மயூரி பேசுவது எதுவும் புரியாமல் ஆர்யன் “ என்ன ஆதிச்சநல்லூர், அங்க ஏன் நீ போகணும் மயிலு? “ என்று குழப்பம் நிறைந்த விழியுடன் கேட்க,
மயூரி “ நான் கோமால்ல இருந்தப்போ எனக்கு நிறைய விஷயம் நினைவுக்கு வந்தது ஆரி, அதுல ஒன்னு நான் லட்சுமி அம்மா கிட்ட நான் படிச்ச ஸ்கூல் பேர் சொன்னது “ என்று கலங்கிய விழிகளுடன் ஆர்யனை பார்க்க
“ இதை நீ முழிச்சதும் ஏன் கிட்ட சொல்லியிருக்கலாமே மயிலு நான் உங்க அம்மா அப்பாவை கண்டுபிடித்திருப்பேனே “
“இல்லை ஆரி, அப்போ டாக்டர் எமோஷனாக கூடாதுன்னு சொன்னாங்க அதுவும் இல்லையாம நீ எங்க அம்மா அப்பாவ தேட போயி அவுங்க கிடைக்கலன்னா நான் உடஞ்சி போய்டுவன் ஆர்யன்” என்று தயங்கிய மயூரி “ எனக்கு பயமா இருந்தது ஆரி, அதான் சொல்லல நானே நேர்ல போய் பார்க்கணும் ஆசைப்பட்டேன் “ என்று ஆர்யனின் கைகளை பிடித்து “ என்ன கூட்டிட்டு போறியா ஆரி, “ என்று மயூரி கேட்டு ஆர்யன் மறுப்பான அடுத்த நாளே ஆதிச்சநல்லூருக்கு அழைத்து சென்று விட்டான் .
மாணிக்கத்தை லட்சுமி வீட்டில் விட்டு விட்டு ஆர்யன் மற்றும் மயூரி இருவர் மட்டும் தான் சென்றிருந்தனர். தூத்துக்குடி ஏர்போர்ட்டில் இருந்து கார் ஒன்று புக் செய்து மயூரி மற்றும் ஆர்யன் சென்று கொண்டிருந்தனர் செல்லும் வழியில் மயூரி ஒரு வார்த்தை கூட பேசவில்லை கண் மூடி சீட்டில் சாய்ந்தவள் தலைக்குள் ஆயிரம் எண்ணங்கள் இம்முறையாவது அவளின் குடும்பத்தை கண்டுபிடிப்பாளா என்ற பயம், இத்தனை வருடமாக ஜெய்யை நம்பி காத்து இருந்து சோர்ந்து போனவள் இன்று அவளே நேரில் போய் பார்க்க போகிறாள் என்ற சந்தோஷம் ஒரு புறம் என்று அனைத்தும் அவளை மாற்றி மாற்றி பந்தாடி கொண்டு இருந்தது.
மயூரிக்கு இருக்கும் நினைவை எல்லாம் அசைபோட்ட படி ஆர்யன் தோளில் தலைசாய்ந்து படுத்து கொண்டாள். ஆர்யனும் அவள் நிலை அறிந்தவனாய் அவள் தலையை வருடி கொடுத்துக்கொண்டு இருந்தான்.
மயூரியின் மனம் என்னமோ ஜெய்யை தான் தேடியது. அவன் என்ன தான் தவறு செய்திருந்தாலும், அவன் மயூரிக்கு ஒரு நல்ல நண்பனாக தான் இருந்தான். மயூரி அம்மா நினைவில் கலங்கி நிற்கும் போது எல்லாம் துணையாய் நின்றவன். ஆஸ்ரமத்தில் இரவு தூங்க முடியாமல் அந்த இருளின் பயத்தில் மனம் அம்மாவை தேடும் போது தோள் கொடுத்து உதவியவன். எத்தனை சத்தியம் செய்திருப்பான் ஜெய் மயூரிக்கு “ நான் இருக்கேன் மயூ நீ ஏன் ஃபீல் பண்ற நான் பெரிசாகி உங்க அம்மா அப்பாவை கண்டுபிடிச்சி கூட்டிட்டுப் போறேன் மயூ “ என்று அவன் செய்த சத்தியம் நினைவுவர மூடியிருந்த கண்ணில் இருந்து நீர் இறங்கியது.
