இரவு 57

சோகமான முகத்துடன் ரயில்வே ஸ்டேஷன் வந்து இறங்கிய லட்சுமியின் கண்கள் கீழே விழுந்துவிடும் அளவு பெரிதாகி கொண்டது, அங்கே அவர்கள் முன் தினகரன் நின்று கொண்டிருந்தான். அவனை பார்த்ததும் ஓடி சென்று அவன் கையை பிடித்த லட்சுமியின் கண் கலங்க “ உன்னை பார்க்காமலேயே போய்டுவேனோன்னு பயந்துட்டேன் தினா “ என்று சொல்ல அதை கேட்டு அவள் கண்களை துடைத்த தினா, “ அதான் வந்துட்டன்ல  தேவி அழத….  என் அழகு தேவில “ என்று கொஞ்ச, இவர்கள் இருவரையும் அந்த பாட்டி குறுகுறுவென்று பார்த்தபடி நிற்க , லட்சுமி “ இவர் என் மாமா பையன்தான்  “ என்று சொல்லவும், அவர் “ நான் அங்க உட்கார்ந்திருக்கிறேன் இன்னும் அரை மணி நேரம் ஆகும் ரயில் வர அதுக்குள்ள பேசிட்டு வாங்க “என்று சொல்லி விட்டு உள்ளே ஒரிடத்தில் அமர்ந்து கொண்டார்.

அவர் சென்றதும் லட்சுமி கையை பிடித்து கொண்ட தினகரன் அவளை அழைத்து கொண்டு அருகில் இருந்த ஹோட்டல் சென்று அவளுக்கு பிடித்த அனைத்தையும் வாங்கிக் கொடுத்துவிட்டான். பின் மீண்டும் ரயில்வே ஸ்டேஷன் கூட்டி வந்தவன் காலியாக இருந்த ஒரு பகுதியில் பெஞ்ச்சில் லட்சுமியை அமர வைத்தவன் அவள் அருகே அமர்ந்து கொண்டு ஒரு சிறிய பட்டன் போனை நீட்டினான். அப்போதுதான் பட்டன் போன் புதிதாக அறிமுகம் படுத்தியிருந்த சமயம் அதனால் அதன் விலை அதிகம் கூட அதை பார்த்த லட்சுமி “ போன்னா… யாரோடது தினா “

 “யாரோடதா… உனக்காக தான் நான் வாங்கி வந்தேன் தேவி “ என்று சிரிக்க

“ என்னது எனக்கா… இது விலை ரொம்ப அதிகம் தானே எப்படி வாங்கின தினா “என்று கண்கள் விரித்து கேட்க அவள் செய்கையை பார்த்த தினகரனுக்கு சிறு வயது தேவி நினைவு வர அவனை அறியாமல் அவள் கன்னத்தைக் கிள்ளி, “ என் அழகு தேவி….”என்று கொஞ்ச, லட்சுமி தலை வேகமாக குனிந்து கொண்டது. லட்சுமி தலை குனிந்த பிறகே அவன் செய்த செயல் புரிய தடுமாற்றத்துடன் தினகரன் “ அது தேவி…. “ என்று தயங்க அவன் தயக்கத்தில் அவன் தோள் சாய்ந்த லட்சுமி “ தப்பில்ல தினா….” என்று மிக மெல்லிய குறளில் பேசினாள்.

சிறிது நேரத்திற்கு இருவருக்கும் அவர்கள் சுற்றியிருந்த அனைவரும் மறந்துபோக அமர்ந்து இருந்தனர். அப்போது ரயிலில் ஹாரன் சத்தம் கேட்டு நினைவுக்கு வந்த தினகரன் அந்த போனை ஆன் செய்து காட்டி” இதில்ல ரெண்டு நம்பர் சேவ் பண்ணி  வச்சிருக்கன் தேவி. ஏதவதுனா  தயங்காம கூப்பிடு அது என் கூடப் படிக்கிற பெண்ணுங்க நம்பர் தான். எத்தனை மணிணாலும் பறவாள தேவி மறக்காம கூப்பிடு அங்க போனதும். நான் உன் கால்காக வெயிட் பண்ணுவேன்  தேவி” என்று சிறிது இடைவெளி விட்டவன் அவள் தலை வருடி , “ பத்திரமா இரு தேவி. என்னை மறக்காத நான் உனக்காக இங்க வெயிட் பண்ணிட்டு இருப்பேன் “ என்று சொன்ன தினகரன் என்னை நினைத்தானோ தெரியவில்லை, வேகமாக அவனது சட்டை பட்டனை கழற்றி அவன் அணிந்திருந்த சேயினை கழற்றி தேவியின் கழுத்தில் அணிவித்தான்.

