இரவு 40

காலை, இரவு வேலை முடித்துவிட்டு மயூரி சோர்வாக நடந்து வந்தவள் நேராக அவள் அபார்ட்மெண்ட் உள்ளே சென்று அமைதியாக அமர்ந்து விட்டாள் . எப்போதும் வேலை முடிந்து வீடு வருபவள் மாணிக்கத்திடம் சிறிது நேரம் பேசி விட்டு தான் தூங்கப்போவாள். இப்படி இருந்த மயூரி நேற்றிலிருந்து ஏதேதோ லட்சுமி அம்மாவை பற்றி யோசித்து தலையில் போட்டு குழப்பி கொண்டு ஏதோ போல சுற்றி கொண்டு இருக்கிறாள். இவள் தான் இப்படி இருக்கிறாள் என்று பார்த்தால் மாணிக்கம் அதற்கு மேல் தொடர்ந்து ஏதோ முனங்கிய படியே இருப்பவர் அடிக்கடி போனை எடுத்து பார்த்து கொள்வர். இப்படி இருவரும் இரு மூலையில் இருக்க ஆர்யன் தான் தவித்து போனான் காணாமல் போன அத்தைக்காக வருந்துவதா இல்லை இவர்கள் இருவரின் நிலையை கண்டு வருந்துவதா என்ற நிலையில் சோர்ந்து போனவனாய் காலை மற்றும் இரவு சமையலை பார்த்து கொண்டு இருந்தான். மாணிக்கத்தின் கவனம் இங்கு இல்லாமல் போக அவரை சமைக்க வேண்டாம் என்று சொல்லி விட்டான் ஆர்யன். அதனால் இப்போது அவன் தான் சமைத்து கொண்டு இருக்கிறான்.

காலை உணவுக்கு பொங்கலும் சட்னியும் செய்தவன் மதியத்திற்கு வத்த குழம்பு, புடலங்காய் பொரியல் செய்து முடித்தவன் ஹாலுக்கு வந்து  “அப்பா குழம்பு கூட்டு வச்சிட்டேன் மதியத்துக்கு சாப்பாடு மட்டும் செஞ்சிக்கொங்க “ என்று மாணிக்கத்தை பார்க்க அவர் ஓடாத டிவியை வெறித்தபடி எதையோ யோசித்து கொண்டு இருக்க அவர் அருகே சென்று “ அப்பா…” என்று தோளை பிடித்து உலுக்கவும் தான் அவருக்கு நினைவே வந்தது போல

 “ஆ… இருக்கேன் ப்பா “   என்று ஆர்யனை பார்க்க அவரை பார்த்து ஒரு பெருமூச்சி விட்டபடி அவர் அருகே அமர்ந்து தோளோடு சேர்த்து அணைத்தபடி “ எல்லாம் சரி ஆகிடும் ப்பா ஃபீல் பண்ணாதீங்க அத்தை நல்ல படியா திரும்பி வருவாங்கன்னு நம்புங்க நம்ம எத ரொம்ப நம்புறோமோ அது தான் நடக்கும் நல்லதையே நம்புங்க ப்பா “ என்று அவரை தேற்ற மாணிக்கம் முகம் அப்பவும் தெளியவில்லை அதை பார்த்து ஆர்யன் “ எல்லாம் நல்லதா நடக்கணும் கடவுளே “ என்று மனதோடு வேண்டிய படி எழுந்தவனாலும் வேலைக்கு லீவ் போட முடியாது இன்று அவன் டீம் மெம்பர்களுக்கு டாஸ் அசைன் பண்ணியே ஆக வேண்டும் அதற்கு இவன் நேரில் சென்று தான் ஆக வேண்டும் ஆபீஸ் சென்று வேகமாக அனைத்து வேலையும் முடித்து வீடு திரும்ப வேண்டும் என்று எண்ணியபடி எழுந்து நேரத்தை பார்க்க அது ஒன்பது என்று காட்டியது அதை பார்த்த படி “ என்ன மயூரிய இன்னும் காணோம் “ என்று யோசித்தபடி வெளியே பார்க்க மயூரியின் செருப்பு வெளியே தான் இருந்தது .

