Advertisement

போலீஸ் வேனில் ஏறாது ஏக்கத்துடன் தன் குடும்பத்தையே பார்த்திருந்த  ஹர்ஷாவின்  வேதனை  கண்டும், அவனை நெருங்க முடியாது  துடித்து  நின்றிருந்த அவனின் குடும்பத்தினரிடம்,இந்த உலகத்தில் திட்டமிட்டு குற்றம் செய்தவர்களை விடச் சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றவாளியானவர்கள் தான் அதிகம்.

அவனுக்கு இப்போ தேவை, உங்களிடமிருந்து தண்டனையையும் தாண்டிய ஒரு மன்னிப்பு! அவனை நீங்க மன்னிக்காவிட்டாலும் இப்படி ஒதுக்காதீங்க

ஏன்னா, உங்களின் இந்த ஒதுக்கம் தான், திருந்தணும்ன்னு நினைக்கிறவனை கூட இன்னும் பெரிய குற்றவாளியா மாற்றும்.

சூழ்நிலை கைதியாக மாறியவன் மீண்டும் மனிதனாக மாற ஒரு வாய்ப்பை அவனுக்குக் கொடுக்க மறுக்காதீங்க! அப்ப தான் அவன் மீண்டும் எந்தக் குற்றத்தையும் செய்ய மாட்டான்!” என்றவரின் வார்த்தைகளைக் கேட்டு வாயடைத்துப் போயினர் யாழினியின் குடும்பத்தினர்.

சற்று முன் அவனைக் குற்றவாளி என்று வாதாடியவரே, இப்பொழுது அவனுக்காகத் தங்களிடம் வாதாடுவதை என்னவென்று எடுத்துக் கொள்வது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் அவர்களுக்குப் புரிந்தது. நிச்சயம் வசுந்தரா என்பவர் தாங்கள் நினைப்பதற்கு எல்லாம் அப்பாற்ப்பட்ட ஒரு மனுஷி என்று!!

அந்த எண்ணம் கொடுத்த உணர்வில், உணர்ச்சி பெருக்கெடுக்க, கண்களில் நீர் வழிய வசுந்தராவின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டார் சுபத்ரா.

அவரின் திடீர் செய்கையில்,என்ன செய்றீங்க?” என்று அதிர்ந்து கேட்டவரிடம், “என்னை மன்னிச்சுடுங்க! உங்களைப் பலமுறை தப்பா நினைச்சு ஏதேதோ பேசிட்டேன்என்றார் சுபத்ரா.

அதெல்லாம் ஒண்ணுமில்லைஎன்றவரோ,என் கூட வாங்க!” என்று சுபத்ராவை மட்டுமில்லாது அவரின் மொத்த குடும்பத்தையும்  அழைத்துச் சென்று, காவலரின் அனுமதி பெற்று, ஹர்ஷாவிடம் பேச வைத்தார்.

மகனின் முகத்தை வருடிய சுபத்ரா ஒருபுறம் அணைக்க, மறுபுறமோ யாழினி ஹர்ஷாவை அணைத்துக் கொண்டு அழுதாள்.

இவர்கள் இருவருக்கும் நடுவில் நின்றபடி, மகனின் தலையை வருடிக் கொடுத்தபடி, கலங்கினார் ராகவன்.

எங்கே இத்தோடு, இன்றோடு தன் குடும்பம் தன்னை வெறுத்து ஒதுக்கிடுமோ?’ என்ற பெரும் மன உளைச்சலில் திண்டாடிக் கொண்டு இருந்தவனுக்கு கிடைத்த அணைப்பிலும், ஆறுதலிலும், அவ்வளவு நேரமிருந்த இறுக்கம் உடைந்து அழ ஆரம்பித்தான் ஹர்ஷா.

சத்தியமாக அது அவனின் ஆனந்த கண்ணீர் மட்டுமே!

தன் குடும்பத்தின் அரவணைப்பில், அவர்களின் ஆறுதலில் சின்னக் குழந்தையாக மாறிப் போனவனைத் தங்களுடைய சொற்களால் முடிந்த அளவு தேற்றிவர்களின் வார்த்தைகளில் குற்றவுணர்வு மேலோங்க,செய்த தப்புக்கான தண்டனையைத் தானே அனுபவிக்கப் போறேன். சோ என்னைப் பற்றி நீங்க யாரும் கவலைப்படாதீங்க!” என்றான்.

அவனின் வார்த்தைகளைக் கேட்ட யாழினி,நீ எப்போ உன் தப்பை ஒத்துக்கிட்டீயோ, அப்பவே உன் குற்றத்தை உணர்ந்துட்டே அண்ணா. சோ நிஜமாவே உன்னை நினைத்து இப்போ நான் சந்தோஷப்படுறேன்என்றாள்.

மேலும்,எப்பவும் ஒன்னை மட்டும் மறந்திடாத! உனக்காக எப்பவும் நாங்க இருப்போம்என்று அண்ணின் கைகளை இறுக்கி சொன்னவளின் பேச்சைக் கேட்டு நிம்மதி கொண்டவனின் இதழ்கள் லேசாக விரிந்தன.. ‘இதை விட வேறு என்ன ஆறுதல் எனக்கு வேண்டும்??’ என்ற எண்ணத்தில்..

அந்த உணர்வு கொடுத்த சந்தோஷத்தில் தங்கையை அணைத்தவன், அப்பொழுது தான் அவளுக்குப் பின் சற்றுத் தூரத்தில் நின்று இருந்த அர்ஜுனைக் கண்டான்.

உடனே அவனைத் தன்னிடம் வரும்படி கையாட்டி அழைத்தான் ஹர்ஷா.

தன்னை ஏன் அழைக்கிறான்?’ என்று புரியாத போதும், அவனருகில் சென்று நின்ற அர்ஜுனிடம்,நான் சொல்வதை நீ ஏத்துப்பியான்னு தெரியலை. பட் என்னால் இப்போதைக்கு இதை மட்டும் தான் உன்னிடம் கேட்க முடியும்என்று உள்ளே போன குரலில் கூனிக் குறுகிப் போய் சொன்னவன்,

ரியலி அம் வெர்ரி வெர்ரி சாரி!” என்று மனதார அர்ஜுனிடம் மன்னிப்பு கேட்டான்.