அப்படி இருந்த ஜெய் மயூரிக்கு செய்ததை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இவை அனைத்தையும் தலையில் போட்டு குழப்பிக் கொண்டு இருந்த மயூரியை எழுப்பிய ஆர்யன் “ மதியம் ஆகிடிச்சி மயிலு, சாப்பிட்டுப் போகலாம் “ என்று எழுப்பி இருவரும் உண்டு மீண்டும் காரில் ஆதிச்சநல்லூரை நோக்கி சென்றனர்.
காரில் ஆதிச்சநல்லூரை அடைய மதியம் ஆகியிருந்தது. மதியம் வெயிலில் பள்ளிமுன் ஆர்யன் மயூரி இருவரும் இறங்க பள்ளியில் குழந்தைகள் சிலர் படித்துக்கொண்டும் சிலர் விளையாடிக்கொண்டும் இருப்பதை பார்த்த மயூரி “ ஆரி நீயே உள்ளே போய் கேட்டுட்டு வரியா, நான் இங்கேயே இருக்கேன் “ என்று அந்த இடத்தை ஆர்வத்துடன் சுற்றி பார்த்து கொண்டு நிற்க,
ஆர்யன் அவர் ஆர்வத்தை புரிந்தவனாக “ சரி இங்கேயே இரு மயிலு எங்கேயும் போகாத நான் போய் கேட்டுட்டு வந்துடுறன் “ என்று சொல்லிவிட்டு பள்ளி உள்ளே சென்றான்.
மயூரி காரில் சாய்ந்தபடி அந்த இடத்தை சுற்றி பார்த்துக்கொண்டு கொண்டு இருந்தாள். அந்த பள்ளி இருந்த தெரு முனையில் வாழை தோப்பு இருந்தது அதன் அருகிலேயே வயலில் நெல் போட்டு அது முளைத்து வந்திருந்தது. பள்ளி பார்க்க மிக சிறியதாகத் தான் இருந்தது. ஆனால் பெயிண்ட் எல்லாம் அடித்து அழகாக இருக்க அங்கிருந்த வீடு எல்லாம் ஓடுகள் போட்டு இருந்தது அதில் ஒன்று இரண்டு மட்டும் மாடி வீடாக இருந்தது. இப்படி அனைத்தையும் சுற்றி பார்த்தவள் கண்ணில் அந்த தெருவில் தள்ளி ஒரு கோவிலின் கோபுரம் மட்டும் இவளுக்கு தெரிய அதை பார்த்த மயூரி தலையில் ஏதேதோ படங்கள் ஓட தன்னைப்போல் கால்கள் அந்த கோவிலை நோக்கி சென்றது.
அந்த சாலையில் பல வீடுகள் பழைய வீடுகள் தான் அதை பார்க்கும் போது எல்லாம் இதை ஏற்கனவே பார்த்த நினைவு வர சுற்றி அவற்றை பார்த்த படி ஊருக்குள் சென்றாள் . ஊரில் இருந்த அனைவரும் இவளை தான் உற்று உற்று பார்த்துக்கொண்டு கொண்டிருந்தன. யார் இந்த பெண் என்பது போல சில பார்வையும் யார் வீட்டுக்கு வந்துருக்கு அந்த வீட்டுல சொல்ல மாட்டாங்களா? கிராமத்தில்ல அதுவும் பிள்ளைத் தாச்சி புள்ளைக்கு போடுற உடையா இது என்று சிலரும் பேசிக்கொண்டு இருந்தனர் .
மயூரி பிரசவமான பெண்கள் போடும் கவுன் போன்ற ஒரு ஆடையை தான் அணிந்து இருந்தாள். அந்த ஆடைக்கு அவள் வயிறு சற்று பெரிதாக தெரிய அதற்கே இவர்கள் இப்படி பேசினர்.
இது எதுவும் தெரியாத மயூரி பாட்டுக்கு தனியே நடந்து அந்த கோவில் வரை சென்றிருந்தாள். அது ஒரு ராமர் கோவில், கோவில் வெளியே விளக்குகள் ஏற்றி வைத்திருந்தனர். அதை பார்த்த படி நகர சென்ற கால்கள் அப்படியே நின்றன. திடீரென்று அவள் காதுகளில் “ எவ்வளவு நேரம் மயிலு அதையே மோப்பம் பிடிச்சிட்டு இருக்க நேரம் ஆச்சி வா…” .
