வானில் சூரியன் மஞ்சள் நிறத்தில் அதன் கதிர்களை பரவியிருந்தது, மாலை நெருங்க நெருங்க அதன் கதிர்களை சுருக்கி மஞ்சளிலிருந்து சிவப்பு வண்ணப் பந்து போல அழகாக அந்த நவீன யுக கட்டிடங்களுக்கிடையில் அதை மறைத்து இரவுக்கு வழிவிட்டு சென்றுகொண்டிருப்பதை மாடியில் இருந்து கண்ணிமைக்காமல் மயூரி மற்றும் லட்சுமி பார்த்துக்கொண்டு இருந்தனர். மயூரி வீட்டிற்கு வந்து ஐந்து நாட்கள் ஆகிவிட்டது இந்த ஐந்து நாட்களிலேயே அவளின் உடல் எடை கூடியது போல் அவளுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அவள் தன் கையைத் திருப்பிப் பார்த்தபோது அவள் எப்போதும் அணிந்திருக்கும் மோதிரம் மிகவும் இறுக்கமாக இருக்க, அதை பார்த்தபடி “ ரொம்ப வெயிட் போட்டுட்டனோ? “ என்று லட்சுமியிடம் கேட்க, அதற்கு ஒரு சிரிப்பை பதிலாக தந்துவிட்டு அவள் கையைப் பிடித்தபடி நிலவு வருவதற்காக வெட்கம் பூசி காத்திருந்த அந்த சிவந்த வானத்தை பார்த்தபடி அவள் தோளில் சாய்ந்துகொண்டார் லட்சுமி.
லட்சுமி இப்போதெல்லாம் எதைப் பேசினாலும் ஒரு புன்னகையே பதிலாக தருகிறார் அதை மீறி வேறு எதுவும் பேசுவதில்லை. டாக்டரிடம் இதை பற்றி கேட்டாள், அவர் “ பேசலன்னா எதையோ யோசிக்கிறாங்கன்னு அர்த்தம் அவங்களோட நினைவ யோசிக்கிறாங்கன்னு அர்த்தம். அவள்களுக்கு எல்லாம் சீக்கிரமாகவே நினைவு வந்துடும் பயப்படாதிங்க ” என்று சொல்லியிருக்க அந்த நம்பிக்கையில்தான் அனைவரும் இருந்தனர். இதை நினைத்தபடி மயூரி அமர்ந்திருக்க அப்போது ஸ்டெல்லாவிடமிருந்து மயூரிக்கு அழைப்பு வர அதை பார்த்துவிட்டு மயூரி, “ அச்சோ, ஸ்டெல்லாவா நான் போன் அட்டன் பன்றதுக்கு முன்னாடி கட் ஆகிறனும் ப்ளீஸ்” என்று மனதில் நினைத்தபடி போனை மிக மெதுவாக எடுத்தாள். அது கட் ஆகாமல் அடித்து கொண்டே இருக்க, போனை ஆன் செய்து காதில் வைத்த மயூரி “ சொல்லுங்க ஸ்டெல்லா, எப்படி இருக்கிங்க?” என்று நலம் விசாரிக்க, ஸ்டெல்லா, “ மேம், நா நல்லா இருக்கிறதும் நல்லா இல்லாம போறதும் உங்க கையில தான் இருக்கு மேம்” என்று ஸ்டெல்லா, கூறுவதை கேட்டு தலையை சொரிந்த மயூரி “ ஏன் ஸ்டெல்லா, இப்படி பேசுகிறீங்க என்ன பார்த்தா பாவமா இல்லையா? உங்களுக்கு “
“ இது நான் சொல்ல வேண்டிய டைலாக் மேம், என்ன பார்த்தா உங்களுக்கு பாவமா இல்லையா? மேம், நீங்க பாட்டுக்கு இவ்ளோ பெரிய கம்பெனியை என்ன தனியா பார்த்துக்க சொல்லிடீங்க, இந்த பாஸ்கர் சாரும் இனிமே இங்கே எனக்கு வேலை இல்லைன்னு போய்ட்டாரு. நான் வேற கம்பெனி இழுத்து மூடிடுவீங்கன்னு நம்பிக்கையில நிறைய பேரை வேற வேலைக்கு அனுப்பிட்டேன் இப்போ இங்க வேலை செய்ய ஆள் இல்லாம நான் இருந்தா நீங்களும் புராஜெக்ட் மீட்டிங்க்கு வர மாட்டன்னு சோன்னா எப்படி மேம். என்ன பார்த்தா எப்படி இருக்கு? மேம் உங்களுக்கு, காலைல இருந்து மிட் நைட் வர இங்க தான் இருக்கேன். வீட்டுக்கு போனாலும் அங்கயும் இந்த வேலைய தான் பார்க்கிறேன் மேம். இல்லை எனக்கு ரெஸ்டே வேணாமா மேம்?”