Advertisement

மேம்! நீங்க சொல்றது உண்மையா? ர்ஜுன் சாரா இந்தக் கொலையைச் செய்தார்?” என்று நம்ப முடியாத பாவனையில் அருண் கேட்டான்.

அதற்குக் காரணம், அவன் அறிந்த அர்ஜுன், முரடன் மற்றும் கொஞ்சம் முன்கோபி. ஆனால் கொலை, அதுவும் ஒரு பெண்ணை என்பதை அவனால் கொஞ்சம் கூட ஏற்க முடியாததாகவே தோன்றியது. அதன் வெளிப்பாடாகவே அவன் கேள்வி எழுப்பினான்.

அவனுக்கு என்ன நடந்ததுன்னே தெரியலைன்னு சொல்றான் அருண்என்றவரின் பதிலில் குழப்பாக அவரைப் பார்த்தவன்,புரியலை!” என்று குழம்பிப் போய் கேட்க,

நேத்து ஆப்டர்நூன் என்கிட்டே பேசிட்டு போனை வைத்தவன், என்னுடைய பேரை அவன் நிச்சயத்துக்கான கெஸ்ட் லிஸ்டில் சேர்க்க சொல்லி இருக்கான். அப்படிப் பண்ண முடியாதுன்னு அவுங்க அப்பா சொன்னதில், பயங்கர கோபமாகி, அவருடன் பெரிய சண்டை போட்டு ட்ரிங்க்ஸ் பண்ணி பிளாட் ஆகி இருக்கான். அதுக்கு அப்புறம் என்ன நடந்ததுன்னே தனக்குத் தெரியலைன்னு சொல்றான்

எதுவுமே நியாபகமில்லைன்னா, அப்புறம் எப்படி மேடம் அந்தப் பெண்ணைக் கொலை செய்தது தான் தான்னு அவர் சொல்றார்?” என்றவனின் கேள்வியில் அவனை நிமிர்ந்து பார்த்த வசுந்தராவுக்கு, மகனைத் தான் அடித்தது நியாபகத்தில் வந்து போனது.

இதே கேள்வியைத்தான் அவரும் அந்நேரம் அவனிடம் கேட்டு இருந்தார்

அதற்குத் தாயை தலை நிமிர்ந்து பார்க்காது,அன்னைக்கு டாட் மேல இருந்த கோபத்துல குடிச்சுட்டு வீட்ல இருந்த பொருளை எல்லாம் நான் உடைச்சதுல, கிளாஸ் கீறி, என் கைல ரத்தம் வந்திடுச்சு. வீட்டை கிளீன் பண்ண வந்த துளசி அதைப் பார்த்துட்டு அலறி அடிச்சுக்கிட்டு என்கிட்டே நெருங்கின போது தான், நான் அவளை உதறி தள்ளி விட்டேன்.

அதுக்கு அப்புறமும் அந்தப் பெண் என்னை ஏதோ டிஸ்டர்ப் செய்ததில் தான் டென்ஷனாகி, அந்தப் பெண்ணை அடிச்சு கொலை பண்ணிட்டேன்னு நினைக்குறேன் மாம்என்று சிறு குழந்தையாகத் தலையைப் பிடித்துக் கொண்டு பேசும் மகனை அனல் பார்வை பார்த்தவர், அவனை ஓங்கி அறைந்து இருந்தார்.

மாம்!!” என்று அலறியவனிடம் கொஞ்சமும் இளகாத குரலில்,எவ்ளோ தைரியமிருந்தா ஒரு பெண்ணை அடித்துக் காயப்படுத்தி இருப்ப?” என்று பத்ரகாளியாக மாறி கேட்டவரின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது, குற்றவாளியாகச் சிக்கித் திண்டாடிவனின் தலை தானாகக் கீழ் இறங்கியது.