“ ஒரு நிமிஷம் அம்மா இதோ போலாம். “
“எப்பவும் இதே வேலையையே பார்த்துட்டு இருக்க, மயிலு! அப்படி அதுல என்னத்தை கண்டியோ? “
“உனக்கு ஒன்றும் தெரியாது போம்மா! எவ்வளவு வாசனையா இருக்கு….“ என்று காதில் குரல்கள் மாற்றி மாற்றி கேட்க அந்த குரலை கேட்ட படி மயூரி மூச்சை இழுத்து நுகர்ந்து பார்க்க அங்கே எரிந்து கொண்டு இருந்த தீபத்தின் மணம் நாசியை நிறைக்க அதை நுகர்ந்து பார்த்த படி கண்களை திறந்து அந்த கோவில் உள்ளே எட்டி பார்த்து விட்டு திரும்ப, அந்த கோவிலுக்கு நேராக ஒரு சின்ன தெரு ஒன்று போக, கால் தன்னைப்போல் அந்த தெருவுக்குள் சென்றது.
அந்த தெருவிலும் வீடுகள் நிறைந்து இருக்க, அதை சுற்றி பார்த்த படி நடந்தவளின் கண்ணில் தூரத்தில் தெரு ஓரத்தில் இருந்த டேங்க் கண்ணில் பட, “ உன்ன யாரு ம்மா இவ்வளவு காலையில எழுப்பி விட்டது? தண்ணி பிடிக்க கூட வறேன்னு ஒரே ஆட்டமா ஆடுற நேரம் ஆகிடுச்சி?, வரியா, இல்லையா? மயிலு! “ என்று குரல் கேட்க அதை கேட்டு கொண்டே அந்த இடத்தையும் தாண்டி நடந்து சென்றாள்.
அப்போது அந்த தெருவின் முடிவில் ஒரு புளிய மரம் இருக்க, அதை வெறித்தவளின் கண்முன் அந்த மரத்தில் இரவு நேரம் தனியாக விளையாடிக்கொண்டிருக்க குழந்தை மயூரி இருக்க, அப்போது அதன் வலது பக்கம் இருந்த வீட்டில் இருந்து அவள் அம்மா! “ ஏம்மா மயிலு! விளையாடுனது போதும்மா உள்ள வா! இரவு நேரம் பூச்சி கடிச்சிடும் வா ம்மா! “
“நான் அப்பா வந்த பிறகு வரேன்….ம்மா” என்று அந்த தெருவின் முனையில் வெறித்த குழந்தை மயூரி பார்த்த திசையை தான் மயூரி பார்த்தபடி நின்றாள். பின் அவள் அம்மா கேட்ட குறள் பக்கம் திரும்ப, பெரிய ஏமாற்றம் அங்கு பழைய வீடு எதுவும் இல்லை ஏதோ ஒரு புதிய மாடி வீடு இருக்க, அதை பார்த்தபடி அந்த வீட்டை நோக்கி சென்றாள்.
அந்த மாடி வீட்டு வராண்டாவில் வயதான ஒருவர் கையில் கோணி ஊசியை வைத்து புளியை குத்திய படி “ இவ ஒருத்தி மதியம் சாப்பாட்டு முடிஞ்சா போதும் பறந்து இங்க வந்து உட்கார்ந்துடுவா அப்போவே திருவிழாவுக்கு போகணும்னு அடம் பிடிச்ச காலை உடைச்சி வீட்டுல போடாம இப்போ வந்து தினமும் நம்ம காலை உடைச்சி போடுறாள் “ என்று திட்டியபடி இருக்க, அதை அவள் அருகில் அமர்ந்திருந்த சுடிதார் அணிந்திருந்த பெண் சுடிதார் ஷாலால் முகத்தை துடைத்தபடி “ இப்படி பேசாதீங்க பாட்டி, சித்தி பாவம்ல்ல அவங்களே அக்காவை தொழச்சிட்டு கஷ்டத்தில்ல இருக்காங்க “ என்று புளியை குத்திய படி பேச, அவளை நிமிர்ந்து முறைத்த பாட்டி, “ இவ இப்படி தினமும் போன பொண்ண நினைச்சி அந்த பகவத் கீதைய படிச்சா போதும்மா இத்தனை வருஷம் ஆகிவிடுச்சி போன பொண்ணு இருக்கோ, இல்லையோ “ என்று சொல்லவும், வெளியில் திண்ணையில் அமர்ந்து கொண்டு கீதையை படித்திருந்த வள்ளியின் கைகள் நடுங்க கலங்கி இருந்த கண்களை இருக்க மூடியபடி அமர்ந்து விட்டார்.
