Advertisement

இன்றைய ஹியரிங்கின் ஆரம்பத்தில் இருந்தே நீலகண்டன் அர்ஜுனைத் தாக்கியே பேசிக் கொண்டு இருந்தார்.

மிஸ்டர்.அருணாச்சலம் சொல்வதைப் பார்த்தால்,

சம்பவம் நடந்த அன்று, மிஸ்.ரீட்டாவுக்கு போன் செய்த அர்ஜுன், நாளைய கெஸ்ட் லிஸ்டில் தன் தாயின் பெயரைச் சேர்க்கும்படி சொல்லியிருக்கார்.

அதை ரீட்டா அருணாச்சலத்திடம் தெரிவிக்கவும், அப்பாவுக்கும் மகனுக்குமிடையே ஒரு பெரிய சண்டை அரங்கேறி இருக்கிறது.

அதன் முடியில், தன் தாய் வரவில்லை என்றால் நாளைய நிச்சயமே நடக்காது என்று கோபத்தின் உச்சியில் இருந்து அர்ஜுன் தந்தையிடம் கத்தி விட்டு, போனை அணைத்து இருக்கிறார்.

மகனின் பிடிவாத குணம் அறிந்த அருணாச்சலம், அவனைச் சமாதானப்படுத்த எண்ணி, அன்றிரவு அவனைக் காண அந்த கெஸ்ட் ஹௌஸ்க்குப் போய் இருக்கிறார்.

ஆனால் அங்கே சுயநினைவு இழந்து, கைகளில் ரத்தம் சொட்ட சொட்ட தரையில் கிடந்த மகனையும், அவனருகில் மூச்சு பேச்சு இன்றி கிடந்த துளசியையும் கண்டு உறைந்து போனவர்..

உடனே ஒரு தந்தையாகத் தன் மகனை அந்தக் கொலை வழக்கில் இருந்து காப்பாற்ற எண்ணி, துளசியின் பாடியை அங்கே இருந்து அப்புறப்படுத்தி இருக்கிறார்.

இதில் நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான் யுவர் ஆனர்!

ஒரு தந்தையே, தன் மகன், அந்தக் கொலையைச் செய்து இருப்பான் என்று நம்பும் போது, நாம் ஏன் அதை நம்பக் கூடாது? அதுமட்டுமில்லை யுவர் ஆனர்! அர்ஜுன் அந்த காரை ஓட்டவில்லை என்பதால் அவன் இந்தக் கொலையைச் செய்யவில்லை என்று ஆகி விடுமா என்ன?” என்று உரக்கக் கேட்டு விட்டு, வசுந்தராவை நக்கலுடன் நோக்கியபடியே தன் நாற்காலியில் வந்து அமர்ந்தார் நீலகண்டன்.

உங்களுக்கு ஏதாவது இதில் எதிர்ப்பு இருக்கா?’ என்பது போல நீதிபதி வசுந்தராவைப் பார்க்கவும், எழுந்து நின்றவர்,மிஸ்டர்.நீலகண்டனின் வாதம் என் கட்சிக்காரர் தான் இந்தக்  கொலையைச் செய்தார் என்று அனைவரையும் நம்ப வைக்கும்படி இருந்தது. நைஸ் ஸ்பீச்!” என்று முதலில் அவரைப் பாராட்டவும்,

அவ்வளவு நேரமிருந்த கடுகடுப்பு மறைந்து முகம் மலர்ந்து போனார் நீலகண்டன்.

ஆனால் அதை முழுதாகச் செய்ய விடாமல், தன் அடுத்த வார்த்தைகளில் அவரை முகம் இறுக வைத்து இருந்தார் வசுந்தரா.

ஆனால் பாவம்! அவரே அதில் ஒன்றைக் கவனிக்காமல் போய் விட்டார். அதைத்தான் நான் இங்கே சொல்ல விரும்புகிறேன் யுவர் ஆனர்!” என்றவரிடம்,

என்ன அது?” என்று கேட்டார் நீதிபதி.

அதாவது மிஸ்டர்.அருணாச்சலம் அந்த கெஸ்ட் ஹவுஸ் சென்ற போது, அர்ஜுன் தன் சுயநினைவில் இல்லை என்பது தான் அது யுவர் ஆனர்!” என்றவரின் பேச்சைக் கேட்டு,அதில் என்ன இருக்கு குறிப்பிடும்படி??” என்று எழுந்து குறுக்கு கேள்வி கேட்டார் நீலகண்டன்.

இந்த கேஸையே திசை திருப்பும் முக்கிய சாட்சியே அங்கே தான் இருக்கு யுவர் ஆனர்!” என்றார் வசந்தரா ஒருவித அழுத்தத்துடன்.

இந்த ரிப்போர்ட்டில், கடைசியாகக் குறிப்பிட்டு இருக்கும் அந்த வரிகளை நீங்க கொஞ்சம் படிக்கணும்ன்னு நான் கேட்டுக்கிறேன் யுவர் ஆனர்!” என்ற வசுந்தரா, அங்கிருக்கும் மற்றவர்களும் அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று, அங்கே இருந்த திரையிலும் ஒளிரச் செய்தார்.

