ஸ்டெல்லா ஆபிஸில் வேலையை பார்த்து கொண்டே அடிக்கடி போனை எடுப்பதும் அதில் ஏதாவது மேசேஜ் வந்திருக்கிறதா என்று பார்ப்பதுமாக இருந்தாள். வாய் ஜெய்யை பொரிந்து தள்ளிக்கொண்டு இருந்தது அன்று அவன் இவளிடம் பேசியது வேறு நினைவுவர அதை எண்ணிய படி அவனை வறுத்து கொண்டு இருந்தாள். அன்று தீர்க்கமான விழியுடன் ஸ்டெல்லாவை பார்த்தவன் “ என்னும் டூ டேஸ்ல என்ன பத்தி நியூஸ் வரும், அந்த நியூஸ்ஸ மயூ கிட்ட போய் சொல்லணும் “ அதை கேட்ட ஸ்டெல்லா அவனை என்ன நியூஸ் என்பது போல பார்க்க அதை புரிந்தும் புரியாதது போல “ கண்டிப்பா அவ கிட்ட சொல்லு ஸ்டெல்ல “ என்று அழுத்தி கூறியவனை பார்த்த ஸ்டெல்லா “எனக்கு உங்க கிட்ட பர்சனலா ஒன்னு சொல்லனும் “ என்று சொல்லியவளை என்ன என்பது போல அவன் பார்க்க ஸ்டெல்லா “ உன்னை ஃபிரண்டு ன்னு நம்பின பாவத்துக்காகவா அந்த பொண்ண இப்படி பண்ணிருக்கீங்க சார் , நான் கூட உங்க ஃபிரண்ட்ஷிப்பை பார்த்து ஆசை பட்டு இருக்கேன் அப்படி இருந்த நீங்க எப்படி, உங்களுக்கே அசிங்கமாக இல்லையா , ஆமா அதுலாம் எப்படி இருக்கும் உங்கள மாதிரி ஆளுங்க கிட்ட இருந்து வேற என்ன எதிர்பார்க்க முடியும் உங்கள போய் நட்பா பார்த்த பாவத்துக்கு தான் அந்த பொண்ணு அப்படி படுத்த படுக்கையாக இருக்கு “என்று பேசியவள் எழுந்து சென்று விட்டாள் அதை நினைத்த ஸ்டெல்லா “ நாலு கெட்ட வார்த்தை கூட நமக்குத் திட்ட வரல்லையே, ச்சா “ என்று முனங்கிய படியே இருந்தாள்.
அப்போது திடீரென்று அவள் போன் வைபரேட் ஆக வேகமாக எடுத்து பார்த்தவள் முகம் அதிர்ச்சிக்கு மாற, உடனே எழுந்து மயூரியை பார்க்க மருத்துவமனைக்கு சென்றாள். அங்கே ஆர்யனுக்கும் அந்த செய்தி தெரியவர, அதை பார்த்தவன், அதுவும் எனக்கு ஒரு செய்தி மட்டுமே என்பது போல கடந்து விட்டான். மருத்துவமனையில் மயூரியிடம் அமர்ந்து அன்று நடந்த அனைத்தையும் பற்றி பேசுபவன், ஜெய்யை பற்றி மட்டும் பேச மாட்டான் ஏன் அவன் பெயரை கூட சொல்ல மாட்டான் மாணிக்கத்தையும் அவனை பற்றி பேச விடமாட்டான்.. அவனால் தான் மயூரிக்கு இந்த நிலையே. அதனாலேயே அவன் பெயரை கூட சொல்ல விரும்பவில்லை ஆர்யன்.
