Advertisement

துளசி கேஸில் இதுவரை தங்களுக்குத் தற்காலிக தீர்வு தான் கிடைத்து இருக்கிறதே தவிர, நிரந்தர தீர்வைக் கொடுக்கக் கூடிய அந்தக் குற்றவாளியின் நிழலைக் கூட இன்னும் தன்னால் நெருங்க முடியவில்லையே என்று பைலில் பார்த்துக் கொண்டு இருந்த எவிடென்ஸில் இருந்து கண்களை அகற்றி, நெற்றியை நீவி விட்டபடி, பின்பக்கமாகச் சாய்ந்து இமை மூடி, தன்னைத்தானே ஆசுவாசப்படுத்த முயன்றார் வசுந்தரா.

அந்நேரம் அங்கே தாயை காண வந்த அர்ஜுனுக்கு அவரின் தோற்றம் கண்டு வேதனையாக இருந்தது, தன்னால் தானே தன் தாய்க்கு இந்த நிலை என்று??

அதன்பொருட்டு அவரை நெருங்கிச் சென்றவன்,மாம்!” என்று அழைத்தான்.

அந்தக் குரலில் விழித்தவர், மகனைக் கண்டு,என்ன அர்ஜுன்?என்று கேட்டார்.

அம் சாரி! என்னால் தானே நீங்க இவ்ளோ கஷ்டப்படுறீங்க?என்று மனதார மன்னிப்பு கேட்டான்.

அவனின் மன்னிப்பை ஒரு புன்னகையுடன் ஏற்றவர்,
இங்கே வா!” என்று தனக்கு அருகில் அவனை அழைத்து அமர வைத்தவர்,

உண்மையும், நியாயமும் அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் ஈசியா கிடைச்சுடாது அர்ஜுன்! போராடினாத்தான் கிடைக்கும்என்று அழுத்தி சொன்னவர்,அதுமட்டுமில்லாமல், இந்தப் போராட்டங்கள் எல்லாம் எனக்கு ஒன்னும் புதுசு இல்லையே?? சோ யூ டோன்ட் வொர்ரி!” என்று சொல்லி மகனைச் சமாதானப்படுத்த முயன்றார்.

அதில் சமாதானமாகிப் போனவனும்,உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லத்தான் வந்தேன் மாம்என்றான்.

என்கிட்டையா?? என்ன??” என்று ஆர்வம் மேலோங்கிய குரலில் கேட்டவரிடம்,  “இதைச் சொல்லலாமா வேண்டாமான்னு தெரியலை. பட் அன்றைய சம்பவ நினைவுகள் சில எனக்கு அப்போ அப்போ வந்து போகுது மாம். பட் ரொம்ப கிளியரா இல்லைஎன்றான் அர்ஜுன்.

வாட்?? இதை ஏன் என்கிட்ட நீ முன்கூட்டியே சொல்லலை?” என்று வசுந்தரா கேட்கவும்,

அதான் சொன்னேனே மாம், எதுவும் ரொம்ப கிளியரா இல்லைன்னு

ஓகே, இப்போ சொல்லு! என்ன மாதிரி நினைவுகள் அது?” என்றவரின் வார்த்தைகளை உள்வாங்கியவன், நிதானமாகப் பேச ஆரம்பித்தான்.

அன்னைக்கு நான் உங்ககிட்ட சொன்னேன்ல, யாரோ என்னை உலுக்கினாங்கன்னு

ம்ம்ம்.. ஆமாம், உன்னோட அப்பான்னு சொன்ன

இல்லை மாம், அது அப்பா இல்லைஎன்றான் அர்ஜுன்.

என்னது?? அவரில்லைன்னா அப்போ வேற யாரு??” என்று விழிகள் விரிய கேட்டார் வசுந்தரா.