இது அர்ஜுனை ஹிப்னாடிஸம் செய்த டாக்டரின் அறிக்கை. அதில் அவர் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறார். அர்ஜுனுக்குச் சம்பவம் நடந்த அன்று என்ன நடந்தது என்றே தெரியவில்லைஎன்று வசுந்தரா தன் பேச்சை முடிக்கும் முன், அதை இடைமறித்த நீலகண்டன்,இது தான் நமக்கு ஏற்கனவே தெரியுமே யுவர் ஆனர்?” என்றார்.

அதில் அவரைத் திரும்பிப் பார்த்த வசுந்தராஅது தெரியும்.. ஆனால் அவர் ஏன் அப்படியிருந்தார் என்று யாருக்காவது தெரியுமா?” என்று கேட்டதில் வாயடைத்துப் போய் அமர்ந்தார் நீலகண்டன்.

தட்ஸ் மை பாய்ன்ட் யுவர் ஆனர்! இந்த அறிக்கையில் டாக்டர் கோடிட்டுக் காட்டி இருப்பதை நீங்கள் அனைவரும் கொஞ்சம் கவனிக்க வேண்டும்என்று நீதிபதியைப் பார்த்துச் சொல்லிய வசுந்தரா,

இதில் டாக்டர் என்ன சொல்லி இருக்கார் என்றால், அர்ஜுனுடைய அந்தச் சில மணி நேர பிரைன் ப்ளாக்கிற்கு, இரண்டே இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும்.

நம்பர் ஒன், அவனை யாராவது பின்தலையில் பலமாக அடித்து இருக்க வேண்டும்.

இல்லை, அவன் தன் சுயநினைவை இழக்கும் வகையில் ஏதாவது  போதைப் பொருளை உட்கொண்டு இருக்கணும்என்று வசுந்தரா தன் வாதத்தை முடிக்கும் முன் மீண்டும் குறுக்கிட்டார் நீலகண்டன்.

யுவர் ஆனர்! இவர் சொல்வது போல அர்ஜுனின் உடம்பில் மட்டுமில்லை, தலையில் கூட எந்தவித காயங்களும் இல்லை என்பதை நாம் அனைவருமே நன்றாக அறிவோம். அதே மாதிரி அவன் அன்று முழுப் போதையில் தான் இருந்தான் என்பதையும் ஏற்கனவே நிருபிச்சாச்சு.

சோ இதில் புதிதாக நாம் கேட்பதற்கும், ஆராய்வதற்கும் எதுவுமே இல்லை. சோ தேவையில்லாமல் நம் நேரத்தை எல்லாம் வீணடிக்க வேண்டாம் என்று மேடத்திடம் நான் கேட்டுக் கொள்கிறேன்என்றவரின் வார்த்தைகளைக் கேட்டு அவரைப் பார்த்துப் புன்னகைத்த வசுந்தரா, “நான் சொல்ல வந்ததை முழுசா கேட்டா தானே சார், நேரத்தை வீணடிப்பது நானா இல்லை நீங்களான்னு தெரிய வரும்என்று நக்கலாகக் கொட்டு வைத்தார்.

அதே நேரம் நீதிபதியும் தன் பங்கிற்கு,டோன்ட் இன்டரெப்ட் மிஸ்டர்.நீலகண்டன்!” என்று ஆணையிட்டுச் சொல்லவும், முகம் சூம்பி போனவர் தன்னிடம் சென்று அமரவும்,யூ கன்ட்டினியூ..” என்று வசுந்தராவிடம் சொன்னார் நீதிபதி.

எஸ் யுவர் ஆனர்!” என்றவர்,

தன் விட்டுப் போன பேச்சை மீண்டும் தொடர ஆரம்பித்தார். “அர்ஜுனின் இந்த மெடிக்கல் ரிப்போர்ட்படி, அவன் உடம்பில் மட்டுமில்லை, அவன் தலையில் கூட எந்தவித பலத்த காயங்களும் இல்லை என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் டாக்டர் சொல்லியிருந்த அந்த இரண்டாவது காரணம்..

அதில் தான் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது யுவர் ஆனர்!

அதாவது அன்று அர்ஜுன் சுயநினைவை இழக்கும் அளவுக்கு சென்றதற்குக் காரணம், அவன் குடித்த மதுபானம் கிடையாது. அதில் அவனுக்கே தெரியாமல் கலக்கப்பட்ட போதைப்பொருள் என்பதையும், அதை அவனின் பானத்தில் கலந்தது யார்? அதைக் கலக்கச் சொன்னது யார் என்பதற்கான விடை தெரிந்தாலே, இந்தக் கொலையை அர்ஜுன் செய்யவில்லை என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்என்ற வசுந்தராவின் வாதம் கேட்டு, அங்கே ஒரு பலத்த சலசலப்பு ஏற்பட்டது.

