Advertisement

இந்த கேஸில் ஆரம்பத்தில் இருந்தே எங்கோ, எதையோ நாம் கவனிக்காம இருந்து இருக்கோம்என்று வசுந்தராவுக்கு உறுத்திக் கொண்டே தான் இருந்தது.

அதன்பொருட்டே, இரு தினங்களுக்கு முன் அருணுடன் கிளம்பி போலீஸ் ஸ்டேஷன் சென்றவர், தங்கள் கேஸ் சம்பந்தப்பட்ட மொத்த விஷயங்களையும், அடி முதல் நுனி வரை அங்கேயே அமர்ந்து புரட்ட ஆரம்பித்தார்.

இதைத் தவிர்த்து இந்த கேஸில் வேறு ஏதாவது சஸ்பீஷியஸா இருந்து இருக்கா?” என்று தனக்கு கோப்புகளை ஒருங்கிணைத்துக் கொடுத்துக் கொண்டு இருந்த ஏட்டிடம் வசுந்தரா கேட்டார்.

இல்லை மேம், எங்களுக்குக் கிடைச்ச எல்லா தகவல்களையும் உங்களுக்குக் கொடுத்துட்டோம்என்றார் அவர்.

கொஞ்சம் நல்லா யோசிச்சுப் பார்த்துச் சொல்லுங்களேன்!” என்று வசுந்தரா கொஞ்சம் அழுத்தி கேட்க,

அப்படி எதாவது அன்னைக்கு நடந்ததா??” என்று சிறிது நேரம் தலையைச் சொறிந்து யோசித்து விட்டு,அப்படி எதுவுமில்லையே மேம்??” என்றார் அவர்.

அந்நேரம்,சம்பத் சார்! அந்த காந்தி நகர் ஆக்சிடென்ட் கேசை க்ளோஸ் பண்ணிடவா?” என்று கேட்டார் இன்னொரு ஏட்டு.

இன்னுமா அதை நீ பண்ணலை? சீக்கிரம் முடிச்சு விடுயா!” என்ற சம்பத் வசுந்தராவின் புறம் திரும்பி,இந்த கேஸ் கூட அந்த ஏரியாவில் தான் நடந்தது மேம்என்று ஒரு தகவல் கொடுத்தார்.

அதைக் கேட்டுஒஹோ?? அது என்ன கேஸ்?” என்று கேட்டார் வசுந்தரா.

அது ஒரு ட்ரங்க் அண்ட் டிரைவ் மேம்! டிரைவர் மாட்டலை, அதான் கேசை க்ளோஸ் பண்ணுறோம்என்று கூடுதல் தகவலைத் சேர்த்தே கொடுத்தார் சம்பத்.

ஓஹோ??” என்ற வசுந்தராவுக்கு ஏதோ ஒரு உந்துதல் உள்ளே உந்தியதில்,அந்த ஆக்சிடன்ட் என்னைக்கு நடந்தது?” என்று கேட்க, உடனே,யோவ்! அந்த கேஸ் என்னைக்கு பைல் ஆகி இருக்கு?” என்று சற்று முன் தன்னிடம் கேட்ட ஏட்டுவிடமே திருப்பிக் கேட்டார் சம்பத்.

அவரும் பைலை பார்த்துச் சொன்ன தேதியைக் கேட்டு தன்னிருக்கையில் இருந்து எழுந்து வந்த வசுந்தரா,அந்த கேஸ் பைலை நான் பார்க்கலாமா?” என்று அவரிடம் கேட்க, அவரோ அதைக் கொடுக்காது சம்பத்தைப் பார்த்தார்,கொடுக்கலாமா?” என்ற அர்த்தத்துடன். அதைக் கண்டுகொண்டவரும்,ம்ம்ம்.. கொடு!” என்று கண்ணசைத்துச் சொன்னார்.