அது.. அது.. துளசி மாம்என்றவனின் வாக்குமூலத்தைக் கேட்டு ஷாக்காகிப் போனவர்,வாட்? அது துளசியா?” என்று கேட்க,

எஸ் மாம்! இப்போ தான் எனக்கே அது கொஞ்சம் கிளியரா தெரிய ஆரம்பிச்சதுஎன்றான் அவன்.

ஆர் யூ சூர்?” என்று மகனைப் பார்த்து வசுந்தரா கேட்க,

எஸ் மாம்! அம் டேம் சூர் அது துளசி தான்!”

சிறிது நேரம் மகன் சொன்னதையே வசுந்தரா தனக்குள் அலசி ஆராய்ந்து கொண்டு இருந்த நேரம், அங்கே அவர்களைத் தேடிக் கொண்டு வந்தாள் யாழினி.

அவளைக் கண்டதும்,வாம்மா!” என்ற வசுந்தராவிடம்,எப்படி இருக்கீங்க ஆன்ட்டி?” என்று அவள் கேட்க,

நல்லா இருக்கேன்டாஎன்று அவர் பதிலளித்துக் கொண்டு இருக்கும் பொழுதே, தன்னவளின் வருகையில் இன்பமாக அதிர்ந்து எழுந்து நின்ற அர்ஜுனோ,ஏய்! வரேன்னு சொல்லவே இல்லைஎன்று சந்தோஷக் குரலில் கேட்டான்.

தன்னவனை நெருங்கி, அவனை ஒருபக்கமாக அணைத்து நின்றவள், ஹாவ் சர்ப்ரைஸ் பார் யூ!” என்று அவனின் கண்ணோடு கலந்து சொன்னாள்.

என்ன?” என்று அவன் ஆர்வம் மின்ன கேட்கவும்,

வெய்ட் மினிட்!” என்று சொல்லித் திரும்பி அறையின் நுழைவாயிலுக்குச் சென்றவள்,உள்ளே வாங்க!” என்று யாரையோ அழைத்தாள்.

யாரை இவள் அழைக்கிறாள்?’ என்று அவளின் விழி பாதையை பார்த்து நின்று இருந்த அர்ஜுனுக்கும், வசுந்தராவுக்கும் உள்ளே வந்த விஷ்வாவையும், சித்ராவையும் கண்டு அதிர்ச்சி தான்!

தன் உறைவு விலகாது அர்ஜுன் நின்று கொண்டு இருக்கும் வேளையில், “வா வா சித்ரா!” என்று இன்முகமாக வரவேற்ற வசுந்தரா, வாசலில் தயக்கம் மேலோங்க நின்று இருந்த விஷ்வாவிடம். “உனக்குத் தனியா சொல்லணுமா? இதுவும் உன் வீடு மாதிரி தான்! வந்து உட்கார்!” என்று அவனுக்கு அழைப்பு விடுத்தும், அர்ஜுனையே பார்த்திருந்தவனின் குற்றவுணர்வு புரிந்தவர்,

அர்ஜுன்!” என்று மகனை அழைத்து அர்த்தம் பொதிந்த பார்வையை அவனுக்குக் கொடுத்தார்.

அதில் சுய உணர்வு பெற்றவனும், தாய் சொல்லைத் தட்டாது,வா விஷ்வா! டேக் யுவர் சீட்!” என்று சொல்லித் தனக்கு அருகில் அவனை அமர சொன்னான்.

விஷ்வா அர்ஜுனுக்கு அருகில் சென்று அமரவும்,தான் எங்கே அமர்வது? என்று யோசித்தபடி நின்று இருந்த யாழினியைக் கண்ட வசுந்தரா,நீயும் வந்து உட்கார்மா!” என்றார்.

எங்கே?? என் இடத்தில் தான் இந்த தடிமாடு உட்கார்ந்துட்டானே??” என்று விஷ்வாவைக் கண்களால் எரித்தவள், சட்டென்று துள்ளிக் கொண்டு, அர்ஜுனையும் அவனையும் பிரித்துத் தள்ளிக் கொண்டு அவர்களுக்கு இடையில் சென்று அமர்ந்தவளிடம்,ஏய்! என்ன பண்ற எருமை?” என்று காய்ந்தான் விஷ்வா.