“அவ்வளவு கஷ்டமா இருந்தா ஏன் பாட்டி இங்கே வர? அங்க பெரிய வீட்டிலேயே இருக்க வேண்டியது தானே “ என்று மஞ்சுளா வள்ளியை எட்டி பார்த்தபடி கேட்டதும் அதற்கு பாட்டி வெள்ளையம்மாள் “ உக்கும்… எனக்கும் மட்டும் அவ்வளவு பெரிய வீட்டை விட்டு இங்கே வந்து உட்கார வேணும்னு ஆசை பாரு. அங்க உங்க அம்மா மதியம் மேல தோட்டத்தை பார்க்கிறேன்னு போய்டுவா. வீட்டில் இருந்தா நீயும் உங்க சித்தி பின்னாலேயே வால் பிடிச்ச மாதிரி போய்டுவா அப்புறம் நான் மட்டும் அங்க தனியா எப்படி இருக்க? இங்கே வந்தா கூட என் பேரன் சாயங்காலம் ஜீப்பில்ல வீட்டுக்கு கூட்டிச் போவான். அதான் வரேன் “ என்று சலித்தபடி புளியை குத்திக்கொண்டிருக்க வீட்டு கேட் திறக்கும் சத்தம் கேட்டது “ யார் வந்திருக்க இந்த நேரத்துல, அங்கே போய் பாரு மஞ்சு, யாருன்று “ என்று வெள்ளையம்மாள் சொல்லவும், மஞ்சுளா எழுந்து வெளியே சென்றாள்.
மஞ்சுளா எழுந்து சென்றதும், ஏதோ தோன்ற வெள்ளையம்மாளும் பின்னாலேயே எழுந்து சென்றார். வெளி திண்ணையில் அமர்ந்திருந்த வள்ளி, அங்கு கேட்டை திறந்து வயிற்றைப் பிடித்தபடி அந்த இடத்தையே சுற்றிப் பார்த்தபடி நடந்துவரும் மயூரியை, கேள்வியாகப் பார்த்து “ யார் வேணும் உங்கள்ளுக்கு? “என்று மிக மென்மையாக கேட்டார். வள்ளியின் குரலைக் கேட்டதும் மயூரி குரல் வந்த திசையைப் பார்க்க, அங்கு வள்ளி கையில் புத்தகத்துடன் கால்நீட்டி அமர்ந்திருந்தார்.
மயூரி அவர் கண்களை உற்று பார்த்தாள். அதே கண்களைச் ஆனால் கண்களைச் சுற்றிச் சுருக்கங்கள் வந்திருந்தது அதோடு ஒரு சோர்வும் தெரிய, மயூரி அவர் தலைமுதல் கால்வரை பார்த்து, அவர் உருவத்தை மனதில் ஆழமாகப் பதியவைத்துக்கொண்டிருக்க வள்ளி மீண்டும் “ யார் ம்மா நீ யார பாக்க வந்திருக்க “ என்று மயூரியை, அடையாளம் தெரியாமள் அவர் பேச.
மயூரிக்கு ஒரு மாதிரி ஆகிப்போனது, அவரிடம் என்ன என்று சொல்ல அவளின் பெயரே அவளுக்கு நினைவில்லை. சின்ன வயதில் தொலைந்து போன உங்கள் குழந்தை என்று சொல்லவா ஆனால் அதை அவர்கள் நம்பாமல் போய்விட்டாள், இல்லை ஒரு வேலை இவங்க என் அம்மா இல்லையோ?’ என்று பல கேள்வி மனதில் ஓட, முகம் எல்லாம் வியர்க்கத் தொடங்கிவிட்டது. வள்ளி மயூரி முகம் பதட்டமாக மாறுவதை பார்த்து பயந்தவளாக “ என்னம்மா.. பண்ணுது…?” என்று எழுந்து அவள் அருகில் வர மயூரி எச்சில்விழுங்கி ஒரு பயத்துடன் “நான்…மயில்..இங்க சின்ன வயசுல நான்….” என்று அவள் சொல்லி முடிக்கும் முன் அவளை ஓடி வந்து அணைத்திருந்தார் வள்ளி.