உங்ககிட்ட வேலைக்கு வந்தா அவுங்க என்ன உங்களுக்கு கொத்தடிமைகளா? யார் கொடுத்தது அவர்களின் மீது கை வைக்கும் அதிகாரத்தை உனக்கு? சத்தியமா இதை உன்கிட்ட இருந்து எதிர்பார்க்கலை அர்ஜுன்!” என்றவரின் ஆர்ப்பரிக்கும் வார்த்தைகளின்  அழுத்தம் தாங்காது,ட்ரிங்க்ஸ் பண்ணியதில் தெரியாம அப்படிப் பண்ணிட்டேன் மாம்என்றவனின் சமாளிப்புக்குக் கொஞ்சமும் அசைந்து கொடுக்காதவர்,

இது ஒன்னும் முதல் முறை இல்லை அர்ஜுன்! இதுக்கு முன்னாடியும், நீ இதே மாதிரி கோபத்தில், என்ன பண்ணுறோம் ஏது பண்ணுறோம்ன்னு தெரியாம பல விஷயங்கள் செய்து இருக்க. அப்போதெல்லாம் அதுக்கு உன்கிட்ட ஒரு ரீசன் இருந்தது போல இதுக்கு இப்போ குடியைச் சொல்றியா?”

இல்ல மாம், சத்தியமா இல்லை.. நிஜமாவே அந்தப் பெண்ணுகிட்ட ஏன் நான் அப்படி நடந்துக்கிட்டேன்னு எனக்குக் கொஞ்சமும் தெரியலை. நியாபகமும் வர மாடேங்குதே!” என்று தலையைத் தட்டி தட்டித் தன்னைத்தானே அடித்துக் கொண்டவனின் குற்றவுணர்வைப் புரிந்து கொண்ட போதும், அவனைத் தடுத்து நிறுத்த முயலாத வசுந்தரா, தன்னுடைய ஹான்ட்பேகை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேற முயன்ற நேரம்,

மாம்!” என்று அழைத்தான் அர்ஜுன், தவிப்பு நிறைந்த குரலில்!

அந்தக் குரலில் கால்கள் முன்னேறாது உறைந்த போதும், திரும்பிப் பார்க்காது,உன் அம்மா உனக்காக இந்த உலகத்தையே தலைகீழா புரட்டிப் போட்டாவது உண்மை குற்றவாளியைக் கண்டுபிடித்து உன்னை விடுதலை செய்வா. ஆனா ஒருவேளை...”

ஒரு வேளை என்று சொல்லும் போதே தொண்டை அடைத்ததில், தொண்டையைச் செருமி அதைச் சரிசெய்து கொண்டவர்,

இரும்பின் கடினத்துடன்,ஒருவேளை நீ தான் அந்தப் பெண்ணைக் கொலை செய்தேன்னு மட்டும் எனக்குத் தெரிந்தது, மகனா இருந்தாலும் உன்னைத் தூக்கில் ஏற்றவும் நான் தயங்க மாட்டேன்! மைன்ட் இட்!” என்று சொல்லி அங்கிருந்து வெளியேறி இருந்தார் வசுந்தரா.

மேம்!” என்று அழைத்த அருணின் அழைப்பில் மகனின் நினைவுகளில் இருந்து நிகழ்காலத்துக்கு வந்த வசுந்தரா, அர்ஜுன் தன்னிடம் சொன்னதை அப்படியே தன் முன் இருப்பவனிடம் சொல்லி முடித்தார்.

சிறிது நேரம் ஆழ்ந்த சிந்தனைக்கு உட்பட்ட அருண்,எனக்குத் தெரிந்த வரை அர்ஜுன் சார் இந்தக் கொலையை பண்ணி இருக்க மாட்டார்ன்னு தான் தோணுது மேம்

என்ன, எனக்காகச் சொல்றியா?” விரக்தி குரலில் கேட்டவருக்கு,இல்ல மேம்என்றான் தீர்க்கமாக அருண்.

எப்படிச் சொல்ற?என்று அவனையே பார்த்து இருந்தவரின் விழி கேள்வி புரிந்தவனும்,கொஞ்சம் நிதானமா இந்த கேசை ஸ்டடி பண்ணிப் பாருங்க மேடம். அர்ஜுன் சார் தெளிவா சொல்றார், அங்கே என்ன நடந்ததுன்னு எனக்குச் சுத்தமாக நியாபகமில்லைன்னு.. அப்படிப்பட்டவர், கொலை செய்த பெண்ணை, ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் கொண்டு போய் போட்டு இருக்க முடியும்ன்னு நீங்க நினைக்குறிங்களா?” என்றவனை மெச்சுதல் பார்வை பார்த்தார் வசுந்தரா.

