இரவு 55

காலம் கரைந்து போனாலும், இளமை மறைந்தாலும், வாழ்க்கை கைவிட்டு போனாலும், உன் மீது நான் வைத்த நேசம் என்றும் மறையாது.

கழுத்தில் போட்டு இருந்த பேன்டை சிறுது லூசாக்கி விட்டு அந்த பென்ஜில், சாய்ந்து அமர்ந்திருந்தார் தினகரன்.  அவருக்கு வீட்டிலேயே இருக்க பிடிக்காமல் தன் பேத்தியை ப்ளேஸ்கூலில் விட வந்தவர் சிறிது நேரம் இளைப்பாற அங்கேயே அமர்ந்து விட்டார். அந்த பென்ஜில் அமர்ந்தபடி அந்த பள்ளியில் நடந்து கொண்டு இருந்த மார்னிங் ப்ரேயரை பார்த்துக்கொண்டு இருந்த தினகரனுக்கு நினைவெங்கும் தேவிதான். இருவரும் ஒரே பள்ளியில் தான் படித்தனர் . தினக்கரன் ஆறாம் வகுப்பு படிக்கும் போது தேவியை எல்கேஜி சேர்க்க தேவிக்கு அழகாக இரட்டை குடுமி போட்டு, பாவாடை சட்டையில் பொம்மை போல கொண்டு வந்து இங்கு விடுவதை ஒளிந்திருந்து பார்த்தது நினைவு வர , அதை நினைத்து சிரித்தவராகக் காலத்தில் பின்னோக்கிச் சென்றார் தினக்கரன்.

தினகரனுக்கு ஏழு வயது இருக்கும் போது தான் லட்சுமி பிறந்தாள். . குழந்தை பிறந்து இரண்டு மாதம் கழித்து தான் தினகரனின் அம்மாவும் அப்பாவும் பார்க்கவே சென்றனர் தினகரனையும் அழைத்து கொண்டு. தினகரனுக்கு வீட்டில் எப்போதும் கண்டிப்பு மட்டும்தான் அவன் எது செய்தாலும் அடித்து விட்டு தான் பேசுவார் அவரது அம்மா. அதனால் சிறு வயதில் இருந்து தினகரனுக்கு எது செய்யவும் பயம். பள்ளியில் கூட தனியே தான் இருப்பான். அவன் அம்மா நண்பர்களுடன் பழகினாலும் அவனை அடித்து பயமுறுத்துவார் ஏன் எதற்கு என்று தெரியாமலே அடி வாங்கிய நேரமும் உண்டு. இப்படி அடி வாங்கி வாங்கி அந்த ஏழு வயதிலேயே சிரிப்பை தொலைத்து ஏதோ போல தான் சுற்றி வருவான்.

இப்படி இருந்த தினகரனை தான் ஒரு நாள் அவன் மாமா வீட்டிற்கு அவர் அழைத்து சென்றார். அவன் அம்மா எங்கும் தினகரனை அழைத்து சென்றிட மாட்டார் வீட்டிலேயே பூட்டி வைத்து கொள்வார் இப்படி இருந்தவர் தன் அம்மாவின் நச்சரிப்பால் தான் அங்கு கூட்டிச் சென்றார்.  தாயின் கையை பிடித்தபடி அந்த வீட்டிற்குள் சென்றான் தினகரன். அங்கு கட்டிலில் அத்தைக்கு அருகே ஒரு துணியில் குழந்தையைப் படுக்க வைத்திருந்தனர்.

 தினக்கரனுக்கு குழந்தையை பார்க்க வேண்டும் போல் இருக்க அவன் அம்மா கையை பிடித்த படியே எட்டி எட்டி பார்த்து கொண்டு இருந்தான் அப்போது அவனை பார்த்த அவன் அத்தை “ அண்ணி தம்பிய விடுங்க பாப்பாவ பாக்கட்டும் “ என்று சொல்லவும் வேறு வழியில்லாமல் தினகரனின் கையை விட அவன் பயந்து பயந்து குழந்தை அருகில் சென்றான். குழந்தை கைகளை மடக்கி கொண்டு தூங்கி கொண்டு இருக்க குழந்தையை பார்த்த தினகரன் குழந்தை கன்னத்தை அழுத்திப் பார்த்து விட்டு “ என்ன அத்தை இப்படி இருக்கு பாப்பாவோட கன்னம் “ என்று கண்கள் விரிய பேசிக்கொண்டிருக்கும் போது குழந்தை விழித்துக் கொள்ள குழந்தை கையை பிடித்த படி குழந்தையையே பார்த்து கொண்டு நின்றான்.