பாரு அர்ஜுன்! உன் தம்பி என்னைத் திட்டுறான்என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு புகார் கொடுத்தவளின் செல்ல சிணுங்களில் சிக்கியவனோ, அவளை விடப் பாவமாக, அதற்கு என்ன பதில் சொல்வது என்று முழித்தான்.

ஏனென்றால் அவனுக்கு இந்த மாதிரி விளையாட்டுக்கள் எல்லாம் புதிது.

ஏய்! அங்கே என்ன கம்ப்ளைன்ட்? தைரியமிருந்தா என்கிட்டே பேசு!” என்ற விஷ்வாவின் வார்த்தைகளைக் கேட்டவளோ, “யாருக்குடா தைரியமில்லை எனக்கா??” என்று அவனின் முடியை கொத்தாகக் கைகளில் பிடித்துக் கொண்டு ஆட்டியவளை அர்ஜுன் தான் பெரும்பாடு பட்டுத் தடுத்து நிறுத்தி இருந்தான்.

அர்ஜூனால இன்னைக்கு பிழைத்தடா!” என்றவளின் பேச்சைக் கேட்டவனோ,அதை நான் சொல்லணும்என்றான் விடாது.

அதில் காண்டாகி போனவள்,இன்னைக்கு  நீ  செத்தடா!”  என்று மீண்டும் அவனிடம் மல்லுக்கட்ட தயாராக, மீண்டும் அர்ஜுன் தான் அவளைப் பிடித்து இழுத்துத் தடுத்துக் கொண்டு இருந்தான்.

அதே நேரம் சித்ராவும்,என்ன விஷ்வா இது சின்னப் பிள்ளை போல?” என்று தன் பங்குக்கு மகனைக் கண்டித்தார்.

மாம்! நீங்களும் பார்த்தீங்க தானே? அவ தான் என் முடியை முதலில் புடிச்சு இழுத்தாஎன்று இரண்டு வயது குழந்தை போல தாயிடம் புகார் அளிப்பவனைக் கண்டவருக்கோ, தலையில் அடித்துக் கொள்ளலாம் என்று இருந்தது.

சும்மா இரு விஷ்வா!” என்றவரின் குரல் உயர்வில் அங்கிருந்து போனாலும், கண்களால் யாழினியை எரிக்க மறக்கவில்லை விஷ்வா.

அதைக் கண்டு பயப்படாத யாழினி, வெற்றி மமதையில் நாக்கை வெளியே துருத்தி பழிப்பு காட்டிக் கேலி செய்யவும்,போடி!” என்று முறுக்கிக் கொண்டு, முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டான் விஷ்வா.

விஷ்வாவின் நிலை அறிந்தவனாக அர்ஜுன்,யாழினி! சும்மா இரு! வீணா அவனைச் சீண்டாதே!” என்று தன்னவளிடம் சொன்னான்.

அவனின் பேச்சைக் கேட்டு அதிசயித்து அவனைப் பார்த்தது, அவன் மட்டுமில்ல அங்கிருந்த அனைவரும் தான்.

இரண்டு நாட்களுக்கு முன் அவனால் அர்ஜுன் அடைந்த துன்பங்கள் என்ன என்ன?? அது அனைத்தும் அறிந்திருந்தும், இன்று அவனுக்கே சப்போர்ட் செய்தவனை அப்படிப் பார்க்காது வேறு எப்படி அவர்களால் பார்க்க முடியும்?

என்ன தான் வசுந்தரா விஷ்வாக்குப் பரிந்து பேசி, அவனைப் புரிந்து கொள்ள முயற்சி செய் என்று அர்ஜுனுக்கு அறிவுரை கூறி இருந்தாலும், அவருக்கே விஷ்வாவை அவன் மன்னிப்பானா என்ற சந்தேகம் இருக்கத்தான் செய்தது.

