இரவு 52

ஒரு மனிதனுக்கு அளவில்லா காசு, அளவில்லா சுதந்திரம் இரண்டில் ஒன்று இருந்தாலே அது ஆபத்தில் தான் முடியும், இங்கு இரண்டுமே கிடைத்த ஜெய்யின் தந்தை ஆனந்த் எப்படி இருந்திருப்பார் . மது மாது சூது என்று அவரிடம் இல்லாத பழக்கம் இல்லை. அனைத்தையும் கற்று அதில் ஊறி போய் சுற்றினார் அவர் செய்யும் தவறு எதுவும் ஜெய்யின் தாத்தாவிற்கு தெரியாமல் பார்த்துக்கொண்டார். ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஹெலனோடு அவர் அப்பாவை பார்க்க வருபவர் ஒரு வாரம் தங்கிவிட்டு சென்று விடுவார் அப்போது ஜெய்யை பார்ப்பது தான் அவன் படிக்கும் பள்ளி பெயர் கூட தெரியாது. ஜெய்யின் தாத்தாவும் என்ன செய்வது என்று ஆனந்த்தை பார்ப்பதை விட்டுவிட்டு ஒருபுறம் பிஸ்னஸ் ஒரு புறம் பேரன் ஜெய்யை தாங்குவது என்று அவர் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருந்தார். ஆனந்தை மொத்தம் மறந்துதான் போனார்.

இங்கு ஹெலனும்  இப்படி தவறான பாதையில் செல்லும் ஆனந்த்தை தடுக்க முடியாத அவளின் கையாலாகாத தனத்தால் போதை மருந்தை நாடி சென்றுவிட்டால் ஹெலன். அது ஆனந்துக்கு தெரிந்தும் அவளை அவன் கண்டுகொள்வதில்லை தோன்றும்போது எல்லாம் ஒரு பெண் என்று இருந்தவருக்கு ஹெலன் கண்ணுக்கே தெரியவில்லை. அவளும் ஆனந்தை அவள் புறம் திருப்ப என்னெல்லாமோ செய்தவள் சோர்ந்து தான் போனால் ஹெலனுக்கு தாய் தந்தை என்று யாரும் இல்லை பிரான்சுக்கு சென்றாள் அங்கு இவளுக்காக என்று எதுவும் இல்லை அது நினைத்து எங்கேயும் செல்ல முடியாத நிலையில் ஆனந்துடனே இருந்தவள் அவனை போலவே மாறவும் தொடங்கி விட்டாள்.

இப்படி பெற்றோர் இருவரும் தவறான பாதை செல்வது எதுவும் தெரியாமல் ஜெய் அவன் தாத்தாவுடன் மிக சந்தோஷமாகவே இருந்தான். இப்படி இருந்த அவன் பெற்றோர் நிலை அவன் தாத்தாவுக்கு தெரியபோகும் நாலும் வந்தது.   ஜெய் பன்னிரண்டு வயது இருக்கும்  போது பள்ளி விடுமுறை விட்டதில் தாத்தாவுடன் வீட்டில் ஜாலியாக விளையாடிக்கொண்டு இருந்தவனுக்கு திடீரென்று உடம்பு சரியில்லாமல் போக அந்நேரம் பார்த்து அவர் தாத்தாவுக்கு வெளியூருக்கு வேலை விஷயமாக போக வேண்டிய சூழ்நிலை. ஜெய்யை தனியாக விட்டு போக முடியாத நிலை உடனே ஆனந்துக்கு அழைத்து ஒரு மூன்று நாள் ஜெய்யை பார்த்துக்கொள்ள சொல்லி அவனிடம் விட்டு சென்றார் அவர் செய்த தவறும் அது தான்.