அந்த வார்த்தைகளை அந்நேரம் சற்றும் எதிர்பார்த்திராத அர்ஜுனுக்கு, அவனுக்கு என்ன பதில் கொடுப்பது என்றே தெரியவில்லை. அதனால் அவன் யாழினியைத்தான் திரும்பிப் பார்த்தான்.

அவள் கண்களில்,இவன் என்ன சொல்ல போகிறான்?’ என்ற தவிப்பு அப்பட்டமாய் தெரிந்ததைக் கண்டுகொண்டவன்,இட்ஸ் ஓகேன்னு என்னால அவ்வளவு ஈசியா உன்னுடைய மன்னிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது!

ஏன்னா அந்த அளவுக்கு உன்னால் நான் கஷ்டப்பட்டு இருக்கிறேன்.

பட் நீ கொடுத்த அந்தக் கஷ்டத்தால தான் பலரின் போலிமுகத்தையும், உண்மையான சிலரின் அன்பையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. சோ அதுக்காகவே உன்னை வெறுக்க முடியாது என்னால்என்றான் அர்ஜுன்.

அந்த அன்பு என்ற வார்த்தையின் போது யாழினியைத் தழுவி சென்ற அர்ஜுனின் பார்வையில் இருந்தே, அவன் யாரைச் சொல்கிறான் என்பதை உணர்ந்த ஹர்ஷாவுக்கு, அவனின் மன்னிக்க மாட்டேன் என்றது பெரிதாக இல்லை போல! அதன்பொருட்டுதட்ஸ் ஓகே!” என்றவன்,

மேலும்,என் தங்கையை நல்லா பார்த்துக்கோ அர்ஜுன்! அவளுக்கு நீன்னா அவ்ளோ இஷ்டம்!!” என்று சொல்லும் பொழுதே, தங்கையின் அணைப்பும், அழுகையும் அதிகரிப்பதை ஹர்ஷாவால் உணர முடிந்தது.

உன் தங்கை மட்டுமில்ல, இனி உன் பெற்றோரும் என் பொறுப்பு! அவர்களை உன் அளவுக்கு இல்லை என்றாலும் கண்டிப்பா முடிந்தளவுக்குச் சந்தோஷமா நான் பார்த்துப்பேன். சோ யூ டோன்ட் வொர்ரி!” என்றான் அர்ஜுன்.

அந்த வார்த்தைகள் கொடுத்த நிம்மதியில், அதுவரை இருந்த தயக்கம் தகர்த்து, தானாகச் சென்று அர்ஜுனைத் தாவி அணைத்து, தன் மகிழ்ச்சியுடன் கூடிய நன்றியைத் தெரிவித்தான் ஹர்ஷா.

மேடம்! டைம் ஆச்சு, கிளம்பணும்!என்ற காவலரின் குரலில், அதற்கு மேல் அவர்கள் வேலையை நிறுத்தி வைப்பது சரியாக இருக்காது என்ற எண்ணத்தில், ஹர்ஷாவை அவர்களுடன் அனுப்பி வைக்க முயன்றார் வசுந்தரா.

குடும்பத்தினரிடம் பிரியாவிடை பெற்று வேனில் ஏறும் முன் ஹர்ஷா என்ன நினைத்தானோ,ஒரு நிமிஷம்!என்று காவலர்களிடம் சொன்னவன், வசுந்தராவை நெருங்கி,என் வாழ்க்கையில் நான் அட்மையர் பண்ணிய முதலும் கடைசியுமான பெண் நீங்களா மட்டும் தான் இருப்பீங்க மேம்!!” என்றான் பிரமிப்பு புன்னகையுடன்.

அவனின் வார்த்தைகளுக்குப் பின் இருக்கும் அவனின் நேசத்தை உணர்ந்த தாயாக, அவனின் தோள் தட்டியவரோ,தைரியமாக இரு! சிறையில் உன் குற்றத்தை உணர்ந்து நல்லபடியாக நடந்து கொண்டால், கண்டிப்பா உன் தண்டனை காலம் குறைய வாய்ப்பிருக்கிறதுஎன்ற புத்திமதியுடன் கூடிய ஒரு சிறு நம்பிக்கையும் சேர்த்துக் கொடுத்தார் அவனுக்கு.

அவர் சொல்வது போல எதிர்காலத்தில் நடக்குமோ நடக்காதோ?? ஆனால் அந்த வார்த்தைகள் கொடுத்த இன்பத்துடனே, தனக்கான தண்டனையை அனுபவிக்கும் மனப்பக்குவத்துடன் அங்கிருந்து கிளம்பி இருந்தான் ஹர்ஷா.

துளசி கேஸ் முடிந்ததும், தன் மகன் நிரபராதி என்று இந்த மொத்த உலகத்துக்கும் உரக்க சொல்லிய வசுந்தரா, நேராக கோர்ட்டில் இருந்து அர்ஜுனை அழைத்துக் கொண்டு சென்ற இடம், துளசியின் குடும்பத்தினரைச் சந்திக்கத்தான்.

இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்று விட்டு, அதில் ஒன்றைப் பறிகொடுத்து விட்டு, தினம் தினம் அவளை நினைத்துப் பரிதவித்துக் கொண்டு இருந்தவர்களுக்கு தேவையான ஆறுதல் மட்டுமில்லாது, அவர்களின் இன்னொரு பெண்ணின் முழுப் பொறுப்பையும் தாங்களே ஏற்றுக் கொள்வதாக வாக்குறுதி கொடுத்தார் வசுந்தரா.

அதைக் கேட்டு அவரைத் தெய்வமாக நினைத்துக் கைக் கூப்பியவர்களிடம்,தெரிந்தோ தெரியாமலோ உங்கள் பெண்ணுடைய இறப்புக்கு எங்கள் குடும்பம் காரணமாகி விட்டது. அந்தப் பாவத்தை போக்க நாங்கள் செய்யும் பரிகாரம் தான் இது! அதனால் இப்படியெல்லாம் செய்யாதீங்க!” என்றவர் அவர்களின் கைகளை கீழே இறக்கி விட்டார்.