ஆனால் அது இப்பொழுது இல்லாது போனதில் அவருக்குச் சந்தோசமே!

எல்லாரும் தன்னைப் பார்க்கும் விதத்தைக் கண்ட அர்ஜுன்,என்ன?” என்று அனைவரையும் பார்த்துப் பொதுவாகக் கேட்டான்.

மற்றவர்கள் அதற்குப் பதில் சொல்லும் முன்,என்னை நீ மன்னிச்சுட்டியா அர்ஜுன்?என்று கண்கள் மிளிர விஷ்வா கேட்டான்.

சட்டென்று அவனுக்குப் பதில் சொல்ல முடியாது தவித்தவன், சில நிமிட மௌனத்திற்குப் பின்,டு பீ பிரான்ங்.. ரியல்லி உன்னை மன்னிச்சுட்டேனான்னு எனக்குத் தெரியாது.

பட் என்னோட மாம் என்கிட்ட அடிக்கடி சொல்லுவாங்க.. குற்றம் செய்தவனை விட அவனை அப்படிச் செய்ய வைத்தவன் தான் மிகப் பெரிய குற்றவாளி என்று!

அப்படிப் பார்த்தால் உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய நான் தான் உன்னிடம் மன்னிப்பு கேட்கணும், அம் சாரி!” என்று எந்தவித ஈகோவும் இல்லாது தன் தம்பியிடம் மன்னிப்பு கேட்டான் அர்ஜுன்.

அவன் அவ்வாறு கேட்பான் என்று அங்கிருந்த யாரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை, முக்கியமாக விஷ்வா.

அண்ணனின் மன்னிப்பில், அவனின் மெச்சூர்ட் வார்த்தைகளைக் கேட்டு, இன்னும் தனக்குள் கூனி குறுகிப் போனவன், சட்டென எழுந்து வந்து அவனின் முன் மண்டியிட்டு,ரியல்லி அம் வெரி சாரி அர்ஜுன்!!” என்று எமோஷனாலாகச் சொல்லியவனை சட்டென்று குனிந்து எழுப்பி விட்டவன்,லீவ் இட் மேன்! இதில் உன் மேல மட்டும் தப்பு இல்லைஎன்று சொல்லி அவனை அணைத்து இருந்தான். அதைக் கண்டுகொண்டு இருந்த சித்ராவுக்குக் கண்கள் கலங்கியது.

சத்தியமாக அது துக்கக் கண்ணீர் இல்லை!

தனக்குப் பின் தன் மகனுக்கு யார் இருக்கிறார்கள் என்று பல நாட்களாக அவரை அரித்துக் கொண்டு இருந்த எண்ணத்திற்கு, இன்று விடை கிடைத்ததில் வந்த ஆனந்தக் கண்ணீரே அது!

ஒருபுறம்,நான் இருக்கிறேன் உங்களுக்குஎன்று சொல்லாமல் சொல்லி, தன் மகனை ஜாமீனில் வசுந்தரா வெளியே கொண்டு வந்து இருந்தார் என்றால், மறுபுறமோ,நீ என் தம்பிடா!என்று சொல்லாமல் சொல்லி வாரி அணைத்துக் கொண்டு நிற்கிறான் அர்ஜுன்.

இதற்கு மேல் தன் மகன் குறித்து கவலைப்பட சித்ராவுக்கு என்ன இருக்கிறது என்று எண்ணிப் பூரித்துப் போனவர்,என்னையும் மன்னிச்சிடு அர்ஜுன்!” என்று நா தழுதழுக்கச் சொன்னார்.

அந்த வார்த்தைகளில் தம்பியை விடுவித்து விட்டு, அவரைத் திரும்பிப் பார்த்த அர்ஜுன்,நீங்க எதுக்கு மன்னிப்பு எல்லாம் கேட்குறீங்க?” என்று கேட்டான்.

