போலிஸ் ஸ்டேஷன் வாசலில் அனைவரும் நின்று கொண்டு இருக்க கான்ஸ்டபிள் ஒருவர் கையில் ஃபைலுடன் வந்து சரத்திடம் பெங்காலியில் “ நீ கேட்ட கேஸோட ஃபைல் இது, இதுல சரோஜ் என்ற ஒருத்தர பேர் தெரியாத மனநிலை பாதிக்க பட்ட ஒரு பொண்ணு அவர் செத்தது கூட தெரியாம ஒரு நாளுக்கு மேல அவ கையில் கிடச்ச கண்ணாடி பீஸை வச்சி குத்திட்டே இருந்திருக்காங்க போலிஸ் அந்த பகுதி மக்கள் எதோ நாத்தம் அடிக்குதுன்னு கம்பளைன்ட் செய்யபோய் செக் பண்ணவுங்க இத பாத்துருக்காங்க “ என்று அவன் அந்த ஃபைலில் இருந்ததை படித்து சொல்ல மயூரி “ அந்த பெண்ணு இப்போ எங்க இருக்காங்க “ என்று கேட்கவும் அதற்கு அவர் ஒரு மனநல மருத்துவமனை பேர் சொல்ல அதன் முன் தான் அனைவரும் நின்று கொண்டு இருந்தனர்.
அந்த மருத்துவமனை உள்ளே சென்று விசாரிக்கவும் அங்கு இருந்த டாக்டர் இரண்டு பேரை மட்டும் சென்று பார்த்து வர சொல்ல மயூரி மற்றும் மாணிக்கம் சென்றனர். மற்ற அனைவரும் டாக்டர் அறையிலேயே இருக்க மனதில் ஒரு நடுக்கத்துடன் இருவரும் அந்த மருத்துவமனை உள்ளே சென்றனர். அங்கு இருக்கும் பல பெண்களை பார்த்தால் சாதாரண பெண்கள் போல தான் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர் சிலர் தான் அறையிலேயே அமர வைத்து இருந்தனர். சிலர் அங்கு இருந்த மரத்தின் அடியில் அமர்ந்து பேசிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் என்று இருக்க இவர்களை பார்த்து கொள்ள ஆங்காங்கே பெண்களை போட்டு இருந்தனர். இப்படி அனைத்தையும் பார்த்தபடி டாக்டர் பின்னால் செல்ல அங்கே ஒரு மரத்தடியில் ஆங்காங்கே தெரிந்த நரைமுடியுடன் இருக்கும் அந்த நீல முடியை முன்னால் போட்டு பின்னி கொண்டு இருந்தார் லட்சுமி தேவி என்கின்ற லல்லி.
லட்சுமியை பார்த்ததும் மயூரி மாணிக்கம் இருவரும் அவரை நோக்கி செல்ல போக அவர்களை தடுத்த டாக்டர் “ வெயிட், வெயிட் இப்படி நீங்க நினைச்சதும் அவங்கள போய் பார்க்க முடியாது, நீங்க தேடி வந்த ஆள் அவங்க தான்னா அவங்கள நீங்க டேக் கேர் பண்ணிக்க போலீஸ் ஸ்டேசன்ல பர்மிஷன் வாங்கி வந்த பிறகு தான் அவங்க கிட்ட நீங்க போலாம் “ என்று சொல்லி இருவரையும் அழைத்து வந்து விட்டார். டாக்டர் அரையில் இருந்த அனைவரும் மயூரி மாணிக்கம் முகத்தில் இருந்த மகிழ்ச்சியிலேயே அது லட்சுமி தான் என்று தெரிந்துவிட அதன் பின் தான் நிம்மதியே வந்தது.