என்று மூச்சு பிடிக்க ஸ்டெல்லா கத்த, மயூரிக்கு அவள் நிலையை பார்த்து பாவமாக தான் இருக்கிறது ஆனால் என்ன செய்ய கேமிங் தவிர மற்ற விஷயம் பற்றி எதுவும் தெரியாது. ஆர்யனிடம் உதவி கேட்கலாம் என்றாலும் அவனுக்கு கேமிங் கம்பெனியை பார்க்கவே நாள் சரியாக இருக்க, சோர்ந்து போய் வீடு வருபவனிடம் உதவி கேட்க முடியவில்லை. இதையெல்லாம் நினைத்த மயூரி “ ஸ்டெல்லா, உங்களுக்கு நான் பிராமிஸ் பன்ற இந்த ஒரு மீட்டிங் மட்டும் நீங்க எப்படியாவது பார்த்துக்கொங்க இன்னும் இரண்டு நாள்ல ஆர்கே குரூப்புக்கு புது எம்.டி. வந்துடுவாங்க “
“ என்னது புது எம்.டி.யா? அப்போ நீங்க எம்.டி. இல்லையா மேம்? “
“ இல்லை ஸ்டெல்லா, எனக்கு என் கேமிங் கம்பெனி மட்டும் போதும். இது என்னதான் ஜெய் என் பெயருக்கு மாத்தி எழுதினாலும், இந்த சொத்து….எனக்கு வேனா ஸ்டெல்லா. அதான் இந்த சொத்த டிரஸ்ட்டுக்கு கொடுக்க போறன் ஸ்டெல்லா “
“ என்னது டிரஸ்ட்டுக்கு கொடுக்கா போறீங்களா அப்போ இந்த கம்பெனி மேம்? “
“ கம்பெனி ரன் ஆகிட்டே தான் இருக்கும் அந்த ட்ரஸ்டோட ஃபவுண்டர் கிட்ட பேசிட்டேன், அவர் மேனேஜ் பண்ணிக்கிறன்னு சொல்லிட்டாரு அவரோட பிஸ்னஸ் கூட சேத்து . நாளைக்கே எல்லா புரோசிஜரும் முடிச்சிடலாம்னு இன்னைக்கு தான் சொன்னாரு ஸ்டெல்லா. ஜெய் செய்த தவறுக்கு என்னால செய்ய முடிந்தது இதுதான் ஸ்டெல்லா வேற என்ன பண்ண தெரியல இந்த ட்ரஸ்ட் பவுன்டர் ரோம்ப நல்லவராம் நல்லா விசாரிச்சிட்டன் ஸ்டெல்லா. “
“ ஓ… அப்போ சரி மேம். “
“ ஸ்டெல்லா, உங்கள பத்தி அவர் கிட்ட நிறைய சொல்லியிருகேன். அவருக்கு ஏதாவது ஹெல்ப்னா தயங்காம கைட் பண்ணுங்க ஸ்டெல்லா. “
“ சரி மேம், நான் பார்த்துக்கிறேன். “ என்று பேனாவை வைத்துவிட்டாள். இங்கு மயூரி இருட்டத் தொடங்கியதும் லிப்ட் வழியாக லட்சுமியை கீழே அழைத்து வந்துவிட்டாள். இரவு அனைவரும் உண்டு முடித்த பிறகு மயூரி சிறிது நேரம் அவர்கள் ரூமுக்குள் ளையே நடந்தபடி வாய்க்குள் எதையோ முனங்கியபடியே நடந்து கொண்டு இருந்தாள்., ஆர்யன் அப்போது அவள் பின்னால் வந்து அவளை அணைத்தபடி “என்ன பண்றீங்க.” என்று கேட்க, அவன் திடீர் அணைப்பில் ஜெர்க் ஆகி பயந்த மயூரி, “ஆர்யன்…” என்று அவன் தலையில் கொட்டிவிட்டு, “எருமை ஆரி, பயந்துட்டேன்!” என்று திட்ட, அதில் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்ட ஆர்யன் “ நான் வரது கூட தெரியாம கனவு கண்டுட்டு என்னை ஏன் கொட்டுற மயிலு? “ என்று கேட்க, மயூரி அவன் பேசுவதை கண்டுகொள்ளாமல், அவனைத் தாண்டிச் சென்று கட்டிலில் அமர்ந்தவள், “எனக்கு அடுத்த செக்கப் எப்போ ஆர்யன்” என்று சாய்ந்து அமர்ந்தபடி கேட்க,