முதலில் ஆனந்தும் மூன்று நாள் தானே என்று ஜெய்யை ஹெலனுடன் சேர்ந்து பார்த்து கொள்வது போல நன்றாக நடித்தான். “ எங்க தாத்தா, அவர் பாட்டுக்கு எங்க அப்பா கூட என்ன விட்டு போய்ட்டாரு  எங்க அப்பாவ அப்பான்னு நான் பத்து வட்டிக்கு மேல கூப்பிட்டிருக்க மாட்டான் அப்படி பட்ட அப்பா கூட மூனு நாள் சரி வேர வழி இல்லன்னு போன. அங்க வீட்டுல சமைக்க கூட ஆள் இருக்கல என்ன வேணும்னு அம்மா கிட்ட சொன்னா அவுங்க ஆர்டர் பண்ணுவாங்க , நான் டிவி பாத்துட்டே  இருப்பன் இப்படி தான் த்ரி டேஸ் போச்சி. அப்போ தான் தாத்தா கிட்ட இருந்து போன் வந்துச்சி இன்னும் மூனு நாள் இங்க வர முடியாதுன்னு. அத நான் அப்பா கிட்ப சொல்ல, அவர் எதுவும் பேசாம போய்ட்டார் சரி அம்மா கிட்ட பேசலாம்னு பாத்தா அம்மாக்கு கைகளாம் நடுங்க ஆரம்பிக்க வேக வேகமா ஏதோ ஒன்னை சாப்பிட்டாங்கா, அப்போ அது என்னன்னு தெரியாது எனக்கு அன இப்போ தெரியும். அவங்க எடுத்துக்கிட்டது போதைப்பொருள் அத சாப்பிட்ட என் அம்மா அப்படியே ஹாலில்ல படுத்துட்டாங்க ஏதேதோ பேசி புலம்பிட்டே இருந்தாங்க நானும் சாப்பாடு ஆர்டர் செஞ்சிட்டு டிவியில கேம் விளையாடிட்டு இருந்தேன். நைட் ரொம்ப டைம் ஆகியும் அப்பா வரல்லை தனியா படுக்க பயம். அம்மா ஹாலில்ல படுத்திட்டு இருந்தாங்க அம்மாவை எழுப்பி பார்த்தேன் விழிக்கவே இல்லை நானும் அவுங்க பக்கத்திலேயே படுத்து தூங்கிவிட்டேன் அடுத்த நாளும் அம்மா ஒரு மாதிரிதான் இருந்தார்கள் ஃபுட் மட்டும் ஆர்டர் பண்ணி கொடுக்குறவங்க அத சாப்பிட்டு திரும்பவும் ஹோபால ட்ரக் எடுத்துட்டு படுத்துடுவாங்க நானும் அவங்கள கண்டுக்காம டிவி பார்த்துட்டு இருந்தேன். அப்போ அப்பா சத்தம் கேட்டு திரும்பி பார்த்தேன் அப்பா ரெண்டு பெண்ணுடன் தள்ளாடிட்டு வந்தார். அந்த பெண்களும் தள்ளாடிட்டு தான் வந்தாங்க உள்ள வந்தவுங்க என்ன கண்டுக்காம அவரது ரூம்க்கு அந்த பெண்களோட  போய்டார் எனக்கு ஒன்னும் புரியல்லை இங்க என்ன தான் நடக்குதுன்னு “  என்று மயூரியின் கையை பிடித்தவன் “ என் அப்பன் அப்படி பட்டவன்னு எங்க தாத்தாவுக்கு தெரிந்திருந்தா அன்னைக்கு என்ன அங்க விட்டுஇருக்க மாட்டார் மயூ, அன என்ன பண்ண . அன்னைக்கு மதியம் அம்மா முழிக்கல எனக்கு தெரிஞ்ச நம்பருக்கு கால்  பண்ணி ஆர்டர் பண்ணலாம்னு பாத்தா போன் போல எனக்கு வேர பயங்கர பசி. சோ கிடைச்ச ஆப்பிளை எடுத்துட்டு டிவி பார்த்துட்டு அப்பாவ பத்தி தாத்தா கிட்ட சொல்லணும் னு  யோசிச்சிட்டு இருக்கும்போது திடீர்ன்னு பின்னாடி இருந்து அந்த ஆள் கூட வந்தவ “ என்று கண்களை மூடி மயூரி கையை இறுக்க பிடித்து கொண்டு “ என்னை எங்க அம்மா மாதிரி ரொம்ப அழகா இருக்கன்னு சொல்லி…ஆ……” என்று கத்திய ஜெய்யை பார்த்து மயூரிக்கு கண் கலங்கியது அவனுக்கு அங்கு என்ன நடந்திருக்கும் என்று புரிய தான் செய்தது, ஜெய் “ அந்த பெண்ணு ச்சீ நான் அப்போ சின்ன பையன் மயூ எனக்கு என்ன தெரியும் சொல்லு .அப்பா….அம்மா…ன்னு எவ்வளவு கத்துன தெரியுமா? வலிக்குது விடு, என்ன விடு,ன்னு…” என்று அந்த பெண்ணை அசிங்கமான வார்த்தை கொண்டு திட்டிய  ஜெய் “ என்னால முடியாம அங்கயே மயங்கிட்டேன் அப்போ கூட அந்த…”என்று திட்டியவன்  “ அவ விடல போல நெஸ்ட் டே எங்க தாத்தா வந்தப்போ அங்க அந்த பொண்ணுங்க இல்ல நான் ஒரு பக்கம் ட்ரெஸ் இல்லாம உடம்பு முழுக்க காயத்தோட மயங்கி இருக்க எங்க அம்மா பொதையில அத பாத்து பயந்து எங்க தாத்தா என்ன வந்து எழுப்ப கண்ணு முழிச்ச நான் தாத்தா கிட்ட நடந்தத முழுசா சொல்லிட்டன் அதுல தான் எங்க தாத்தா எங்க அப்பா அம்மா ரெண்டு பேரையும் சுட்டு கொண்ணுட்டாரு.” என்று மயூரி முகம் பார்க்க அவள் முகத்தில் அதிர்ச்சி அதை பார்த்த ஜெய் “ அமா மயூ அவர் கொண்ணது தெரிய கூடாதுன்னு தான் ஆக்ஸிடன்ட் மாதிரி செட் பண்ணிட்டாரு. அப்பறம் என்னை அவர் கூடவே வச்சிகிட்டார் என் கிட்ட இத பத்தி யாருக்கு தெரிய கூடாதுன்னு சத்தியம் வாங்கிடாரு நானும் இது வரை யார் கிட்டயும் சொன்னது இல்ல நீ தான் பஸ்ட் “ என்று சிரிக்கும் ஜெய்யை கண்ணீல் இருந்து நீர் வடிய பார்த்தாள் மயூரி.

