இரவு 44

காரில் சம்மதமாக தலையாட்டிய மயூரி பின் நிதானித்து வேகமாக மறுத்து தலையாட்டியவள்  “ என்ன, கல்யாணமா நான் இந்த ஆட்டத்துக்கு வரல ஆரி! “ என்று பயந்து காரை விட்டு இறங்க போக, அவள் கையை பிடித்து தடுத்த ஆர்யன்,  “ மயூரி, நீ எதுக்கு என்ன விட்டு தள்ளி போறன்னு ரீசன் இப்பவும் எனக்கு முழுசா தெரியாது ஆனா அது நீ என்னோட நெருக்கமா இருக்குறத பத்தின்னு மட்டும் தான் எனக்கு புரியுது சரியா? “ என்று கேட்க அதற்கு மயூரி கலங்கிய விழிகளுடன் ஆம் என்று தலையசைக்க “ மயூரி என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கா “ என்று அவள் விழிகளை பார்த்து கேட்க அதற்கு அவளும் இவன் விழிகளை பார்த்து கொண்டே “ ம்ம்ம்” என்று சத்தம் எழுப்ப , ஆர்யன்,  “ என்ன நம்பி கல்யாணத்துக்கு ஓகே சொல்லு மயூரி ட்றஸ்ட் மீ நம்ம திருமணம் அப்புறம் இன்டிமேட் ஓட சந்தோஷமா தான் இருப்போம் “ என்று சொல்ல அப்போதும் மயூரி முகம் தெளியாமலே இருக்க ஆர்யன்,  மயூரியின் கண்களை கைகொண்டு வருடியபடி  “ இப்போவே என்னால உன் பயம் ஒன்னும் இல்லன்னு நிரூபிக்க முடியும் மயூரி, ஆனா அத திருமணம் க்கு முன்னாடி வேண்டாம்னு நினைக்கிறேன் “ என்றவன், மயூரியின் முகம் தாங்கி நெற்றியில் முத்தம் பதிக்க, இதை எதிர்பார்க்காத மயூரியின் கண்கள் வெளியில் விழுந்து விடும் அளவு திறந்து அதிர்ச்சியை காட்ட, , அவள் முகத்தை பார்த்து சிரித்தவன், “ என் அழகு மயில் “ என்று மீண்டும் நெற்றி முத்தமிட அவன் மயில் என்ற அழைப்பில் மயூரி “அ..” என்று மீண்டும் ஆர்யனை காண ஆர்யன், பார்வை அவள் முகத்தையே மொய்க்க அடுத்த நிமிடம் காரை விட்டு இறங்கி கீழே நின்று விட்டான்.

ஆர்யன் கட்டுப்பாடு மெல்ல மெல்ல குறைவதை உணர்ந்து கீழே இறங்கி விட்டான். மயூரியும் இவன் தொடுகையை ஏற்றுக்கொள்ள ஆர்யன் “ இதுக்கு மேல கார்ல இருந்தா சேஃப் இல்ல “  என்று நினைத்து இரங்கியவன் சிறிது நேரம் காரில் சாய்ந்து கண்களை மூடி நின்றுகொண்டான். காருக்குள் மயூரி “ எப்படி இது, ஆர்யன் முத்தம் கொடுத்தும் நமக்கு எதுவும் ஆகல “  என்று யோசித்து குழம்பி கொண்டு இருக்க காரின் வின்டோ தட்டப்பட பயந்து நெஞ்சில் கைவைத்த படி யார் என்று மயூரி பார்க்க,  ஆர்யன் தான் நின்று கொண்டு இருந்தான்.  அவனை பார்த்த மயூரி என்ன என்பது போல பார்க்க ஆர்யன் “ வீட்டுக்கு தான போறா வா, பைக்கில போலாம் “  என்று கூப்பிட அவன் சொல்ல வந்தது புரியாமல் அவள் நினைவு எங்கோ இருக்க “அ… என்னது “ என்று புரியாமல் கேட்க அதில் சிரித்த ஆர்யன் அவள் தலையை ஆட்டி “  என் கூட பைக்ல வா….ன்னு சொன்னேன் “ என்றதும் தான் மயூரிக்கு புரிய காரை விட்டு இறங்கி பைக்கில் ஏறி கொண்டாள்.