இது என்னுடைய மற்றும் அர்ஜுனுடைய நம்பர். உங்களுக்கு எப்போ என்ன உதவி வேணும்னாலும் எங்களுக்கு கால் செய்ங்கஎன்று சொல்லியவர், அவர்களுக்கு அப்போது தேவையாக இருந்த உதவிகள் அனைத்தும் செய்து விட்டே அங்கிருந்து கிளம்பினார்.

அவர்களுக்கு மட்டுமில்லாது, ஹர்ஷா கார் இடித்துக் கொன்ற நபரின் குடும்பத்திற்கும் தங்களாலான உதவிகளை வசுந்தரா செய்து இருந்தார். இதையெல்லாம் அவர் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

ஆனாலும் அவர் செய்தார்! அதற்குக் காரணம், அர்ஜுன் என்பதை விட யாழினியின் குடும்பம் என்பது தான் உண்மை.

ஆம்! துளசியின் குடும்பத்து இழப்பை எதைக் கொண்டு சரி செய்வது? அவர்களிடம் எப்படி மன்னிப்பு கேட்பது? அப்படியே கேட்டாலும் அவர்கள் அதை ஏற்பார்களா? இல்லை தங்களைக் கண்டு இன்னும் அதிகம் வேதனைப்படுவார்களா?’ என்ற அடுத்தடுத்த கேள்விகள் கொடுத்த வேதனையில் தான் யாழினியின் குடும்பம் அவர்களைச் சென்று சந்திக்க முடியாமல் குற்றவுணர்வில் திண்டாடினார்கள்.

அதைச் சரியாகப் புரிந்து கொண்ட வசுந்தராவும், அவர்களை வற்புறுத்தாது, தானாக முன்வந்து, துளசி குடும்பத்தைச் சந்தித்து, அவர்களுக்கானதை எல்லாம் செய்தார்.

ஏனென்றால், அவர் யாழினி குடும்பம், தன் குடும்பம் என்று எதையும் பிரித்துப் பார்க்கவில்லை. அவரைப் பொறுத்தவரை சித்ரா, ராகவன் என்று அனைவரும் அவரின் குடும்பமாகவே கருதினார்.

அவரின் அந்த எண்ணத்தை சரியாகப் புரிந்து கொண்ட யாழினிக்கு, அவர் மீதான மரியாதை, அந்த வானத்தையும் தாண்டி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு இருந்தது.

துளசி கேஸ் முடிந்து ஒருவாரம் மகனுடன் தங்கியிருந்த வசுந்தராவுக்கு கடமை டெல்லியில் இருந்து அழைக்கவும், அதை மறுக்க முடியாது, எல்லோரிடமும் பிரியாவிடை பெற்றுக் கொண்டு, தன் ஜுனியர்களுடன் டெல்லி சென்று விட்டார்.

இரண்டு ஆண்டுகள் கழித்து..

இன்னும் ஐந்து தினங்களில் விஷ்வாக்குத் திருமணம் என்பதால், பரபரப்புக்குப் பஞ்சமே இல்லாது ஏஜே பேலஸ் முழுவதும் பணியாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். 

அவர்களை எல்லாம் மேற்பார்வையிட்டுக் கொண்டு இருந்த யாழினி, இரவு நேரம் ஒன்பதைக் கடக்கவும்,மீதியை நாளை பார்த்துக் கொள்ளலாம், எல்லாரும் கிளம்புங்கஎன்று அவர்களை அனுப்பி வைத்து விட்டு ஹாலை நோக்கி வந்த நேரம்,அர்ஜுன் வந்தாச்சா?” என்று அவளிடம் விசாரித்தார் சித்ரா.

இன்னும் இல்லை ன்ட்டி.. ஏதோ மீட்டிங் இருக்கு, நைட் லேட் ஆகும்ன்னு சொன்னார்என்றாள் அவள்.

ஒஹ்ஹ சரிம்மாநீ சாப்பிட வா!”

இல்லை ன்ட்டி, நீங்க சாப்பிடுங்க.. நான் அப்புறம் சாப்பிடுறேன்என்றாள்.

அங்கே ஹால் சோபாவில் படுத்தவாக்கில் போனில் எதையோ மும்முரமாக டைப் செய்து கொண்டு இருந்த விஷ்வாவைக் கண்டு அவனை நெருங்கி,டேய் தடிமாடு! உனக்கெல்லாம் ஏதும் மீட்டிங் இல்லையா? இப்படிக் கடலை போட்டுக்கிட்டு இருக்க!” என்று அவனின் காலை இழுத்துக் கீழே போட்டு விட்டு அவன் அருகில் அமர்ந்தாள்.

அவளின் செயலில் கடுப்பானவன்,ஹலோ மேடம்! என் வேலை முடிஞ்சுடுச்சு, நான் ஓடி வந்துட்டேன். உன் ஆள் வரலைன்னா அதுக்கு நானா பொறுப்பு?” என்று எகிறி விட்டு,ஒரு சாட் பண்ண விடுறியா?” என்று அலுத்துக் கொண்டான்.

என்னடா அப்படி சாட் பண்ணிட்டு இருந்த?” என்றவள் அவனின் போனை எட்டிப் பார்க்க, அதில் அலறியடித்துக் கொண்டு போனை தன் முதுகுக்குப் பின்னால் மறைத்தவன்,ஏய்! சின்னஞ்சிறுசுங்க ஆயிரம் முக்கியமான விஷயம் பேசுவோம். அது எதுக்கு உனக்கு? போ, போய் உன் புருஷன் எங்கேன்னு பாரும்மா! போம்மா!” என்றபடியே அங்கிருந்து நகர்ந்து ஓடுபவனைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தாள் யாழினி.

சாப்பிடாமல் விஷ்வா கிளம்புவதைப் பார்த்த சித்ரா,டேய்! சாப்பிடலையா?” என்று கேட்க,

ம்ம்ம்.. இங்கே நிலவரம் சரியில்லை. நான் என் ரூம்லயே போய் சாப்பிட்டுக்கிறேன்என்றபடியே ஓடினான் அவன்.

