காலை வெயில் சுள்ளென்று அடித்துக் கொண்டு இருக்க அதை வெறித்துப் பார்த்தபடி நின்று கொண்டு இருந்தான் ஆர்யன். முகத்தை மறைக்கும் அளவு தாடி வளர்ந்திருந்தது கண்ணில் கண்ணாடியுடன் கருவளயமும் புதிதாக இடம்பெற்றிருந்தது. முகத்தில் சிரிப்பு மறைந்து அதற்கு பதிலாக சோகம் குடியெறிருந்தது.
உதயமாகி கொண்டு இருந்த சூரியனை பார்த்துக் கொண்டு இருந்த ஆர்யனுக்கு அவன் மயிலின் நினைவுதான் அவளோடு சேர்ந்து பார்த்த சூரிய உதயங்கள் கண்முன் காட்சியாக விரிய ஆர்யனின் உதட்டில் சிறு புன்னகை துளிர்க்க, அப்போது பார்த்து அவன் போனில் அலாரம் சரியாக அடிக்க அதை எடுத்து அனைத்தவன் முகம் பழையபடி சோகத்தை தத்தெடுக்க பாத்ரூம் சென்று குளித்து வந்தவன் பார்மல் உடை அணிந்து கொண்டு வெளியே வர இவன் கையை ஓடி வந்து பிடித்துக் கொண்ட லட்சுமி, “மயூவை கடத்திட்டான்… மயூவை கடத்திட்டான்… போலீஸ் கூப்பிடு!” என்று அதையே திரும்பத் திரும்ப சொல்ல, அவரை வெறித்துப் பார்த்த ஆர்யன், “மயூவை பார்க்க அப்புறமா கூட்டிட்டுப் போறேன் அத்தை, இப்போ வேண்டாம்.”
அதை கேட்ட லச்சுமியும் “ உண்மையாவா?” என்று குழந்தைபோல் கேட்க, ஆர்யன் ஆம் என்பது போலத் தலையாட்டவும் லட்சுமி, அவன் கையை விட்டுவிட்டு சோபாவில் அமர்ந்து விட்டார்.
மயூரியை கடத்தி சென்றதை நேரில் பார்த்த நாள் முதல் லட்சுமி இப்படி ஆகி விட்டார் மயூரி மயூரி என்று புலம்பியபடியே இருக்கிறார் டாக்டரிடம் கேட்டதற்கு மயூரி முழித்தால் மட்டும் தான் எதவது செய்ய முடியும் என்று சொல்லி விட்டனர். அப்போது சமையல் அறையில் இருந்து வந்த சரளா ஒரு பையை ஆர்யனிடம் கொடுத்து “ சாப்பாடு பாக்ஸ் மறந்துட்டார் தம்பி ஐயா “என்றதும் தலையாட்டி வாங்கியவன் அவன் பைக்கில் நேராக மயூரி இருக்கும் ஆஸ்பிட்டல் சென்றான்.
அங்கே மயூரி அருகே மாணிக்கம் அமர்ந்தபடி எதோ பேசிக்கொண்டே இருந்தார். அவர் பேசுவதை கேட்டு என்னைக்காவது மயூரி எழுந்துவிடமாட்டாலா என்ற நம்பிக்கையில் அவர் பேசிக்கொண்டு இருக்க அவர் அருகே வந்த ஆர்யன் அவரிடம் சாப்பாடு பையை நீட்டி “ மறந்துவிட்டீங்களாம் ப்பா சர்ளா அக்கா தந்தாங்க “ அதை வாங்கி அருகில் வைத்த மாணிக்கம் “ கொஞ்சம் இங்க பாப்பா பக்கத்துல இருப்பா நான் இதோ வந்துறேன் “ என்று எழுந்து சென்றுவிட்டார். மாணிக்கம் எங்கே செல்கிறார் என்று தெரிந்தும் அமைதியாக மயூரி அருகே அமர்ந்துகொண்ட ஆர்யன் மயூரியின் வலது கையை ஒன்றை கையால் மிக மென்மையாக பிடித்து கொண்டவன் மற்றொரு கையால் மயூரியின் ஐந்து மாத வயிற்றை மெல்ல வருடிய படி “ மயிலு இன்னைக்கு ஈவினிங் குழந்தைய ஸ்கேன்ல பாக்கலாம்னு சொன்னாங்கடா தங்கம், நீ அத பாக்க வேண்டாமாடா நம்ம குழந்தையை பக்கணும்ல மயிலு அதுக்காகவாது முழிங்க டா “ என்று கண்கள் கலங்க கொஞ்ச மயூரியிடம் அசைவே இல்லை அதை பார்த்த ஆர்யன் அவள் தோள்மீது சாய்ந்த படி மௌனமாக அழ தொடங்கினான்.