பைக் நேராக அப்பார்ட்மெண்ட் நோக்கி செல்ல மயூரி பைக்கில் அமர்ந்தபடி அவள் குழம்பிய மனதை மேலும் மேலும் குழப்பி கொண்டு இருந்தாள். “ நமக்கு சரி ஆகிடுச்சா, ஆர்யன் கிட்ட வந்தா ஒன்னும் செய்யலல்லையே “  என்று காரில் நடந்ததை ரீ கேப் செய்து பார்க்க இவளுக்கு அதில் எதுவும் தோன வில்லை “ ஆனா நான் ஆர்யனுக்கு வேணாம் எனக்குள்ள என்னும் என்னென்ன பிரச்சனை வச்சிருக்கேன்னு எதுவும் தெரியல இப்படி இருக்க அவன கல்யாணம் பண்ணி அவன் வாழ்க்கைய கொடுக்க வேணுமா, இல்ல வேண்டாம் “ என்று மீண்டும் அவள் மனதை இருக்கி “ என்னால ஆர்யன் இல்ல யார் கூடையும் வாழ முடியும்னு தோனல்லை, எனக்கு பயமா இருக்கு “ என்று அப்பார்ட்மெண்ட் வந்தது கூட தெரியாமல் எதையோ வெறித்தபடி அமர்ந்து இருக்க மயூரி வண்டியை விட்டு இறங்காததில் கண்ணாடி வழியே மயூரியை பார்த்தவன் “ இவல வச்சிட்டு ரொம்ப கஷ்டம் “ என்று தலையை ஆட்டியவன் “ மயூரி…” என்று சத்தமாக அழைக்கவும் திடுக்கிட்டு திரும்பி ஆர்யனை பார்க்க “ வீடு வந்துருச்சி மயூரி “ என்று சொல்லவும் சுற்றி பார்த்து விட்டு “ ஓ… கவனிக்கல “ என்று இறங்கியவள் ஆர்யனிடம் எதோ பேச வர அதை புரிந்த ஆர்யன் அதற்குள் போனை எடுத்து “ பெர்மிஷன் ஆஃப் அவர் தான் கேட்டிருந்தேன் அதை எக்ஸ்டெண்ட் செய்றத என் டீம்க்கு இன்ஃபார்ம் செய்யனும் “ என்று போனை காதில் வைத்த படி லிப்டில் ஏற மயூரியும் பின்னாடியே ஏறினாள் பின் ஆர்யன் பேசி முடிக்க அவனையே அவள் பார்த்திருக்க ஆர்யன் பேசி முடிக்கவும் அவர்கள் ஃப்ளோர் வரவும் சரியாக இருந்தது. மயூரி ஆர்யன் என்று அழைத்து அவனிடம் பேச முயல அதற்குள் ஆர்யன் அவன் வீட்டுக்குள் சென்றுவிட , மயூரியும் அவன் பின்னாலேயே செல்ல அதற்குள் ஆர்யன் ஹாலில் வெங்காயம் உரித்து கொண்டு இருந்த மாணிக்கம் முன் சென்று நின்று இருந்தான்.

