ்டெல்லாவை பார்த்து பயந்து “ சாரி மேடம் தெரியாம தூங்கிட்டேன்..” என்று எழுந்திருக்க ஸ்டெல்லா “ இவர்கிட்ட கிட்ட பேச வந்துருக்கோம் இவர ரெடி பண்ணிட்டு கூப்பிடு “ என்று முறைத்து விட்டு வெளியே வந்து கதவை அடைத்துவிட்டு  “அவர ரெடி பண்ணிட்டு கூப்பிடுறானா, அது வரை வெயிட் பண்ணுவோம் “ என்று வெளியே நிற்க பத்து நிமிடத்தில் அவன் கதவை திறந்து “ இப்போ பேசலாம் மேடம் “ என்று உள்ளே அழைக்கத்தான் ஜன்னல்களை திறந்து விட்டு ரூம் ஸ்பேரே அடித்து இருந்திருப்பான் போல என்று எண்ணியபடி அனைவரும் உள்ளே வந்தனர்.

ஸ்டெல்லா அங்கு ஒரு ஓரமாக நின்று கொண்டு இருந்தவனை அழைத்து “ பெர்சனலா பேசனும் ஒரு அரை மணி நேரம் கழிச்சி வா..” என்று நூறு ரூபாய் கொடுத்து அனுப்பிவிட்டாள்.  பின் வினோத் அருகே ஆர்யன் சென்று “ உங்க பேர் தான் வினோத்தா “ என்று உறுதிப்படுத்த கேட்ட அதற்கு அவரும் ஆம் என்பது போல தலையை ஆட்டினார். அவர் தலையசைக்கவும் மாணிக்கம் அவர் அருகே சென்று “ சார் உங்களுக்கு என் அக்கா லட்சுமியை நியபகம் இருக்கா, உங்க பாத்திர கடையில வேலை பார்த்தாலே முடி கூட நீலமா இருக்குமே நியாபகம் வருதா “ என்று கேட்க வினோத் அவர் முகத்தை உற்று பார்த்த படி “நீ லட்சுமி தம்பி தான “ என்று நியாபகமாக கேட்கவும் மாணிக்கம் “ ஆமா அவங்க தம்பி தான் நான் என்ன நியாபகம் இருக்கா என் அக்கா மும்பைக்கு அனுப்பி  வச்சிங்களே  கொஞ்சம்  அந்த அட்ரஸ் சொல்ல முடியுமா சார் “ என்று குறள் நடுங்க கேட்க வினோத் கண்ணில் இருந்து நீர் வர வாய் குழறியபடி “ நான் சொல்றன் உங்க அக்கா இருக்க இடம் சொல்றன் ஆனா அதுக்கு எனக்கு ஒரு உதவி நீங்க பண்ணணும் “