என்ன சொல்றீங்க வசுந்தரா? அப்போ இந்த கொலைக்குப் பின் வேறு யாரோ இருக்கிறார்களா?” என்று கேட்ட நீதிபதியிடம்,எஸ் யுவர் ஆனர்!” என்று தீர்க்கமாகப் பதிலளித்தார் வசுந்தரா.

இந்த இடத்தில் நான் கொஞ்சம் பேசலாமா யுவர் ஆனர்?” என்று சூடு கண்ட பூனையாக மாறி உத்தரவு கேட்ட நீலகண்டனுக்கு,எஸ் ப்ரொசீட்!” என்றார் நீதிபதி.

யுவர் ஆனர்! என்னுடைய ரிக்வெஸ்ட் ரொம்ப சிம்பிள்! இந்த நீதிமன்றத்துக்குத் தேவை சாட்சிகளும், ஆதாரங்களுமே தவிர கட்டுக்கதைகள் இல்லை. அப்படி ஏதாவது இருந்தா காட்ட சொல்லுங்க ப்ளீஸ்!” என்றவரின் கேலிக்குப் பின் இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை, தன் எகத்தாளமான இதழ் விரியா புன்னகையில் எதிர்கொண்ட வசுந்தரா,ஆதாரமில்லாமல் பேச நான் ஒன்னும் கத்துக்குட்டி இல்லையே யுவர் ஆனர்??” என்றவர்,

அனைத்திற்கும் என்னிடம் ஆதாரம் இருக்குஎன்றதும் ஆடிப் போய் விட்டார் நீலகண்டன்,அது எப்படி இருக்கும்?’ என்ற எண்ணத்தில்..

அர்ஜுனுக்கு ட்ரக் கொடுத்தது யார் வசுந்தரா?” என்று கேட்ட நீதிபதியின் கேள்விக்கு,வேற யாரு? துளசி தான் யுவர் ஆனர்!” என்று வசுந்தரா சொல்லவும், பல்லைக் காட்ட ஆரம்பித்து விட்டார் நீலகண்டன்.

அதைக் கண்டு நீதிபதி அவரைக் கண்டித்துப் பார்வை பார்க்கவும்,சாரி யுவர் ஆனர்!” என்றபடி எழுந்து நின்றவர்,மேடம் சொல்வதைப் பார்த்தா, செத்துப் போன பெண் அர்ஜுனுக்குப் போதை ஏத்தி விட்டுட்டு, அவருக்குப் பக்கத்துலேயே தற்கொலை பண்ணிக்கிட்டான்ற மாதிரி இருக்கவும், என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லைஎன்று தன்னிலை விளக்கம் கொடுத்தவர்..

சரி மேடம், நீங்க சொல்றபடியே துளசி தான் அர்ஜுனுக்குப் போதை கொடுத்து சுயநினைவை இழக்கச் செய்தார் என்றே வைத்துக் கொள்ளலாம். அதை எப்படி இங்கே நிருபிக்கப் போறீங்கசெத்துப் போன பெண்ணைத் தோண்டி எடுத்துட்டு வந்தா?? இல்லை எப்பவும் செய்வீங்களே அது மாதிரி இன்னும் கொஞ்சம் டைம் வேணும்ன்னா?” என்று வசுந்தராவை எள்ளி நகையாட ஆரம்பித்தார்.

அதற்கு வசுந்தராவிடமிருந்து பதில் வரும் முன்னே நீதிபதியை நோக்கித் திரும்பிய நீலகண்டன், “யுவர் ஆனர்! இந்த கேஸை பொறுத்தவரை, குற்றவாளி தான் நிரபராதி என்று நிரூபிக்க தேவைக்கு அதிகமாகவே அவருக்கு நாம் அவகாசம் கொடுத்து விட்டோம்.

சோ இதுக்கு மேலயும் அது தொடரக் கூடாது என்று நான் கேட்டுக் கொள்கிறேன்என்றார்.

அவரின் பேச்சைக் கேட்ட நீதிபதிக்கும், அவர் சொல்வது சரி என்று பட்டதால் வசுந்தராவைப் பார்த்தவர்,நீங்க சொன்னதற்கு என்ன ஆதாரம்??” என்று கேட்டார்.

அவரின் பேச்சே மறைமுகமாகச் சொன்னது, ஆதாரம் இல்லையென்றால் இனி அவகாசம் இல்லை என்று..

அதைச் சரியாக உள்வாங்கிய வசுந்தராவும்,துளசியை அவ்வாறு செய்ய சொன்னவனே இதற்கு ஆதாரம் யுவர் ஆனர்!” என்றார்.

அவரின் அந்த தடாலடி பேச்சைக் கேட்டு,அவர் யார்?” என்று நீதிபதி கேட்கவும், “அருணாச்சலத்தின் இரண்டாவது மகனான மிஸ்டர்.விஷ்வா தான் அது!” என்று சொல்லி பேரிடியைச் சித்ரா தலையில் இறக்கி இருந்தார் வசுந்தரா.