வெங்காயம் உரித்து கொண்டு இருந்த மாணிக்கம் தீடீரென்று வந்து நின்ற ஆர்யனை பார்த்து விட்டு “ என்ன ஆரி வேலையில இருந்து சீக்கரம் வந்துட்ட “ என்று பார்த்தவர் அவன் பின்னாலேயே ஆர்யன் என்று அவன் பெயரை அழைத்து கொண்டு உள்ளே வந்த மயூரியை கேள்வியாக பார்த்த மாணிக்கம் “ வேலை எல்லாம் முடிஞ்சிருச்சா ம்மா “ என்று கேட்க மயூரி “ ம்ம்ம் முடிஞ்சிருச்சி அங்கிள் “ என்று ஆர்யனை பார்த்து “ ஆர்யன் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் “ என்று அவன் பின்னே வந்து நிற்க அவள் பக்கம் திரும்பாமலே ஆர்யன்  மயூரி கையை பிடித்து அவன் அருகே நிற்க வைத்து “அப்பா மயூரிய எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க ப்பா “  என்று பட்டென்று கேட்டு விட அவன் இப்படி உடனே மாணிக்கத்திடம் சொல்லுவான் என்று எதிர்பாரத மயூரி அதிர்ந்து அவன் முகம் பார்க்க மாணிக்கம் அவர் கையில் இருந்த கத்தியை ஆர்யன் சொன்ன விஷயத்தில் கீழே தவறவிட்ட படி “ என்னப்பா…” என்று ஷாக் ஆகி பார்த்தார்.

 ஆர்யன்  “  எனக்கு மயூரிய பிடிச்சி இருக்கு ப்பா அவளுக்கும் என்ன பிடிச்சிருக்கு எங்களுக்கு இந்த வாரம் கடைசில கல்யாணம் பண்ணி வச்சிருங்க ப்பா “ என்று சொல்ல , மாணிக்கம் “ நிஜமாவா தம்பி, எனக்கு சந்தோஷம் ப்பா ஆனா ஏன் இவ்வளவு சீக்கிரம் ஆர்யன் ஒரு இரண்டு மாசத்துல பெரிய மண்டபம் பிடிச்சி பெருசா பண்ணலாமே “  என்று மாணிக்கம் அட்வான்ஸ் மூடில் சென்று பிளான் போட இவர்கள் இருவரும் பேசுவதை பார்த்த மயூரி “ விட்டா இப்போவே தாலிய கட்டிடுவான் போல மயூரி உஷாரா ஆட்டைய கலச்சி விட்டுரு “ என்று நினைத்து எதோ பேச போக அதற்குள் ஆர்யன் “ இல்ல இந்த வரமே ரெஜிஸ்டர் ஆபிஸ்ல வச்சி மேரேஜ்ஜ சிம்பிளா முடிச்சிடலாம் ப்பா, மேரேஜ் முடிச்சி நைட் டின்னர் மட்டும் ஹோட்டல்ல சிம்பிள்ள கொடுத்தடலாம் “

“ ஆனா ஆர்யன்,  எதுக்கு இவ்வளவு சிம்பிளா ரெஜிஸ்டர் ஆபிஸ்ல, சீக்கிரமா மேரேஜ் செய்யனும்னா அத நம்ம கோவில்ல நம்ம முறை படி செஞ்சிறலாமே “ என்று சொல்ல

ஆர்யன்” ரெஜிஸ்டர் ஆபிஸ்லயே செஞ்சிறலாம் ப்பா மயூரி அப்பா அம்மா இல்லாம கோவில்ல வேணாம் “ என்று இருவரும் பேசிக்கொண்டே போக மயூரி ஆர்யனின் அந்த வார்த்தையிலேயே டோட்டல் பிளாட் “ எனக்காக தான் ரெஜிஸ்டர் ஆபிஸ்ல மேரேஜ்னு  சொன்னானா “  என்று அவன் முகத்தையே பார்க்க மாணிக்கத்திடம் பேசிக்கொண்டு இருந்த ஆர்யன் திடீரென்று தலை திருப்பி மயூரியை பார்த்து என்ன என்பது போல புருவம் உயர்த்தி கேட்க அதற்கு மயூரியும் ஒன்றுமில்லை என்பது போல தலை அசைக்கவும் ஆர்யன் அருகில் இருந்த சோபாவில் மயூரியுடன் அமர்ந்து மேரேஜ் பிளானை விளக்கி விட்டு மீதம், வேலை முடிந்து வந்து பேசலாம் என்று இருவரிடமும் சொல்லி கொண்டு கிளம்ப  மயூரி அவனை தான் அமைதியாக பார்த்து கொண்டு இருந்தாள்.