பைலை வாங்கி அதை முழுவதுமாகப் படித்து முடித்த வசுந்தரா, போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வேகவேகமாக வீடு வந்து சேர்ந்து அருணை அழைத்து,அந்த ஆக்சிடென்ட் கேஸ் நடந்த இடத்திற்கு உடனே ஜுனியர்களைக் கூட்டிட்டுப் போய் ஏதாவது துப்பு கிடைக்குதான்னு பார்த்துட்டு, அப்படியே அந்த கேஸையும் டீடைலா ஸ்டடி பண்ணிட்டு வா!” என்றார்.

அதைக் கேட்டு குழம்பிப் போனவனோ,நம்ம கேஸை விட்டுட்டு எதுக்கு மேடம் இந்த கேஸில் இன்வால்வ் ஆகுறாங்க?என்று எண்ணிய போதும், சொல்வது வசுந்தரா என்பதால், மறுகேள்வி கேட்காது தன் ஜுனியர்களை அழைத்துக் கொண்டு உடனே அவ்விடம் நோக்கிப் புறப்பட்டான்.

*********

அன்று மாலை வீடு திரும்பிய அருண் சேகரித்துக் கொடுத்த தகவல்களை முழுவதுமாக ஆழ்ந்து கேட்டு முடித்த வசுந்தரா,சோ அந்த கேஸிலும் குற்றவாளி மாட்டலை?” என்று சொல்ல, “எஸ் மேம், போலீசால் அந்த காரை லொக்கேட் பண்ண முடியாததுனாலும், சாட்சிகள் யாரும் இல்லாததுனாலும் கேசை ஈசியா மூடிட்டாங்கன்னு நினைக்கிறேன்என்றான்.

அவுங்க மூடுனா என்ன? நாம அதைத் தோண்டி திறப்போம்!” என்று கூர் தீட்டிய விழிகள் ஜொலிக்கத் தீர்மானமாகச் சொன்னார் வசுந்தரா.

அதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் அவரைப் புரியாத பார்வை பார்க்க,எதுக்கு மாம் அந்த கேஸில் இன்வால்வ் ஆகுறீங்க?” என்று கேட்டான் அர்ஜுன்.

ஏன்னா, அவனைப் பிடிச்சா தான் உன்னோட கேஸை நாம க்ளோஸ் பண்ண முடியும் அர்ஜுன்என்று தீர்மானமாகச் சொன்னார் வசுந்தரா.

புரியலை ஆன்ட்டி??” என்ற யாழினியின் பேச்சுக்குப் பதிலளிக்க விரும்பியவர், மகனைப் பார்த்து,நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி  ஒரு விஷயம் சொன்ன.. அதாவது துளசி உன்னை எழுப்ப முயசித்ததா, ரைட்?”

ம்ம்ம்.. ஆமாம்..”

குட்!” என்றவர், விஷ்வாவின் புறம் திரும்பி,விஷ்வா! நீ கொஞ்சம் நல்லா யோசிச்சு சொல்லு! சம்பவம் நடந்த அன்னைக்கு துளசி அர்ஜுனுக்கு டிரக் கொடுத்துட்டு, அங்கிருந்து உடனே கிளம்பிட்டா தானே?”

எஸ்! அவ கிளம்பிட்டேன்னு சொன்னதுக்கு அப்புறம் தான், நான் ஏற்பாடு பண்ணி இருந்த பொண்ணையே நான் அங்கே போகச் சொன்னேன்என்றான் அவன்.

தட்ஸ் மை பாயின்ட்!” என்று இரு கைகளைத் தட்டிச் சொன்னவரின் பேச்சு புரியாது அனைவரும் மலங்க விழிப்பதைக் கண்டு, அவர்களுக்கு விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார்.

ஓகே லிசன்! என்னோட கெஸ் சரியா இருந்தா, அந்த ஆக்சிடென்ட்  பண்ணவங்களும் துளசி கேசில் இன்வால்வ் ஆகி இருக்கிறாங்கஎன்றார்.

எப்படி அதை இவ்ளோ உறதியா சொல்றீங்க மாம்?” என்ற அர்ஜுனின் வார்த்தைகளைக் கேட்டவரோ,லெட் மீ கிளியர் யூ! அந்த ஆக்சிடென்ட் நடந்து இருப்பது உன்னோட கெஸ்ட் ஹௌஸ்சுக்கு பக்கத்தில், அதுவும் துளசி மர்டர்ரான அதே நாள்!” என்ற செய்தி அங்கிருந்த அனைவருக்கும் புதிது.