அங்கு வந்த டாக்டரிடம் ஜெய் “ அவங்கள ஏன் இங்க வச்சிருக்கிங்க அவங்களுக்கு என்ன ஆச்சு “ என்று ஆங்கிலத்தில் கேட்க அதற்கு அந்த டாக்டர் “ இவங்க தலையில பலமா அடி பட்டு அதோட எதையோ பாத்து அதிர்ச்சியில தான் இங்க வந்தாங்க தலைல இருந்த காயம் ஆறினாலும் இவங்க நார்மலுக்கு திரும்பி வரல அதிர்ச்சியில இப்படி ஆகிடாங்க யாரோடும் பேச மாட்டாங்க அமைதியா எதையோ யோசிச்ச மாதிரியே இருப்பாங்க அப்புறம் என்ன தோனுதோ அத பண்ணிட்டு அமைதியா இருப்பாங்க ஆனா, ஆண்கள் யாராவது இவங்க பக்கத்துல போன போதும் வெறிபிடிச்ச மாதிரி கையில கிடைக்கிறதை வைச்சி குத்தப் போய்டுவாங்க மத்தபடி அவங்களால எந்த பிரச்சனையும் இருக்காது. “ என்று டாக்டர் சொன்னதை கேட்டு மயூரி “ அவங்கள சரி செய்ய முடியாதா? “ என்று கேட்க அதற்கு அந்த டாக்டர்” ட்ரீட்மென்ட் கொடுத்தா வாய்ப்பு இருக்கு “ என்று சொல்ல மயூரிக்கு சிறு நம்பிக்கை லட்சுமியை சரி செய்து விடலாம் என்று இங்கே மாணிக்கம் இவர்கள் பேசும் ஆங்கிலம் புரியாமல் “ என்னம்மா என்ன சொல்றாங்க அக்காக்கு என்ன “ என்று பயந்து கேட்க அவரை பார்த்து சிரித்த மயூரி டாக்டர் சொன்னதை சொல்லி “அது எல்லாம் சரி பண்ணிடலாம் அங்கிள் பயப்படாதிங்க “ என்று மீண்டும் போலிஸ் ஸ்டேசன் செல்ல காரில் ஏற்றினார்கள்.
அப்போது ஜெய் “ மயூ பெங்காலி தெரியும்னு சொல்லவே இல்ல “ என்று கேட்ட
மயூரி “ எனக்கே பெங்காலி தெரியும்னு கொஞ்ச நாள் முன்னாடி தான் தெரியும் அப்போ கூட இவ்வளோ நல்லா பேசுவனான்னு எனக்கே தெரியாது “ என்று தோளை உலுக்க அதை கேட்ட சரத் “ என்ன உங்களுக்கே தெரியாதா “ என்று புரியாமல் அவளை பார்க்க மயூரி “ அமா எனக்கு பழைய விஷயம் எதுவும் நியாபகம் இல்ல இப்போ தான் கொஞ்சம் கொஞ்சம் நியாபகம் வருது “ என்று சுருக்கமாக சொல்லி முடிக்க “ ஓ… பெங்காலி ரொம்ப நல்லா பேசிறிங்க யார் சொல்லி தந்தா நியாபகம் இருக்கா “ என்று சரத் கேட்க மயூரி “ அது லட்சு ம்மா , கொஞ்சம் கங்கா ம்மா கொஞ்சம் சொல்லி தந்தாங்க “ என்று சொன்னவள் பின் எதோ நினைவு வர “சரத் நீங்க விசாரிச்ச ப்ரோத்தலுக்கு கொஞ்சம் போறீங்களா “ என்று பதட்டத்துடன் கேட்க முன்னாடி அமர்ந்து இருந்த ஜெய் “ ஏ.. லூசு டைம் ஆகுது போலிஸ் ஸ்டேஷன் போக வேணாமா “ என்று அவளை திரும்பி முறைக்க உடனே அமைதியான மயூரி எதோ யோசித்து பின்
“ ஸ்டெல்லா சரத் நீங்க ரெண்டு பேரும் என் கூட வாங்க இவங்க ஸ்டேசன் போகட்டும் “ என்று சொல்ல அதை கேட்ட ஜெய் ஆர்யன் இருவரும் ஒன்றாக “ நோ.. மயூரி “ என்று கத்த இருவரையும் முறைத்த மயூரி “ நான் ஒன்னும் தனியா போகப் போறது இல்லை, இவங்களை கூட்டிட்டுத்தான் போக போறேன் “ என்று அடம்பிடிக்க சரத் “ அந்த இடத்துக்கு பொண்ணுங்க போறது சரி இல்லைங்க , அங்க யார பார்க்கணும்னு சொல்லுங்க நான் அதுக்கு ஏற்பாடு பண்றேன் “ என்று சொல்லவும்
மயூரி “ பேரு கங்கா வயசு இப்போ நாற்பது கிட்ட இருக்கும் அவங்க பாக்க….” என்று கண்களை மூடி தலையை பிடித்து யோசித்தவள் “ அவங்க என் உயரம் இருப்பாங்க வலது நெத்தியில ஒரு சின்ன மச்சம் இருக்கும். அவங்க இந்த ஊர்தான் தமிழ் கொஞ்சம் பேசுவாங்க “ என்று இன்னும் நன்றாக யோசிக்க அவள் தலை வலிக்க தொடங்க வேகமாக அவள் பையை கண்மூடியபடி எடுக்கக் கைநீட்ட அதற்குள் ஆர்யன் அவள் பையில் இருந்து மாத்திரையை எடுத்து அவள் கையில் கொடுக்க அதை கண்மூடியபடியே போட்டுக்கொண்டாள் ஆர்யனின் செயலை பார்த்த ஸ்டெல்லா முன்பக்கம் இருந்த ஜெய்யை வேகமாக பார்க்க அவன் இதை பார்த்தாலும் பெரிதாக எதுவும் முகம் மாறாமல் இருக்க, ஸ்டெல்லா மனதில் “ என்ன சார் இப்படி இருக்கார் அப்போ மயூரியை சார் லவ் பண்ணல்லையா “ என்று யோசித்தவள் பின் “ நமக்கு ஏன் தேவையில்லாத வேலை “ என்று விட்டுவிட்டாள்.
