ஜீப்பில் இருந்து கர்ணா இறங்கியபடி கான்ஸ்டபிளிடம் “ அந்த செல்வம் அடையாளம் சொல்லி வரைஞ்சிட்டாங்களா “ என்று ஸ்டேசன் உள்ளே நுழைந்த படி கேட்க அதற்கு கான்ஸ்டபிள் “ அந்த கொடுமைய என்னன்னு சொல்ல சார், நீங்களே நேர்ல வந்து பாருங்க “ என்று உள்ளே அழைத்து செல்ல “ என்ன சொல்ற அவன் ஒழுங்கா அடையாளம் சொல்லலயா “ என்று கேட்ட படி உள்ளே பார்க்க இவனை பார்ததும் செல்வம் கைகளை கட்டியபடி பயந்து எழுந்து நிற்க, படத்தை வரைய வந்தவரோ தலையை சொரிந்த படி முழித்து கொண்டு இருந்தார்.
வரைய வந்தவர் அருகே சென்று கர்ணா “ என்ன சார் அவன் சொன்ன பொண்ண வரஞ்சிட்டிங்களா “ என்று கேட்க அதற்கு அவர்
“ சார் அவன் அந்த பொண்ண வரைய அடையாளம் சொல்ல சொன்ன அந்த பொண்ணுக்கு துணி தைக்குற அடையாளம் சொல்றான் சார் “ என்று அவர் அழுகாத குறையாக கம்பளைன்ட் செய்ய அதை கேட்டு “என்னது “ என்று புரியாமல் அவரை பார்த்து கேட்க அதற்கு அவர் “ சார் அவன் அந்த பொண்ணோட… அது முகத்தை தவிற மத்த எல்லாத்தையும் சரியா சொல்றான் சார் “ என்று அவர் சங்கடமாக சொல்ல, உடனே செல்வத்தை பார்த்து கர்ணா முறைக்க அவன் பவ்வியமாக “அது சார் என் தொழில் அப்படி முகத்தை பாத்தாலும் உடம்பு தான் நினைவு நல்லா இருக்கு “ என்று தலையை சொறிய பளார் என்று அவன் கன்னத்திலயே ஒன்று விட்ட கர்ணா “ தொழில்னா அந்த தொழில் பாக்குற பொண்ணுங்கள அப்படி பாரு அதை விட்டு எல்லா பொண்ணுங்களையும் பாப்பியாடா “என்று அடுத்த கன்னத்திலும் அவனை அறைந்து விட்டு சேரில் தலையை பிடித்து அமர்ந்தவன். எதோ யோசித்தவனாக செல்வத்தை மட்டும் அந்த அறையில் இருக்க சொல்லி மற்ற அனைவரையும் அனுப்பி விட்டு “ ராதா இருக்க இடம் சொல்லு நான் போலீஸா அங்க போகமாட்டேன் “ என்று செல்வத்தை பார்க்க அவன் இருகன்னத்திலும் வலியில் கைவைத்தபடி அவரை பாவமாக பார்த்தான்.
மாணிக்கம் சொன்ன அட்ரஸ்ஸில் கார் வந்து நிற்க அங்கே முன்பு இருந்த வீட்டிற்கு பதிலாக பெரிய வீடு ஒன்று இருக்க அதை பார்த்தபடி கீழே இறங்கினார் மாணிக்கம். அவரை தொடர்ந்து நால்வரும் இறங்க ஜெய் “ நல்லா தான் இருப்பாங்க போல “ என்று அந்த இரண்டு மாடி கட்டிடத்தை பார்த்து படி சொல்ல, மாணிக்கம் மட்டும் சென்று அந்த கேட்டை தட்டி “ வீட்டுல யாரு இருக்கா” என்று சத்தம் போட உள்ளே இருந்து ஒரு பெண் கையில் ஒரு வயது குழந்தையுடன் “யாரு நீங்க…” என்று கேட்டை திறக்க அந்த பெண்ணை கேள்வியாக பார்த்தபடி மாணிக்கம் “ இது தினக்கரன் வீடு தான “
“ ஆமாம் எங்க அப்பா தான் அது நீங்க யார்?”