“என்ன உதவி..” என்று ஆர்யன் கேட்க வினோத் “அந்த டேபில் டிராயரில ஒரு கத்தி இருக்கும் அத மட்டும் எடுத்து தரேன்னு சொல்லுங்க நான் சொல்றேன் “ அதை கேட்ட மயூரி “ அந்த கத்தி உங்களுக்கு எதுக்கு “ என்று கேட்ட அதற்கு அவன் “ என்னால முடியல உடம்பு முழுக்க வலி, பாத்ரூம் எழுந்து போக கூட முடியல இங்க இவனும் ஒழுங்க பார்த்துக்க மாட்டிக்கிறான், என்னாலயே என் நாத்தத்த தாங்க முடியல இதுக்கு மேல என்னால வாழ முடியாது அதான் கத்தி எடுத்து கொடுத்தீங்கன்னா என் வாழ்க்கைய நானே முடிச்சிப்பேன் “ என்று அழுதபடி கேட்க உடனே மாணிக்கம் எதுவும் யோசிக்கவில்லை அவருக்கு அவர் அக்கா எங்கு இருக்கிறாள் என்று தெரிய வேண்டும் அதனாலயே “ சரி.. நீங்க மொதல்ல சொல்லுங்க “ என்று சொல்லிவிட வினோத்தும் அவன் வீனா போன காதல் கதையை சொல்ல தொடங்கினான் “ எங்க அப்பாக்கு நிறைய கடை இருந்தது நான் எப்பவும் மாத்தி மாத்தி அந்த கடைய சும்மா வெடிக்க பாக்க போவேன் அப்படி போன இடத்தில் தான் லட்சுமிய பார்த்தேன் , அவள பாத்ததும் எனக்கு ரொம்ப பிடிச்சது அத அன்னைக்கே தனியா அவ கிட்ட என் காதல சொன்னேன், அதுக்கு அவ போலிஸ்னு மிரட்டிட்டு போய்ட்டா. நான் அந்த கடை முதலாலி பையன் அன என்னையே போலிஸ் கிட்ட சொல்லுவன்னு சொன்னதும் எனக்கு கோபம் அதான் அப்படி பண்ண “  என்று அனைவரையும் பார்க்காமல் தலையை குனிந்த படி “ மொதல்ல அவளை பத்தி விசாரித்தேன் அதுல அவ அத்தை, மாமா வீட்டில் தான் இருக்கிறான்னு தெரிய வந்துச்சி. அது தெரிஞ்ச அடுத்த நிமிசம் நேரா அவர்கள் முன்னால நின்னு முன்பையில வேலை என்று போய் சொல்லி காசு கொடுக்க அவர்களும் எதுவுமே விசாரிக்காமல் அவளை நான் அனுப்பின ஆள் ஓட அனுப்பி வச்சிட்டாங்க. நான் அனுப்புன அந்த கிளவியும் நான் சொன்ன மாதிரி அவளுக்கு மயக்க மருந்து கொடுத்து கால்கத்தால்ல என் கிட்ட ஒப்படச்சிட்டா” என்று நிமிர்ந்து அனைவரையும் பார்த்தவர் தடுமாறிய படியே “ நான் தான் அவளை பிராத்தல் பண்ற இடத்துல வித்தேன் “ என்று சொல்லி முடிப்பதுக்குள் மாணிக்கம் அவன் மீது பாய்ந்து அடிக்க தொடங்க ஜெய் மற்றும் ஆர்யன் அவரை தடுத்து நிறுத்தி “ சாக  போறவன நீங்க கொன்னு ஜெயிலுக்கு போக போறிங்களா ப்பா “ என்று ஆர்யன் கத்தவும் தான் அமைதியானவர் ஆர்யன் மீது சாய்ந்து அழுக தொடங்கி விட அவரை அழைத்து கொண்டு ஜெய் ஆர்யன் வெளியே சென்றுவிட்டனர்.

மயூரி மற்றும் ஸ்டெல்லாாவை பார்த்து வினோத் “ அந்த கத்திய மட்டும் எடுத்து தந்துட்டு போம்மா..” என்று கெஞ்சல் குரலில் கேட்க மயூரி “ கத்திய வச்சி நீயே உன்ன குத்திக்கிறதுக்கு நானே உன்ன குத்துறேன்டா “ என்று கத்தியபடி மேசையில் இருந்த கத்தியை எடுக்க போக அவளை தடுத்த ஸ்டெல்லாா “  நீ இப்போ அவன குத்திட்டான கொஞ்ச நேர வலி தான் சீக்கிரம் செத்து போய்டுவான் இதுவே இப்படியே விட்டா கொஞ்சம் கொஞ்சமா வலியால செத்துப்போவான் இதுல எந்த தண்டன சரியா இருக்கும்னு சொல்ற “ என்று மயூரியின் கண்களை பார்த்து கேட்க “ அவன் உயிரோட இங்கேயே இருக்கட்டும் “ என்று சொல்லி சென்றுவிட்டாள்