சரத் வண்டியை ஓட்டிய படியே மயூரி சொன்ன அடையாளத்தை எல்லாம் யோசித்தவன் “ நீங்க சொல்றவங்க எங்க இறுக்காங்கன்னு எனக்கு தெரியும்னு நினைக்குறன், ஆனா அவுங்க அந்த விபச்சார விடுதியில இப்போ இல்லை“ என்று கண்ணாடி வழியே மயூரியை பார்க்க அவள் முகம் மகிழ்ச்சியுடன் “ என்னது கங்கா அம்மா அங்க இல்லையா “
“ ஆமா, இவங்கள ஸ்டெசன்ல விட்டுட்டு நான் உங்கள கூட்டிட்டு போறேன் கொஞ்சம் தூரம் தான் அங்க இருந்து. எனக்கு தெரிஞ்ச அக்கா தான் அவுங்க “என்று சொல்லியதை கேட்க மயூரிக்கு ஒரே சந்தோஷம் முகம் பிரகாசிக்க அமர்ந்திருந்தாள். பின் ஜெய், ஆர்யன், மாணிக்கம் அவர்களை ஸ்டேஷனில் விட்டு விட்டு இவர்கள் அருகில் இருந்த சந்தை பகுதிக்கு செல்ல அங்கே ஒரு வளையல் கடையில் வெள்ளை மற்றும் சிவப்பு நிற புடவை அணிந்து நெற்றியில் பெரிய சிவப்பு திலகம் வைத்து கைகள் நிறைய வளையலுடன் வளையல் கடையில் அமர்ந்து வளையல் விற்று கொண்டு இருந்தாள் காங்கா, அவள் அருகே ஒருவர் நின்று வளையல் எடுத்து கொடுத்து கொண்டு இருந்தார்.
கங்காவை பார்த்த மயூரி காரில் இருந்து வேகமாக இறங்கி ஓடி சென்றவள் பின் வேகம் குறைத்து குறைத்து நடந்து அருகில் வந்து நின்று கங்காவையே பார்க்க கங்கா கடைக்கு வந்த பெண்ணையே பார்த்து கொண்டு இருந்தவள் முதலில் இவளை பார்க்கவில்லை மயூரியும் எதுவும் சொல்லாமல் அமைதியாக அவரை பார்த்த படியே நிற்க கங்காவின் அருகில் இருந்த நபர் தான் மயூரியை பார்த்துவிட்டு கங்காவை அழைத்து “ யாரோ உன்னையே பாக்குறாங்க பார் “என்று மயூரியை கை நீட்டி காட்ட கங்காவும் யார் என்று தலைதிருப்பி பார்த்தவர் மயூரியை பார்த்து விட்டு அடையாளம் கண்டுகொண்டு “ மயூப்பா….” என்று ஓடி வந்து அவள் முன்னே நிற்க மயூரி அவரை இறுக அனைத்துகொண்டாள்.