அப்போது குழந்தை கண்களை திறந்து தினகரனை பார்த்து சிரிக்க அந்த சிரிப்பை பார்த்து அவன் முகம் புன்னகைக்கு தாவ “ பாப்பா பேரு என்ன அத்தை “ என்று தினக்கரன்  கேட்க உடனே பார்வதி “ லட்சுமி தேவி… பாப்பா  பேரு “ என்று அவன் தலையை வருடிக்கொண்டே பேச அதை கேட்ட தினகரனின் வாய் “ தேவி பாப்பா….” என்று சொல்லி பார்த்தவன்  “ அத்தை பாப்பாக்கு முத்தம் கொடுத்துக்குவா…” என்று கண்ணில் ஆசை மின்ன கேட்க அதை கேட்டுக்கொண்டு இருந்த அவன் பாட்டி,

 “ டேய் உனக்கு இல்லாத உரிமையா டா.. உன் முறைப்பெண்ணுடா அவ.. நீ தயங்காம கொடு “ என்று தன் விளையாட்டாக பேசவும் அது வினையாகவே வந்து முடிந்தது.  தினகரனின் அம்மாவுக்கு தன் அம்மா பேசியது பிடிக்காமல் அவரை திட்டித்தீர்த்தவர் கோபத்துடன் தினகரனையும் கையோடு அழைத்துக்கொண்டு சென்றார். பாவம் தினகரன், அவனுடைய கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு கொண்டு செல்லும்போது தேவியைப் ஏக்கத்துடன் பார்த்தபடி சென்றாவர் எண்ணம் முழுக்க  கடைசி வரை தேவிக்கு முத்தம் கொடுக்காவே இல்லையே என்று தான்.

அதன் பிறகு தேவியைப் அவனுடைய பள்ளியில் சேர்க்கும்போது போது தான் பார்த்தான்.  தேவியைப் பார்க்கவும் அவளிடம் சென்று பேச வேண்டும் போல் இருக்கவும் இடைவேளை நேரத்தில் அவளிடம் இருந்த ஐம்பது பைசாவுக்கு சாக்லேட் வாங்கி கொண்டு அவள் வகுப்பறை ஜன்னல் வழியே எட்டி பார்த்தான்.

 அங்கு ஒரு இடத்தில் நண்பர்களுடன் சந்தோஷமாக சிரித்து விளையாடும் தேவியைப் பார்த்த தினகரன், மெதுவான குரலில் “தேவி….தேவி…” என்று அழைக்க, முதலில் திரும்பி பார்க்காத லட்சுமி சிறிது நேரம் கழித்து திரும்பி பார்த்தாள்  ஜன்னல் வழியே தினகரனும் அவளை கைகாட்டி அழைக்க, தேவி அழகாக எழுந்து அவன் அருகே சென்று நின்றாள். அவளை பார்த்தவுடன் தினக்கரன் அவள் கன்னத்தைக் கிள்ளி, “ அழகு தேவி…” என்று கொஞ்சி, அவனிடம் இருந்த சாக்லேட்டை கொடுத்து விட்டு சென்றான்.  அவனிடம்  இருந்து  சாக்லேட்டை வாங்கிய தேவி அவனை ஜன்னல் வழியே எட்டி பார்க்க அதற்குள் தினகரன் ஓடி சென்றிருந்தான்.

இப்படியே அடிக்கடி தினகரன் லட்சுமியை வந்து பார்ப்பது பார்க்கும் போது எல்லாம், கன்னம் கிள்ளி செல்வது என்று அவர்களின் நட்பு தொடங்கியது. லட்சுமி வளர வளர தினகரன் யார் என்று தெரிந்துகொண்டாள். தினக்கரன் அவன் அம்மாவுக்கு பயந்து நடுங்குவது அவன் அம்மாவின் குணம், என்று அனைத்தும் தெரிந்தும், அவளுக்கு தினகரன் என்றால் மிகவும் பிடிக்கும்.

பள்ளியில் இடைவேளை என்றால் போதும், “ தினா…” என்று அவனை பார்க்க சென்று விடுவாள். லட்சுமி வரை தாமதம் ஆனால் போதும் தினகரன் அவளை தேடிச் சென்றுவிடுவான். இவர்கள் நட்பு யாருக்கும் தெரியாது. அப்படி இருக்க, மாணிக்கத்தையும் இதே பள்ளியில் சேர்த்துவிட்டனர். அதன் பின் தேவியை பார்க்க முடியாமல் போனது, மாணிக்கம் சிறு பையன் தேவியிடம் பேசுவது போல அவனிடமும் பேச அவன்  தினகரனை பார்த்து  பேசியதை வீட்டில் அப்படியே ஒரு முறை சொல்லிவிட்டான்.