அவள் சென்றதும் ஸ்டெல்லா வினோத்தை பார்த்து வஞ்சமாக சிரித்த படி “ இன்னும் அம்பது வருஷத்துக்கு உனக்கு சாவே வரக்கூடாதுன்னு நான் என் ஜீசஸ் கிட்ட டெய்லி ப்ரே பண்ண போறேன் நீ இங்கயே, இப்படியே துடிச்சிட்டே இருக்கனும் “ என்று சொல்லியவள் வெளியே செல்ல வினோத் வெறிபிடித்தவன் போல “ ஏ… போகாதா…ஏ…போகாதா…..” என்று கத்த அந்த கத்தலை ரசித்தபடி ஸ்டெல்லா நடந்து வர அவள் எதிரே வினோத்தை பார்த்து கொள்பவன் வர அவனை நிறுத்தி அவளிடம் இருந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து “ அவர இதோ மாதிரியே நல்லா.. பாத்துக்கோ “ என்று சொல்லிவிட்டு செல்ல அவன் தான் குளம்பி நின்றான் “ என்னது நான் நல்லா பாத்துக்குறனா “ என்று.  ஸ்டேல்லா நடந்து செல்வதை அங்கு ரிசப்ஷனில் இருந்த ஒருவன் அவளுக்கு தெரியாமல் போட்டோ எடுத்து அந்த ரூமில் பேசிய அனைத்தையும் ஆடியோவாகவும் வாட்சாப்பில் யாருக்கோ அனுப்பி வைத்து விட்டான்.

இங்கு காரில் ஏறிய ஸ்டெல்லா காரை ஹோட்டலை நோக்கி ஓட்ட, ஆர்யன் தோளில் சாய்ந்து இருந்த மாணிக்கம் எழுந்து கண்களை துடைத்து விட்டு “  நான் சொல்ற இடத்துக்கு என்ன கூட்டிட்டு போம்மா “ என்று அட்ரஸ் சொல்ல  அதை கேட்டு ஜெய் “ யார பாக்க போறிங்க அங்கிள் “ என்று கேள்வியாக பார்க்க மாணிக்கம்  “ எங்க அப்பா ஓட தங்கச்சிய பாக்கனும் தம்பி..” என்று கோபமான முகத்துடன் சொல்ல கார் மாணிக்கம் சொன்ன வீட்டை நோக்கி திரும்பியது .

சிறு மஞ்சல் ஒளி அந்த அறையை நிரப்ப அதில் ஒரு மூலையில் சுவற்றில் சாய்ந்த படி அவள் அமர்ந்து இருந்தாள்.  கண்களை மூடி அசையாமல் அமர்ந்து இருந்த அவள் திடீரென்று கண்களை திறந்து அவள் அமர்ந்து இருந்த இடத்தை கைகளால் தொண்ட தொடங்கினாள் . சிறிது தூரம் தான் தோண்டி இருப்பாள் அதற்குள் ஒரு பெண்ணின் முகம் தெரிய வர அந்த பெண்ணை தோண்டி பாதி உடல் தெரிய வெளியே எடுத்தாள். வயிறு பகுதி வரை வெளியே எடுத்தவள் அந்த பெண்ணின் முகத்தில் இருந்த மண்ணை தட்டி விட்டு அவளிடம் இருந்த துணியை வைத்து சுத்தம் செய்தவள். அந்த பெண்ணின் முகத்தை பார்க்க அது ரத்த பசையின்றி வெளிரி போய் இருக்க அந்த பெண்ணின் மீது அமர்ந்து அவள் கழுத்தை பிடித்து நெறித்து அவள் கன்னத்தில் அறைய அசைவே இல்லை எப்படி அசைவு இருக்கும் உயிர் இருந்தால் தானே அசையும் அந்த பெண் இறந்து தான் பலநாட்கள் ஆகி இருக்குமே.அது தெரிந்தும் அந்த பெண்ணை குத்தி அடித்து அதனிடம் ஏதோ எதிர் பார்த்து, அது கிடைக்க வில்லை என்றதும் அவள் கழுத்தை பிடித்தபடியே “ஆ……..” என்று அந்த இடம் அதிர கத்தினாள் அவள்.