அவனையே கண் எடுக்காமல் பார்க்கும் மயூரியை தலையசைத்து வா என்று சொல்லி வெளியே செல்ல அவன் பின்னேயே மயூரியும் சென்றாள். இங்கு மாணிக்கம் சிறகு இல்லாமல் வானில் பறந்தவர் போனை எடுத்து அதிதிக்கு அழைக்க அவள் போனை எடுக்கவில்லை உடனே கிருபா எண்ணுக்கு அழைத்து ஆர்யன்,  மயூரி கல்யாணத்தை சொல்ல இங்கே கிருபா “ அட பாவி விக் எண்ட் பொண்ணு பாக்குறத பத்தி பேச தானட போறான்னு சொன்ன அதுக்கே மேரேஜ்  பிக்ஸ் பண்ணிட்டான்,  நல்லா பண்றடா மச்சான் நீ “ என்று அவன் முகமும் மகிழ்ச்சியில் மலர தான் செய்தது.

இங்கு ஆர்யன் பின்னே வந்த மயூரி லிப்ட் வர காத்திருக்க ஆர்யன் மயூரி பக்கம் திரும்பி “ சொல்லு மயூரி “ என்று அவளை பார்க்க அவனை தலை நிமிர்ந்து பார்த்த மயூரி “ நான் சொல்லமலே எனக்கு என்ன வேனும்னு உங்களுக்கு புரியுதுல “ என்று அவனை பார்க்க அதற்கு ஆர்யன் ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்த படி “ அப்படியா….” என்று புருவம் உயர்த்த மயூரி கண்களை மூடி திறந்தபடி “ என்ன பத்தி நான் வளர்ந்த இடத்தை பத்தி எல்லாம் உங்களுக்கு தெரியும் ஆர்யன் தெரிஞ்சும் கல்யாணம் பண்ண கேட்கிறீர்ங்க “ என்று நிறுத்த அதற்கும் ஒரு புன்னகையே பதிலாக தர மயூரி “ நான் யாருன்னு எனக்கு தெரியாது ஆர்யன், என் சைல்ட் ஹூட் பத்தியும் எனக்கு தெரியாது, எனக்கு எதவது மோசமா நடந்ததான்னு கூட எனக்கு தெரியாது, இப்படி எனக்கே என்ன பத்தி முழுசா எதுவும் தெரியாது ஆர்யன் “ என்று அவன் கண்ணை தீர்க்கமாக பார்க்க, ஆர்யன் அவள் இரண்டு கைகளையும் பிடித்து கொண்டே

  “ உன்ன பத்தி உனக்கே தெரியாத உன்ன உன் கூட இருந்தே நானும் தெரிஞ்சி , புரிஞ்சி நீ எப்படி இருந்திருந்தாலும்,  உனக்கு என்ன ஆகியிருந்தாலும் உன் கூட சேர்ந்து உன்னையும் நான் முழு மனசா ஏத்துக்க நான் ரெடி மயில் “ என்று அவளை பார்க்க, மயூரிக்கு கண்கலங்கும் போல் இருக்க “ கல்யாணம் அப்புறம் எதுக்காகவும் என்ன விடமாட்ட தான ஆரி “ என்று திணறியபடி கேட்க அவளை பார்த்து மென்மையாக சிரித்த ஆர்யன் “ வேலைக்கு தவிற வேற எதுக்காகவும் உன்ன விட்டு போக மாட்டேன் டி “ என்று அவள் கண்ணீரை துடைக்க ஆர்யனை பார்த்து நன்றாக சிரித்த மயூரி “ பாத்ரூம்  கூடவா “ என்று கேட்க  ஆர்யன்  “ எனக்கு ஓகே தான் மயிலு “ என்று கண்ணடிக்க மயூரி “சீ… போங்க ஆர்யன் “ என்று அவனை தள்ளிவிட்டு அவன் வீட்டுக்குள் ஓடிவிட அவள் செல்வதை கண்கள் நிறைய பார்த்து கொண்டு புறப்பட்டான்  மயூரியின் ஆர்யன் .