அதை பார்த்தவன் “ வந்துட்டாளா என்ன… “ என்று கதவை தட்ட கை வைக்க அது திறந்து கொண்டது “ என்ன கதவு திறந்தே இருக்கு “ என்று எட்டி பார்க்க அங்கே மயூரி சோபாவில் சுவற்றை வெறித்த படி எதையோ யோசித்து கொண்டு இருந்தாள். அவளை பார்த்த ஆர்யன் “ நீயும்மா ..” என்று அருகில் சென்று அமர அவன் அமர்ந்தது கூட தெரியாமல் அப்படியே இருக்க  ஆர்யன் அவள் தோளில் கை வைத்து “ மயூரி..” என்று அழைக்கவும் பதறி போய் மயூரி ஹோபாவை விட்டு எழுந்து நின்று யார் என்று பார்த்தவள் ஆர்யன் தான் என்றதும் தான் பிடித்து வைத்த மூச்சையே இழுத்து வெளியே விட்டாள்.

  மயூரியை பார்த்த ஆர்யன் “ அப்பா தான் இப்படி பயப்படுறாங்கன்னா நீயும் ஏன் இப்படி பயப்படுற மயூரி அத்தைக்கு எதுவும் ஆகிருக்காதுன்னு உனக்கு கூடவா நம்பிக்கை இல்லை “  என்று ஆர்யன் சொன்னதை கேட்ட மயூரி மனதில் “ ஏன் நம்பிக்கையை அந்த ரத்தம் வலியுற  முகம் கண்ணுக்குள்ள வந்து நின்னு உடச்சிட்டு இருக்கு ஆர்யன் லட்சுமி அம்மா க்கு எதுவும் ஆகிருக்காதுல “ என்று மனதில் பேசியவள் “ அது ஆரி… “ என்று தடுமாற ஆர்யன் மயூரி கையை பிடித்த படி “ பயப்படாத மயூரி நம்பிக்கையா இரு “ என்று மயூரி முகம் பார்த்து சொன்னவனும் “ நம்பிக்கையுடன் இருக்கனும் “ என்று மனதில் நினைத்த படி மயூரி மாணிக்கம் இருவரையும் காலை உணவு உண்ண வைத்து விட்டு வேலைக்கு கிளம்பினான் .

மயூரி அவள் அறையில் கண்கள் மூடி தூங்க செய்ய, அவளுக்கு கண்கள் மூடினாலே லட்சுமி அம்மா தான் கண் முன் வர தூங்காமல் எழுந்து அமர்ந்தவள் மாணிக்கத்துடன் அவர் வீட்டின் ஹோபாவில் அமர்ந்து கொண்டாள் . இவளை பார்த்த மாணிக்கம் “ தூங்கலயா ம்மா…” என்று சோர்ந்த குரலில் கேட்க “ இல்ல தூக்கம் வரல அங்கிள் கொஞ்சம் நேரம் உட்கார்ந்துட்டு போறேன் “ என்று மயூரி கேட்கவும் சரி என்று தலையசைத்தார் மாணிக்கம்.

சோபாவின் ஒரு மூலையில் மாணிக்கம் மறு மூலையில் மயூரி என்று இருவரும் அமைதியாக இருக்க அப்போது வீட்டின் கதவு தட்ட பட இருவரும் யார் என்று திரும்பி பார்த்தனர் வாசலில் ஸ்டெல்லா நின்று கொண்டு இருந்தாள்.

அவளை பார்த்ததும் மாணிக்கம் பதற்றமாக எழுந்து சென்று “ உள்ள வாம்மா …” என்று அழைக்க மயூரி “ இவங்க என்ன பண்றாங்க இங்க “ என்று நினைத்த படி அவளை பார்க்க உள்ளே வந்த ஸ்டெல்லா “ அது சார் உங்க அக்கா பத்தி விசாரிச்சதுல சில விஷயம் கண்டுபிடிச்சேன் அதான் அத சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தேன் சார் “  என்று ஸ்டெல்லா சொன்னதை கேட்டு மயூரி வேகமாக வந்து அவள் கையை பிடித்தபடி  “ லட்சு ம்மா பத்தறமா தான இருக்காங்க, அவுங்க இருக்க இடம் தெரிஞ்சிதா “ என்று கண்கள் கலங்க கேட்டு நிற்க ஸ்டெல்லா “ என்ன அம்மாவா …” என்று மனதில் அதிர்ந்தவள் அதை வெளி காட்டாமல் “ எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் கல்கத்தால தான் இருக்கிறார் அவரிடம் அந்த வினோத் சொன்ன ப்ராத்தல்ல போய் விசாரிக்கச் சொன்னேன் அவரும் விசாரிச்சதை எனக்கு அனுப்பி வச்சிருக்காரு அத சொல்லலாம்ன்னு தான் வந்தேன் “ என்று எப்போதும் போல முகத்தில் எதையும் காட்டாமல் பேச இங்கு மாணிக்கம் மயூரி தான் என்னவாக இருக்கும் என்று அவள் முகம் பார்த்தபடி தவித்து போனார்கள் .