மயூரியை அணைத்த வள்ளி தேம்பித் தேம்பி அழுதபடி “ என் மயிலு….என் மயிலு….. நீயா தங்கம் வந்திட்டாயா? அம்மா? இந்த அம்மா? கிட்ட வந்திட்டியா? என் ராமர் என் புள்ளைய கூட்டி வந்துட்டார் “ என்று அவள் முகத்தை தாங்கி முகம் முழுக்க பார்த்து, கை கால்களை தொட்டு தடவி பார்த்து, “ இது கனவு இல்லதானே மயிலு இது நிஜம்தானே? “ என்று மயூரி முகம் பார்க்க, “ அம்மா… அழாதீங்க. “என்று கண்களை துடைத்துவிட, மீண்டும் மயூரியை அணைத்தபடி “ என் புள்ள வந்துட்டா என்ன அம்மான்னு கூப்பிட்டா…!” என்று அழுது தீர்த்தவளாக மயூரி முகம் பார்த்து, “ ஏன் தங்கம் இவ்வளவு நாள் எங்க புள்ள இருந்த? இத்தனை நாள் அம்மாவ பார்க்க ஏன் வரல்லை? “
“ அது அம்மா..எனக்கு ஒரு ஆக்ஸிடன்ட் ஆகி அதனால எனக்கு பழசு எல்லாம் மறந்துருச்சி ம்மா, என் பெரு கூட எனக்கு நினவுஇல்லை என்னை நீங்க மயில்ன்னு கூப்பிடுவதும், நான் படிச்ச ஸ்கூல் பெயரும் தான் நினைவிருந்தது. அதான் இத்தனை நாள் வரல்லை.” என்று வள்ளியின் கையை பிடித்தவள் “ என் பேரு என்ன ம்மா? “
என்று கேட்டு நிற்கும் தன் பெண்ணை பார்த்து கதறிவிட்டார் “ என் பொண்ணுக்கு ஏன் இவ்வளவு கஷ்டம் “ என்று கண்களை துடைத்தவர் அவள் கன்னம் தாங்கி “ உன் பேரு மயிலிசை. நாங்க செல்லமா மயில்னு கூப்பிடுவோம், “ அதை கேட்ட மயூரி “ மயிலிசை” என்று சொல்லி பார்த்துக்கொண்டு பின் “அப்பா பெரு உங்க பெரு அப்புறம் எனக்கு தங்கச்சிப் பாப்பாவா பிறந்தாங்க “ என்று பின்னாடி இவளையே உற்று உற்று பார்த்து கொண்டு இருக்கும் மஞ்சுல மற்றும் வெள்ளையம்மாவை பார்த்துக் கேட்க வள்ளி மயூரி கையை பிடித்துத் தின்னையில் அமரவைத்து “ இது உன் பெரியம்மா பொண்ணு மஞ்சுல உன் தங்கை இவங்க உன் பாட்டி. அப்புறம் உன் அப்பா பெயர் வீரபாண்டி என் பெயர் வள்ளி உனக்குத் தங்கை இல்லை தம்பி தான் பிறந்தான் அவன் படித்துசிட்டு விவசாயம் செய்றான் “ என்று அனைத்தையும் சொல்லியவர், மயூரியின் வயிற்றில் கைவைத்து, “ எப்போ கல்யாணம் ஆச்சு, மயிலு, எங்கே மாப்பிள்ளை “ என்று சொல்லவும், அங்கு காரில் வந்து இறங்கினான் ஆர்யன்.
ஆர்யனை சிரித்த முகத்துடன் பார்த்த மயூரி “ ஆரி…” என்று கையாட்ட, அவனும் சிரித்த முகத்துடன் உள்ளே வந்தான். மயூரி “ ஆரி இவங்க தான் என் அம்மா, இவங்க என் பாட்டி, இவங்க என் தங்கச்சி “ என்று மூச்சு வாங்க அவள் பேச, ஆர்யன்” பொறுமையா, மயிலு…” என்று சிரித்த முகத்துடன் அவளுக்கு அவன் கையில் இருந்த தண்ணீரை நீட்டி, அங்கிருந்த அனைவருக்கும் கைகூப்பி வணக்கம் வைத்தான்.
“கிரிக்கிப் பிள்ளைய பார்த்ததும் உலக்கையையே மறந்திரு. வெயிலில்ல வந்த பிள்ளைக்குத் தண்ணீர் கூட கொடுக்கல்லை” என்று வெள்ளையம்மா அருகில் இருந்த மஞ்சுலாவை அடித்துவிட்டு விட்டு “ உள்ளே வாங்க, மாப்பிள்ளை , நீயும் உள்ள வா மயிலு” “ என்று உள்ளே அழைத்துச் சென்று வெயிலுக்கு இதமாக மோர் அருந்தக் கொடுத்தர்.