 அது எப்படியோ தினக்கரனின் அம்மாவின் காதில் விழுந்துவிட அவனு போட்டு் அடி நொறுக்கிவிட்டார் . நன்றாக அடித்து முடித்த பிறகு தான் விசாரிக்கவே செய்தார் “என்ன, அந்த லட்சுமி பெண்ணும் உன் ஸ்கூல்ல தான் படிக்கிறா போல, இது வரை நீ இதை என் கிட்ட சொல்லவே இல்லை  “ என்று மிரட்டி அடிக்க, அடியில் வலியால் துடித்தபடி, தினகரன் “யாருமம்மா, லட்சுமி அவங்க யாருன்று எனக்கு தெரியாதும்மா,“ என்று அழுகவும், “என்னது லட்சுமி யாருன்னு உனக்குத் தெரியாதா? அப்புறம் ஏன்டா அவ க்ளாஸ் போன?”

“நான் யார் க்ளாஸ்க்கும் போல அம்மா, எங்க மிஸ்ஸ கூப்பிட தான் அங்க போன அங்க இருக்க பசங்க மிஸ் இல்ல உங்க பேரு சொல்லுங்க மிஸ் வந்தா சொல்றோம்னு சொன்னாங்க ” என்று அசராமல் போய் சொல்ல

 “ஓ… அப்படியா அப்போ சரி, விடு. அப்போ உனக்கு லட்சுமி யாருன்னு தெரியாது சரியா “

  “ ம்ம்ம் தெரியாதும்மா…”

 “ அப்போ சரி போய் படி” ” என்று சென்று விட்டார்.

அன்று தான் தினக்கரன், முதன் முதலாக அவன் அம்மாவிட,ம் பொய் சொன்னான். தினக்கரன், அடிவாங்கிய விஷயம் தெரியவரவே லட்சுமி மாணிக்கத்திற்கு தெரியாமல் தினக்கரனை பார்க்க செல்ல தொடங்கினாள். இப்படியே நாட்கள் செல்ல லட்சுமி மூன்றாவது படித்து கொண்டு இருந்தாள். தினக்கரன் பத்தாவது படித்து கொண்டு இருந்தான் இரண்டு மாதத்தில் அவனுக்கு பொதுத் தேர்வ, அது முடிந்து பன்னிரண்டாவது வேறு பள்ளியில் தான் சேர வேண்டும். அதை நினைத்து தினக்கரன் சோகமாக படியில் அமர்ந்து கொண்டு இருந்தான்.

 அப்போ,து அங்கு வந்த லட்சுமி தினக்கரனை பார்த்து விட்டு அவன் கழுத்தில் தாவி குதித்து, “ தினா,….. “ என்று கத்த, அதில் பயந்து அவளை முன்னால் இழுத்து நிறுத்திய தினக்கரன், “ ஏன் தேவி,…..இப்படி பயமுறுத்துற… எத்தனை வாட்டி சொல்ல இப்படி பன்னாதன்னு ?” என்று அவளை கீழே இறக்கி விட,

“ ஏன் தினா,  முகம் சோகமா இருக்கு? உங்க அம்மா திருப்பி அடிச்சிட்டாங்களா? “ என்று அவன் அருகே வந்து அமர்ந்து பெரிய பெண் போல கேள்வி கேட்க. அதில் சிரித்த தினக்கரன், எப்போதும் போல அவள் கன்னம் கிள்ளி, “ அழகு தேவி,…” என்று கொஞ்ச, தினக்கரனின் கையை தட்டி விட்ட லட்சுமி “ இப்படி கிள்ளி, கிள்ளி,யே என் கன்னம் பெரிசா ஆகிடுச்சு தினா,…” என்று கத்த, அவள் வாயை மூடிய தினக்கரன், “ கத்தாத தேவி,..”

 “ அப்போ, சொல்லு ஏன் சோகமா இருக்கன்னு?”   என்று லட்சுமி கேட்டதும், முட்டியில் முகம் புதைத்த தினக்கரன், “ எனக்கு ரெண்டு நாள்ல எஸ்ஸாம் ஸ்டாட் ஆகுது, தேவி,” என்று சோகமாக கூற, “ ச்சீ இதுக்கா பயப்படுற தினா,.  நீ ஏன் பயப்படுற நீ தான பஸ்ட் வருவ உங்க க்ளேஸ்ல அப்பறம் ஏன் இந்த பயம் “

“ அது இல்ல தேவி இந்த  எஸ்ஸாம் பிறகு பப்ளிக் வச்சிருவாங்க உன்ன பாக்க நேரம் இருக்காது அது பிறகு நான் வேற ஸ்கூல் போய்டுவன் உன்ன எப்படி இதுக்கு அப்பறம் பாக்க “  அதை கேட்டு லட்சுமி முகமும் வாடிப்போக அதை பார்த்த தினக்கரன் “ கவலைப்படாத தேவி நான் சீக்கிரமா படிச்சி நல்ல வேலைக்கு போய்டா அம்மா என் பேச்சுதான் கேப்பாங்க அதுக்கப்புறம் நான் உன்ன டேய்லி வந்து பார்க்கிறேன் சரியா “ அதை கேட்டதும் தேவி கண்ணில் மின்னல் வெட்ட  “எவ்வளவு நாள் ஆகும் தினா நீ வேலைக்கு போக “