கங்காவும் அவளை அணைத்தவர் அவள் கை முகம் கன்னம் என்று தடவி பார்த்து “மயூப்பா நல்லா இருக்கியாடா அந்த நியூஸ் பார்த்துட்டு உன்ன காணோம்னு தேடாத இடம் இல்லைம்மா “ என்று அவள் கையை பிடித்து பேச அதை கேட்ட மயூரி “ என்னதும்மா, தேடினீங்களா “ என்று புருவம் சுருக்கி கேட்க “ அது நான் அங்க இருந்து வந்தபிறகு நியூஸ்ல லட்சுமி படம் போட்டு கொலைன்னு நியூஸ் வந்ததும் ஸ்டேஷன் போய் பார்த்து பேசுன அவுங்க லட்சுமி மட்டும் தான் இருந்தான்னு சொல்லிடாங்க உடனே நான் உன் அடையாளம் சொல்லி தேட சொன்னேன் ஆனா அவுங்க உன் போட்டோ கேட்டாங்க என் கிட்டத்தான் உன் போட்டோ இல்லையே “ என்று பாவமாக சொல்ல அவரை பார்த்து சிரித்த மயூரி “ சரி விடுங்க அதான் நானே தேடி வந்துட்டேனே , ஆமா நீங்க இங்க எப்படி அங்க இருந்து எப்படி வந்தீங்க “ “ நீதானே மயூரி நீங்க கிளம்புறதுக்கு முன்னாடி நீங்களும் இங்க இருக்காதீங்க இங்க என்ன சந்தோஷம் இருக்குன்னு இருக்கிங்க யாரும் உங்களுக்கு இல்லைனாலும் பரவாயில்லை வேற வேலை பாருங்க இங்க இருக்காதீங்கன்னு சொன்னியே அதான் நீங்க கிளம்பினதும் நானும் சேர்த்து வச்ச காசை எடுத்துட்டு இங்க ஒரு போலீஸ் கார் உதவியுடன் வேலை பார்த்துட்டு இருந்தேன்.” அதை கேட்ட மயூரி “ ஓ… நான் அப்படியா சொன்னேன் “ என்று யோசித்தவளை பார்த்த கங்கா “ என்ன மயூப்பா “ என்று அவள் முகம் பார்க்க மயூரி “ ஒன்னுமில்லை ம்மா” என்று சிரித்தவள்.
“ என்னம்மா வளையல் கடையில வேலை பாக்குறிங்களா “ என்று கடையை பார்த்து கேட்க “ அச்சோ , மயூப்பா இது நம்ம கடை “ என்று சிரித்தவர் அங்கு கடையில் நிற்பவரை காட்டி “ அவர நான் கல்யாணம் பண்ணிகிட்டன் எனக்கு இப்போ இரண்டு பொண்ணுங்க இருக்காங்க “ அதை கேட்டு கண்கள் விரிய புன்னகைத்த மயூரி “ என்னம்மா சொல்ற “ என்று கேட்க அதற்கு அவர் அவளை அழைத்து கடையில் சேர் போட்டு அமர்ந்த வைத்து விட்டு “ அங்க இருந்து வந்து இங்க தான் ஒரு துணி கடையில வேலை பாத்தன் அப்போ தான் இவரு பழக்கம் நல்லவரு கல்யாணம் ஆகி பிள்ளை பிறக்கவும் மனைவி இறந்துட்டாங்க இரண்டு வயசு குழந்தையோட கஷ்டப்பட்டு இருந்தவர் என்ன பத்தி தெரிஞ்சும் கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டாங்க நானும் சரின்னு சொல்லி இதோ இப்போ எனக்குன்னு ஒரு குடும்பம் “ என்று முகம் முழுக்க இருந்த பூரிப்புடன் பேச அவர் முகத்தை பார்தே அவரின் மகிழ்ச்சியின் அளவை கண்டுகொண்ட மயூரிக்கும் அப்போது தான் முழு நிம்மதியே கிடைத்தது.
கங்கா “ உன் அம்மா அப்பாலாம் எப்படி இருக்காங்க அப்பறம் மயூப்பா உனக்கு தம்பியா இல்ல தங்கச்சியா “ என்று கங்கா கேட்டதும் மயூரி முகம் வாடியவள் அவள் கதையை சொல்ல கங்கா கலங்கி போனவராக “ அய்யோ மயூப்பா என் கிட்ட கூட நீ உன் பேர் சொன்னது இல்லயே” என்று பரிதவித்தவர் “ உன்ன கடத்துனவன நினைவு இருக்காம்மா அவன இந்த போலீஸ் கிட்ட சொன்னா பிடிக்க மாட்டாங்க “ என்று பேசியவர் முகமும் வாடி போக, அதை பார்த்த மயூரி “ அத விடுங்க ம்மா நான் தேடுறதுக்கு ஆள் போட்டு இருக்கேன் அவங்க பார்த்துப்பாங்க, உங்களுக்கு ஒன்னு தெரியுமா லட்சுமிம்மா ஓட தம்பி வந்திருக்காங்க அவங்கள கூட்டி போக, “ என்று மயூரி சொன்னதை கேட்டு சந்தோஷ பட்ட கங்கா “ உண்மையாவா மயூப்பா, துர்க்காம்மா உனக்கு நன்றிம்மா!” என்று வானத்தை பாத்து கும்பிட்டவர், “ நான் அவள பாக்க போகும் போதுலாம் இவளுக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம்னு கடவுள் கிட்ட வேண்டாத நாள் இல்லை, அதுக்கு பலன் இப்போ தான் கிடைச்சிருக்கு போல” “ ஆமா கங்கா ம்மா இனிமே எல்லாம் சரி ஆகிடும் “ என்று இருவரும் சிரித்தபடி இருந்தனர்.