என்னது? என் மகனா?’ என்று அதிர்ச்சி விலகாது தனக்குப் பக்கத்தில் அமர்ந்து இருந்த மகனைச் சித்ரா திரும்பிப் பார்த்த அதே நேரம், அவரைப் போலவே தன் தாயை அதிர்ச்சி விலகாது பார்த்தான் அர்ஜுன்.

காலையில்,இன்று கோர்ட்டில் என்ன நடந்தாலும் நீ அமைதியா இருக்கணும் அர்ஜுன்! அதே போல எல்லா குற்றத்திற்கும் பின் இருக்கும் காரணம் தெரியாது, யாரையும் தண்டிக்க நினைக்காத! முக்கியமா உன் உறவுகளை..” என்று பீடிகை போட்டுப் பேசியவரின் பேச்சுக்குப் பின் இருக்கும் காரணம் இது தானா? என்று எண்ணியவனின் உள்ளமோ,விஷ்வாவா என்னை இந்தக் கொலையில் சிக்க வைத்தவன்??” என்பதில்  உலைக்கலனாக மாறி கொதிக்க ஆரம்பித்தது.

சாட்சி கூண்டில் விஷ்வா ஏறவும், அவனை நெருங்கிச் சென்ற வசுந்தரா, “அன்னைக்கு துளசிகிட்ட ‘XXXX’ என்ற அந்தப் போதை மாத்திரையைக் கொடுத்து, அர்ஜுனுக்குக் கொடுக்கச் சொன்னது நீங்க தானே?” என்று கேட்க,

அதற்குப் பதில் அளிக்க முடியாமல் அமைதியாகத் தலை குனிந்தவனின் செயலில், அவனை விடுத்து நீதிபதியின் புறம் திரும்பிய வசுந்தரா,இதைக் கொஞ்சம் பாருங்க யுவர் ஆனர்!” என்று அங்கிருந்த திரையை ஆன் செய்து காண்பித்தார்.

அங்கே அருணாச்சலத்தின் வீட்டுக்கு வெளியே சிறிது தூரத்தில், துளசியிடம் விஷ்வா எதோ ஒன்றைக் கொடுப்பதும், அதை அவள் முதலில் மறுக்க, மீண்டும் விஷ்வா பலமுறை அவளை வற்புறுத்தி, அவள் கையில் அதைத் திணித்து அனுப்பி வைப்பதும் மிகத் தெளிவாகத் தெரிந்தது.

இதில் இருப்பது நீங்க தானே மிஸ்டர்.விஷ்வா?” என்று கேட்ட வசுந்தராவின் கேள்விக்கு,ஆம்!” என்று மட்டும் வேறு வழியே இன்றித் தலையாட்டினான் அவன்.

சரி, இப்போ சொல்லுங்க.. நீங்க துளசி கையில் கொடுத்தது என்ன??” என்று கேட்க,

உடனே அதற்குப் பதிலளிக்க முடியாது தவித்தவன், கூனி குறுகிப் போய் தன் தாயை நோக்கினான்.

உங்க கிட்டத்தான் கேட்கிறேன் மிஸ்டர்.விஷ்வா! அது என்ன?” என்று இந்த முறை சற்றுக் குரலை உயர்த்தி வசுந்தரா கேட்கவும்,

அது ஒரு ட்ரக்என்று பதிலளித்தான் விஷ்வா.

அதை எதுக்கு நீங்க துளசியிடம் கொடுத்தீங்கன்றதையும் நீங்களே சொல்லிடுங்க!” என்று வசுந்தரா சொல்லவும்,

மீண்டும் விஷ்வாவிடம் ஒரு தடுமாற்றத்துடன் கூடிய தயக்கம்  தோன்றியது. அதில்,அது.. அது..” என்று பேச முடியாது திணறியவனின் திணறலில் நீதிபதியின் புறம் திரும்பிய வசுந்தரா,

இந்த விஷ்வா தான் அர்ஜுன் மீது இருக்கும் பழிவெறியில் துளசி மூலமாகவே தன் அண்ணனுக்கு ட்ரக் கொடுத்தது.

இவன் தான் அந்தப் பொண்ணையும் கொன்னது.

அந்தப் பழியையும் தன் அண்ணன் மேலேயே மிகத் தந்திரமா சுமத்திய உண்மை குற்றவாளி!” என்று அடுக்கடுக்காகக் குற்றம் சுமத்தியவரின் பேச்சைக் கேட்டு அரண்டு போனவனோ,இல்லை! இல்லை! நான் அந்தப் பெண்ணைக் கொலை செய்யலை!” என்று தன் கூட்டில் இருந்து வெளிவந்து கத்த ஆரம்பித்தான் .

அப்போ யார் செய்தது?” என்று மீண்டும் அவனை நெருங்கி மர்மப் புன்னகையுடன் கேட்டார் வசுந்தரா.