அந்த சேயினை பார்த்த தேவி முதலில் குழம்பி, பின்னர் அந்த வளையத்தை பார்த்ததும் நினைவு வந்தவளாக, “ தினா…” என்று அவனை இறுக அணைத்துக் கொண்டாள். தினக்கரனும் அவளை அணைத்தபடி “ உன்னை பார்க்க முடியாத நாள் எல்லாம் எனக்கு துணையா என்ன தைரியமா உயிர்ப்புடன் வச்சிருந்தது இதுதான் தேவி. இப்போ இதை என் நினைவா உனக்குத் தறேன் பத்திரமா இருக்கணும், தேவி. “ என்று அவளை விட்டு விலகியவன், அவள் கன்னம் கிள்ளி “ என் அழகுத் தேவி. “ என்று கொஞ்ச, லட்சுமி அழுதபடி அவள் கன்னத்தை காட்டி, “ இப்போ கொடுத்துக்கொ தினா “ என்று சொல்ல, லட்சுமி சொல்ல வருவது புரியாமல் பேந்த பேந்த தினகரன் முழிக்க அவனை பார்த்து சிரித்த லட்சுமி “ எங்கம்மா சொன்னாங்க,  சின்ன வயசுல எனக்கு நீ முத்தம் கொடுக்க பர்மிஷன் கேட்டு அது கொடுக்க முடியாம பாவமா முகத்தை வச்சிட்டு நீ போனதை “ என்று சிரிக்க அதை கேட்டு வெட்கப்பட்ட தினகரன் “ அது வந்து, தேவி…” என்று இழுக்க லட்சுமி “ டைம் ஆச்சி தினா ரயில் வரப்போது “ என்று அவள் கன்னம் காட்டி அவசரப்படுத்த தினகரன் அப்போது தான் இருக்கும் இடம் உணர்ந்து சுற்றி பார்த்தான்.

 அங்கு அவ்வளவாக யாரும் இல்லை முன்புறம் ஒரு ரயில் காலியாக இருக்க யாரும் பார்க்க வாய்ப்பு இல்லை தான் இருந்தாலும் தயக்கத்துடன் அவள் கன்னம் அருகே வந்தவன் அப்படியே நிற்க லட்சுமி “ இது சரி வராது “ என்று எண்ணிய படி அவளே அவன் உதட்டில் கன்னம் கொண்டு பட்டும் பாடாமல் வேகமாக ஒற்றிவிட்டு, லட்சுமி எழ போக தினகரன் அவள் கையை பிடித்து மீண்டும் அவளை அமரவைத்து அவள் கன்னத்தில் அழுத்தி முத்தம் கொடுத்தான்.

இந்த முத்தம் இருவருக்குமே மறக்க முடியாத இனிமையான தருணமாக மாறி போனது இருவருமே அவர்கள் துன்ப வேளையில் அந்த நாளை எண்ணி சந்தோஷ பட்ட நாளும் உண்டு திரும்பி அந்த நாள் வரவே வராதா என்று வருந்திய நாளும் உண்டு . திகட்டாத தேனை போல அந்த நாளை திகட்டத் திகட்ட ரசிக்கத்தான் செய்தனர்.

லட்சுமி சென்று இரண்டு நாள் ஆகியும் அவளிடமிருந்து எந்த தகவலும் வராமல் போக தினகரன் அவள் போனுக்கு போன் செய்து பார்த்தான். அது சுவிட்ச் ஆஃப் என்று வரவும் ஒன்றும் புரியவில்லை , மனதில் பயம் தொற்றிக்கொள்ள, யாரிடம் உதவி கேட்க என்று கூட தெரியாத நிலையில், லட்சுமியை அனுப்பியிருக்க கூடாதோ என்று தோன்றவும் அவன் அம்மாவிடம் சென்று நின்றவன்,  “ லட்சுமி வேலைக்குப் போன இடத்தோட அட்ரஸ் தாங்கம்மா “ என்று துணிந்து கேட்டவனுக்கு அசிங்கமான வார்த்தைகளும் திட்டுமே கிடைக்க, மனம் உடைந்தவன் அடுத்து சென்று நின்றது என்னமோ அந்த பாத்திரக் கடை ஓனரிடம் தான்.