“அந்த வினோத் சொன்ன மாதிரி உங்க அக்காவ அந்த இடத்துல காசுக்கு வித்துட்டு அவன் தான் முதல் “ என்று எதோ சொல்ல வந்தவள் அதை நிறுத்தி அவள் குரலை சிருமியபடி “ அதுக்கு அப்புறம் அவுங்க அங்கேயே தான் முப்பத்து வருஷம் இருந்திருக்காங்க ஆனா பதின்மூன்று வருடம் முன்னாடி அங்க இவங்க பார்த்துக்கிட்ட இருந்த ஒரு பெண்ணோடு அங்க வர ஒருத்தன் உதவியோட தப்பிச்சி வந்திருக்காங்க  “என்று நிறுத்த மயூரி

“ ஆமா ஆமா நானும் லச்சு அம்மாவும் சேர்ந்து தான் தப்பிச்சோம்  அதுக்கு அப்புறம் தான் எனக்கு நினைவு இல்ல “ என்று ஆர்வத்துடன் ஸ்டெல்லாவை பார்க்க அவள் திகைத்து மயூரியை திரும்பி பார்த்தவள் “ என்னது மயூரி அங்க இருந்து தப்பிச்சி வந்த பெண்ணா “ என்று மனதில் பேசியவள் மயூரியையே பார்க்க மயூரி “ அப்புறம் ஸ்டெல்லா “ என்று அவளை உலுக்க மாணிக்கமும் “ அப்போ அக்காவ காப்பாத்துனவன் கூடவா இருக்கா “ என்று அவர் கேள்வியாக கேட்க ஸ்டெல்லா “ அது சார் உங்க அக்காவ காப்பாத்துனவனோட பழைய அட்ரஸ் கண்டுபிடிச்சிட்டாராம் அங்க போய் விசாரிக்கணும்னு சொல்லிருக்காரு சார் “ என்றதும் மயூரி மற்றும் மாணிக்கம் முகம் தொங்கி விட அதை பார்த்த ஸ்டெல்லா “ நாம வேணும்னா அங்க கல்கத்தா போய் விசாரிச்சு பார்க்கலாம் உங்க அக்காவ காப்பாத்துனவன கண்டுபிடிச்சா போதாதா “என்று இருவரையும் பார்க்க மயூரி கண்கள் விரிய “ஆமா ஆமா நாம ஏன் ஆள் விட்டு விசாரிக்கனும் நாமலே போலாமே “ என்று சொல்ல “ ஆமா ஏன் டைம் வேஸ்ட் பண்ணிட்டு இப்போவே கிளம்பலாம் “ என்று ஸ்டெல்லா முதுகு பின் இருந்து சத்தம் வர யார் என்று மூவருமே திரும்பி பார்க்க ஜெய் தான் தலை கலைந்து உடை கலைந்து என்று சிரித்தபடி நின்று கொண்டு இருந்தவன் “ நானும் இத சொல்ல தான் வந்தேன் அதுக்குள்ள ஸ்டெல்லா சொல்லிட்டா “ என்று மூச்சுவாங்கியவன் “ ஸ்டெல்லா கல்கத்தாவுக்கு நாலு டிக்கெட் போடு “  என்று சொல்ல மயூரி “ நாலா, ஆர்யனையும் வெயிட் பண்ணி கூட்டிட்டு போலாம் “