அப்போ அந்த ஆக்சிடென்டுக்கும், துளசி கொலைக்கும் எதாவது சம்பந்தம் இருக்கும்ன்னு சொல்றீங்களா அக்கா?” என்று சித்ரா ஆர்வம் தாங்காது கேட்க,

இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்என்றார் வசுந்தரா.

அப்புறம் எதுக்கு மேம் அந்த கேஸை இவ்ளோ ஸ்ட்ராங்கா தோண்டனும்ன்னு சொல்றீங்க?” என்று ஜோசப் கேட்க,

எழுந்து அனைவருக்கும் நடுநாயகமாக வந்து நின்றவர்,ஏன்னா, அர்ஜுனை வெளியே கொண்டு வர எனக்கு இருக்கிற கடைசி   துருப்புச்சீட்டு, அந்த ஆக்ஸிடென்ட் பண்ணவங்க மட்டும் தான்!!” என்றார் வசுந்தரா.

புரியலை மேடம்என்று அவன் சொல்லவும்,

சம்பவம் நடந்த அன்னைக்கு கெஸ்ட் ஹவுஸ் விட்டுக் கிளம்புன துளசி, மீண்டும் எதுக்கு அங்கே திரும்பி வந்தாள்னு உங்க யாருக்காது தெரியுமா???” என்று கேட்க, அங்கே ஒரு மயான அமைதி நிலவியது.

சரி, அப்படியே வந்து இருந்தாலும், எதுக்கு அவ அர்ஜுனைத் தட்டி எழுப்ப முயற்சி செய்தான்னு தெரியுமா?” என்றவரின் கேள்விக்கு மௌனம் மட்டுமே அங்கே பதிலாக எதிரொலித்துக் கொண்டு இருந்தது.

அதை உள்வாங்கியவரும்,ஆனா அது அந்த ஆக்ஸிடென்ட் பண்ணவங்களுக்குத்தான் தெரிய அதிக வாய்ப்பு இருக்குஎன்று அடித்துச் சொன்னார் வசுந்தரா.

எப்படி??” என்ற மகனின் கேள்விக்கு,ஏன்னா, அந்த ஆக்சிடென்ட் ஏழரை டூ எட்டரைக்குள் நடந்து இருக்கணும்ன்னு ரிப்போர்ட் சொல்லுதுஎன்றவரின் கூற்றை கேட்ட அருண்,நீங்க சொல்றபடி பார்த்தாலும், துளசி மர்டர் அதுக்கு அப்புறம் தானே மேடம் நடந்து இருக்கு. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?” என்றவனின் கூற்றைக் கேட்ட வசுந்தரா,ம்ம்ம்.. குட் கொஸ்டின்!” என்று அவனை மனதார பாராட்டினார்.

அதுக்கு வலுவான ஒரு காரணம் இருக்கு அருண்என்றவர், அந்தக் காரணத்தை அங்கே இருப்பவர்களுக்கு எடுத்துரைக்க ஆரம்பித்தார்.

இந்த கேஸோட ஆரம்பத்தில் அருணாச்சலமும், ரீட்டாவும் ஒரு விஷயத்தைச் சொன்னாங்க. அப்போ எனக்கு அது பெருசா படலை. பட் இப்போ அதை நினைத்துப் பார்க்கும் போது தான் தெரியுது, அது எவ்ளோ முக்கியமான எவிடென்ஸ்ன்னுஎன்றவர் தன் பேச்சை முடிக்கும் முன் ஆர்வம் தாங்காது,என்ன அது?” என்று கேட்டான் விஷ்வா.

அதாவது, சம்பவம் நடந்த அன்று, அவுங்க கெஸ்ட் ஹௌஸ்ல வந்த தடம் தெரியாம இருக்கணும்ன்னு, அங்கே பொருத்தப்பட்டு இருந்த சர்வைலன்ஸ் கேமிரா டேட்டாவை எல்லாம் அழிக்க முனைந்த நேரம், அது எல்லாமே ஏற்கனவே அழிந்து இருந்ததுன்னு சொன்னாங்க.