என்னாச்சு இவனுக்கு?” என்று மகனின் அவசரம் புரியாது விழித்த சித்ராவிடம்,ஏதோ முக்கியமான வேலை இருக்குன்னு சொன்னான். நீங்க சாப்பிட்டுப் போய் படுங்க ஆன்ட்டி. நான் அவனுக்குச் சாப்பாடு அனுப்பி வைத்து விடுகிறேன்என்று சொன்னாள் யாழினி.

அவளின் பேச்சைக் கேட்டவரும் உணவருந்தி விட்டுத் தன்னறைக்குச் சென்று படுத்து விட்டார்.

இரவு பதினோரு மணிவாக்கில் வீடு திரும்பிய அர்ஜுன், தங்களறையில் யாழினியைக் காணாது மனம் சுணங்கிப் போனான்.

ரெப்ரெஷ் ஆகி உடை மாற்றி விட்டு அவளின் போனுக்கு அழைத்துப் பார்த்தான். அவள் எடுக்கவில்லை.

கம்பெனியிலிருந்து லேட்டாக வந்தாலே நம்மள சுத்தல்ல விடுவது இவளுக்கு வாடிக்கையா போச்சு!’ என்று மனைவி குறித்துச் செல்லமாக முணுமுணுத்தபடியே அவளை அந்த தளத்தில் தேட ஆரம்பித்தான் அர்ஜுன்.

ஆபீஸ் ரூமில் அமர்ந்து ஏதோ மும்முரமாகக் கணினியில் வேலை செய்து கொண்டு இருந்தவளின் பின்னால் சத்தம் வராது சென்று நின்றவன், “என்ன பண்ணுற? என்று ஹஸ்கி வாய்ஸில் மனைவியின் கழுத்தில் தன் தாடையைப் பதித்துக் கேட்டான்.

கணவனின் ஸ்பரிசத்திலும், தேக உரசலிலும் கூசி சிலிர்த்துப் போன யாழினி, அதன் தாக்கம் தாங்காது அப்படியே இமை மூடி ஒருபக்கமாகத் தலை சாய்த்தாள். அதில் அவளின் மீது பித்தாகிப் போனவனோ, சட்டென்று அவளை எழுப்பி இடையோடு கைக் கொடுத்துத் தன்னோடு சேர்த்து அணைத்தான்.

கணவனின் அதிரடியில் ஆடிப் போனவள், நெஞ்சம் படபடக்க அவனை நிமிர்ந்து பார்க்க, ஆனால் அர்ஜுனோ மனைவியை விழுங்கும் பார்வை பார்த்துக் கொண்டு இருந்தான்.

சிகப்பு கிரேப் சில்க் புடவையில், நெற்றியில் சிறு பொட்டும், உச்சி வகிட்டில் குங்குமமும் வைத்து, ப்ரீ ஹேரில் எந்தவித மேக்கப்புமின்றி ஜொலி ஜொலித்தவளைக் கண்டு உள்ளம் தடுமாறி போனவன், அவளின் இதழ்களுக்குள் தன் இதழ்களைப் புதைத்து மூச்சு திணற திணற  அவளை  முத்தமிட்டான்.

முத்த யுத்தத்துடன் மனைவியின் மீதெழுந்த வாசனை இன்னும் அர்ஜுனை அதிகமாக மோகம் கொள்ளச் செய்ததில், பெண்ணவளின் மேனி எங்கும் முத்த அர்ச்சனை செய்தான்.

கணவனின் தாபம் உணர்த்திய செய்தியிலும், நெருக்கத்திலும் தன்னையே அவனில் தொலைக்க ஆரம்பித்தாள் யாழினி.

அதற்கு மேலும் தாமதிக்காது அவளை இரு கைகளில் அள்ளியவன், தங்களறை கட்டிலில் கிடத்தி அவளின் மீது படர்ந்தவனின் இதழ்களும் கைகளும் கிறக்கத்துடன் அவளில் எல்லை மீற தொடங்கிய நேரம், மயக்கமும் தயக்கமுமாக அவனைத் தடுத்து “வேண்டாம் அர்ஜுன்!” என்றாள் யாழினி.

ஏன் என்று புரியாது முகம் பார்த்தவனின் மனம் அறிந்தவளோ,நாளைக்குக் காலையில பூஜை இருக்கு அர்ஜுன்என்று சொல்லி நிறுத்திய நேரம், அவளை விடிவிளக்கின் வெளிச்சத்தில் நிமிர்ந்து பார்த்தவன்,அதுக்கும் இதுக்கும் என்னடி சம்பந்தம்?” என்று இன்னும் மீள விரும்பாத மோகத்துடன் கேட்டான்.

மார்னிங் சீக்கிரம் எழுந்துக்கணும். இப்போவே லேட் நைட்..” என்று கூச்சத்துடன் அவனின் முடியா கூடல் அறிந்து, முகம் செவ்வானமாக மாற சொன்னவளின் அழகில் மேலும் கிறங்கிப் போனவனோ,ப்ளீஸ் யாழ்!” என்று கண்கள் சுருக்கிக் கேட்டதில் நெஞ்சம் உருகி போனவளோ, அவனுக்குக் குறையாத காதலோடு தன்னையே அவனுக்குக் கொடுத்து, அவனை முழுதாகத் தனக்குள் எடுத்துக் கொண்டாள்.

இந்த ஒரு வருட கல்யாண வாழ்க்கையில், யாழினி அர்ஜுனைக் காதலித்ததை விட அதிகமாக அர்ஜுன் தான் அவளைக் காதலித்தான். காதலித்துக் கொண்டும் இருக்கிறான் என்றே சொல்லலாம்.

ஒரு நாள் அவன் முன்பு கேட்டது போல்,அப்படி என்ன என் மேல் உங்களுக்கு அப்படி ஒரு காதல்??” என்று யாழினி கேட்க,

அதை நீ தான் சொல்லணும்.. எப்படி என்னை இப்படி மாற்றினாய்?” என்று பதில் சொல்லி அவளையே அசர வைப்பான் அவன்.