ஜெய் மயூரி அழுவதை பார்த்துவிட்டு “ அச்சோ மயூ நீ ஏன் அழுவுற அங்க தாத்தா அந்த பொம்பளையையும் கொண்ணுட்டாரு டோண்ட் வரி “ என்று அவள் கண்ணீரை துடைத்தவன் இப்போ புரியுதா மயூ  “ நீயும் நானும் ஒன்னுன்னு ஏன் சொன்னன்னு  “

  “ ஜெய் இங்க பாருடா நம்ம ரெண்டு பேரும் ஒன்னுன்னே இருக்கட்டும் அன அதுக்கு ஏன் ஜெய் என்ன கடத்திட்டு வந்த எனக்கு ஒரு வாழ்க்கை நான் அமைச்சுகிட்ட மாதிரி உனக்கும் நீ அமைச்சு சந்தோஷமா இருக்கலாமேடா “

“ நான் அதை முயற்சி பண்ணல்லைன்னு நினைக்கிறியா மயூ அங்க பாரு அங்க எத்தனை பெண்களை என் கையால கொன்று புதைத்திருக்கிறேன்னு தெரியுமா உனக்கு “  என்று அங்கு மூடி இருந்த குழியை காட்டியவன் கோபமாக  “ எப்படி மயூ என்னால மட்டும் எல்லார் மாதிரி நார்மல வாழ முடியாத போது என்ன மாதிரி இருக்க உன்னால முடியுது “ என்று தறையில் கையை வைத்து அடித்து கொண்டு பேச அதில் பயந்த மயூரி அவனை விட்டு நகர்ந்து சென்று “ என்ன சொல்ற ஜெய் கொலை பண்ணியா “  மயூரியின் பயந்த முகத்தை பார்த்த ஜெய்