வேகமாக மயூரி இருந்த அறைக்கு வந்த ஸ்டெல்லா, அங்கு ஆர்யன் மயூரி கையை பிடித்தபடி, எதோ பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து, தயங்கி நின்றவள், லேசாக அந்த அறையின் கதவை தட்ட, ஆர்யன் தலை திருப்பி யார் என்று பார்த்தவன் அங்கு ஸ்டெல்லா, நின்றுகொண்டிருப்பதை பார்த்துவிட்டு “ வாங்க ஸ்டெல்லா, ஏன் அங்கேயே நிக்கிறீர்கள் “ என்று ஆர்யன் ஸ்டெல்லாவை உள்ளே அழைக்க, உள்ளே வந்த ஸ்டெல்லா, மயூரியை பார்த்து, விட்டு அவள் கைகளை பிடித்தபடி, “ மேம் எப்படி இருக்காங்க ஆர்யன்“ என்று மயூரி முகம் பார்த்தபடி கேட்க, ஆர்யன் “ இம்ப்ரூவ்மென்ட் எதுவும் இல்லை ஸ்டெல்லா, “ என்று வருத்தத்துடன் செல்ல, “ பேபி ஆர்யன் “
“பேபி நல்லா இருக்காங்க ஸ்டெல்லா, அம்மா முழிக்க மாட்டிக்கிறா “ என்று மயூரியை பார்க்க
“ டோன்ட் வரி ஆர்யன் சீக்கிரமாவே முழிச்சிருவாங்க மேம் “ என்று ஆறுதலாக பேசியவள் மயூரி முகம் பார்த்தபடி “ மேம் உங்களுக்காக உங்க ஃபேமலி ரொம்ப ஃபீல் பண்ணி வெயிட் பண்றாங்க கொஞ்சம் அவுங்களுக்காக ஆவது கண்ண முழிச்சி பாருங்க மேம் “ என்று அவள் கையை பிடித்த படி பேசியவள் “ மேம் நீங்க பயந்து கண்ணு தொறக்காம இருந்திங்கனா இனிமே நீங்க யார பாத்தும் பயப்பட வேண்டாம் மேம், ஜெய் சார் இன்னைக்கு மார்னிங் தான் சுசைட் பண்ணிட்டு இறந்து போனாங்க மேம் “ என்று ஸ்டெல்லா சொல்லி முடிக்கும் முன் ஆர்யன் “ ஸ்டெல்லா….” என்று கத்தியிருந்தான். அவன் சத்தத்தில் திரும்பி பார்த்த ஸ்டெல்லா “ என்ன ஆர்யன் ஏன் கத்துறீங்க “ என்று கேட்க ஆர்யன் கோபத்தை அடக்கிய படி “ அவன் பேர கூட மயூரி கேட்க கூடாதுன்னு நினைக்கிறேன் ஸ்டெல்லா அவன பத்தி இனிமே மயூரி கிட்ட பேசாதீங்க “ என்று ஆர்யன் பேசிக்கொண்டு இருக்கும் போது எதோ தோன்ற ஆர்யன் திரும்பி பார்க்க மயூரி அவள் வலது கையை மேலே தூக்கி ஆர்யன் பார்த்து எதோ சொல்ல போக அவளை பார்த்த ஆர்யன் “ மயிலு… என்று அழைத்தபடி அவள் கைகளை பிடித்து கொண்டு “ மயிலு…மயிலு…முழிச்சிட்டியா…மயிலு..” என்று உதடுகள் சிரிக்க அதற்கு மாறாக கண்கள் கலங்கி கண்ணீர் வடிய என்று ஆர்யன் தடுமாறிக் கொண்டு இருக்க அதற்குள் ஸ்டெல்லா அருகில் இருந்து மருத்துவரை அழைத்து வந்துவிட்டாள். அவர் மயூரியை சோதித்து பார்த்துவிட்டு
“ ரிலாக்ஸ் மயூரி நீங்க இப்போ தான் கோமாவில இருந்து முழிச்சிருக்கீங்க ரொம்ப உணர்ச்சிவசம் படாதிங்க அது உங்களுக்கு மட்டும் இல்லாம உங்க பேபிக்கும் டேஞ்சர் ஆகிடும் “ என்று சொன்ன பிறகே மயூரி அவள் கைகளை கீழே போட்டுவிட்டு அமைதியாக கண்களை மூடியதும் அவள் கண்ணில் இருந்து நீர் கசிய அவள் காதுகளில் “ நான் உயிரோட இருக்க வரை நீ என் கூடத்தான் இருக்கணும் மயூ..” என்று ஜெய் அன்று இவளை கடத்தி வைத்துக்கொண்டு கத்தியது காதில் கேட்க, மயூரியின் நினைவுகள் அன்று அந்த பங்களாவில் கொண்டு சென்று நின்றது.