இது தற்செயலா நடந்து இருக்கும்ன்னு நீங்க எல்லாம் நினைக்குறீங்களா?

அதுமட்டுமில்லை. அந்த ஆக்ஸிடென்ட் கேஸை நான் இன்னும் டீடைலா ஸ்டடி பண்ண போது தான், எனக்கு இன்னொரு விஷயமும் தெரிந்தது. அர்ஜுன் கெஸ்ட் ஹௌஸ்க்கு அடுத்தடுத்து இருந்த வில்லாக்களில் பொருத்தப்பட்டு இருந்த கேமராக்களின் அன்றைய டேட்டாக்களும் இதே போல டெலீட் செய்யப்பட்டு இருக்கிறது என்று!

இது எல்லாமே கொஞ்சம் சஸ்பீஷியஸா இல்லை???” என்றவரிடம்,

அப்போ ஆக்சிடென்ட் பண்ணவங்க தன்னைக் காப்பாத்திக் கொள்ள இதை எல்லாம் செய்து இருக்கலாம்ன்னு சொல்றீங்களா மாம்?” என்று கேட்டான் அர்ஜுன்.

ம்ம்ம்.. அதுக்கு வாய்ப்பு இருக்கு தானே அர்ஜுன்?

ஆனா இங்கே தான் நாம இன்னொன்னை நோட் பண்ணனும்.

அது என்னன்னா அவுங்க தன்னுடைய ஆக்ஸிடென்டை மறைக்க ரோட்டில் இருக்கிற கேமராக்களின் டேட்டாவை அழித்து இருக்கலாம். ஆனா  உன் கெஸ்ட் ஹௌஸ்க்கு உள்ளே, வெளியே இருக்கிற கேமராக்களின் டேட்டாவையும் அழிக்க வேண்டிய  அவசியமென்ன?” என்றதுமே அர்ஜுன் அதிர்ந்து போனான்.

மாம்! அப்போ நீங்க என்ன சொல்ல வரீங்க?” என்று தடுமாறவுமே.

மகனின் மனதை படித்தவரோ ஆணித்தரமாகச் சொன்னார்,எஸ்! என்னுடைய கெஸ் சரின்னா, ஒன்னு அந்த ஆக்ஸிடென்ட் பண்ணவங்களுக்கு துளசியை கொலை பண்ணது யாருன்னு தெரிந்து இருக்கணும்.

ஏன்னா,அவுங்களை இதுவரை போலீசாலையே ட்ரேஸ் பண்ண முடியலை. அப்படிப் பார்த்தா துளசியை கொலை செய்தவங்க ஆக்சிடென்ட் பண்ணவங்களையும் கொலை செய்து இருக்கலாம்.

இல்லைன்னா துளசியைக் கொலை செய்தது அவுங்களாகவும் இருக்கலாம். இதில் எது உண்மைன்னு எனக்குத் தெரியாது.

ஆனா அதை நான் தெரிஞ்சுக்கணும்ன்னா எனக்கு அந்த ஆக்சிடெண்ட் பண்ணவங்க வேணும்!!” என்றவரின் கூற்றைக் கேட்டு அங்கிருந்த அனைவரும்,சும்மாவா இவுங்களைப் பார்த்து கோர்ட்டே அலறுது??!!!” என்று உள்ளுக்குள் எண்ணிக் கொண்டனர்.

இதுவரை போலீசாலேயே கண்டுபிடிக்க முடியாதவங்களை , இப்போ எங்கேன்னு போய் நாம கண்டுபிடிக்கிறது மேம்? அதுவும் உயிரோட இருக்காங்களான்னே தெரியாத நிலையில்..” என்ற அருணின் அர்த்தம் பொதிந்த கேள்விக்குச் சில நிமிடங்கள் சிந்தித்து விடை கண்ட வசுந்தரா,அதுக்கும் ஒரு வழி இருக்குஎன்றார்.