 அதை கேட்ட ஜெய் அவள் அருகில் வந்து தலையை தட்டி “ ஆர்யன் வரலன்னு யார் சொன்னா அவனோட சேத்து தான் நாலு பேர் “ ஜெய் மயூரியை அடித்ததில் அவளை தள்ளி விட்ட மயூரி “  ஸ்டெல்லா அஞ்சு டிக்கேட்டா போடுங்க நீங்களும் வரிங்க “  என்றதும் ஸ்டெல்லா ஜெய்யை பார்க்க அவன் “ அவுங்க எதுக்கு மயூரி அவுங்க கம்பெனிய பார்த்துக்கொள்ளட்டும் நாம மட்டும் போலாம் “ என்று சொல்லவும் மயூரி ஜெய்யை பார்த்து முறைத்த படி “ நீ வேண்ணும்னா இங்க இருந்து கம்பெனிய பார்த்துக்கொ நான் ஸ்டெல்லாவ கூட்டி போறேன் “ என்று சொல்லவும் , ஜெய் மயூரி முகத்தை பார்த்து “ இதுக்கு மேல நோ சொன்னா ஸ்டெல்லாவ அவ பி.ஏ.வா மாத்துனாலும் மாத்திப்பா அப்புறம் என்ன பாடு திண்டாட்டமா ஆகிடும்  “ என்று நினைத்தவன் “ ஐந்து டிக்கெட்டாவே போட்டுருங்க ஸ்டெல்லா “ என்று மயூரி பார்த்து சிரிக்க அவள் அவனை கண்டு கொள்ளாமல் கிளம்ப சென்றாள்.

பின் ஆர்யனுக்கும் போனில் விஷயம் சொல்ல அவனும் வேகமாக வேலையை முடித்து வீட்டுக்கு வர மாலை  அனைவரும் கல்கத்தா செல்ல விமானத்தில் அமர்ந்து இருந்தனர். ஃப்ளைட்டில் மாணிக்கத்துடன் ஜெய் அமர்ந்துகொள்ள  அதற்கு இந்தப் பக்கம் ஸ்டெல்லா அவள் பக்கத்தில் மயூரி அவள் அருகில் ஆர்யன் என்று இவர்கள் மூவரும் சேர்ந்து அமர்ந்துகொண்டனர் . மயூரி கண்களை மூடி அனைத்து கடவுள்களிடமும் லட்சுமி அம்மா கிடைத்துவிட வேண்டும் என்று வேண்டிக்கொண்டே ஒரு பதட்டத்துடன் அமர்ந்து இருந்தாள். அவள் பக்கம் திரும்பிய ஸ்டெல்லா “ மேம் உங்க கிட்ட கொஞ்சம் போசனும் “ என்று சொல்ல கண்களை திறந்து மயூரி அவளை என்னவென்பது போல பார்க்க அருகில் இருந்த ஆர்யனும்  இவர்களை தான் பார்த்தபடி இருந்தான்.

ஆர்யனை ஒரு நிமிடம் பார்த்து மீண்டும் மயூரி பக்கம் திரும்பியவள்  “ அது சார்ரோட அக்கா தான் உங்க அம்மாவா அண்ட் உங்க கூட தானே அவங்களும் வந்தாங்க அப்புறம் எப்படி நீங்க மட்டும் தனியா இங்க இருக்கிங்க அவுங்களுக்கு என்ன ஆச்சி “ என்று குழப்பமான முகத்துடன் மயூரியை பார்க்க மயூரி “ என்ன பத்தி ஜெய் எதுவும் உன் கிட்ட சொன்னது இல்லையா “

“ இல்லை மேடம் சார் உங்கள பத்தி என் கிட்ட பேச மாட்டார் எனக்கு உங்கள பத்தி தெரிஞ்சதுனா நீங்க சார் கூட ஒரே  ஆஸ்ரமத்துல வளர்ந்தீங்க அது மட்டும்தான் தெரியும்  மேடம் “

“ ஓ… அவன் சொன்னது இல்லையா” என்று  முனங்கியவள், அவளை பற்றி லட்சுமி அம்மாவை பற்றி என்று இப்போது கனவில் ரத்தத்துடன் வரும் லட்சுமி அம்மா வரை கூறி மூடித்தவள் தேம்பித் தேம்பி அழுதபடி “ டாக்டர்… சொன்னபடி பார்த்தா… என் கனவில வரது… எல்லாம் நடந்ததா” என்று அழுக; ஆர்யன் “ மயூரி அழாதே அப்பா பார்க்கப் போறார் “ என்றதும், மயூரி அவள் வாயை மூடி அழுகையை நிறுத்தி மாணிக்கத்தை எட்டி பார்க்க அவர் ஜெய்யுடன் எதோ சீரியஸாக பேசிக்கொண்டிருந்தார். அதை பார்த்து நிம்மதியாக மயூரி திரும்ப ஆர்யன் “ ஏன் மயூரி இதை என் கிட்ட சொல்லல்லை “