இல்ல அர்ஜுன், நீ என்னை ஒதுக்கினாலும் உன் மீதான என் பொறுப்பில் நான் ஒதுங்கி இருந்து இருக்க கூடாது. ஒருவேளை நான் உன்னிடமிருந்து பிடிவாதமா விலகாம பாசம் காட்டி இருந்தால், நீங்கள் இருவரும் இப்படி வளர்ந்து இருக்க மாட்டீங்களோ என்னவோ?” என்று மனம் வருந்திப் பேசினார் சித்ரா.

அதை முழுவதுமாக உள்வாங்கியவனோ, திடமாக,உங்கள் மீது எந்த தவறுமில்லை. அப்படிப் பார்த்தாலும் பாசம் காட்ட வந்த உங்களை ஒதுக்கி வைத்தவன் நான் தான். சோ அதுக்கு நீங்க தான் என்னை மன்னிக்கணும்!” என்றான் அர்ஜுன்.

அங்கு நடந்து கொண்டு இருந்த புரிதல் போராட்டத்தில் அனைவருமே லேசாக மற்றவரை நினைத்து நெகிழ்ந்து போயிருந்த நேரம், தன் இருபக்க கன்னத்தையும் கைகளில் தாங்கிக் கொண்டு, குத்துக்காலிட்டு சோகமாக அமர்ந்தபடி அதைப் பார்த்துக் கொண்டு இருந்த யாழினியைக் கண்டு,உனக்கு என்ன ஆச்சுடா??” என்று கேட்டார் வசுந்தரா.

ஹப்பா! என்னைக் கவனிக்கவும் இங்கே ஒரு ஆள் இருக்காங்களே!” என்று சோபாவை விட்டுக் குதித்துக் கொண்டு எழுந்து அவரிடம் சென்றவள்,உங்க பையனை நான் இப்பவே டிவோர்ஸ் செய்யுறேன்!” என்று அர்ஜுனை முறைத்துக் கொண்டு சொன்னாள்.

அவளின் கிண்டல் புரிந்தவரும்,அப்படியா..?? ஆனா அந்த கேஸை எல்லாம் என்னால் நடத்த முடியாதும்மா. வேணும்ன்னா எனக்குத் தெரிந்த நல்ல குடும்ப லாயரை உனக்கு அறிமுகப்படுத்தவா? அவர் உனக்கு உடனே டிவோர்ஸ் வாங்கிக் கொடுத்துடுவார்என்ற வசுந்தராவின் வார்த்தைகளைக் கேட்டு வாயைப் பிளந்து விட்டாள் யாழினி. அதைக் கண்டு அங்கிருந்த அனைவரும் சிரித்து விட்டனர்

அதைக் கண்டு ரோஷம் பெருக்கெடுக்க,நான் கிளம்புறேன்!” என்று கால்களை உதைத்துக் கொண்டு கிளம்ப போனவளை, தன்னைக் கடந்து செல்லும் முன் கைப் பிடித்துத் தன்னருகில் நிற்க வைத்து இருந்தான் அர்ஜுன்.

அவனின் பிடியில், அந்த உரிமையில், முகம் மலர அவனை திரும்பிப் பார்த்தவள், அவனை அணைத்துக் கொண்டு நின்றபடி விஷ்வாவிடம் மீண்டும்,தள்ளிப் போடா!” என்று அவனுடன் உரிமை போராட்டம் செய்யவும்,ஏய்! என்னை வம்பு இழுக்கலைன்னா உனக்குத் தூக்கமே வராதா?” என்று அவனும் அவளுடன் மல்லுக்கட்ட ஆரம்பித்தான்.

அவர்கள் இருவரின் நட்பின் ஆழத்தையும், பாசத்தின் எல்லையையும் கண்ட அர்ஜுனுக்கு, அந்நேரம் ஒரு விசயத்தை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அது என்னவென்றால்,விஷ்வா ஏன் தன்னை யாழினியின் வாழ்க்கையில் இருந்து விலக்க நினைத்தான்?’ என்பதைத் தான்.