அங்கிருந்த அனைவரும்,என்ன அது?” என்றவாறு அவரையே பார்த்திருந்த நேரம், தனக்கு முன் இருந்த டேபிளில், ஒரு ரூட் மேப்பை எடுத்து விரித்தார் வசுந்தரா.

அவரின் செய்கையைக் கண்ட மற்றவர்கள் தானாக எழுந்து வந்து, அந்த டேபிளைச் சுற்றி நின்று கொண்டனர்.

தன்னிடமிருந்த ரெட் ஸ்கெட்ச் கொண்டு அந்த மேப்பில் ஆக்சிடென்ட் நடந்த இடத்தை மார்க் செய்தவர்,

இது சிட்டிக்குப் போகிற ஒரு ஒன் வே ரூட். இந்த ரூட்டில் ஆக்சிடென்ட் பண்ணிட்டுக் கண்டிப்பா அவுங்களால் அதே ரூட்டில் சிட்டிக்குப் போக வாய்ப்பில்லை!

ஏன்னா, அந்த ரூட்டில் இருக்கிற சர்வைலன்ஸ் கேமெராவில் காரும், அவுங்களும் ஈசியா மாட்டிப்பாங்கன்னு நல்லாவே தெரியும்.

சோ அவுங்க வேற வழியில் தான் தப்பிக்க முயன்று இருப்பாங்க. அப்படிப் பார்த்தா அவுங்களுக்கு இருக்குற ஒரே வழி, அந்த ரூட்ல இன்னும் கொஞ்சம் தூரம் போனா பிரிகிற இந்த பைபாஸ் ரோட் தான். ஆனா இதிலும் அவுங்களுக்கு ஒரு பெரிய சிக்கல் இருக்கு.

அது என்னன்னா, இதில் ஒரு ரோட்டில் டோல்கேட் இருக்கு. மற்றொரு ரோட்டில் போலீஸ் ஸ்டேஷன் இருக்கு. சோ அதில் போவது என்பது அவுங்களுக்கு ரொம்ப ரிஸ்க்!” என்று வசுந்தரா சொல்லி முடித்த நேரம், “அப்புறம் அவுங்க எப்படித்தான் அங்கிருந்து யார் கண்ணிலும் மாட்டாமல் காருடன் தப்பித்து இருப்பாங்க மேம்?” என்று அவசரக்குடுக்கையாக கேள்வி கேட்டான் ஜோசப்.

ம்ம்ம்கூம்.. இங்கே தான் நாம நம்முடைய ஸ்மார்ட்னசை யூஸ் பண்ணனும்என்றவரின் பதில் புரியாது மற்றவர்கள் அவரையே பார்க்கவும்,

ஸீ! நீங்க சொன்ன மாதிரி அவுங்க இதில் எந்த ரோட்டிலும், ஆக்சிடென்ட்டான தன்னுடைய காரோட போனாத்தான் மாட்டிப்பங்களே தவிர தனியா போனா மாட்டிக்க வாய்ப்பில்லை தானே?” என்றதுமே அவர் போகும் ரூட் புரிந்து,செம மாம்!” என்று தாயைப் பாராட்டிய அர்ஜுன்,சோ நீங்க சொல்றபடி பார்த்தா, அவுங்க தன்னுடைய காரை சம்பவம் நடந்த இடத்துக்குப் பக்கத்தில் தான் எங்கேயோ விட்டுட்டுத் தப்பித்துப் போய் இருக்கணும்என்று சொல்லவும்,எக்ஸாட்லி!!” என்று சொன்னார் வசுந்தரா.