 “ அச்சோ மயூ பயப்படாத அது வந்து எனக்கு சின்ன வயசுல நடந்த விஷயத்தில்ல இருந்து பெண்ணுங்கள பார்த்தாலே ஆகாது இது வரையும் நான் நல்ல பழகுன பொண்ணுண்ணா அது நீ மட்டும் தான் மயூ அப்பவும் நமக்கு இது செட் ஆகாதுன்னு மத்த பெண்களை விட்டு தள்ளியே தான் இருந்தேன் ….அப்போ ஒரு மூனு வருசம் முன்னாடி என் ஃபிரண்டு பார்ட்டிக்கு போனேன் அவன் அந்த பார்ட்டிக்கு  கால் கேள்ஸை கூப்பிட்டு இருந்தான்.  அப்பவும் நான் வேண்டாம்னு தான் சொன்னேன்  அவுங்க தான் கேட்கல எனக்கும் ஒரு ஆர்வம் அதான் கெஸ்ட் அவுஸ் கூட்டி போனேன்.  அங்க அந்த பொண்ணு என்ன தொட்டபோது எனக்கு என்ன அந்த போண்ணு தொட்ட நினைவு வந்துருச்சு மயூ அப்போ ஏதோ குழப்பத்தில்ல  தான் அந்த பொண்ணு கழுத்தை பிடிச்சி நெரிச்சி கொண்ணுட்டேன் . உண்மையா அன்னைக்கு என்ன அறியாம நடந்தது மயூ அது கொண்ண அப்புறம் தான் நான் என்ன செய்தேன் என்று புரிஞ்சி பயந்துட்டன்.  ஆனா அந்த கொலை பண்ணினதுக்கு அப்புறம் எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு மயூ எதோ என்ன ரேப் பண்ண பொண்ணையே நான் கொன்ன மாதிரி அப்போ தான் இத ஏன் நம்ம கண்டினியூ பண்ண கூடாதுன்னு இப்போ வரை பண்ணிட்டு இருக்கேன் “ என்று சொல்லி முடிக்க மயூரி

“  உன்ன ரேப் பண்ணவ வேற எவளோடா ஜெய் அவள தான் உங்க தாத்தா கொன்னுடாங்களே அதுக்காகவா இத்தனை பொண்ணுங்கள கொன்ன அவுங்கலாம் என்ன பாவம்டா உனக்கு பண்ணாங்க “ என்று அவள் கத்த  “ ஏன் பண்ணல அவுங்க என்ன நல்ல பொண்ணுங்கள என்ன தப்பான தோழில் பண்றவங்க தான அவுங்களுக்கு லாம் இது தேவை தான் “

“அவுங்க பண்றது தப்பான தொழில் தான் ஜெய். ஆனா, அவுங்கள யாரும் உன்ன வந்து கெடுக்கல  ஏன் அப்படி ஒரு தப்பான வேலை பாத்தவங்களால தான் இப்போ உன் முன்னாடி நான் உயிரோட இருக்கேன் ஜெய் “ என்று மயூரி கத்த “  இப்போ அவுங்கள பத்தி எதுக்கு மயூ பேசி டென்ஷன் ஆகுற லீவ் இட் “

“ எத விட சொல்ற ஜெய் இத்தனை பேரை கொலை பண்ணிருக்கியே அதையா “

“ப்ச் அதை பத்தி பேசாத மயூ…. “

“சரி அதை பத்தி பேசல , அனா  என்ன விட்டுடு ஜெய். நீ சொன்ன மாதிரி நீயும் நானும் ஒண்ணுல்ல நான் உன்ன மாதிரி கொலை பண்ணிட்டு ஒன்னும் சுத்தல எனக்குன்னு என் ஃபேமிலி இருக்காங்க ஜெய் “

“ ஃபேமிலி… ஃபேமிலி.. ஃபேமிலி.. எனக்கு கிடைக்காத ஃபேமிலி உனக்கு மட்டும் எப்படி கிடைச்சுச்சு எல்லாத்துக்கும் அந்த ஸ்டெல்லா அவள கொல்லும் மொதல்ல,  அவ மட்டும் முந்திரிக்கொட்டைத்தனமா லட்சுமி இருந்த இடத்தை கண்டுபிடிக்காம இருந்து இருந்தா இன்னைக்கு அந்த ஃபேமிலி உனக்கு இருந்திருக்குமா. ஸ்டெல்லா…… உன்ன சும்மா விடமாட்டேன்டி அன்னைக்கே உன்ன கொன்னுர்க்கானும் “ என்று ராட்சஸனாக பேசினான் ஜெய்.