அதில் சிறகடித்து அருண் பறக்கும் முன்,அர்ஜுன், கொலையை மறைக்க, நம்மகிட்ட எதுவுமே நியாபகமில்லைன்னு பொய் சொல்லி இருக்கலாம் தானே?” என்று அவனை மடக்கிக் கேட்ட வசுந்தராவின் வார்த்தைகளுக்குப் பதில் சொல்ல முடியாது பேய் முழி முழித்தான்.

அவனின் மௌனத்தில்,என்ன பதிலைக் காணும்?” என்று கேட்டார் வசுந்தரா.

பதில் சொல்ற மாதிரி கேள்வி கேட்டா தானே மேடம் சொல்ல முடியும். கோர்ட்ல வாதாடுற மாதிரி என்னை கார்னர் பண்ணா, நான் என்னத்தன்னு சொல்வேன்?” என்றவனின் ஆதங்கத்தில் லேசாகப் புன்னகைத்தவர்,ஒரு கேள்விக்கே நீ இப்படி முழிச்சா, நாளைக்கு கோர்ட்டுக்குப் போய் எப்படி கேஸை வாதாடுவ?” என்றதில்,

அப்படி ஒன்னு நடந்துட்டாலும்!!! கடைசி வரை உங்க கூட மட்டும் தான் நான் வாதாடிட்டு இருக்கப் போறேன் போல!’ என்று தனக்குள் அருண் நொந்து போய் புலம்பிய நேரம்,சீனியர்!!” என்ற பலவித குரல்கள் வெளியில் இருந்து கேட்டது.

அந்தச் சத்தத்தில் பேசிக் கொண்டு இருந்தவர்கள் திரும்பி வெளி வாயிலைப் பார்க்க, அங்கே லக்கேஜூடன் தங்களுடைய ஐந்து ஜூனியர்களும் வந்து இருப்பதைக் கண்டார்கள்.

எதிலிருந்தோ தப்பித்தவன் போல, அவர்களை வரவேற்றபடி அங்கே ஓடிச் சென்றான் அருண்.

அர்ஜுன் நிச்சயத்திற்காக அருணை அழைத்துக் கொண்டு காலையே வசுந்தரா சென்னை வந்து இருந்ததால் தான், அவரால் அர்ஜுன் கைது விஷயம் கேள்விப்பட்ட உடனே அவனுக்காக ஆஜராக முடிந்து இருந்தது.

ஆனால் நிச்சயத்திற்கு இவர்கள் எல்லாம் வருவதாக கூட இல்லையே? அப்படி இருக்கும் போது எப்படி இங்கே இருக்கிறார்கள் என்று தனக்குள்ண்ணிக் கொண்டவர்,  அதன் விடை அறிய ‘இவுங்க எங்கே இங்கே?’ என்று விழிகளால் அருணிடம் வினவினார்.

சார் கேஸ் கேள்விப்பட்டு, உடனே உங்களுக்கு உதவியா இருக்கணும்ன்னு கிளம்பி வந்துட்டாங்க மேடம்என்றவனின் வார்த்தைகளைக் கேட்டு வந்ததிருந்தவர்களை துரமாகப் பார்த்தார் வசுந்தரா.

அவர்களிடம் அருண் அளவுக்கு வசுந்திரா இலகுவாக உரையாடிப் பழக்கமில்லாததால்,தேங்க்ஸ்!” என்று மட்டும் சொன்னவர்,எங்கே தங்குவீங்க?” என்று அக்கறையாகக் கேட்டார்.

நாங்க பக்கத்துல ஏதாவது ஹோட்டலில் தங்கிக்கிறோம் மேம்என்று ஒருசேர சொன்னவர்களின் பேச்சைக் கேட்டவர், “அதெல்லாம் வேண்டாம்.. நீங்க எல்லாரும் கீழே இருக்கிற கெஸ்ட் ரூமை யூஸ் பண்ணிக்கோங்கஎன்று அவர்களிடத்தில் சொன்னவர், “பரிமளா!!” என்று உள்ளே குரல் கொடுத்தார்.