“அது ரொம்ப நாள் ஆகும் தேவி… “ என்று முகத்தை தொங்க போட, அதை சொன்னதும் லட்சுமி அங்கிருந்து ஓடி சென்றுவிட்டாள் தினக்கரன் கூப்பிட்டும் திரும்பி பார்க்காமல்.

அப்போது தினக்கரன் முகம் மேலும் வாடிப்போக அதை நினைத்தவாறு சோகமாகவே சுற்றி வந்தான். மறுநாள் பள்ளி வந்தவன் சுற்றி சுற்றி வர, லட்சுமியை காணவில்லை அவளை பள்ளி முழுக்க தேடி பார்த்து வீடு திரும்பினான். அடுத்தநாளும் லட்சுமி வரவில்லை மறுநாள் தினக்கரனுக்கு மாதிரித் தேர்வு இன்று விட்டால் லட்சுமியை பார்க்க முடியாது அந்த சோகத்துடன் எப்போதும் அமரும் படியில் கன்னத்தில் கைவைத்தபடி அமர்ந்திருந்தான். அப்போது அவன் அருகில் வந்து அமர்ந்தாள் லட்சுமி. அவளை பார்த்து கண்கள் கலங்க “ஏன் தேவி இரண்டு நாள ஸ்கூல்க்கு வரல்லை என் மேல அவ்வளவு கோபமா “ என்று தினக்கரன் அழுதபடி கேட்டதும் அவன் கண்ணீரை துடைத்த லட்சுமி

“ எனக்கு உடம்பு சரியில்லாம போய்டுச்சி தினா அதான் வரல”

  “ என்னது உடம்பு சரியில்லையா? என்ன ஆச்சு தேவி! “ என்று நெற்றியில் கைவைத்து பார்க்க நெற்றி லேசாக சூடாக இருந்தது.  “ தேவி! இன்னும் காச்சல்  இருக்கா உனக்கு “

 “ அது பரவாயில்லை தினா,” என்று அவன் முகம் பார்த்து “ இன்னைக்கு அப்புறம் என்ன பார்க்க வர மாட்டியா தினா “ என்று சோர்ந்த விழிகளுடன் லட்சுமி கேட்க அதில் தலையை குனிந்த தினக்கரன் “ தேவி…..” என்று இழுக்க லட்சுமி “ இனி என்னால உன்ன பார்க்க முடியாதா தினா “ என்று தேவி அழுக, அவள் கண்களை துடைத்த தினக்கரன் “ அழாத தேவி! ப்ளீஸ் இன்னும் கொஞ்சம் வருஷம் தான் நான் நல்ல வேலைக்கு போய்ட்டா எல்லாம் சரி ஆகிடும் தேவி “ என்று அவளை தேற்றினான் உடனே தேவி “ என்ன மறக்க மாட்டதான தினா “  என்று கேட்டதும் தினக்கரன்   “ என் அழகு தேவிய  எப்பவும் மறக்க மாட்டேன் “ என்று கன்னம் கிள்ளினான் லட்சுமிக்கு அழுகை அதிகமானதே தவிற குறையவில்லை.

 தினக்கரன் லட்சுமியின் கண்களை துடைத்தபடி இருந்தான் அப்போது லட்சுமி அவள் காதில் தங்கத்தில் வளையம் போல் மாட்டியிருந்த காதணியை கலட்டி அவனிடம் கொடுத்து “ இது என் நியபகமா வச்சிக்கோ தினா. என்ன மறக்கக் கூடாது வேலைக்கு போய்ட்டு என்ன பார்க்க வரனும் சரியா? “ என்று அதை அவன் கையில் கொடுத்து விட்டு ஓடி வகுப்பறைக்கு சென்று விட்டாள்.

அந்த காதணியை பார்த்து கொண்டு அதை நெஞ்சோடு அணைத்த தினக்கரன் வீட்டுக்கு சென்று ஒரு கருப்பு கயிற்றில் அதை மாட்டி அவன் கழுத்தில் போட்டுக்கொண்டான்.

நாட்கள் செல்ல செல்ல அந்த கருப்பு கயிறு வெள்ளியாகி அதிலிருந்து தங்கத்துக்கு மாறி அது இப்போது லட்சுமியின் கழுத்தில் உறவாடிக்கொண்டிருக்கிறது.