“நான் அவர் மாமா பையன் மாணிக்கம் “ என்று சொன்னதும் அந்த பெண் முகம் மகிழ்ச்சியில் பிரகாசிக்க
“ நீங்களா உள்ள வாங்க… “ என்று உள்ளே அழைத்து சென்று சோபாவில் அமர வைத்து
“ அப்பா உங்கள பத்தி நிறைய சொல்லியிருக்கிறார் நீங்க என்னைக்காவது அவர தேடி வருவீங்கன்னு ஒரு நிமிஷம் “ என்று உள்ளே சென்று ஒரு பத்திரத்தை எடுத்து வந்தவள் அதை மாணிக்கத்திடம் நீட்டி “ அந்த நிலம் பூர்வீக சொத்தா இருந்தாலும் அத எப்பவோ உங்க அப்பா பேருக்கு மாத்திட்டாங்களாம், அது உங்களுக்கு தெரியாம விக்க பாட்டி தாத்தா முயற்ச்சி பண்ணாங்க ஆனா முடியாம போய்டுச்சி அதான் அப்பா இதை உங்க கிட்ட எப்படியாவது சேர்க்கனும்னு இத்தனை நாளா பத்திரம் பண்ணி வச்சிருந்தாங்க “ என்று பேசிய படி ஒரு நிம்மதியுடன் மாணிக்கத்தை பார்க்க அந்த பத்திரத்தை கையில் வைத்த படி “ உங்க அப்பா எங்கம்மா “ என்று முகத்தில் எதுவும் காட்டாமல் கேட்க “ அப்பாவ… உள்ள தான் இருக்காங்க வாங்க “ என்று ஒரு அறைக்குள் செல்ல அங்கே கட்டிலில் கழுத்தில் கட்டுடன் தினகரன் படுத்து கொண்டு இருக்க அவனை பார்த்த மாணிக்கம் அதிர்ந்து தான் போயிருந்தான்.
தினக்கரன் கூட தான் வளர்ந்தான் மாணிக்கம் என்ன தான் அவன் அத்தை இவனை வேலை செய்ய வைத்து ஒழுங்காக உணவு கொடுக்காமல் கொடுமை செய்தாலும் தினக்கரன் அப்படி இல்லை அதற்கென்று மாணிக்கத்திற்காக சண்டை எல்லாம் போட மாட்டான் ஆனால் அவர்கள் அம்மா இவனுக்கு உணவு கொடுக்காமல் சென்றால் உணவு எடுத்து வந்து தருவான் மற்றபடி அவன் உண்டு அவன் வேலை உண்டு என்று தான் இருப்பான். அம்மா என்றால் அவ்வளவு பயம் அவனுக்கு, அப்படி தான் அவள் அவனை அடித்து உதைத்து பயமுறுத்தி வளர்த்தாள்.
இப்போது அவனை இப்படி பார்க்கவும் உள்ளம் கலங்க தான் செய்தது “ இவன் என்ன செய்தான் இவன் அப்பா அம்மா செய்த தப்பிற்கு “ என்று நினைத்தபடி “ உங்க அப்பாக்கு என்ன ஆச்சு ம்மா “
“ அது வெளிய போய் பேசலாம்ங்க, அப்பா தூக்கம் கலன்ஜிட்டா கஷ்டம் “ என்று வெளியே அழைத்து சென்றவள் “ அது அப்பா ஒரு செயின் ஸ்மோக்கர் அதான் த்ரோட் கேன்சர் வந்துருச்சி ஆபரேஷன் பண்ணிருக்கோம் திரப்பி நடந்துட்டு இருக்கு அதுனால வலியும் கொஞ்சம் இருக்கும் அதான் மாத்திரையில தூங்குறாங்க முழிச்சாலும் பேச இப்போ முடியாது வலில தான் இருப்பாங்க அதான் எழுப்பல தப்பா நினைக்காதீங்க “
என்று தயங்கி அந்த பெண் பேச, அவளை பார்த்து லேசாக சிரித்த மாணிக்கம் “ சரி ஆகிடும் தானே உங்க அப்பாவுக்கு “
“ ஆ… டாக்டர் சரி ஆகிடும்னு நம்பிக்கையா சொல்லியிருக்காங்க ஆனா பேசுறது தான் சிரமமாம் “ அதை கேட்டு, மாணிக்கம் “ ஒன்னும் ஆகாதும்மா ..” என்று வீட்டை சுற்றி பார்க்க, இந்த பெண்ணின் திருமணப் புகைப்படம் ஹாலில் மாற்றப்பட்டிருக்க அதை பார்த்தபடி “ உன் கல்யாணத்துல உங்க அப்பாவைத் தவிர வேறு யாரும் இல்லை எங்கே உங்க அம்மா, அப்புறம் உங்க பாட்டி தாத்தா? “ என்று ஒரு அழுத்தத்துடன் பேச, அதற்கு அந்த பெண் “ என் மேரேஜ் முன்னரே அம்மா இறந்துட்டாங்க “
“ உங்க பாட்டி தாத்தா?..” என்று அந்த பெண்ணை பார்க்க, முதலில் சொல்ல தயங்கியவள் பின்பு