அம்மா..” என்று கிச்சனில் இருந்து கையைத் துடைத்தபடி வெளியே வந்தவரிடம்,ராமுவுடன் சேர்ந்து இவுங்களுக்கு கெஸ்ட் ரூமை ரெடி பண்ணிக் கொடுத்துடுங்க. வேற ஏதாவது தேவைன்னாலும் பார்த்துக்கோங்கஎன்று சொன்னார் வசுந்தரா.

ஓகே பாய்ஸ்.. நீங்க ரெப்ரெஷ் ஆகி சாப்ட்டுட்டு படுங்க. நாளைக்குக் காலைல மீட் பண்ணலாம்என்று படி ஏறி மேலே இருக்கும் தன்னறைக்குச் சென்றவரிடம்,அம்மா, உங்களுக்கு டிபன்??” என்று அக்கறை குரலில் பரிமளம் கேட்க,

எனக்கு டிபன் எதுவும் வேண்டாம் பரிமளம். ஒரு டம்ளர் பால் மட்டும் மேலே கொடுத்து விடு!” என்று சொல்லி மேலே சென்றார் வசுந்தரா.

பரிமளமும், அவள் குடும்பமும் பல காலமாக வசுந்தராவின் பெற்றோரிடம் வேலை பார்த்தவர்கள். அவர்கள் இறந்து விடவும், வீட்டையும், தோட்டத்தையும் பார்த்துக் கொண்டு, பங்களாவுக்குப் பின் இருக்கும் அவுட் ஹௌசிலேயே வாழ்ந்து கொண்டு இருந்தனர், அர்ஜுனின் ஏற்பாட்டில்.

பல வருடங்களுக்குப் பின் அந்த பங்களாவில் வசுந்தரா வந்து தங்குவதிலும், அவரைக் கவனித்துக் கொள்வதிலும் பரிமளத்துக்கும், அவரின் புருஷனுக்கும் அவ்வளவு சந்தோசம்!

மகன் விஷயத்தில் துவண்டு போய் இருப்பவரை என்னவென்று சொல்லி சாப்பிட வைப்பது என்று புரியாது கையைப் பிசைந்தவர், வேறு வழியின்றி அவர் சொன்னபடி பாலை காய்ச்சி எடுத்துச் சென்று அவருக்குக் கொடுத்தவர்,சீக்கிரமே எல்லாம் சரி ஆகிடும் அம்மா, தைரியமா இருங்கம்மாஎன்று சொன்னதில், அவரைப் பார்த்து மென்னகை ஒன்றைப் புரிந்தார் வசுந்தரா.

பாலைக் குடித்து விட்டு,நாளை பொழுது நல்லதாக அமையட்டும் ஆண்டவா!’ என்று வேண்டிக் கொண்டு படுத்தவருக்கு,அது அவ்வாறு அமையாது. அப்படி நான் அமையவும் விட மாட்டேன்!என்று கங்கணம் கட்டிக் கொண்டு வசுந்தராவின் வீடு தேடி வந்து நின்றார் அருணாச்சலம்.

அவர் வந்து இருக்கும் செய்தி அறிந்து, மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த வசுந்தரா, அவருடன் மேலும் ஐந்து பேர் உடன் இருப்பதைப் பார்த்தபடியே அந்தபாவடிவ சோபாவின் ஒரு பக்கத்தில் அமர்ந்து கொண்டு, தன் முன்னாள் கணவனைத் தவிர்த்து மற்றவர்களை அமரும்படி சொன்னார்.

கூப்பிட்டு வந்தவர் அமராமல் தாங்கள் மட்டும் எப்படி அமருவது?’ என்ற எண்ணத்தில் வந்தவர்கள் தயங்கி நின்பதைக் கண்டவர்,அப்புறம் உங்க இஷ்டம்!’ என்று தோள்களைக் குலுக்கி விட்டு,என்ன விஷயம்??” என்று பொதுவாகக் கேட்டார்.

இதற்கு நாங்கள் எப்படிப் பதில் சொல்வது?என்றவாறு வந்தவர்கள் அனைவரும் அருணாச்சலத்தைப் பார்த்தனர்.