 “ அது ஆர்யா எனக்கு பயமாக இருந்துச்சி அதுவும் இல்லைாம உங்களையும் இதை சொல்லி கஷ்டப்படுத்த வேண்டாம்ன்னு அதோட எனக்கு ஒரு எண்ணம் லட்சுமி அம்மாவுக்கு எதுவும் ஆகியிருக்காதுன்னு சொல்லிக்கிட்டே இருந்துச்சி அதான் சொல்லல்லை “ என்று சோர்வாக தலை குனிய ஆர்யன் “ சரி கவலைப்படாதே மயூரி அத்தைக்கு எதுவும் ஆகியிருக்காதுன்னு நம்புவோம். “ என்று சொன்னதும் மயூரி ஆர்யன் கையை பிடித்து கொண்டு அவன் மீது சாய்ந்து கொண்டாள்.

கல்கத்தா வந்து இறங்கி ரூம் ஒன்று புக் செய்து விட்டு மறுநாள் காலை ஸ்டெல்லா நண்பனை பார்க்க சென்றனர். அங்கே ஆர்யன் உயரத்தில் அவனை போல மசில்ஸ் வைத்து கொண்டு ஒரு வாலிபன் நின்று கொண்டு இருக்க அவனை பார்த்த மயூரி “ ஆர்யன் டு பாய்ண்ட் ஓ போல இருக்கான் “ என்று முனங்கிக்கொண்டு பார்க்க அவள் முனகல் கேட்டு ஆர்யன் அவளை பார்த்து முறைக்க அதை கண்டுகொள்ளாமல் அவர்கள் பேசுவதை கவனித்தால் மயூரி . ஸ்டெல்லா “ ஹாய் சரத், எதாவது லீட் கிடைச்சுதா “

“ அ.. கிடைச்சது க்கா நான் அவன் பழைய வீட்டுல விசாரிச்சதுல அவனோட இன்னொரு வீட்டோட அட்ரஸ் தந்திருக்காங்க அங்க போன ஏதாவது கிடைக்கலாம் அது அவனோட மெயின் ஹவுஸ்ஸாம் இது கெஸ்ட் வீடு மாதிரி தான் சொன்னாங்க “

“ஓ அவன் பெரிய பணக்காரனா? அவன் பேர் என்ன “ “ சரோஜ் பட்டேல் க்கா அவன் பேரு, இரண்டு மனைவி இருக்குன்னு சொன்னாங்க எதோ துணிக்கடை வச்சிருந்துருக்கான் அப்போ, இப்போ என்ன பண்ணுறான் தெரியல க்கா அங்க போய் பார்த்தா தான் தெரியும்  “ என்று அட்ரஸை நீட்ட அனைவரும் ஒன்றாக அங்கே சென்றார்கள்.

அது ஒரு பெரிய வீடு வீட்டு முழுக்க ஆள் இருக்க சரத் தான் வாட்ச்மேனிடம் பெங்காளியில் சானோஜைப் பார்க்க வேண்டும் என்று சொல்ல அதற்கு அந்த வாட்ச் மேன் அவனை ஏற இறங்க  பார்த்துவிட்டு பெங்காலியில் “ அவரைப் பார்க்க இப்போ போய் வந்திருக்கிறா அவர் இறந்து பதிமூனு வருஷம் ஆகுது “ என்று சொல்ல அதை கேட்ட மயூரி மனதில் கணக்கு போட்டு  பார்த்து வேகமாக அவனிடம் வந்து  பெங்காளியில் “ அவர் எப்படி இறந்து போனார் தெரியுமா? “ என்று பதட்டமாக கேட்க அதற்கு அவன் “ அவரைப் ஏதோ பெண்ணு குத்திக் கொன்றதாக சொன்னார்கள் வேற எதுவும் எனக்கு தெரியாது. “ என்று அவன் சொல்லிவிட அவன் சொன்னதை கேட்ட மயூரி ஏதோ யோசித்து போனை எடுத்து ஏதோ பார்த்தவள் வேகமாக “ போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டும் இப்போதே “ என்று கூறினாள்.