மயூரி கோமாவிற்கு சென்று இரண்டு வாரத்தில் அவள் கர்ப்பமாக இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்து சொல்லவும் ஆர்யனுக்கு அழுகவா இல்லை சிரிக்கவா என்கின்ற நிலை தான். மயூரி கோமாவில் இருந்தபடியே டாக்டர்களின் உதவியுடன் அவர்களின் குழந்தையும் நன்றாகவே வளர்ந்து வருகிறது. ஆனால் மயூரி அவளிடத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. வெளியே சென்று வந்த மாணிக்கம் கையில் ஜூஸோடு வந்து அதை ஆர்யனிடம் கொடுத்தார். இந்த ஐந்து மாதங்களாக ஆர்யன் சிறிது சிறிதாக அவனை அவனே வறுத்திக்கொண்டு இருக்கிறான். சரியாக உண்பது இல்லை இரவு முழுக்க மயூரியுடன் பேசுகிறேன் என்று தூங்காமல் இருப்பது அதனால் உடல் எடை மிகவும் குறைந்து ஏதோ போல் இருக்க, அதை பார்த்த மாணிக்கம்தான் பயந்து போனார். அதனாலேயே இப்படி ஜூஸ் உணவு என்று கட்டாய படுத்தி உண்ண வைத்து கொண்டு இருந்தார்.
ஜூசை குடித்து முடித்த ஆர்யன் மயூரியிடம் மற்றும் மாணிக்கத்திடம் சொல்லிவிட்டு ஆபீசுக்கு சென்றான். ஜெய் இல்லாததால் இருவருடைய வேலையையும் ஆர்யன் தான் பார்த்து கொண்டு இருக்கிறான். அவனுக்கு இந்த கம்பெனியை லாஸில் போக வைக்க விருப்பம் இல்லை இதில் மயூரியுடைய உழைப்பும் இருக்க, அதனாலயே கம்பெனியை நன்றாகவே பார்த்து கொண்டு வருகிறான். இங்கு ஜெய்யின் தாத்தா கம்பெனியை பாஸ்கர் மற்றும் ஸ்டெல்லா சேர்ந்து பார்த்து வருகிறார்கள். பாஸ்கர் தான் ஜெய்யை வாரம் ஒரு முறை சென்று பார்த்து பேசி வருகிறார்.
ஜெய்யின் வழக்கு இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த கேஸ் வெளியில் தெரிய வந்த பொழுது சிறு சலசலப்பு இருந்த போதும் அவை அனைத்தும் ஒரு வாரத்தில் மறைந்து தான் போனது என்பது கசப்பான உண்மையாகி போனது. சாதாரண பெண்கள் இரவு வெளியில் சென்று அவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தாலே அந்த பெண் ஏன் அங்கு அந்த நேரம் தனியாக சென்றாள் என்று குறைகூறும் நாட்டில் இரவில் தவறான தொழில் செய்து வாழும் பெண்களுக்கு மட்டும் ஆதரவாகவா நிற்க்கவா செய்யும். சிலர் என்னதான் இருந்தாலும் முப்பத்தி மூன்று உயிர் பாவம் என்று பேச , பலர் அப்படி தொழில் பன்ற பொண்ணுங்கள கொள்றதுல என்ன தப்பு அவன் நாட்டுக்கு நல்லது தானே பண்ணிருக்கான் என்று ஜெய் க்கு நல்லவன் பட்டம் கொடுக்க, சிலர் ஓ சைக்கோ கொலைகாரனா நல்ல கண்டென்ட் இந்தியன் சைக்கோ கில்லர்னு அவன் லைஃபை வீடியோவா பண்ணி போட வேண்டியது தான் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து வைத்து ஒரு வாரம் பேசினர் அதன் பின் அதுவும் மறைந்து போய் விட்டது. இதில் ஜெய்யை எவ்வளவு விசாரித்தும் அவன் வாயே திறக்கவில்லை ஏன் எதற்காக இத்தனை கொலை என்று எதுவும் சொல்லாமல் இருக்க பாஸ்கர் லாயர் மூலம் அவன் மனநிலை சரியில்லை என்று வாதாடி அதில் வெற்றியும் கண்டு இப்போது அவனை மனநிலை மருத்துவமனையில் வைத்து இருக்கிறார்கள்.
ஜெய் கொற்றவர்களில் ஓரிரண்டு பேறை தவிர மற்ற அனைவரும் யார் என்று கூட தெரியாமல் போக அவன் பக்கம் கேஸ் வலு இழந்து கொண்டு தான் போனது. இந்நிலையிலும் ஜெய் பாஸ்கரிடம் ஏதோ பேசி ரெடி செய்ய சொல்ல பாஸ்கர் “ புரிஞ்சி தான் சொல்றியா இலன் நீ “ என்று திடுக்கிட்டு நின்றவரை ஒரு பார்வை தான் பார்த்தான் அவர் வாயை மூடிக்கொண்டு அனைத்தையும் செய்து முடித்து அவன் முன்னே வந்து அனைத்தையும் காட்ட அதை பார்த்து சிரித்த ஜெய் “ நான் என் பிஏ ஸ்டெல்லாவ பார்க்கணும் ஏற்பாடு செய்யுங்க “ என்று சொல்ல அதைக்கேட்ட பாஸ்கர் பெருமூச்சு விட்டபடி தலையாட்டி சென்றான்.