அதன் அர்த்தம் புரிந்தவரும்,இங்கே பாரு.. இவுங்க எல்லாரும் சென்னையில் உள்ள பெஸ்ட் லாயர்ஸ்!” என்ற அருணாச்சலம், அந்தபெஸ்டில்கொஞ்சம் அழுத்தம் கொடுத்துச் சொன்னதைக் கவனித்த வசுந்தரா,அதற்கு??” என்று இருக்கையில் சாய்ந்து அமர்ந்து, கால் மேல் கால் போட்டு, நக்கலாகக் கேட்டார்.

அதில் கடுப்பு ஏறினாலும், வந்த வேலை முடிய வேண்டுமென்ற காரணத்தினால், நிதானத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு,அர்ஜுன் கேஸ்ல அவனை ஈசியா வெளில கொண்டு வந்துடலாம்ன்னு சொல்றாங்க. அதனால நீ இந்த கேஸில் இருந்து விலகிடு! இவுங்களை வச்சு நான் அவனை நிரபராதின்னு வெளில கொண்டு வந்துடுறேன்என்று சர்வ சாதாரணமாகச் சொல்பவரைப் பார்த்து,அப்படியா?? எப்படிக் கொண்டு வருவாங்க?” என்று வசுந்தரா கேட்கவும்,

சொல்லுங்க!” என்று தன்னுடன் வந்தவர்களிடம் ஜாடை காண்பித்தார் அருணாச்சலம்.

ரொம்ப சிம்பிள் மேம்! அந்தப் பொண்ணுக்கு ஒரு காதலன் இருந்ததாகவும், அவர் தான் அந்தப் பொண்ணைக் கொலை செய்துட்டுப் பழியை அர்ஜுன் மேல போட்டதாகவும் சொல்லிடலாம்என்று முன்வந்து சொன்னவரின் பேச்சைக் கேட்டு,ஒஹ்ஹ! அப்படியா?? அந்தக் காதலன்..” என்று ஏதோ வசுந்தரா கேட்டு முடிக்கும் முன்,ம்ம்ம் ம்ம்ம்.. அதுக்கு எல்லாம் பணத்தைக் கொடுத்து ஆள் செட் பண்ணிடலாம்என்றார் இன்னொருவர்.

ஒஹ்ஹ.. குட்! ஆனா சம்பவ இடத்தில மற்றும் அந்தப் பெண்ணோட உடம்புல அர்ஜுனோட ப்ளட் இருக்கே, அதுக்கு என்ன எக்ஸ்ப்ளனேஷன் கொடுக்கப் போறீங்க?” என்று ஆர்வத்தோடு லேசாக முன்னே வந்து கேட்டவரின் பாவனை கண்டு,வழிக்கு வந்துட்டா!!’ என்று சந்தோஷத்தில் மூழ்க ஆரம்பித்தார் அருணாச்சலம்.

அது ரொம்ப சிம்பிள் மேம்! அந்தப் பெண் அர்ஜுன்கிட்ட பணத்துக்காகத் தப்பா நடந்துக்கப் பார்த்ததாகவும், அதை விரும்பாதவர், அந்தப் பெண்ணைப் பிடித்துத் தள்ளும் போது ஏற்பட்ட காயத்தில் வெளிவந்த பிளட் அதுன்னு ஈசியா….” சொல்லி முடிக்கும் முன், கதிகலங்கிப் போனவரின் காதுகொய்என்று அடைத்துப் போனது

அந்த அளவுக்குப் பத்ரகாளியாக எழுந்து நின்று, பேசிக் கொண்டு இருந்தவரின் மண்டையில் பொறி கிளம்பும் அளவுக்கு, ஓங்கி அடித்து அவரின் கன்னத்தைப் பதம் பார்த்து இருந்தார் வசுந்தரா.

கொடுத்த அடியில், உதடு கிழிந்து வெளிவந்த த்தத்தில் சித்தம் கலங்கிப் போனவனோ, தன்னை அடித்தது ஒரு பெண் என்ற அவமானத்தில்,ஏய்…” என்று எகிறிய நேரம், அதை விட ஆக்ரோஷமான குரலில்,ஏய்ய்ய்…” ஒரு விரல் நீட்டி எச்சரித்ததில் முன்னேற முடியாது தவித்தவன் நிலை தடுமாறி நின்ற நேரம், அவனின் அருகில் இருந்தவன் தான் அவனின் கையைப் பிடித்து நிறுத்தி இருந்தான்.