ஒருபுறம் அர்ஜுனின் நேசத்தில் யாழினி சந்தோஷமாக இருக்கிறாள் என்றால், மறுபுறமோ, யாழினியால் அர்ஜுனின் உலகம் மாறிப் போனதைக் கண்டும், கேட்டும் பெரும் நிம்மதி கொண்டார் வசுந்தரா.

அதிகாலை எழுந்து குளித்து முகம்கொள்ளா பிரகாசத்துடன் பூஜை செய்ய கீழே சென்ற யாழினி, சித்ராவுடன் சேர்ந்து அதை  நிறைவாகச் செய்து முடித்தாள்.

காலை உணவு வேலையில் அவள் ஈடுபட்டு இருந்த நேரம், அர்ஜுன் அழைப்பதாக ஒரு வேலையாள் வந்து அவளிடம் தெரிவித்தான்.

கணவனைத் தேடி தங்களறையை நோக்கிச் சென்றவள், அங்கு ஏர்போர்ட்க்குக் கிளம்பிக் கொண்டு இருந்த கணவனை நெருங்கி,  “என்னாச்சு? ஏதாவது வேணுமா?” என்று கேட்டாள்.

ம்ம்ம்” என்றவன் “நீதான்!” என்று அவளைச் சட்டென்று பிடித்து இழுத்து அணைத்ததில், எந்தவித எதிர்ப்பும் காட்டாது அவனுள் அடங்கிப் போனவள், இன்னும் இறுக்கமாகக் கணவனைக் கட்டிக் கொண்டு அமைதியாக நின்றாள்.

சில வருடங்களுக்கு முன் அர்ஜுனிடம்,ஒரு பெண்ணை நீ இப்படி உருகி உருகி காதலிப்பாய்என்று சொல்லியிருந்தால், அவன் சிரித்து இருப்பான்.

அதே போல யாழினியிடம், அர்ஜுன் உன்னை அவன் உயிரை விட அதிகமாக நேசிப்பான் என்று சொல்லி இருந்தால், அவளும் நம்பாது நகைத்துத்தான் இருப்பாள்.

ஆனால் இன்று அது இரண்டுமே அவர்களின் வாழ்க்கையில் நடந்து இருக்கிறது. இதை விட அவர்களின் காதலுக்கு வேறென்ன சான்று வேண்டும்??

விஷ்வாவின் திருமணத்திற்காக வரும் வசுந்தராவை ஏர்போர்ட் சென்று பிக்கப் செய்யத்தான் அர்ஜுன் கிளம்பிக் கொண்டு இருந்தான். ஆனால் அதை மறந்து விட்டுச் சரசமாடிக் கொண்டு இருப்பவனிடம்,ப்ளைட்டுக்கு நேரமாச்சு அர்ஜுன்என்று நியாபகப் படுத்தினாள் யாழினி,

அதில் தன்னிலை அடைந்தவனும்,எஸ்! எஸ்!” என்றபடி வெளியேற முயன்ற நேரம்,சாப்டீங்களா?” என்று கேட்டு நிறுத்தினாள் யாழினி.

இல்லை, மாமை கூட்டிட்டு வந்துட்டு அவங்களோடு சேர்ந்து சாப்பிடுறேன்என்று சொல்லியபடியே வெளியேறி இருந்தான் அர்ஜுன்.

சுற்றமும் சூழமும் சேர விஷ்வாமேகா கல்யாணத்தை ஊரே மெச்சும்படி அர்ஜுனும், யாழினியும் நடத்தி முடித்து இருந்தனர்.

ஆம்! சித்ராவை கூட அவர்கள் எதையும் செய்ய விடவில்லை. கல்யாணத்தின் ஆரம்பம் முதல் நேற்றைய கிராண்ட் ரிசப்ஷன் வரை அனைத்தையுமே அவர்களே பொறுப்பாகச் செய்து இருந்தனர்.

விஷ்வாவிற்குத் தந்தை என்ற ஒரு ஆள் தன்னுடைய முக்கியமான வைபவத்தில் இல்லை என்ற குறையே தெரியாத அளவுக்கு, அர்ஜுன் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்துச் செய்திருந்தான் என்பதை விட, அவனை அந்தளவுக்குச் செய்ய வைத்து இருந்தாள் யாழினி.

கல்யாணம் முடிந்து ஏஜே பேலஸில் அரங்கேறிய சொந்தபந்தங்களுக்கான இரவு பார்ட்டியில், மெல்லிய இசையுடன் கூடிய விருந்தை அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் என்ஜாய் பண்ணிக் கொண்டு இருந்தனர்.

புதுமண தம்பதியினருடன் சேர்ந்து அரங்கம் அதிர ஒரு ஆட்டம் போட்டு விட்டு, மூச்சு வாங்க கணவனின் அருகில் வந்து அமர்ந்தாள் யாழினி. அவளைக் கண்டுகொள்ளாத அர்ஜுனின் பார்வை, சற்றுத் தொலைவில் யாரோ ஒரு முக்கியப் பிரமுகருடன் பேசிக் கொண்டு இருந்த வசுந்தராவின் மீது இருப்பதைக் கண்டு கணவனை இடித்தவள்,ஏய்! என்ன அம்மா வந்ததும் பொண்டாட்டியை கழட்டி விடப் பார்க்குறீயா?” என்று பொய்யாக முறைத்துக் கேட்டாள் யாழினி.

அதைக் கேட்டு மனைவியை ஆழ்ந்து பார்த்தவன்,நான் எங்க அம்மா கூட இருந்த நாட்கள் மிக மிகக் குறைவு யாழினி.

ஆனா எப்போ எனக்கு அவுங்க சப்போர்ட் தேவையோ, அப்போ எல்லாம் நான் கேட்காமலேயே என் முன்னாடி வந்து நிப்பாங்க. என்னை அரணா காத்து இருக்காங்க. அவ்வளவு ஏன்? துளசி வழக்கிலும் கூட அப்படித்தான் நடந்தது.

இப்போ வரைக்கும் அந்த மிராக்கிள் எப்படின்னு தான் எனக்குப் புரியவே இல்லைஎன்றவனிடம் நிதானமாக,அந்த மிராக்கிளுக்கு பேர் தான் அம்மா!!” என்றாள் யாழினி.

