Thursday, May 9, 2024

    வசுந்தரா தேவி

    போலீஸ் வேனில் ஏறாது ஏக்கத்துடன் தன் குடும்பத்தையே பார்த்திருந்த  ஹர்ஷாவின்  வேதனை  கண்டும், அவனை நெருங்க முடியாது  துடித்து  நின்றிருந்த அவனின் குடும்பத்தினரிடம், “இந்த உலகத்தில் திட்டமிட்டு குற்றம் செய்தவர்களை விடச் சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றவாளியானவர்கள் தான் அதிகம். அவனுக்கு இப்போ தேவை, உங்களிடமிருந்து தண்டனையையும் தாண்டிய ஒரு மன்னிப்பு! அவனை நீங்க மன்னிக்காவிட்டாலும் இப்படி...
    “என்ன சொல்ற ஹர்ஷா? தெரிஞ்சு யாரையும் கொலை பண்ணலையா? அப்புறம் எதுக்குடா பண்ணின? எதுக்குடா பண்ணித் தொலைச்ச?” என்ற தாயின் மனக்குமுறல் தாங்காது, தன்னை அத்தனை நாள் அரித்துக் கொண்டு இருந்த உண்மையை அங்கிருந்த அனைவருக்கும் சொல்ல ஆரம்பித்தான் ஹர்ஷா. “அன்னைக்கு நைட் நான் பார்ட்டி முடிச்சு வீட்டுக்கு ஸ்பீடா வந்துட்டு இருக்கும் போது தான்,...
    விடிந்தும் விடியாமலும், எந்தவித முன்னறிவிப்புமின்றி தங்கள் வீட்டுக்கு வருகை புரிந்து இருக்கும் அர்ஜுனையும், அவனின் தாயையும் கண்ட யாழினிக்குக் கண்களே தெறித்து விடும் நிலை!! வீட்டை சுற்றி போடப்பட்டு இருக்கும் ஜாகிங் ட்ராக்கில் ஓடிக் கொண்டு இருந்தவள், அர்ஜுனின் கார் உள்ளே வருவதைக் கண்டு, காரை விட்டு இறங்குபவர்களை நோக்கி ஓடி வந்தவள், மூச்சு வாங்க,...
    அந்த ஏரியா முழுவதும் காலையில் இருந்து அலைந்து திரிந்து ஓய்ந்து போயிருந்த அருணின் கண்களுக்கு, அப்பொழுது தான், மெயின் ரோட்டிற்குக் கொஞ்சம் ஒதுக்குப்புறமாக இருந்த அந்த மெக்கானிக் கடை கண்களில் பட்டது. வசுந்தரா ஏற்கனவே மெக்கானிக் ஷெட், பாழடைந்த இடங்கள், ஆள் நடமாட்டமில்லாத இடங்கள் இந்த மாதிரி இடங்களில் கவனம் செலுத்தி தேடுங்கள் என்று சொல்லி...
    “இந்த கேஸில் ஆரம்பத்தில் இருந்தே எங்கோ, எதையோ நாம் கவனிக்காம இருந்து இருக்கோம்” என்று வசுந்தராவுக்கு உறுத்திக் கொண்டே தான் இருந்தது. அதன்பொருட்டே, இரு தினங்களுக்கு முன் அருணுடன் கிளம்பி போலீஸ் ஸ்டேஷன் சென்றவர், தங்கள் கேஸ் சம்பந்தப்பட்ட மொத்த விஷயங்களையும், அடி முதல் நுனி வரை அங்கேயே அமர்ந்து புரட்ட ஆரம்பித்தார். “இதைத் தவிர்த்து இந்த...
    துளசி கேஸில் இதுவரை தங்களுக்குத் தற்காலிக தீர்வு தான் கிடைத்து இருக்கிறதே தவிர, நிரந்தர தீர்வைக் கொடுக்கக் கூடிய அந்தக் குற்றவாளியின் நிழலைக் கூட இன்னும் தன்னால் நெருங்க முடியவில்லையே என்று பைலில் பார்த்துக் கொண்டு இருந்த எவிடென்ஸில் இருந்து கண்களை அகற்றி, நெற்றியை நீவி விட்டபடி, பின்பக்கமாகச் சாய்ந்து இமை மூடி, தன்னைத்தானே...
    இன்றைய ஹியரிங்கின் ஆரம்பத்தில் இருந்தே நீலகண்டன் அர்ஜுனைத் தாக்கியே பேசிக் கொண்டு இருந்தார். “மிஸ்டர்.அருணாச்சலம் சொல்வதைப் பார்த்தால், சம்பவம் நடந்த அன்று, மிஸ்.ரீட்டாவுக்கு போன் செய்த அர்ஜுன், நாளைய கெஸ்ட் லிஸ்டில் தன் தாயின் பெயரைச் சேர்க்கும்படி சொல்லியிருக்கார். அதை ரீட்டா அருணாச்சலத்திடம் தெரிவிக்கவும், அப்பாவுக்கும் மகனுக்குமிடையே ஒரு பெரிய சண்டை அரங்கேறி இருக்கிறது. அதன் முடியில், தன் தாய்...
    நகைக்கடை ஓனரின் மூலமாக, அந்த பிரேஸ்லெட்டுக்குப் பின் இருக்கும் ஆசாமி தன் முன்னாள் கணவர் தான் என்பதை அறிந்து கொண்ட வசுந்தராவுக்கு, அடுத்து, அந்த பிரேஸ்லெட் சம்பவம் நடந்த இடத்திற்கு எப்படி வந்தது? என்பது பற்றி அறிய வேண்டி இருந்தது அதன்பொருட்டு அருணாச்சலத்தின்  அறையில் அவர் பொருத்தி விட்டு வந்து இருந்த மைக்ரோ ஸ்பீக்கர் மூலமாக,...
    error: Content is protected !!