பின் பாஸ்கர் ஸ்டெல்லாவிடம் போய் சொல்ல அவள் சிறிது நேரம் யோசித்தவள், “சரி, பாக்க வறேன் “ என்று சம்மதித்தவள் ஜெய்யை பார்க்க சென்றிருந்தாள். ஜெய்யை ஒரு அறையில் அமரவைத்திருந்தனர் அங்கு சென்ற ஸ்டெல்லா அவனை பார்த்து ஒரு நிமிடம் தயங்கி வாசலிலேயே நிற்க, ஜெய் தலையசைத்து வா என்று அழைத்த பின்னர் தான் உள்ளே சென்று அவன் எதிரே அமர்ந்தான்.
ஜெய்யை பாக்கவே ஸ்டெல்லவிற்கு பயமாக இருந்திருக்க வேண்டும் கழுத்து தாண்டி முடி அதை ஒழுங்காக வராமல் விட்டிருக்க, வெட்ட படாத தாடி மீசை என்று பார்க்கவே அகோரி போல காட்சி அளித்தான். ஸ்டெல்லாவிற்கு ஒரு நிமிடம் ஜெய்யின் பழய தோட்றம் கண் முன் வந்து தான் சென்றது.
ஜெல் வைத்து வாரிய தலை ட்ரிம் செய்த தாடி மீசை நீட்டாக உடை அணிந்து ராஜ விட்டு இளவரசன் போல இருந்தவன் இப்போது பிச்சைக்காரனின் தோற்றத்தில் என்று எண்ணியவள் “ சொல்லுங்க சார் எதுக்கு கூப்பிட்டீங்க “என்று எப்போதும் போல மரியாதை தந்து பேச அதில் புருவம் தூக்கி பார்த்த ஜெய் “ இது தான் நல்ல வளர்ப்புன்னு சொல்லுவாங்களா “ என்று பேசியவனை புரியாமல் பார்த்த ஸ்டெல்லா “ என்ன சார் “ என்று கேட்க, உடனே தலையை உலுக்கி கொண்ட ஜெய் “லீவ் இட், நான் உங்கள இங்க கூப்பிட்டதே ஒரு ஹெல்ப் கேட்டுத்தான் “
“ உங்க கம்பெனில இன்னும் வேலை பண்ணுறதால நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவன்னு நினச்சிங்களா சார் ? நான் வேலை என்னும் பாக்குறனா அதுக்கு காரணம் நானும் ரிசைன் பண்ணிட்டா அங்க கம்பெனிய பார்த்துக்க ஆள் இல்ல அந்த கம்பெனிய நம்பி எத்தனை பேரு இருக்காங்க தெரியுமா அவங்க குடும்பம் பாவம்தான சார் உங்களுக்கு என்ன எவன் கிட்டயோ கடந்த வரை லாபம்னு தூக்கி கொடுத்துருவிங்க அவனும் பாதி போற டைம் கூட தவறாம வேலைய விட்டு நிறுத்திருவான். அதான் அங்க இருக்க எல்லோரும் ஒரு நல்ல வேலைக்கு போற வரை அங்க தான் வேலை பண்ணுவன் இப்போவே பாதிக்கு மேல போய்ட்டாங்க கம்பெனி நஷ்டத்துல தான் ஓடிட்டு இருக்கு இன்னும் ஒரு இரண்டு மாதத்தில நானும் போய்டுவேன், அதனால என் கிட்ட ஹெல்ப்ன்னு வராதீங்க “ என்று முகத்தில் அடிப்பது போல பேசியவலை முகத்தில் மாறாத புன்னகையுடன் பார்த்தவன். “ நான் கேட்கிற ஹெல்ப் என்னென்னு முதலில்ல கேளு அதுக்கு அப்புறம் ஹெல்ப் பண்ணலாமா இல்ல வேண்டாமா என்று முடிவு பண்ணு ஸ்டெல்லா” என்று அவளை தீர்க்கமான விழியுடன் பார்த்தான் ஜெய்.
இங்கு ஜெய்யை பார்த்து வந்த ஸ்டெல்லா எதோ குழப்பத்துடனே சுற்றியவள் இரண்டு நாள் கழித்து காலை கிளம்பி மயூரியை பார்க்க ஆஸ்பிட்டல் சென்று இருந்தாள் ஜெய் கேட்டுகொண்டதுக்கு இனங்க.