அங்கு சென்றவன் அவளிடம் லட்சுமி வேலை பார்க்கும் இடத்தின் முகவரி கேட்டு நிற்க அதற்கு அவர் சொன்ன பதில் அடுத்த இடியாக வந்து அவன் தலையில் இறங்கியது “இல்லை நான் எந்த வேலைய பத்தியும் லட்சுமி கிட்ட சொல்லல்லையே? அதுவும் மும்பையில எனக்கு யாரும் சொந்தம்னு இல்லையே?” என்று சொல்லிவிட தினகரனுக்கு பைத்தியம் பிடிக்காத குறை தான். லட்சுமிக்கு என்னவோ என்று மனம் பதைபதைக்க, அடுத்த நொடி எதுவும் யோசிக்காமல் அவன் அம்மாவிடமே  சென்று விசாரிக்க அவன் அம்மா “என்னடா உனக்கு இப்போ அவ எங்கே வேலை பார்த்தா உனக்கு என்ன அவளைப் பத்தி நீ எதுக்கு விசாரிக்கிற?” என்று கத்த கத்த தினகரன் “ அவளுக்கு இந்த வேலையைப் பத்தி யார் சொன்னது சொல்லுங்க ம்மா ப்ளீஸ்!” என்று கைகூப்பி அவன் கெஞ்ச “ ச்சை இவன் வேற, இப்போ என்ன அவளுக்கு வேலை யார் வாங்கி தந்ததுன்னு உனக்கு தெரியனும்மா?” என்று அவனை அடித்து சலித்தவராக வினோத்தை பற்றி சொல்ல அதை கேட்டு அங்கே சென்றவன் வீட்டிற்கு முகம் வீங்கி தான் திரும்பி வந்தான்.

அவன் முகத்தைப் பார்த்து அவன் அம்மா கூப்பிட்டாலும் அது எதுவும் இவன் காதில் விழவில்லை. நேராகச் சென்று அவன் அறைக்குள் அடைந்து கொண்டான். இரவு உண்ணக்கூட வெளியே வரவில்லை. மறுநாள் காலை எப்போது சென்றான் என்று அங்கு இருந்த யாருக்கும் தெரியவில்லை. ஒரு வாரம் போலீஸ் ஸ்டெசன்கும் வினோத் கடைக்கும் என்று மாற்றி மாற்றி அழைத்து உதவிக்கு கெஞ்சாத ஆள் இல்லை. போலீசும் பெரிய இடம் என்று விலகிக்கொள்ளச் சோர்ந்து நடுத்தெருவில் கண்கள் சிவந்து, முடி கலைந்து அமர்ந்துவிட்டான்.

நெஞ்சம் அடைக்க, ஏதோ பெரிய பிரச்சினையில் தேவி மாட்டிக்கொண்டது மட்டும் இவனுக்கு புரிந்தது. ஆனால் அதை தட்டிக்கேட்க உடலிலும் சரி, மனதிலும் சரி தெம்பு இல்லை. அன்று அந்த நடு தெருவில் அமர்ந்திருந்தவன், அவன் அருகில் இருந்த பிள்ளையாரை கண்ணிமைக்காமல் பார்த்தபடி மனதில், “ ஏன் கடவுளே! என்னை இப்படி கோழையா படைச்ச? மத்தவங்களுக்கு  இருக்குற கொஞ்சம் வீரம் கூட எனக்கு ஏன் தரல்லை! அந்த தைரியம் இருந்திருந்தா இன்னைக்கு எப்படியாவது என் தேவியை நான் கண்டுபிடிச்சிருப்பேன்! என்னை சந்தோஷமாவே இருக்க விடமாட்டியா! அப்புறம் ஏன் என்னை படைச்ச? என்னை கொன்னுறுக்களாமே?” என்று அவன் பாட்டுக்கு அரற்றிக்கொண்டிருந்தவன் எப்படி வீடு வந்தான் என்று கூட நினைவில்லை.