அன்று அந்த மாஸ்க்கைக் கழற்றித் தூக்கிப் போட்டபடி அமர்ந்திருந்த ஜெய்யைப் பார்த்த மயூரி, அவள் கண்ணையே நம்ப முடியாமல் கண்கள் கலங்கிய நிலையில் அவனையே பார்த்தாள். அவள் கண்களைக் கசக்கியபடி ஜெய் தலையில் மாட்டியிருந்த விக்கைப் பார்க்க, அவள் பார்வையை உணர்ந்த ஜெய் அதைக் கழற்றித் தூக்கிப் போட்டான். அவன் தலையிலிருந்து ஜெய்யின் கண்ணைப் பார்த்துவிட்டுப் புருவம் சுருக்க, மயூரியைப் புரிந்தவனாக அந்த லென்ஸையும் கழற்றிவிட்டு அவன் நீல விழிகள் சிரிக்க அவளையே பார்க்க. மயூரிக்கு இப்பவும் அவளை கடத்தியது ஜெய் என்று நம்ப முடியாமல் போக “ ஒரு வேல ப்ரான்க்கா இருக்குமோ “ என்று யோசித்தவள் “ எருமை ஜெய் ப்ரான்க் பண்ண நான் தான் கடச்சனாடா எவ்வளோ பயந்துட்டன் தெரியுமா “ என்று நெஞ்சில் கை வைத்தபடி ஜெய்யை பார்க்க அவன் கண்ணில் நக்கல் தெரிக்க மயூரியை பார்த்து சிரித்தவனின் கண்கள் “ இதை பாத்த ப்ரேன்க் மாதிரியா இருக்கு “ என்று சொல்வது போல இருந்தது.
அதில் பயம் அதிகமாக மயூரி “ ஜெய்…..” என்று நடுக்கத்துடன் அழைக்க ஜெய் அவளை பார்த்தபடி தான் அமர்ந்து இருந்தானே தவிர ஒரு வார்த்தை பேசவில்லை. அதில் கோபமான மயூரி “ வாய திறந்து பேசுடா என்ன எதுக்குடா கடத்தின “ என்று பொறுமையின்றி கத்த அதற்கு வாய் விட்டு அந்த அறையே எதிரொலிக்க சிரித்தவன் “ என் மயூ என் கூடவே இருக்கனும் தான் கடத்துன , நானும் மேரேஜ் முடிச்சி இரண்டு நாளிலேயே ஓடி வந்துடுவ ன்னு பார்த்தா, நீ என் கிட்ட வரம சந்தோஷமா அவன் கூட இருக்க, விடுவேனா அதான் தூக்கிட்டேன் இனி நீ என் மயூ என் கூடவே இருப்பாள….” என்று ஜெய் பேசியதை கேட்டு திகைத்த மயூரி “ என்ன பேசுற ஜெய் நான் உன்கிட்ட வந்துருவன்னு நினைச்சியா. என்ன சொல்ற எனக்கு புரியல்லை நீ என்ன லவ் பண்ணியா என்ன “ என்று ஒரு பயத்துடனே கேட்க அதைக்கேட்ட ஜெய் “ என்ன மயூ நீயும் மத்தவுங்க மாதிரி பேசுற லவ்வா உன்னையா உனக்கு எனக்கு இருக்க ரிலேஸன லவ்ன்னு சொல்லாத மயூ இது எல்லாத்துக்கும் மேல நீயும் நானும் ஒன்னு மயூ. உன்னால ஒரு குடும்பத்துல வாழ முடியாது மயூ என்ன மாதிரி, எப்படி வாழ முடியும் உன்னால, எப்படி கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்க முடியுது உன்னால, என்னால முடியாதபோது உன்னால மட்டும் எப்படி முடியும் மயூ நீயும் என்ன மாதிரி தன மயூ, அன உன்னால எப்படி கல்யாணம் பண்ணி இருக்க முடியும் இல்ல முடியாது உன்னால சந்தோஷமா இருக்க முடியாது நீ என் கூடதான் இருக்கனும் மயூ நீ என் கூட மட்டும் தான் இருக்கனும்…” என்று புலம்பிய படி அவள் அருகே வந்து அவள் கன்னத்தை வலிக்க பற்றி “ புரியுதா …” என்று கத்த மயூரி உடல் பயத்தில் தூக்கிப்போட அவனை பார்த்த படி நின்றாள்.