வாட்?’ என்ற விதமாக தன்னைப் பார்த்து இருந்தவனின் கண்களில் தன்னையே பார்த்தபடி,நமக்கு என்ன தேவைன்னு  நம்மை படைத்த ஆண்டவனுக்குக் கூடத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் நம்மைப் பெற்ற தாய்க்கு அது நன்றாகத் தெரியும்ன்னு சொல்லுவாங்க. அந்தப் புரிதலை தான் நீங்க மிராக்கிள்னு சொல்லிட்டு இருக்கீங்கஎன்றாள் யாழினி.

மனைவியின் தெளிவில் அவளை விழியகலாது அர்ஜுன் பார்த்து முடிக்கும் முன்,உங்க அம்மாவை நம்ம கூடவே இருக்கச் சொல்லலாமா அர்ஜுன்?” என்று கணவனின் தாய் பாசம் புரிந்தவளாகக் கேட்டாள் யாழினி.

ஆனால் அவனிடமிருந்து வேண்டாம்!” என்ற மறுப்பு பதிலாக வரவும், நிஜமாகவே அதை எதிர்பார்க்கவில்லை யாழினி. அதில் ஏன்?” என்று பார்த்தவளிடம்,என்னுடைய கேஸில் இருந்து நான் தெரிஞ்சுகிட்டே ஒரே விஷயம், என்னோட அம்மாவுடைய உதவி நிறையப் பேருக்குத் தேவையா இருக்கு. அவுங்களை எல்லாம் எங்க அம்மாவால் மட்டும் தான் காப்பாற்ற முடியும் என்பது...

சோ அவுங்களை என் சுயநலத்துக்காக என் கூடவே இருக்கச் சொல்வது, இட்ஸ் நாட் பேர்என்றவனின் தன்னலமற்ற பேச்சைக் கேட்டு,சோ ஸ்வீட் அர்ஜுன்! உன்னை எனக்கு இப்போ தான் இன்னும் அதிகமா பிடிக்குதுஎன்று கணவனின் ன்னம் பிடித்துக் கொஞ்சினாள் யாழினி.

அந்த அன்பில் கரைந்து போனவன், அவளுக்குப் பதில் கொடுக்கும் முன் அவளை சித்ரா அழைக்கவும்,இதோ வந்திடுறேன்..” என்று சொல்லி அவர்களை நோக்கி ஓடினாள் யாழினி.

போகும் அவளையே காதல் பொங்கப் பார்த்து இருந்தவனுள்ளோ,எங்க அம்மா மட்டுமில்லை நீயும் எனக்கென வந்த இன்னொரு மிராக்கிள் தான் யாழினி!’ என்ற எண்ணம் உதித்து, அவனின்  இதழ்களை மென்னகை புரிய செய்தது.

வட்ட வடிவ இருக்கையில் ஜுனியர்களுடன் அமர்ந்து பார்ட்டியை என்ஜாய் பண்ணிக் கொண்டு இருந்த அருணை,பாஸ்!” என்று அழைத்தான் ஜோசப்.

அதற்குக் காரணம் சமீபகாலமாக வசுந்தராவின் கேஸ்களில் சிலவற்றை அருண் வாதாட ஆரம்பித்து இருந்ததால் வந்த மரியாதை அது.

என்னடா?”

பாஸ்! மேடம்கிட்ட சொல்லி எங்களுக்கும் ஒரு கேஸை இப்படித் தள்ளி விட்டா, நாங்களும் உங்களை மாதிரி ஒரு பெரிய வக்கீலா ஆகிடுவோம்ல??” என்று அனைத்து ஜூனியர்கள் சார்பாகவும் கேட்டான் ஜோசப்.

அவனை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்த அருணோ,நானெல்லாம் ஒரு வக்கீலாவே ஆக மாட்டேன்னு சொன்னவன் தானடா நீ??” என்று பழசை தூசி தட்டிக் கேட்க, அதில் தௌசன்ட் வாட்ஸ் ஷாக் அடித்தது போல அரண்டு போனான் ஜோசப்.

இப்படி ஒரு நாள் வரும்ன்னு நான் என்ன கனவா கண்டேன்??’ என்று எண்ணிக் கொண்டவன், அருகில் இருக்கிறவன்  எவனாவது தன்னைக் காப்பற்றுவானா என்று பார்க்க, அவர்களில் ஒருத்தன் கூட ஜோசப்பைத் திரும்பிப் பார்க்கவில்லை.

அதைக் கண்டு காண்டாகிப் போனவன்,அட பாவிகளா! நீங்க சொல்லித்தானடா பேசினேன்.. இப்போ என்னவோ நான் யாருன்னே தெரியாத மாதிரி இருக்கீங்களேடா பண்ணாடை பரதேசிகளா! உங்களை…என்று பல்லைக் கடித்தவன், அருண் புறம் திரும்பி,பாஸ்! அந்த டிஷ் ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னாங்க. போய் அதை டேஸ்ட் பண்ணிட்டு வாங்களேன்” என்று சொல்லி, அவனை வம்படியாக அருகில் இருந்த பபே நோக்கிச் செல்லும்படி செய்தான்.

அருண் செல்லவும், கொலைவெறியுடன் தங்களை ஜோசப் பார்க்கவுமே உஷாராகி போன ஜுனியரில் ஒருவன்,எனக்கும் லேசா பசிக்கிற மாதிரி இருக்கு. நான் போய்..” என்று அங்கிருந்து நைசாக எழுந்து போக போனவனின் சட்டையைப் பிடித்து இழுத்து அமர வைத்த ஜோசப்,

எங்கே போற ராசா?” என்று கேட்க,

பசிக்குது! அதான் எதாவது சாப்பிட்டுட்டு வரலாம்னு..” என்று உள்ளே போன குரலில் சொன்னவனிடம்,அதுக்கு எதுக்கு அங்கே போற? இரு ராசா! நானே உன் வாய்க்கு ஊட்டி விடுறேன்என்றவனோ, கையை மடக்கி விட்டான் ஒரு குத்து, அவனின் வாயிலேயேஅதைப் பார்த்த மற்றவர்களுக்குத் தானாகவே வயிறு கலங்கியது

அதில் அரண்டு அனைவரும் ஜோசப்பிடம் வந்து சரணடைந்து,நீ என்ன சொல்றீயோ அப்படியே செய்றோம் ஜோசப்என்றனர்.