“ அப்பா, எனக்கு ஏழு வயது இருக்கும்போதே தாத்தா? பாட்டிய வீட்டை விட்டு அனுப்பிட்டாங்க “ அதை கேட்டு, திகைத்த மாணிக்கம் “ என்ன? ஏன் அனுப்புனா அவங்கள“
“ அது அம்மா, அப்பாவை தாத்தா பாட்டி பிரிக்க பாத்தாங்களாம் அம்மா அவங்க இருந்தா இருக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க உடனே அப்பாவைும் வெளியே துரத்திடாங்க அவங்க எங்க இருக்காங்கன்னு கூட அப்பாவுக்கு தெரியாது அதுக்கு அப்புறம் எனக்கு பதினைந்து வயசு இருக்க, அம்மாவுக்கு மாரடைப்பு அவுங்களும் போய்டாங்க, அதுல இருந்து தான் அப்பா இப்படி சிகரெட்டுக்கு அடிமையாகிட்டார் “ என்று அந்த புகைப்படத்தை பார்த்தபடி தொடர்ந்தாள்
“ அப்பாவை பாட்டி தாத்தா எந்த சொந்த கூடவும் சேர விடல அதேபோலதான் அம்மாவும். அதனால அப்பா தனியாவே இருந்துட்டாங்க என் கணவருக்கும் அம்மா அப்பான்னு யாரும் இல்லை அதான் அப்பா மட்டும் இருக்காங்க அந்த டைம் தான் அப்பா ரொம்ப கஷ்டபட்டார் தனிச்சி சிந்திச்சி எல்லோருடனும் நம்ம ஒத்துப் போயிருக்கணும்மோன்னு “ என்று அந்த பெண்ணும் வருந்த அந்த பெண்ணை பார்த்து
“ உன் பேர் என்னம்மா “ என்று கேட்டதும் அவள் சிரித்தபடி “ லட்சுமி பிரியா “ என்று சொல்லவும் தொண்டை அடைக்க மாணிக்கம் நிற்க அவரைப் பார்த்த பிரியா “ அது அப்பாவுக்கு லட்சுமி சித்தின்னா ரொம்பப் பிடிக்கும் பாட்டிக்கு பயந்து தான் அவங்கள ஊருக்கு போகும் போது ஒன்னும் செய்ய முடியாம இருந்தாங்களாம் அப்புறம் அவுங்க கணம்னதும் அந்த ஓனர் கிட்ட கூட சண்டையெல்லாம் போட்டாங்களாம் பாட்டிக்கு தெரியாம ஆனா எதுவும் தெரியல்லை ன்னு எப்போவும் புலம்புவாங்க அவங்க நினைவா தான் எனக்கு இந்த பெயர் வச்சாங்களாம் “
என்று தயங்கி நிமிர்ந்து பார்க்க மாணிக்கம் கண்கள் கலங்க அந்த பெண்ணின் தலையில் கைவைத்து” நல்ல சந்தோஷமா இருக்கனும் “ என்று வாழ்த்தி விட்டு “உங்க அப்பாக்கு சரி ஆனதும் கால் பண்ண சொல்லு , நீயும் யாரும் இல்லன்னு தயங்கி நிக்காத ம்மா ஏதாவதுன்னா கால் பண்ணு உங்க மாமா நான் இருக்கேன் “ என்று காரில் ஏறி சென்றவரை கண்கள் கலங்க பார்த்து கொண்டு நின்றாள் ப்ரியா.
காரில் ஏறிய மாணிக்கம் கண்கள் மூடியபடி ஸீட்டில் தலை சாய்ந்தவர் “ எங்க அக்காவ அவனுக்கும் பிடிக்கும்னா கூடவே வச்சிருக்கணும் அவன் அப்படி இருந்துருந்தா அக்கா என் கூட இருந்திருப்பா “ என்று மனதில் நினைத்தவர் “ எங்க அக்காவ இப்படி ஆக்குன யாரும் நிம்மதியா இல்ல “ என்று சொல்லியவர் மூடியிருந்த விழியில் இருந்து கண்ணீர் வலிய அதை பார்த்த ஆர்யன் அவன் தோளை ஆதரவாக தட்டிக்கொடுத்தான். பின் அனைவரும் அன்று இரவே சென்னைக்கு கிளம்பிவிட்டனர். சென்னைக்கு வந்து ஜெய் அவன் லட்சுமியை தேடி தருவதாக சொல்லி சென்று விட்டான். ஜெய்யுடன் ஸ்டெல்லாவும் சென்றவள் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து மாணிக்கத்திடம் லட்சுமியின் புகைப்படத்தை கேட்டு வாங்கி சென்றாள்.
இப்படி லட்சுமி மயூரி இருந்த ப்ராத்தல் இடத்தை கண்டுபிடித்து ஒரு மாதத்தில் லட்சுமிக்கு என்ன நடந்தது என்பதை ஸ்டெல்லா கண்டுபிடித்து மாணிக்கத்திடமும் வந்து சொல்லி அனைவரையும் கல்கத்தாவுக்கு அழைத்து சென்றாள் . கல்கத்தா இவர்களை அன்போடு திருப்பி அனுப்புமா இல்லை தாங்க முடியா பாறத்தை கொடுத்து அனுப்புமா?