“ செக்கப்பா? இன்னும் ஒரு வாரம் இருக்கு மயிலு. ஏன், எதுக்கு கேக்குற மயிலு? உடம்புக்கு ஏதாவது செய்யுதா? “
என்று அவள் காலை ஆர்யன் மடியில் வைத்து அழுத்தி கொண்டு கேட்க மயூரி சுகமாக கண் மூடியபடி “ சும்மா தான் ஆரி கேட்டேன். “
“ தூக்கம் வருதா மயிலு? “என்று மயூரியின் சோர்வான கண்களை பார்த்து கேட்க, உடனே மயூரி ஆர்யனை அருகில் கை நீட்டி அழைக்க, அவனும் எழுந்து சென்றான். ஆர்யனின் சட்டையை பிடித்து கீழே குனிய வைத்து அவனுக்கு முத்தம் கொடுத்த மயூரி “ இப்பவும் நான் சொல்லாமலே உனக்கு என்ன புரியுது ஆரி“ என்று பற்கள் தெரிய, சிரிக்க அதில் மயங்கிய ஆர்யன் மயூரி நெற்றியில் முத்தம் கொடுத்து “ குட்நைட் மயிலு? “ என்று அவளை படுக்க வைத்து அவள் தூங்கும் வரை கால் அழுத்தி விட்டான். நீ யாரகினும் நான் யாராயினும் நான் உன் மீது வைத்த காதல் என்றும் மாறாது என்பதை மயூரிக்கு உணர்த்தி கொண்டு இருந்தான் ஆர்யன்.
இங்கு லட்சுமி மயூரி அறையில் சரளாவுடன் தூங்கி கொண்டு இஇருந்தார். அப்போது அவர் கனவில் இரயிலில் சென்று கொண்டு இருந்தார். அவர் அருகில் ஒரு வயதான பெண் ஒருவர் இருக்க அவர் அருகே அமர்ந்தபடி வெளியில் வேடிக்கை பார்த்து கொண்டு வந்தவர் அழகான மலைபகுதி ஆறு ஏரிகள் என்று கண்களுக்கு குளிர்ச்சியாக அனைத்தையும் பார்த்தபடி வர அப்போது அந்த வயதான பெண் “ இந்தாம்மா, இத சாப்பிடு…” என்று ஒரு பார்சலை நீட்ட அதை வாங்கி உண்டு முடித்தவுளுக்கு கண்கள் சொக்கத் தொடங்க, கண்களை மூடி மூடி திறந்தபடி, ரயிலின் கம்பியை இறுக்கமாக பிடித்தவள் அருகில் இருந்த பாட்டியை பார்க்க, அவர் முகம் மங்கலாக தெரிய, அப்படியே அவர் மீதே மயங்கி விழுந்தாள் லட்சுமி.
மயங்கி விழுந்த லட்சுமி கண்களை திறந்து பார்க்கும் போது அவள் ஏதோ ஒரு ரூமில் கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்தாள். கட்டிலில் இருந்து தலையை பிடித்தபடி எழுந்த லட்சுமி அந்த அறையை சுற்றி பார்க்க அங்கே ஒரு அலமாரி முகம் பார்க்கும் கண்ணாடியுடன் இருந்தது பின் ஒரு சின்ன ஜன்னல் அதன் பின் பாத்ரூம் இவை அனைத்தையும் பார்த்த லட்சுமி “ இது என்ன இடம் நாம ரயிலில்ல தானே இருந்தோம் இங்க எப்படி வந்தோம் ஒருவேளை கனவா இருக்குமோ “ என்று எண்ணியபடி அந்த அறையின் கதவை நோக்கி சென்றவள்
“ யாரவது இருக்கிங்களா, கதவை கொஞ்சம் திறங்க, இது என்ன இடம் “ என்று கதவை தட்ட வெளியே இருந்து ஒரு சத்தமும் வரவில்லை. “ என்ன இது யாரும் வெளிய இல்லை போலவே. இது என்ன இடம் தனியா இருக்க வேற பயமா இருக்கு “ என்று புலம்பி கொண்டு இருக்கும் போதே கதவு படார் என்ற சத்தத்துடன் திறந்து கொள்ள அந்த சத்தத்தில் பயந்த லட்சுமி பின்னே நகர்ந்து யார் என்று பார்த்தாள் .