ஏனென்றால் அவருக்குத் தெரியும், இப்படி ஒரு அதிர்ச்சி வைத்தியம் செய்யவில்லை என்றால் விஷ்வா வாய் திறந்து உண்மையைச் சொல்ல மாட்டான் என்று.

அதுமட்டுமில்லை, விஷ்வா துளசியைக் கொலை செய்யவில்லை என்பதையும் வசுந்தரா அறிவார். அவன் ஏன் அதைச் செய்தான் என்பதையும் அவர் அறிவார்.

விஷ்வா கொலையாளி இல்லை என்று தெரிந்தும், அவனை இன்று குற்றவாளி கூண்டில் அவர் ஏற்ற காரணம் இருந்தது. அது விஷ்வாவின் இந்தச் செயலுக்குப் பின் இருக்கும் அந்த உண்மையை அர்ஜுன் அறிய வேண்டுமென்று வசுந்தரா விரும்பினார்.

சரி, நீங்க அந்தக் கொலையை செய்யவில்லை என்றால், அன்னைக்கு நீங்க என்ன என்ன செஞ்சீங்கன்னும், ஏன் செஞ்சீங்கன்னும் எங்களுக்குக் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க!” என்று வசுந்தரா உந்தித் தள்ளவும், கீ கொடுத்த பொம்மையாக மாறிப் பேச ஆரம்பித்தான் விஷ்வா.

சின்ன வயசில் இருந்தே அர்ஜுனோட ஆட்டிட்யூட் எனக்குப் பிடிக்காது. அவனுக்கும் என்னைப் பிடிக்காது. அப்படித்தான் நாங்க ரெண்டு பேரும் வளர்ந்தோம்.

எப்பவும் என் டாட் அவனை உயர்த்தி, என்னைத் தாழ்த்தி நடத்தும் போது எல்லாம் எனக்கு அர்ஜுன் மீது தான் வெறுப்பு வரும்.

அந்த வெறுப்பு உச்சத்தைத் தொட்டது, அவனுக்கும் யாழினிக்கும் என்கேஜ்மென்ட் நடக்கப் போற விஷயம் தெரிந்து தான்!

ஏனென்றால் யாழினி ரொம்ப ரொம்ப நல்ல பெண். என்னோட பெஸ்ட் ப்ரெண்ட்! அவளுக்குப் போய் அர்ஜுன் மாதிரி ஒரு முரடன், யாரையும் மதிக்கத் தெரியாதவன் கணவனா வருவதா?? என்று நான் நினைத்தேன்.

அதையே பலமுறை அவளிடமும் சொல்லிப் பார்த்தேன். ஆனா அவ அதைக் கேட்கலை. இப்படிப்பட்ட நேரத்தில் தான் என்னோட டாட் அர்ஜுனோட கல்யாணம் மூலமா அவனுக்கு கம்பெனியில் இருக்கும் ஷேர்ஸ் இன்னும் அதிகமாகப் போகுது என்றும், அதனால் இனி அவனை யாராலும் அசைக்க முடியாது என்றும், அவரோட ப்ரென்ட்கிட்ட பெருமையா பேசிட்டு இருந்ததை நான் கேட்டேன்.

ஏற்கனவே என்னை ஒரு பொருட்டா அவர் மதிக்க மாட்டார். அப்படியிருக்கும் போது, இந்தக் கல்யாணம் நடந்தா, நான் அவ்ளோதானான்ற எண்ணம் என்னை அரிக்க ஆரம்பிச்சது.

அப்போதான் என்னோட பிரண்ட் எனக்கு ஒரு ஐடியா கொடுத்தான். அர்ஜுனோட என்கேஜ்மென்ட்குள்ள அவன் இமேஜைக் காலி செய்தா, ஆட்டோமெட்டிக்கா கம்பெனியில் இருந்து மட்டுமில்லாமல் யாழினியோட வாழ்க்கையில் இருந்தும் அவனை ஈஸியா இறக்கிட முடியும்ன்னு.

எனக்கும் அவன் சொன்னது சரின்னு பட்டதால், அதைச் செய்ய சரியான சந்தர்ப்பத்திற்காக நான் காத்திருந்த போது தான், நிச்சயத்திற்கு முந்தின நாள் அர்ஜுன் கெஸ்ட் ஹௌசில் தனியா இருப்பதையும், அங்கே கிளீன் பண்ண துளசி கிளம்புறதையும் அறிந்து, அவளை வீட்டுக்கு வெளியே கொஞ்சம் தூரம் தள்ளி சந்திச்சு ஒரு மாத்திரையைக் கொடுத்து, இதை அர்ஜுனுக்கு  எப்படியாவது கொடுத்திடுன்னு சொன்னேன்.

அதை வாங்க மறுத்தவளோ, எதுக்கு ஏன்னு என்று கேட்டாள்.