இந்த மூணு ரூட்லையும் சிக்காத அந்த கார் கண்டிப்பா இந்த சரௌண்டிங்குள்ளதான் நிச்சயமா இருக்கும்!” என்று வட்டமிட்டுக் காட்டியவர்,அதை மட்டும் நாம கண்டுபுடிச்சுட்டா போதும்! அந்த எக்ஸை ஈசியா கண்டுபிடிச்சுடலாம்!” என்றவரின் பேச்சைக் கேட்ட அருண்,

அப்போ நான் இப்போவே அங்கே போய் அந்த காரை தேடுறேன் மேம்என்று சொல்லிக் கிளம்ப பார்க்க, “உன் ஒருவனால் மட்டும் அது முடியாது அருண்என்று சொன்னவர்,நமக்கு காலம் குறைவா இருக்கு. சோ நாம எல்லாரும் சேர்ந்து களத்தில் இறங்கினா தான் எதையும் சீக்கிரம் கண்டுபிடிக்க முடியும்என்று  சொல்ல, உடனே விஷ்வா,நானும் உங்களுக்கு இதில் ஹெல்ப் செய்யலாமா?என்று தயங்கிக் கேட்க, “வை நாட்??” என்று அவனையும் தங்கள் குழுவில் சந்தோஷமாகச் சேர்த்துக் கொண்டார் வசுந்தரா.

தங்களுடன் கிளம்பிய அர்ஜுனைத் தடுத்த வசுந்தரா,இல்ல அர்ஜுன், நீ வர வேண்டாம். நீ வந்தா அது இந்த கேஸை திசை திருப்புற செயலா நாளைக்குச் சொல்லிடுவாங்க. அதனால தான் ஆரம்பத்தில் இருந்தே, உன்னை நான் இந்த கேஸில் எங்கயும் இன்வால்வ் பண்ணவே இல்லைஎன்று தன்னிலை விளக்கம் கொடுத்தும்,நீங்க எல்லாம் எனக்காக இவ்ளோ கஷ்டப்படும் போது, நான் மட்டும் எதுவுமே செய்யாமல் இருப்பது கஷ்டமா இருக்கு மாம்என்றான்.

தேவையில்லாமல் எதையும் போட்டுக் குழப்பிக்காம அமைதியா இரு!” என்று மகனுக்கு ஆறுதல் சொன்னவர், அங்கிருந்து செல்லும் முன் யாழினியிடம்,அவனைக் கொஞ்சம் பார்த்துக்கோ!என்று கண் ஜாடை காட்ட மறக்கவில்லை.

அதை ஏற்றவளும், தன்னவனின் கையோடு தன் கைக் கோர்த்து ஒட்டி நின்று கொண்டு,அவுங்க போனால் போகட்டும் விடு அர்ஜுன். அதான் நான் இருக்கேன்லவா, நாம கொஞ்சம் லவ் பண்ணலாம்என்றாள்.

அதைக் கேட்டு அர்ஜுன் புன்னகைத்த நேரம்,ஐயோ பாவம்!” என்று உச்சுக் கொட்டினான் விஷ்வா.

அவனின் பாவனையைக் கண்டு அவனைத் திரும்பி முறைத்தவள்,என்ன வாங்கினது பத்தலை போல!!” என்று எச்சரித்துக் கேட்கவும், தன்னிச்சையாகத் தன் கைகள் கொண்டு தன் கன்னங்களைப் பாதுகாத்துக் கொண்டான் விஷ்வா.

தம்பியின் செயலில்,அவனை அடிச்சியா?” என்று தன்னவளிடம் கேட்டான் அர்ஜுன்.

அதற்கு அவள் பதில் சொல்லும் முன்,என்னது அடிச்சாளாவா?? இடியா இடிச்சு என்னைக் கொன்னுட்டா தெரியுமா??” என்று யாழினியை முறைத்துச் சொன்னவன், அர்ஜுனின் காதில்,உன்கிட்ட இருந்து இவளைக் காப்பாத்த நினைச்சது எவ்ளோ பெரிய முட்டாள்தனம்ன்னு இப்போ தானே எனக்குத் தெரியுது!

அதுமட்டுமில்லை, இவகிட்ட மாட்டிக்கிட்ட உன் நிலைமையை நினைத்தால் தான் இப்போ எனக்குப் பயமாவே இருக்குஎன்று சிரிக்காமல் சீரியசாகச் சொல்லியவனின் பேச்சில் சிரிப்பை அடக்க மாட்டாது,அப்படியா சொல்ற??” என்று பாவமாகக் கேட்டான் அர்ஜுன்.