பட்ட அவமானத்தைத் துடைத்து எறிய முடியாதவன்,ஹவ் டேர் யூ பீட் மீ??” என்று நியாயம் கேட்க, அவனை எரிக்கும் பார்வை பார்த்தவரோ,டிரஸ்ட் மீ! இன்னும் ஒரு வார்த்தை உன் வாயில் இருந்து வந்தது, இங்கேயே உன்னைக் கொன்னு புதைச்சுடுவேன்!” என்று விரல் நீட்டி எச்சரித்தவர் சொன்னதைச் செய்தாலும் செய்வார் என்று அவரின் அவதாரத்தில் இருந்தே உணர்ந்திருந்த ஆண்களின் வாய், பயத்தில், பெஃவிகால் போட்டு ஒட்டாத குறையாக இறுக மூடி இருந்தது.

அதில் அருணாச்சலம் அடங்கி இருந்தார் என்பது தான் பெரும் வியப்பு! அவருக்கே இப்பொழுது வசுந்தராவைக் கண்டு உள்ளுக்குள் கிலியாக இருந்தது.

என்ன சார், இதுக்குத்தான் எங்களை இங்கே கூட்டிட்டு வந்தீங்களா?” வசுந்தராவிடம் பேச முடியாது அருணாச்சலத்திடம் முறையிட்டான் அடி வாங்கியவன்.

ஆனால் அவனின் பேச்சில் தான், அவரே சுயத்துக்குத் திரும்பி வந்திருக்கிறார் என்பதை அவனிடம் சொல்பவர் யாரோ?!

அது சரி! வசுந்தராவின் அபார துணிவு பற்றிக் காற்று வாக்கில் கேள்விப்பட்டு இருக்கிறார் தான்! ஆனால் அதை நேரில் கண்ட போது, அவர்கள் சொன்னது எல்லாம் எவ்வளவு உண்மை என்று உணர்ந்தவருக்கு, அவரை எதிர்த்துப் பேச துணிவு எங்கே பிறக்கும்?? என்றே தோன்றியது.

இருந்தும், மற்றவர்கள் முன் தன் தரத்தைக் குறைத்துக் கொள்ள விரும்பாத அருணாச்சலம்,என்ன பண்ணுற? அவுங்க நம்ம பையனைக் காப்பாத்த வந்து இருக்காங்கஎன்று வசுந்தராவிடம் சொன்னதில், அவரை ஏற இறங்க ஒரு அற்ப பார்வை பார்த்தவரோ,என்னது?? நம்ம பையனா??” என்று ஆளை அடிக்கும் விதத்தில் கேட்டதில், அதற்குப் பதில் சொல்ல முடியாது கொஞ்சம் திணறித்தான் போனார் அருணாச்சலம்.

சமாளித்து,இப்போ அதுவா முக்கியம்? அர்ஜுன் வெளிய வரணும், அது தான் முக்கியம். நான் சொல்றதைக் கேளு! அவுங்க சொல்றபடியே செய்யலாம்என்று சொல்லி முடித்தவரிடம்,எப்படி?? எந்தத் தப்பும் செய்யாது செத்த பெண்ணை, இவனுங்க அவ கேரக்டரை கேவலப்படுத்தி மீண்டும் கொல்லுறேன்னு சொல்வானுங்க. அதுக்கு நான் ஒத்து ஊதணுமா???” என்று உறுத்து விழித்துக் கேட்டதில் அரண்டு போனாலும்,அப்போ உனக்கு உன் மகன் வெளிய வர வேண்டாமா?” என்று சமயோஜிதமாகத் தாய் பாசத்தை ஆயுதமாக்கிக் கேள்வி கேட்டார் அருணாச்சலம்.

ஆனால் அதற்கு எல்லாம் துளியும் அசராதவரோ,அந்தப் பொண்ணைக் கேவலப்படுத்தித் தான் என் பையன் வெளிய வரணும்ன்னா, அவன் வரவே வேண்டாம்!!” என்று பொட்டில் அடித்தது போலப் பதில் சொன்னார் வசுந்தரா.