அதைக் கேட்டு,அது..!!” என்றவனும்,பாலோ மீ!” என்று அவர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு அருணை நோக்கிச் சென்றான்.

தன் தட்டில் உணவுகளை எடுத்து வைத்துக் கொண்டு இருந்த அருணின் பின் சென்று, ஒரு தட்டுடன் நின்ற ஜோசப்,பாஸ்! நான் சொன்ன அந்த கேஸ் விஷயம்..” என்று இழுத்தவனைத் தொடர்ந்து மற்றவர்களும்,ஆமா பாஸ், எங்களுக்கும் ஏதாவது கேஸ் வாங்கிக் கொடுங்களேன்என்று கெஞ்ச ஆரம்பித்தனர்.

அனைவரின் வேண்டுகோளையும் ஏற்ற அருண், சில நிமிட மௌனத்திற்குப் பின்,சரி, அந்த ரூபிணி கேஸை நடத்துறீங்களா?” என்று பொதுவாகக் கேட்க,

எது? அந்த எழுபது வயசுல செத்துச்சே அந்தக் கிழவி கேஸா?” என்று நக்கலாகக் கேட்டான் ஜோசப்.

ன்டா அந்த கேஸுக்கு என்ன?” என்றான் அருண்.

சும்மா இருங்க பாஸ்.. அது எல்லாம் இத்தனை நாள் உயிரோட இருந்ததே பெருசு! இதுல அது சாவுல மர்மம் இருக்குன்னு போய், நாங்க கோர்ட்ல வாதாடுனா, செத்த அந்தக் கிழவியே நம்பாது. இந்த லட்சணத்தில் அந்த கேஸை நாங்க ஜெயிக்க.. ஏன் பாஸ்? ஏன் உங்களுக்கு எங்க மேல இந்தக் கொலைவெறி??”

சரி, அது வேணாமா? அப்போ அந்த ஜிந்தா கேஸ்.. அது ஓகேவா?”

இதுக்கு அந்தக் கிழவியே கேஸே மேல்!”

ன்டா??”

பின்ன என்ன பாஸ்?? அதுவாச்சும் எழுபது வயசுல அழகா வீட்டுக்குள்ள செத்துச்சு. ஆனா இந்த ஆளு எங்கே செத்தான்னு இன்னும் போலீசுக்கே தெரியலை. அப்படிப்பட்டவனை நான் எங்கேன்னு போய் தேடி கண்டுபிடிச்சு, எப்போ இந்த கேஸை முடிக்க??? ம்ம்ம்கூம்... இது எல்லாம் சரிபட்டு வராது பாஸ்நல்லா யூத்தான கேசா ஒன்னு கொடுங்க

யூத்தா..??

ம்ம்ம்புடுச்சுட்டேன்அந்த நாலாவது மாடி ஜான்சி கேஸ், அந்தப் பொண்ணுக்கு பத்தொன்பது வயசு தான்! அதை எடுத்து நடத்துறியா?” என்று அருண் கேட்டவுடன், டேய் வாங்கடா! நாம வேற வக்கீல்கிட்ட போய் ஜூனியரா சேர்ந்து வக்கீல் ஆகுற வேலையைப் பார்க்காலாம்என்று கோபித்துக் கொண்டு கிளம்ப போன ஜோசப்பைத் தடுத்த அவனின் நண்பர்கள்,டேய்! அதான் நீ கேட்ட மாதிரி யூத்தா ஒரு கேஸ் கொடுக்குறேன்னு சொல்லுறாரே, அப்புறமும் ன்டா இப்படிப் பேசுற?” என்று கேட்க,

அடேய் அப்ரசண்டீங்களா! உண்மை தெரியாம பேசாதீங்கடா! இவர் சொல்றாரே அந்தப் பொண்ணு, நல்லா இருக்கியாமான்னு கேட்டதுக்கே, ஒருத்தனை சைக்கோத்தனமா கொன்னு இருக்கு. இந்த லட்சத்தில் அதுகிட்ட போய்,ஏம்மா  நீதான் கொன்னியா?’ன்னு நான் கேட்டேன்னு வை.. என் மென்னிய கடிச்சு குதறிடும். இதெல்லாம் எனக்குத் தேவையா?” என்று அழுகாத குறையாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னவனின் பேச்சைக் கேட்டு மற்றவர்கள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.

ன்டா நான் சாக போறேன்னு சொல்றது உங்களுக்கு எல்லாம் அவ்ளோ காமெடியாவா இருக்கு?” என்று எகிறிக் கொண்டு கேட்டவன்,

அருணிடம் திரும்பி,பாஸ்! நீங்க எனக்கு கேஸ் கொடுக்க வேண்டாம்! இப்போ நான் உங்களுக்கு ஒரு பெரிய கேஸ் கொடுக்குறேன், எடுத்துக்கோங்க!” என்றான்.

என்ன கேஸ்டா?” என்று அருண் கேட்க,

ம்ம்ம்.. இவுனுங்களை இங்கேயே கொன்னுட்டு நான் ஜெயில் போக போற கேஸ் தான் அது!” என்றவன், அங்கே டேபிளில் இருந்த போர்க்கை எடுத்துக் கொண்டு, மற்றவர்களைக் குத்த கிளம்பவும், அனைவரும் தலைதெறிக்க அங்கிருந்து ஓடினர்.

ஒருவழியாக அடித்து பிடித்துக் களைத்துப் போய் திரும்பி வந்தவர்களைச் சமாதானப்படுத்தி, அவர்களுடனே அமர்ந்து அரட்டையுடன் உண்டு முடித்தான் அருண்.

எல்லாரும் சேர்ந்து பாமிலி போட்டோ எடுக்கலாம் வாங்க என்று விஷ்வா அழைக்கவும், சித்ரா, விஷ்வா, மேகா, யாழினி, அர்ஜுன், வசுந்தரா என்று அனைவரும் மணமக்களை நோக்கி எழுந்து சென்றனர்.