இப்படிப்பட்ட தேவதையை யார் தான் ஒரு ராட்சசனிடம் ஒப்படைக்க நினைப்பார்கள்?என்று எண்ணும் போதே அர்ஜுனின் காதல் மனது,இப்பொழுது நான் அவளின் ராட்சன் இல்லை! அவளை உயிருக்கு உயிராக காதலிக்கும் காதலன்!” என்று எண்ணி, தன்னவளின் மீதான அணைப்பின் இறுக்கத்தை லேசாக அதிகரிக்க வைத்தது.

விஷ்வாவுடன் மல்லுக்கட்டிக் கொண்டு இருந்தாலும், தன்னவனுடனான நெருக்கம் அதிகரிப்பதை உணர்ந்த யாழினி, சட்டென்று அவனைத் திரும்பி நிமிர்ந்து பார்க்கவும், கண்களினாலேயே அவளுக்குக் காதல் கணை வீசினான் அந்த மாயக்காரன்.

அதில் விரும்பிச் சிக்கிக் கொண்டவளும், தன் அன்பான அணைப்பில், அவனுக்குத் தன் நேசத்தைப் புரிய வைத்துக் கொண்டு இருந்தாள்.

சின்னவர்களின் சேட்டையை ரசித்தபடியே பரிமளத்தைக் கூப்பிட்டு, வந்தவர்களுக்கு ஜுஸ் அண்ட் ஸ்நாக்ஸ் எடுத்து வரச் சொன்னார் வசுந்தரா.

அது வரவும், அதைப் பருகியபடியே பல காலத்திற்குப் பின் அனைவரும் தங்களை மறந்து, ஒருவருடன் ஒருவர் அரட்டையில் ஈடுபட்டுப் பேசி சிரித்துக் கொண்டு இருந்தனர்.

அந்நேரம் வெளியில் வசுந்தரா சொல்லியிருந்த சில விஷயங்களைப் பற்றிச் சேகரிக்கச் சென்று இருந்த ஜூனியர்கள் வீடு திரும்பி இருந்தனர்.

உள்ளே கேட்ட பேச்சுடன் கூடிய சிரிப்பைக் கேட்டு, சடாரென தான் நின்றது மட்டுமின்றி தன்னுடன் வந்தவர்களையும் தன் இரு கைககள் கொண்டு நிறுத்திய ஜோசப்பை,என்னடா?” என்று மற்றவர்கள் கேட்கவும்,

நம்ம சரியான வீட்டுக்குத்தான் வந்து இருக்கோமா?”

ஏன்டா அப்படிக் கேட்குற?”

உங்களுக்குக் கேட்கலை??”

என்ன கேட்கலை??” என்று எரிச்சல் வந்து கேட்டவர்களிடம்,காதை தீட்டி நல்லா கேளுங்கடா! உள்ளே இருந்து ஏதோ சிரிப்பு சத்தம் எல்லாம் கேட்குது பாருங்க!” என்ற பின்பு தான் மற்றவர்களும் அதைக் கேட்டனர்.

ஆமா ஆமா.. கேட்குது..” என்றவர்களும்,அதுக்கு இப்போ என்னடா?” என்று அவனிடம் கேள்வி கேட்டனர்.

கொஞ்சம் நல்லா யோசிங்க.. இந்த வீட்டில் நம்மளைத் தவிர வேறு யாராவது சிரிச்சு நீங்க பார்த்து இருக்கீங்களா?” என்றவனின் திகில் கேள்விக்கு,இல்லஎன்று குரல் நடுக்கத்துடன் சொன்னான் ஒருவன்.

அப்போ உள்ளே இருக்குறது யாரு??” என்று உள்ளே போன குரலில் ஒருவன் கேட்கவும்,

வேற யாரு?? பேயா தான் இருக்கும்!!” என்று ஜோசப் சொல்லவும், சுற்றி இருந்த அனைவருக்கும் பயத்தில் வேர்த்துக் கொட்ட ஆரம்பித்து விட்டது.