அவளைச் சாமளிக்க எண்ணிய நான், அவனுக்கு ஹை பீவர்! அவனைப் பத்தி தான் உனக்கே தெரியுமே? இந்த மாத்திரை கீத்திரை எல்லாம் போடுற ஆளா அவன்?

ஆனா நாளைக்கு பங்க்ஷனை வச்சுக்கிட்டு இவன் இப்படி இருக்கிறதில் அப்பாவுக்கு பயங்கர டென்ஷன்! அதான் அம்மாகிட்ட சொல்லி அவனை ஏதாவது டேப்லெட்டாவது சாப்பிட வைக்கும்படி சொல்லியிருக்கார்.

அதனால தான் அவுங்க இதை உன்கிட்ட கொடுக்கச் சொல்லி, என்கிட்டே கொடுத்து அனுப்பினாங்கன்னு நான் சொன்ன பொய்யை நம்பிய அந்தப் பெண்ணும்,

நான் கொடுத்தா மட்டும் எப்படி அவர் சாப்பிடுவார்?” என்று கேட்டாள்.

நீ சொல்றதும் சரி தான்என்று சிறிது நேரம் சிந்திப்பது போல பாவனை செய்து விட்டு,ஒன்னு பண்ணு! அர்ஜுனுக்குத் தெரியாமல் எதிலாவது இதைக் கலந்து கொடுத்துடு! அவன் தூங்கிடுவான், பீவரும் தானா குறைஞ்சுடும்என்று நான் சொன்னதை நம்பியவளும், சரின்னு அதை வாங்கிட்டுப் போய் அர்ஜுனுக்குக் கலந்து கொடுத்துட்டு எனக்குத் தகவல் கொடுத்தா.

உடனே நானும் என் திட்டப்படி துளசி அங்கிருந்து கிளம்பியதும், ஏற்கனவே நான் ஏற்பாடு செய்து இருந்த ஒரு பெண்ணை அர்ஜுன் கெஸ்ட் ஹௌஸ் போய், அங்கே மயங்கி கிடப்பவனுடன், சில நெருக்கமான புகைப்படங்களை எடுத்து அனுப்ப சொல்லி அனுப்பினேன்.

அவள் அந்தப் புகைப்படங்களை எடுத்து அனுப்பவுமே, அதை இணையத்தில் விட்டு, அர்ஜுனின் இமேஜை மட்டுமில்லை அவனையும் சேர்த்து அதல பாதாளத்தில் தள்ள நினைத்தேன்

ஆனால் அப்படி ஒன்றுமே நடக்கவில்லைஎன்று வருந்திய குரலில் சொன்னவனிடம்,

ஏன் நீங்க சொன்னபடி தான் எல்லாத்தையும் கச்சிதமா செஞ்சு இருக்கீங்களே, அப்புறம் என்ன??” என்று குறுக்கே கேள்வி கேட்டார் வசுந்தரா.

இல்ல இல்ல.. அன்னைக்கு அர்ஜுன் நினைவிழந்தது மட்டும் தான் நான் நினைத்த மாதிரி நடந்த ஒரே விஷயம்!” என்றான் விஷ்வா.

என்ன சொல்றீங்க? கொஞ்ச விளக்கமா சொல்லுங்க!என்ற வசுந்தராவின் வார்த்தைகளுக்கு உடன்பட்டு,அன்னைக்கு நைட் அர்ஜுனோட நெருக்கமா போட்டோ எடுக்கச் சொல்லி நான் அனுப்பி இருந்த பெண், அங்கே போன நேரம், வேறு ஒரு பெண் அர்ஜுனை உலுக்கிக் கொண்டு இருப்பதைக் கொஞ்ச தொலைவில் இருந்தே கண்டு விட்டு, உடனே எனக்கு அழைத்துச் சொன்னாள்.

ஒருவேளை யாழினி தான் அர்ஜுனைச் சந்திக்க அங்கே சென்று விட்டாளோ?? என்று எண்ணிப் பயந்த நானும், உடனே அவளை அங்கிருந்து செல்ல சொல்லி விட்டேன்.

இது தான் நடந்தது!!

அர்ஜுனுக்கு ட்ரக் கொடுத்தது நான் தான்! ஆனா துளசியை யார் கொலை செய்தார்கள் என்று சத்தியமா எனக்குத் தெரியாது!!” என்று அடித்துச் சொன்னான் விஷ்வா.

அதைப் பொறுமையாக அவ்வளவு நேரம் கேட்டுக் கொண்டு இருந்தவரோ,தட்ஸ் ஆல் யுவர் ஆனர்!” என்று சொல்லித் தன்னிடம் வந்து அமர்ந்தார் வசுந்தரா. உடனே விஷ்வாவிடம் சென்ற நீலகண்டன்,

நீங்க சொல்றது உண்மையா இருந்தா, அர்ஜுனோட ப்ளட் டெஸ்டில் அந்த ட்ரக் பத்தி மென்ஷன் பண்ணி இருக்கணும் தானே??