“ நீயும் நானும் ஒன்னுன்னு எத வச்சி சொல்ற ஜெய் “ என்று அவன் கண்களை பார்த்தபடி பேச “ ஆ… அத கேக்கிறியா மயூ உன் கிட்ட என்ன பத்தி இது வரை சொன்னது இல்லல அதான் உனக்கு தெரியல என்ன பத்தி சொன்ன பிறகு உனக்கே புரியும் பாரு நீயும் நானும் ஒன்னுன்னு “ என்று கூறியபடி அவன் சேரில் மீண்டும் அமர்ந்தவன் “ உக்காரு மயூ கால் வலிக்க போது உக்காந்து கேளு “ என்று கை அசைத்து உட்கார சோல்ல மயூரி வேணும் என்று நிற்க உடனே எழுந்து வந்த ஜெய் அவள் கையை பிடித்து அமர வைத்தவன் அவளுடனே தரையில் அமர்ந்து பேச தொடங்கினான்.
“ எங்க தாத்தா இருக்கிறார்ல அவருக்கு அவர் பையன், அதவது எங்க அப்பன்ன ரொம்ப பிடிக்கும் அவர் என்ன வேணும்னு கேட்டாலும் வாங்கி தந்துவிடுவார், அது நல்லதா கெட்டதா எதுவும் பார்க்க மாட்டாரு அப்படி வளர்ந்த எங்க அப்பா படிக்கிறேன்னு போய் எங்க அம்மா ஹெலன்ன கூட்டி வந்துட்டாரு சும்மா இல்ல கர்ப்பமா, மேரேஜ்க்கு முன்னாடியே குடும்பம் நடத்தி என்ன வயித்துல வச்சிட்டு தான் இந்தியா ரிட்டன் ஆனார் எங்க டாடி, எங்க தாத்தாவும் நம்ம பையனாச்சேன்னு அந்த பெண்ணையும் சேர்த்து ஏத்துகிட்டாரு. இது வர எல்லாம் நல்லா தான் போச்சி நான் பிறந்து எல்லா ஒன்னா தாத்தா கூட இருக்கவரை “ என்று மயூரியை பார்த்து தலையை இரு பக்கமும் சலிப்பாக அசைத்தவன்.
“ எங்க டாடி அவர் டாடி கிட்ட போய். ‘ டாடி, டாடி, ஐ வான்ட் பிரைவசி’ ன்னு தனியா போய்ட்டார். அங்க போனவன் என்ன கான்வென்ட்ல சேர்க்க எங்க தாத்தா பேரன் பாசத்துல, ‘ நான் அவன பாத்துக்குறேன் ‘ ன்னு என்ன அவர் கிட்டயே வச்சிகிட்டார். அதுக்கு அப்புறம் என்ன எங்க டாடி கிளிக்கு இறக்கை முளச்சிடுச்சின்னு ஒரேயடியா பறந்துட்டார் “ என்று கைகளை பறவை போல் ஆட்டி வானை பார்க்க மயூரியும் அவனுடன் சேர்ந்து மேலே பார்க்க அதை பார்த்து சிரித்த ஜெய் “ அங்க எதுவும் இல்ல மயூ…” என்று அவள் முகம் பார்த்தவனின் முகம் திடீரென்று சிரிப்பை தொளைத்து இறுக்கமாக மாற “ மனிசனுக்கு சுதந்திரம் கொடுத்தா அவன் ரெண்டு விஷயம் செய்வான் மயூ ஒன்னு சுதந்திரமா ஏதாவது சென்ஞி சாதிப்பான் அது ரேர் சில பேர் தான் அந்த பாதைய சூஸ் பண்ணுவாங்க. ஆனா இது இல்லாம எல்லோரும் சூஸ் பண்ற பாத், தப்பான பாதைய நோக்கி போறது அது தப்புன்னு தெரிந்தும் போறது அத தான் என் அப்பனும் பண்ணா “ . மனிதன் மனிதனாக வாழ சுய ஒழுக்கம் மிக முக்கியம் அது இல்லாத மனிதன் மனிதனாக இருப்பது இல்லை மனிதன் உருவில் வாழும் மிருகமாகவே வாழ்வான் அப்படி தான் ஜெய்யின் தந்தையும் வாழ்ந்தார்.