ஆத்திரத்துடன்,அதைச் சொல்ல நீ யார்?” என்றார் அருணாச்சலம். அதற்குக் கொஞ்சமும் அடங்காதவரோ,  “அதைச் சொல்ல நீ யார்?” என்று பெண் சிங்கத்தின் கர்ஜனையுடன் எதிர்த்து நின்றார்.

அதைத் தாக்குப் பிடிக்க முடியாது,இப்படியே போனால் தான் வந்த வேலை முடியாதுஎன்று புரிந்து கொண்ட அருணாச்சலம், சற்றுத் தணிந்த குரலில்,இங்கே பார்! நேத்துல இருந்து வெளில தலை காட்ட முடியலை. போன் பண்ணுறவங்களுக்குப் பதில் சொல்ல முடியலை. இந்தக் கொலை வழக்கால, நம்முடைய கம்பெனி ஷேர்ஸ் எல்லாம் இறங்கிக்கிட்டு இருக்கு. இதனால எனக்கு எவ்ளோ அவமானம், நஷ்டம்ன்னு உனக்குத் தெரியுமா?” என்றவரை அசால்ட்டாக நோக்கியவர்,

இப்போ கூட உன் கெளரவத்துக்காகவும், பணத்துக்காகவும் தான் அர்ஜுன் வெளியே வரணும்ன்னு நினைக்குறியே தவிர, அவன் மேல இருக்கிற அக்கறையில் இல்லை, அப்படித்தானே??” என்றவரின் நேரடி தாக்குதலில் கடுப்பான அருணாச்சலம்,ஏய்! என்ன விட்டா ரொம்ப ஓவரா பேசிட்டு இருக்க? இந்த உலகத்தில் பணமும், அந்தஸ்தும் இல்லைன்னா நீ பிணத்துக்குச் சமம். அது புரியாம வெட்டியா ஜம்பம் பேசிட்டு இருக்கஎன்றார்.

என் பையனை எங்கே, எப்படி வெளில கொண்டு வரணும்ன்னு எனக்குத் தெரியும். கெட் அவுட்!!” என்று வாசலைக் கைக் காட்டிச் சொன்னார் வசுந்தரா.

அதைக் கேட்டு,ஹா.. ஹா…” என்று பலமாகக் கைக்கொட்டிச் சிரித்தார் அருணாச்சலம். அவரின் செய்கையில் அவரை வசுந்தரா புருவம் உயர்த்தி ஏறிடவும்,

என்ன பார்க்குற?? உன்னோட நியாயமும், தர்மமும் மேடை பேச்சுக்கு வேணா உதவும். ஆனா உன் பையனோட தூக்கு மேடையைத் தடுத்து நிறுத்த என்னோட துட்டு மட்டும் தான் இங்கே உதவும்என்று பேசியவரின் பேச்சை பொறுமையாக உள்வாங்கியவரோ, “அப்படியா?? அதையும் பார்க்கலாம்!!” என்று நேருக்கு நேராக நின்று சவால் விட்டார் வசுந்தரா.

அதில் ஆத்திரம் தலைக்கு ஏற, அவரின் பேச்சைக் கேட்டு சலிப்படைந்தவரோ,இப்போ பைனலா என்ன சொல்ற?” என்று கறாராகக் கேட்டார்.

பைனலா இல்லை, ஆரம்பத்தில் இருந்தே சொல்றது தான்.. நீ சொன்ன எந்தக் கேடு கெட்ட விஷயங்களையும் என்னால பண்ண முடியாது!”

அப்போ உன் பையன் கதி என்ன ஆகும்ன்னு யோசிச்சியா?”

அவன் பக்கம் நியாயம் இருந்தால் அவன் கண்டிப்பா வெளியே வருவான். நான் கொண்டு வருவேன்என்றவரின் தீட்சண்யத்தில்,எப்போ?? அவன் கிழவன் ஆனதுமா?” என்று நக்கலாக அருணாச்சலம் சொல்லிக் கொண்டு இருந்த நேரம், வெளியே போயிருந்த அருண், தன் ஜூனியர் வக்கீல்களுடன் அங்கே வந்தான்.