ஆனா அப்படி எதுவும் அவரின் மெடிக்கல் ரிப்போர்ட்டில் மென்ஷன் ஆகலையே யுவர் ஆனர்??” என்று வாதாடிப் பார்த்தார் நீலகண்டன்.

ஆனால் அதற்கும்,நான் பதில் சொல்றேன் யுவர் ஆனர்!” என்று எழுந்து நின்ற வசுந்தராவைக் கண்டவருக்கு பற்றிக் கொண்டு வந்தது. இருந்தும் நிலைமை உணர்ந்து பேசாமல் நின்று இருந்தார், என்னதான் சொல்கிறார் என்று பார்ப்போம் என்ற விதமாக..

விஷ்வா அர்ஜுனுக்கு கொடுக்கச் சொன்னது ‘XXXX’ என்ற இந்த மாத்திரை தான்!

இந்த மாத்திரை பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், இது யார் உடம்பில் செலுத்தப்பட்டாலும், அடுத்த ஆறுமணி நேரத்திற்கு அவருடைய மூளையை ப்ளாக் ஆக்கிடும். இதுல இன்னொரு ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், அந்த ஆறுமணி நேரத்திற்குள் அவருடைய ப்ளட் சாம்பிளை எடுத்தால் மட்டுமே, இப்படி ஒரு மருந்து அவருடைய உடம்பில் செலுத்தப்பட்டு இருக்கு என்பதையே நம்மால் கண்டறியவே முடியும்!

அதானால் தான் இதைத் தங்களுடைய திட்டத்திற்கு விஷ்வா பயன்படுத்தியதே.

கமிங் டூ தி பாயின்ட்.. துளசி கொலை வழக்கில் அர்ஜுன் கைது செய்யப்பட்டது, அவனின் ப்ளட் டெஸ்ட் எடுக்கப்பட்டது எல்லாமே மறுநாள் மதியம் தான்.

ஆனால் அவனுக்கு டிரக் கொடுக்கப்பட்டது முதல் நாள் இரவு ஏழு மணி வாக்கில். அதனால் தான் அவனின் உடம்பில் செலுத்தப்பட்ட அந்த ட்ரக்கை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை யுவர் ஆனர்!” என்று தெளிவான விளக்கத்தைக் கேட்ட பின்னரும் நீலகண்டன்,நீங்க சொல்வது எல்லாம் ஓகேன்னே வச்சுப்போம். அப்போ துளசியைக் கொலை செய்தது யார்?” என்ற கேள்விக்கு வசுந்தரா பதிலளிக்கும் முன் தானாகவே மீண்டும் அவரே பேசினார்.

யுவர் ஆனர்! இவர்கள் சொல்வது எல்லாம் உண்மைன்னே வச்சுக்கிட்டாலும், ஏன் அர்ஜுன் துளசியைக் கொலை செய்து விட்டு, அதன்பின் அவள் கலந்து கொடுத்ததைக் குடித்து மயங்கி இருக்க கூடாது??” என்றவரின் வார்த்தைகளைக் கேட்ட வசுந்தரா,அப்படி ஒன்று நடந்து இருந்தால், கண்டிப்பா ஹிப்னாடிசத்தில் அது தெரிய வந்து இருக்கும் யுவர் ஆனர்! ஏனென்றால் அந்த மாத்திரையை சாப்பிட்ட பின்னான ஆறுமணி நேர நினைவுகளை மட்டுமே அர்ஜுன் இழந்து இருந்தானே தவிர, அன்றைய மொத்த நினைவுகளையும் இல்லை!” என்றவரின் கூற்றைக் கவனித்துக்கொண்டு இருந்த நீலகண்டன்,

அதெப்படி உங்களால் உறுதியாக சொல்ல முடியும்? ஒருவேளை அந்த மருந்து ர்ஜுனின் உடலில் சென்று முழுவதுமாக கலப்பதற்குள்ளேயே கூட இந்தக் கொலை நடந்து இருக்கலாமே?” என்றவரின் வாதத்தைக் கேட்ட வசுந்தரா,

ஓகே, லெட் மீ கிளியர் திஸ்!” என்றவர் அதற்கான  விளக்கத்தைக் கொடுக்க ஆரம்பித்தார்அர்ஜுனுக்கு துளசி மாத்திரையைக் கலந்து கொடுத்தது ஏழு மணி வாக்கில்.. அவள் கொலை செய்யப்பட்டு இருப்பதாகக் கொடுக்கப்பட்டு இருக்கும் நேரம் எட்டு டூ ஒன்பது என்று மிகத் தெளிவாகவே இருக்கு.

நீங்க சொல்ற மாதிரி பார்த்தால், ஏழு மணிக்கு உள்ளே போன போதைப் பொருள் அர்ஜுனின் உடம்பில் கலக்க ஒரு மணி நேரமா எடுத்துக் கொண்டு இருக்கும்?’ என்றவரின் கேள்வி அங்கிருந்த அனைவரையும் சற்றுச் சிந்திக்க வைத்து இருந்தது, அதானே என்ற விதத்தில்.