ஆர்யன் சொன்னபடி கல்யாணம் நடந்து முடிய அனைவருக்கும் மிக மகிழ்ச்சி . அதுவும் ஜெய் இவர்களின் திருமணம் பற்றி தெரிந்ததிலிருந்து அவனை கையில் பிடிக்க முடியவில்லை வரவேற்பு நான் தான் ஏற்பாடு செய்வேன் என்று ஒத்த காலில் நிற்க, ரொம்ப க்ராண்டாக இருக்க கூடாது என்ற மயூரியின் மிரட்டலுக்கு இணங்க ஒரு நல்ல பைவ் ஸ்டார் ஹோட்டலில் டின்னர் ஏற்பாடு செய்து இருந்தான். கல்யாணத்திற்கு ஊரில் இருந்த தினக்கரன் மற்றும் லட்சுமி ப்ரியா அவள் கனவன் என்று அனைவரையும் அழைத்து இருக்க தினக்கரன் கழுத்தில் போட பட்டு இருந்த கட்டோடு அடம் பிடித்து வந்து இருந்தார்.  ஆபரேஷன் நல்ல படியாக முடிந்திருக்க பேச மட்டும் நாள் ஆகும் என்று சொல்லியிருந்தனர் .

அங்கு வந்தவர் லட்சுமியை தூரத்திலிருந்து பார்த்து கொண்டு அழுது படி இருந்தார்.  தைரியமாக பேச வேண்டிய இடத்தில் பேசாமல் போனதலே இங்கே இவர், அவரின் காதலை தொலைத்து விட்டு இத்தனை ஆண்டுகள் கடந்து மனதோடு வருந்தி கொண்டு இருக்கிறார்.  அன்று கொஞ்சம் தைரியமாக அவன் அம்மாவை எதிர்த்து பேசியிருந்தாள் இன்று இப்படி லட்சுமி விட்டு தள்ளி நின்று இருக்கிற நிலை வந்து இருக்குமா என்று நடந்து முடிந்ததை எண்ணி வருந்தி கொண்டு இருந்தார்.  ஒரு வாய்ப்பு கூட கிடைக்காதா, இப்போ இருக்கிற தைரியம் அப்போது ஏன் இல்லாமல் போனது என்று எண்ணி எண்ணி உள்ளே யாருக்கும் தெரியாமல் அழுது கொண்டு இருந்தார் தினகரன். நடந்து முடிந்ததை மாற்றவா முடியும்.

இங்கு திருமணம் முடிந்ததும் ஊட்டிக்கு மயூரியை அழைத்து சென்றுவிட அந்த ரிஸார்டில் அந்த அறையில்  பதட்டத்துடன் மயூரி அமர்ந்திருந்தாள். ஆர்யன்  என்ன தான்  ஒன்னும் ஆகாது என்று சொல்லிருந்தாளும் மயூரியும் டாக்டரிடம்  கவுனசிலிங் சென்று வந்து இருந்தாள் இருந்தும் கொஞ்சம் பயமாக தான் இருந்தது. பயம், பதட்டம் என்று அனைத்தையும் சுமந்த படி ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் வாழ்வில் புது வசந்தம் வருமா என்ற ஏக்கம் நிறைந்த விழிகளுடன் மயூரி.