ஹாலில் நடந்து கொண்டு இருக்கும் உரையாடல் புரியாத போதும், ஏதோ சரியில்லை என்று எண்ணியவன், நேராகச் சென்று வசுந்தராவின் அருகில் அரணாக நின்றது மட்டுமில்லாது அவரின் காதில் எதையோ சொன்னான்.

அதைக் கேட்டு கண்கள் மின்ன அவனைப் பார்த்தவர், உடனே திரும்பி அருணாச்சலத்தைப் பார்த்துக் கெத்தாக, “என்ன சொன்ன?? கிழவன் ஆனதும் தான் அர்ஜுனால் வெளியே வர முடியுமா? நல்லா கேட்டுக்கோ! நாளை காலை என் பையன் வெளியே வருவான்என்று அதிரடியாக அறிவித்தார்.

அது எப்படிச் சாத்தியம்?” என்று எண்ணியவர்,கனவுல வேணா அது நடக்கும்! என் உதவி இல்லாமல் அவன் வெளியே வர வாய்ப்பே இல்லை!” என்றார் உறுதியாக.

அப்படியா?? அதையும் தான் நாளைக்குப் பார்ப்போமே??? நாளை ஜெயிக்கப் போவது உங்க பணமா இல்லை நானான்னு??” என்று மிடுக்காகச் சொன்னவர்,இப்பவாது கிளம்புறீங்களா?” என்று சொன்னதும்,  “வாங்க போகலாம்என்று மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார் அருணாச்சலம்.

அன்றைய நாள் முழுவதுமே அருணாச்சலத்துக்கு நிம்மதி இல்லாது போனது.நாளை அவள் சொன்னது நடந்து விடுமோ? விடுமோ?” என்று அந்த ப்ரஷர் தாங்காது, தன்னுடன் இருந்த வக்கீல்கள் அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை கலந்து ஆலோசித்தார்.அர்ஜுன் வெளியே வர வேற ஏதும் வாய்ப்பு இருக்கிறதா?” என்று!

அவர்கள் அனைவரும் ஒரே மாதிரி,இது கொலை கேஸ் சார்.. அதுவும் ஆதாரங்களுடன் கைது செய்து இருக்கிற ஒரு குற்றவாளியை எப்படி சார் நாளைக்கே வெளியே கொண்டு வர முடியும்?” என்று நக்கலாகச் சொன்னது மட்டுமில்லாது,அந்த அம்மா சட்டத்தை ஒழுங்கா படிக்காம வந்து நம்மகிட்ட உதார் விட்டுக்கிட்டு இருக்காங்க சார். அதைப் போய் நீங்க பெருசா எடுத்துக்கிட்டு பேசிக்கிட்டு இருக்கீங்க?

உங்களுக்கு ஒன்னு தெரியுமா? ஜெயிலில் அடைக்கப்பட்ட எந்த கைதியையுமே கோர்ட்டில் வாதாடித்தான் வெளியே கொண்டு வர முடியுமே தவிர, அவுங்க சொல்றது போல நாளைக்கு என்பது எல்லாம் இம்பாசிபிள் சார்!” என்று உறுதியாகச் சொன்னவர்களின் பேச்சைக் கேட்ட பின்பு தான் அருணாச்சலத்துக்கு உயிரே வந்தது போன்று இருந்தது.

யார்கிட்ட சவால் விடுற..? என்கிட்டயா..?? நாளைக்கு நீ தோத்து நிப்பல்ல, அப்போ காட்டுறேன்டி நான் யாரு, என் பவர் என்னனு உனக்கு!!” என்று கறுவி கொண்டு அன்றிரவு உறங்கப் போன அருணாச்சலத்திற்கு, மறுநாளேதான் யார், தன்னுடைய பவர் என்னவென்றுவசுந்தரா அவர் முகத்தில் கரியை பூசாத குறையாகக் காட்டி இருந்தார்.

அவருக்கு மட்டுமில்லை, அவருடன் வந்த அந்த சட்டம் படித்த மேதாவிகளுக்கும் சேர்த்தே,நீங்கள் படித்த சட்டத்தை நான் கரைத்துக் குடித்தவள்டா!!” என்று பாடம் புகட்டி இருந்தார்.

Advertisement