சிறு வயதில் குழந்தையாக தொலைந்த பெண் ஒரு குழந்தைக்கு தாயாக திரும்பி அவர் கண் முன்னே அமர்ந்திருப்பதை நம்ப முடியாமல் மயூரி கையை பிடித்த படியே அமர்ந்திருந்தார்.
இங்கு வாழை தொட்டத்தில் வீர பாண்டியன் மற்றும் அவரின் அண்ணன் தங்க பாண்டியன் இருவரும் சேர்ந்து ஒரு பையனை அடித்து உதைத்து கொண்டு இருந்தனர். “ என்ன தைரியம் இருந்தா பக்கத்து ஊரு காரன் எங்க ஊரு பொண்ணு பின்னாடி சுத்துவ? “ என்று தங்க பாண்டி அடிக்க அதற்கு அந்த இளைஞன் “ நானும் அந்த பொண்ணும் லவ் பண்ணுறோம் அந்த பொண்ணுக்கு என்ன பிடிக்கும் நம்பல்லை ன்னா அவ கிட்ட கேளுங்க “ என்று அந்த பையன் அடி தாங்க முடியாமல் சொல்ல வீர பாண்டி “ யார் கிட்ட கேட்க சொல்ற நாளைக்கு அந்த பெண்ணுக்கு வேற ஒருத்தனோட கல்யாணம் இந்நேரம் நாளைக்கு அவ வேறு ஒருவன் மனைவி அவ கிட்ட கேட்க சொல்றியா “ என்று வயிற்றிலேயே மிதித்து விட்டு அங்கிருந்த ஒருவனிடம் “ இவனை இரண்டு நாள் கட்டி போட்டு வை இதுக்கு மேல அடிக்காத “ என்று தங்கபாண்டி சொல்ல வீர பாண்டி “நேரத்துக்கு சாப்பிட வை செத்துடாம பார்த்துக்கொ “ என்று அந்த தோட்டத்தை விட்டு வெளியே வர அவர் முன் ஒரு ஜீப் வந்து நின்றது.
அந்த ஜீப்பில் மயூரி சாயலில் ஆனால் நல்ல உயரத்தில் மீசையை முறுக்கிய படி ஓட்டுனர் இருக்கையில் இருந்தவன். இவர்களை பார்த்து முகத்தில் கடுமையை காட்டியபடி இருக்க, அவனை கண்டுகொள்ளாமல்
வீர பாண்டி மற்றும் தங்க பாண்டி ஜீப்பில் ஏறி அமர்ந்த படி “ யாரு அந்த பொண்ணு மாறன் “ என்று வீர பாண்டி கேட்க மாறன் பாண்டியன் மயூரியின் தம்பி “ அங்கே போய் பாத்தா தான் தெரியும் யாருன்னு “ என்று புருவம் சுருங்க யோசித்தபடி சொல்ல
“ யாரா இருந்தா என்ன கிராமத்துக் வறவுங்க எப்படி வரணும்னு அறிவு வேனா எதோ குழந்தைங்க கவுன்ன போட்டுட்டு வந்திருக்கா “ என்று தங்க பாண்டி கூற மாறன் “ அது புள்ள தாச்சி பொண்ணுங்க போடுற ட்ரெஸ் அப்படி தான் இருக்கும்”
“ நம்ம ஊர்லயும் புள்ள பெக்குற பொண்ணுங்க இருக்காங்க தம்பி அவுங்க யாரும் இப்படி போட மாட்டாங்க “ என்று வீர பாண்டி என்னும் தங்க பாண்டியை ஏற்றி விட்ட படி வீட்டை நோக்கி சென்றனர்.
அனைத்தும் ஒரு முடிவுக்கு வந்து விட்டது என்று மகிழ்சியில் இருக்கும் மயூரிக்கு தெரியவில்லை இது முடிவல்ல தொடக்கமே என்று. சாதி, மதம், இனம் என்று அனைத்தும் பார்த்து அதில் ஊறி போய் இருக்கும் அவள் குடிப்பத்திடம் எப்படி இணைந்து இருப்பாள். அதுவும் அவர்கள் ஆள் இல்லாத ஆர்யனை எப்படி அவர்களின் பெண்ணின் கனவானாக ஏற்றுக்கொள்வார்கள்?. இவர்களிடம் இறந்து முற்றிலும் வேறு பட்டு இருக்கும் தன் மகளை ஏற்றுக்கொள்வார வீர பாண்டி ?