போட்டோவுக்காகத் தன் சொந்தபந்தத்துடன் சேர்ந்து நின்று இருந்த அர்ஜுனின் மனதில், எதற்காக எல்லாம் ஒரு காலத்தில் அவன் ஏங்கித் தவித்தானோ, அது எல்லாம் இன்று அவனுக்குக் கிட்டி விட்டது போன்ற ஒரு நிறைவு இருந்தது.

அதன் பிரதிபலிப்பாக, முகம் கொள்ளா சந்தோஷத்துடன், இப்படி ஒரு முழுமையான வாழ்க்கை தான் வாழ காரணமாக இருக்கும்என் மனைவி! என்று ஒருபுறம் காதலாக யாழினியைப் பார்த்து, அவளைத் தன் ஒரு கைக் கொண்டு இடையோடு அணைத்தவன், மறுபுறம் என் தாய்! என்று வசுந்தராவின் தோளில் அணைவாக தன் மறு கைக் கொண்டு, அவரின் தோளின் மீது கைப் போட்டுப் புன்னகையுடன் கம்பீரம் மிளிர நின்றான்.

அவனின் அந்த அழகிய தருணத்தை என்றும் மறைய விடாது, கேமராவும் புகைப்படமாகத் தன்னுள் பதித்துக் கொண்டது.

திடீரென்று அரவணைத்த மகனின் நேசத்தில் வசுந்தராவுக்குத் தன் மகனை மீண்டும் பெற்றது போன்ற ஒரு உணர்வு எழ, அதில் ஆச்சரியப்பட்டுப் போய் அவனைப் பார்த்தவரின் கண்கள் லேசாகக் கலங்கி விட்டது.

தாயின் அசைவில் அவரைத் திரும்பிப் பார்த்த அர்ஜுன், “என்ன?” என்று மகன் கேட்க,

“ஒண்ணுமில்லை” என்று ஆனந்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு, தலையசைத்தவரின் நெஞ்சினில் வார்த்தைகளில் வடிக்க முடியாத மகழ்ச்சி காட்டாற்று வெள்ளமாகப் பாய்ந்து ஓடியது.

இரவு பார்ட்டி முடிந்து அனைவரும் கிளம்பிச் சென்ற பின், ஹாயாக தாய் மற்றும் மனைவியுடன் அமர்ந்து அர்ஜுன் பேசிக் கொண்டு இருந்த நேரம், வசுந்தராவின் போன் அலறியது. அதை எடுத்துப் பேசியவர்,எப்போ எங்கே?” என்று பேசி முடித்து மகனை றிட்டவர், “சாரி அர்ஜுன்! ஒரு எமர்ஜென்சி கேஸ், ஹாவ் டூ கோஎன்று இயலாமையுடன் சொன்னார்.

அதற்குக் காரணம், அவருக்குமே மகனுடனான இந்த நிமிடங்கள் முடிய கூடாது என்ற ஆசை இருந்தது தானே?

அதன்பொருட்டே அவ்வாறு அர்ஜுனிடம் சொன்னார் அவர்.

தாயின் கடமையை மதித்தவனும் எந்தவித உணர்வுகளையும் முகத்தில் காட்டாது,இட்ஸ் ஓகே மாம்! யூ கேரி ஆன்!” என்றான், முயன்று வரவழைத்த புன்னகையுடன்.

வசுந்தரா அங்கிருந்து புறப்படுவதற்கு முன் மகனின் கன்னம் தடவி,நான் எங்கு இருந்தாலும் என் நினைவுகள் உன்னைச் சுற்றித்தான் இருக்கும் அர்ஜுன். ஆல்வேஸ் பீ ஹாப்பி மை சன்!” என்றவர், அந்த வளர்ந்த குழந்தையின் நெற்றியில் முத்தம் வைத்தார். தாயின் ஸ்பரிசத்தை ஆழ்ந்து உள்வாங்கியவனும், நோ மாம்!” என்று உள்ளார்ந்த அன்புடன் சொல்லி, அவரை அன்புடன் வழி அனுப்பி வைத்தான்.

ஆளுமையின் முழு உருவமாக ஜுனியர்களுடன் செல்லும் தன் தாயையே பார்த்து நின்று இருந்த கணவனின் நெஞ்சத்தில் சாய்ந்து, அவனை அணைத்து நின்ற யாழினி,உங்க அம்மா கிரேட்ல!!” என்றாள்.

அதைக் கேட்டு மனைவின் வகிட்டில் காதலோடு இதழ் பதித்தவன்,பிகாஸ் ஷி இஸ் தி கிரேட் லாயர் வசுந்தரா தேவியாச்சே?? சோ எப்பவுமே அவுங்க கிரேட்டா தான் இருப்பாங்கஎன்று தாயைக் குறித்துப் பெருமையாகச் சொன்னான் அர்ஜுன்.

அப்போ நான் உனக்கு கிரேட் இல்லையா?” என்று சொன்ன மனைவியின் செல்ல சிணுங்களில் அவளைப் பார்த்தவன்,நீங்க ரெண்டு பேரும் கிரேட்டா அமைஞ்சதுனால தான், நான் இன்று இவ்ளோ சந்தோஷமா இருக்கேன்என்றவனின் மகிழ்வை அவனின் கண்களில் கண்டவள், அதே சந்தோஷத்துடன், அவனின் கன்னத்தில் முத்தமிட்டுச் சொன்னாள், “ஐ லவ் யூ அர்ஜுன்!! என்று..!!

அந்த வார்த்தைகளில் மனைவியைக் கைகளில் ந்தியவனும் அவளின் பிறை நுதலில் முத்தமிட்டு, “மீ டூ!! என்று சொல்லாமல் சொல்லிப் பங்களாவை நோக்கி நடை போட்டான்.

இதே சந்தோஷமும், அன்பும் அவர்களின் வாழ்வில் என்றும் நீக்கமற நிறைந்து இருக்க வேண்டுமென்று, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொண்டு, நாமும் அவர்களிடமிருந்து விடை பெறுவோம்!

அன்புடன்
வான்மதி ஹரி

                             சுபம்

Advertisement