யுவர் ஆனர்! மிஞ்சி மிஞ்சி போனால் எந்த மாத்திரையும் நம் உடம்பில் கலக்க சில ப்ராக்ஷன் ஆப் செகண்ட்ஸ் தான் எடுத்துக்கும். அதுமட்டுமில்லை யுவர் ஆனர், ஏழு நாற்பத்தைந்துக்கு அர்ஜுன் சுயநினைவு இன்றி இருந்தது மட்டுமில்லாது,  ஒரு பெண் அவனை உலுக்குவதையும் பார்த்த சாட்சி பற்றி விஷ்வா சற்று முன் தான் கூறியிருந்தார்.

ஆதாரங்கள்.. அன்றைய அவரின் கால் ரெக்கார்ட்ஸ் மற்றும் அவர்களின் உரையாடலும் இதில் இருக்குஎன்று ஒரு கோப்பை நீதிபதியிடம் கொடுத்தார் வசுந்தரா.

அதை அவர் பார்த்து முடித்த நேரம், மீண்டும் தன் வாதத்தை ஆரம்பித்தார் வசுந்தரா.

என்னுடைய இந்த வாதத்தை நிரூபிக்க என்கிட்ட இன்னொரு ஸ்ட்ராங்க்கான வாக்குமூலமும் இருக்கு யுவர் ஆனர்!  மிஸ்டர்.அருணாச்சலத்தின் வாக்குமூலம் தான் அது!

அதில் அவர் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கார், எட்டு பதினைந்துக்கு அவர் பார்க்கும் போது துளசி இறந்து கிடந்தாள் என்று.

சோ இவர்கள் இருவரின் வாக்குமூலப்படி, அந்த ஏழு நாற்பத்தைந்துக்கும், எட்டு பதினைந்துக்கும் இடையில் தான் துளசி கொலை செய்யப்பட்டு இருக்கிறாள் என்பதும், அந்த நேரம் சுயநினைவை இழந்த அர்ஜூனால் இந்தக் கொலையை செய்திருக்க வாய்ப்பே இல்லை என்பதும் மிகத் தெளிவாக நமக்குத் தெரிகிறது.

அதனால் இதற்கு மேலும் தாமதிக்காமல், வீண் பழி சுமத்தப்பட்டு இருக்கும் என் கட்சிக்காரரை, இந்த வழக்கில் இருந்து விடுவிக்கும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் யுவர் ஆனர்!” என்று சொல்லித் தன்னிருக்கை வந்து அமர்ந்தார் வசுந்தரா.

அதைக் கேட்டு கேஸ் தங்களுக்குப் பாதகமாகப் போகிறதை உணர்ந்த நீலகண்டன், வாங்கிய காசுக்கு எதையாவது பண்ண எண்ணி எழுந்தவர், “யுவர் ஆனர்! மேடம் இதுவரை சொன்ன விளக்கங்களும், சாட்சிகளும் அர்ஜுனின் குடும்பத்தினரை வைத்தே அவரைக் காப்பாற்ற செய்யும் முயற்சியாக எனக்குப் படுகிறது.

அதனால் உண்மை குற்றவாளி யார்? என்று நிரூபணமாகும் வரை, குற்றவாளியை அவரின் குற்றத்தில் இருந்து விடுவிப்பது  நல்லது  இல்லை  என்பது  என்  கருத்து”  என்று முடிந்த அளவுக்கு முட்டுக்கட்டை போட பார்த்தார்.

இதுவரை நடந்த இருவரின் வாதத்தில் இருந்தும், இன்னமும் குற்றவாளி குறித்த எந்த ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியாத காரணத்தால், இந்த வழக்கை அடுத்த வாரம் ஒத்தி வைக்கிறேன். அதற்குள் உண்மை குற்றவாளியை தகுந்த ஆதாரத்துடன் நிருபிக்கும்படி காவல்துறையையும் நான் கேட்டுக் கொள்கிறேன்என்று நீதிபதி தன் தீர்ப்பை வாசித்து முடித்தார்.

அன்றைய ஹியரிங் பின் பலவித உணர்ச்சி போராட்டங்களுக்கு ஆளாகியிருந்த வசுந்தராவிடம்,எப்படி மேம் அந்த உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்கப் போகிறோம்?” என்று மண்டை காய்ந்து போய் கேட்டான் அருண்.

என்னைப் பொறுத்தவரை எல்லா குற்றத்திற்குப் பின் இல்லை,  அதற்குள்ளேயே தான் உண்மை குற்றவாளியும் பதுங்கி இருப்பாங்க அருண். நாம் தான் அவுங்களை அதில் இருந்து வெளியே கொண்டு வரணும்என்றவரின் பார்வை பாம்பைத் தாவி பிடிக்கக் காத்திருக்கும் கழுகின் கூர்மையுடன் பளபளத்தது.

Advertisement