காரை பூட்டி விட்டு அந்நேரம் உள்ளே வந்த அருண், வழியை மறைத்துக் கொண்டு நிற்பவர்களையும், அவர்கள் பேசிக் கொண்டு இருப்பதையும் கேட்டுத் தலையில் அடித்துக் கொண்டவன்,தள்ளுங்கடா!” என்றபடி அவர்களை எல்லாம் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றான்.

அவனின் செயலைக் கண்டு அலறிய ஜோசப்,சீனியர்! இப்படி சடார்ன்னு எல்லாம் போக கூடாது! அப்புறம் பேய் அடிச்சுடும்என்று எச்சரித்தும், முன்னேறிக் கொண்டு இருப்பவனைக் கண்ட மற்றவர்கள்,டேய்! என்னை விடுங்கடா! பேய்கிட்ட அடி வாங்குற  ஸ்ட்ரென்த் எல்லாம் என்கிட்ட இல்லடா!” என்று கதறியும், அவனை விடாது தங்களுடன் பிடித்து இழுத்துச் சென்றார்கள் மற்றவர்கள்.

அங்கே கீழ் அறையில் வசுந்தரா தன் குடும்பத்துடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருப்பதைப் பார்த்த அருணுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.

இப்படி ஒரு நாள் தங்களின் மேடம் வாழ்க்கையில் வராதா??’ என்று அவன் எவ்வளவு நாள் ஏங்கி இருக்கிறான் என்பதை அவன் மட்டுமே அறிவான்!!

பேயைக் கண்டால் கூட ஜோசப் இப்படி அதிர்ந்து இருப்பானோ தெரியாது?? ஆனா அதற்கு மேல் வசுந்தராவைப் பார்த்து அண்டா வாயைத் திறந்து இருந்தான் அவன். அதில் அவன் வாயில் ஒன்று போட்டான் ஜூனியரில் ஒருவன்.

அந்த அடியில் சுயநினைவு வந்தவனோ,இந்தச் சம்பவம் எப்படா நடந்தது? இவன் எப்படா வெளியே வந்தான்?” என்று விஷ்வாவைப் பார்த்துக் கேட்க,

அதை அவுங்ககிட்டையே கேட்டுடுவோம், வாயா!” என்று அவனை அழைத்தவனை நிமிர்ந்து பார்த்தவனோ,என்ன? என்னை மட்டும் கோர்த்து விட்டு நீ கும்மி அடிக்கலாம்ன்னு பார்க்குறியா ராஸ்கல்? ஒழுங்கா முன்னாடி நட!” என்று அவனை வாய்க்குள் திட்டியபடி, அவர்களுடன் போய் அருணுடன் சேர்ந்து நின்று கொண்டான் ஜோசப்.

தன் ஜூனியர்களின் வருகையைக் கண்ட வசுந்தரா, அவர்களை வந்திருந்தவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அனைவரையும் பார்த்து இன்முகமாகப் புன்னகைத்தனர் சித்ராவும், விஷ்வாவும்.

போன விஷயம் என்னாச்சு?” என்று வசுந்தரா அருணிடம் விசாரித்தார். உடனே தாங்கள் சேகரித்த விஷயத்தை ஒன்று விடாமல் அவரிடம் சொல்ல ஆரம்பித்தான் அவனும். அதில் ஒரு இடத்தில அவனை மேற்கொண்டு பேச விடாது தடுத்தி நிறுத்திய வசுந்தரா கேட்ட கேள்வியில்,

அங்கு இருந்த அனைவரும் திடுக்கிட்டு,இதற்குள் இப்படி ஒரு வியம் இருக்கா??” என்று அவரையே தான் பார்த்து இருந்தனர்.

அப்பொழுது நரியின் தந்திரம் நிறைந்த பார்வையுடன், அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ந்து போக வசுந்தரா,இதில் நிச்சயம்  மாட்டுவாங்க!!” என்றார்.

Advertisement