 அண்ணன்தம்பி இருவரும் தன்னை வைத்து ஏதோ பேசி சிரிக்கிறார்கள் என்று யூகித்த யாழினி,அங்கே என்னடா முணுமுணுப்பு? நீ செஞ்சதுக்கு உன்னை எல்லாம் கொல்லாம விட்டேன்னு சந்தோஷப்பட்டுக்கோ!” என்று விஷ்வாவிடம் எகிறியவள், அர்ஜுனைத் தன்புறம் இழுத்து நிறுத்திஅவன் செஞ்ச செயலுக்கு அவனை சும்மாவா விட முடியும்..?? நானே தவமா தவமிருந்து உங்களை கரெக்ட் பண்ணுறதுக்குள்ள, இந்த எருமை அதைக் கெடுக்க என்ன என்ன வேலை செய்து இருக்கு??” என்று சொல்லும் பொழுதே யாழினியின் முகம் செந்தணலாக மாறுவதைக் கண்ட விஷ்வா,

பெரியம்மா! ஒரு பெரிய சூறாவளி வரப் போற அறிகுறி எனக்குத் தெரியுது. அது வருவதற்குள் வாங்க இங்கே இருந்து கிளம்பிடலாம்என்று பயந்த குரலில் சொல்லியபடி, வசுந்தராவை அங்கிருந்து இழுக்காத குறையாக நகர்த்திக் கொண்டு ஓடினான்.

அவனின் செயலைக் கண்டவளோ,போடா! போ! எங்கே போனாலும் இங்கே தான் திரும்பி வந்தாகணும். அப்போ இருக்குடா உனக்கு!!” என்று கறுவி விட்டு, அர்ஜுனைப் பார்த்து,உங்களுக்கு அவனுடன் என்ன பேச்சு?” என்று முறுக்கிக் கொண்டு கேட்க, அவளைக் கொஞ்சி கெஞ்சியே சமாதானப்படுத்தினான் அர்ஜுன்.

இரண்டு நாட்கள் விபத்து நடந்த இடத்தைச் சுற்றி வலை போட்டுத் தேடாத குறையாக அனைவரும் தேடி அலைந்த நேரம், வசுந்தராவை போனில் அழைத்த அருண்,மேம் ஆடு சிக்கிடுச்சு! ஆனா தலையைத் தான் ஆட்ட மாட்டேங்குதுஎன்று அர்த்தத்துடன்பொறி மாட்டிடுச்சு!என்று தகவல் சொன்னான்.

அதில் சந்தோஷமடைந்தவரோ,ஊத்த வேண்டிய மஞ்ச தண்ணியை சரியா ஊத்துனா, பலியாடு தானா தலையாட்டும் அருண்!” என்றார் அர்த்தத்துடன்.

மேலும்,நான் வரும் வரை அவனை நகர விடாது பத்திரமா பார்த்துக்கோ!” என்று சொன்னவர், உடனே விஷ்வாவுடன் அருண் அனுப்பியிருந்த லொகேஷனுக்குச் சென்றார்.

அது ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு மெக்கானிக் ஷெட். அங்கே தான் அந்த ஆக்சிடென்ட்டான கார் பழுது பார்க்கப்பட்டு இருக்கிறது என்பதை உறுதி செய்திருந்த வசுந்தரா, அதைப் பழுது பார்த்தவனிடம் கேட்க வேண்டிய விதத்தில் அரட்டி உண்மையைக் கேட்டார்.

அதில் அரண்டு போனவன் உயிர் பயத்தில்,இவர் தான் மேடம் அந்த காருக்கு ஓனர்!” என்றதைக் கேட்ட வசுந்தராவுக்கு பேரதிர்ச்சி என்றால், அவருக்கு அருகில் நின்று இருந்த விஷ்வாவோ, அதை ஏற்றுக் கொள்ளவே முடியாதபடி,நோ! நோ! இவரா இருக்க வாய்ப்பே இல்லை என்றான்

ஏனென்றால் அந்த மெக்கானிக் பார்த்திருந்த புகைப்படத்தில் இருந்தது யாழினியின் தந்தை ராகவன்.

Advertisement