அங்கு நின்று கொண்டு இருந்தது என்னமோ வினோத் தான் அவனை பார்த்து பயந்த லட்சுமி “ நீ இங்க என்ன பண்ணுற “ என்று பயந்து பேச வினோத் சிரித்த படி உள்ளே நுழைந்து கதவை சாத்தியவன் “ நான் இல்லைமா வேற யார எதிர்பார்த்த லட்சுமி உன் பஸ்ட் கஸ்டமரா உனக்கு வேலை வாங்கி கொடுத்த நான் வராம வேற யார் வருவா செல்லம் “ என்று அவள் அருகே செல்ல லட்சுமி அவன் பேசுவது புரியாமல் பின்னே நகர்ந்தபடி “ என்ன வேலை, உங்க அப்பா தானே வேலை பார்த்து சொன்னது “
“ ஹா…ஹா… என்னது எங்க அப்பாவா ஹா…ஹா. வாட்ட ஜோக் பேபி… உனக்கு பாத்து பாத்து இந்த வேலைய செலக்ட் பண்ணதே நான் தான் ஏன்…. உங்க அத்தை சொல்லயா…. அச்சோ பேபி… “ என்று உச்சுகொட்ட “ நீ வாங்கி கொடுத்த வேலைன்னா எனக்கு இந்த வேலையே வேனா நான் ஊருக்கு போறன் “
“ அடடா உனக்கு விஷியமே தெரியாத பேப். உன்ன, இங்க வித்துட்டன்… பேப். இப்போ நானே நினைச்சா கூட உன்ன கூட்டிட்டு போக முடியாதே “
“என்னது….” என்று பயந்து பின்னேயே சென்றவள் செவிற்றில் முட்டி நிற்க வினோத் அவள் தாடையை பிடித்து “ அமா இனிமே இது தான் உன் இடம் இங்க இருந்து நீ செத்தா தான் போக முடியும் அன்ட்…. நீ பாக்க போற வேளை என்ன தெரியுமா… விபசாரம் ,விபச்சாரம் பண்ண போற லட்சுமி “ என்று அவள் முடியை பிடித்து கட்டிலில் தல்லியவன் “ உன் பஸ்ட் கஸ்டமர்டி நான் நல்லா சேட்டிஸ்பேக்ஸன்னா இருக்கனும் புரியுதா. நீ வேற என் போருள் இல்ல சோ ஹான்டில் வித் கேர் “ என்று லட்சுமி மீது பாய்ந்தான் வினோத்.
லட்சுமி அழுதபடி “ சார்…வேணா ப்ளீஸ்…..” என்று கெஞ்சியும் அவன் காதில் விழவில்லை அவளை குப்பையாக மாற்றிவிட்டு அவன் சென்றுவிட மயக்கத்தில் இருந்த லட்சுமியின் முகத்தில் சூரிய ஒளி பட கண்களை சூறிக்கி மெல்ல கண்களை திறந்தாள் லட்சுமி.
கண்களை திறந்து பார்த்த லட்சுமி அந்த அறையை சுற்றி பார்க்க இந்த இடம் புதிதாக இருந்தது. அப்படியே திரும்பி அவள் அருகில் பார்க்க ஒரு பெண் படுத்து உறங்கி கொண்டு இருந்தார். அவரை பார்த்து விட்டு கட்டிலில் இருந்து எழுந்த லட்சுமிக்கு ஒன்றும் புரியாமல் தலையை பிடித்து யோசிக்க சிறிது சிறிதாக அந்த வினோத் அவளுக்கு செய்தது நினைவுக்கு வர கண்ணில் இருந்து கண்ணீர் வளிய யோசிக்கவே இல்லை லட்சுமி அந்த அறையின் பால்கனி சென்று அங்கிருந்து குதித்து விட்டார்.