ஜடம் போல் சுற்றி வந்தான் தினகரன். ஏன் எதற்கு வாழவேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும் போது தான் மாணிக்கத்தின் படிப்பை நிறுத்தி அவனையும் வேலைக்கு அனுப்பினார் அவன் அம்மா. அது ஒரு வாரம் கழித்து தான் இவனுக்கே தெரியவந்தது. அதை பார்த்து ஆத்திரம் கொண்டவன், அவன் அம்மாவிடம்  சென்று கத்த, அவர் ஒரே போடாகப் போட்டார்.

“ இவன் இங்கே இந்த வீட்டில்ல இருக்கணும்னா அவன் வேலைக்கு போய்த்தான் ஆகனும் ” என்று சொல்லிவிட என்ன செய்தும் அவன் அம்மாவை அவனால் மாற்ற முடியாமல் போனது.  அப்போதுதான் மாணிக்கத்துக்காக இவன் இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்து ஒரு பெரிய பழக்கடையில் இவன் அம்மாவுக்கும் மற்றும் மாணிக்கம் இருவருக்கும் தெரியாமல் வேறு ஒரு ஆளை வைத்து மாணிக்கத்தை வேலைக்கு சேர்த்துவிட்டான் அதோடு மாணிக்கத்திற்கே தெரியாமல் அவன் சம்பளத்தில் சிறு பங்கை வங்கியில் அவன் பெயரில் போடச் சொல்லி விட்டான்.

தினகரனின் எண்ணமெல்லாம், மாணிக்கத்திற்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துத் தருவது தான். அதற்காக இவை அனைத்தையும் செய்தான். இப்படி இருந்த  தினகரனின் ஒரு வருடத்தில் முடிக்க வேண்டிய படிப்பை தேவியின் நினைவால் மேலும் இரண்டு ஆண்டுகள் கழித்தே முடித்தான்.. படிப்பை முடிந்து அந்த ஊரிலேயே நல்ல சம்பளத்துக்கு வேலையும் வாங்கியவன், அந்த பத்து வருடத்தில் லட்சுமியை தேடி பல முறை மும்பை சென்று வந்துவிட்டான். வினோத்தையும் பார்த்து அடி வாங்கித் திரிந்தவனால் லட்சுமியை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதில் இவன் வேலைக்கு சேர்ந்த மூன்று வருடத்தில் திருமணம் பேச்சை வேறு வீட்டில் எடுக்க, மாட்டேன் என்று ஒற்றைக் காலில் நின்றுவிட்டான். அதில் தினகரனின் அம்மாவுக்கு பயங்கர கோபம் வந்தாலும் பணம் தரும் பையனிடம், அதட்டி பேச முடியவில்லை. அதன் பின் பத்து ஆண்டுகள் எப்படி சென்றது என்று அவனுக்கே தெரியவில்லை.

அப்போதுதான், தெய்வானையை பற்றி தினகரனுக்கு தெரியவந்தது. தெய்வானை எட்டாம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் துணி தைக்கும் வேலை பார்க்கிறாள். கடைக்கு வரும்போதெல்லாம் மாணிக்கத்தை பார்ப்பவளுக்கு அவனை மிகவும் பிடிக்கும். இது தினகரனின் காதுக்கு வர அவன் ஆளை வைத்து தெய்வானை வீட்டில் பேசி சம்மதம் வாங்கியவன், இவன் வீட்டில் அவன் அம்மாவிடம் பேச அவன் அம்மாவோ “ உனக்கு கல்யாணம் முடிக்காம அவனுக்கு ஆக விடமாட்டேன்டா. உன் அம்மாவைப் பத்தி உனக்கு தெரியும்னு நினைக்கிறேன். என்னை மீறிப் பண்ணி வைக்கலாம்னு நினைக்காத!” என்று மிரட்டி விட்டே சென்றார். அவர் மிரட்டியதின் விளைவாக, அடுத்த மாதமே சின்னப்பொண்ணுவின் கழுத்தில், தினகரனின் தாலி கட்டி, அவளை மனைவியாக ஏற்றுக்கொண்டான்.