“சரி அதை விடுங்க, எங்க உங்க பெரிய பையனை காணோம்? ஒரு பொறுப்பிருக்கா அவங்களுக்கு?” என்றாள் கடுப்பாய்.
“ஏன்? அவன் பொண்டாட்டி தான நீ? நீயே போன் பண்ணி கேட்க வேண்டியது தான?” என்றார் சிரிப்புடன்.
“ஏன் கேட்க மாட்டேனா நானு?” என்று முறைத்தவள், அடுத்த நிமிடம் போனை எடுத்து அவனுக்கு அழைப்பு விடுத்திருந்தாள்.
அவளின் அழைப்பை அலைபேசி திரையில் பார்த்திருந்த ஆதிக்கு வியப்பு. இதுவரை அவனாக தான் அவளை அழைத்திருக்கிறான். இது தான் அவளிடமிருந்து அவனுக்கு வரும் முதல் அழைப்பு. யோசனையுடன் அழைப்பை ஏற்க,
“தீர்த்தா” என்றவனின் குரலில், வந்த வார்த்தை எல்லாம் மீண்டும் தொண்டைக்குள் போக, அவளுக்கோ தயக்கத்தை விரட்டுவது பெரும்பாடாய் இருந்தது.
“வேலை இன்னும் முடியலைமா. வர லேட் ஆகும்” என்று அவனே பதில் சொல்லிக் கொண்டிருந்தான். வழக்கமாய் அப்படித்தானே அவன் பேசுவது.
அவளின் முகத்தைப் பார்த்து ரேணுகா சிரிக்கவும், அவரை முறைத்தவள்,
அவள் பக்கத்தில் யாரிடமோ பேசிக் கொண்டிருக்கிறாள் என்று எண்ணிய ஆதியோ அமைதியாய் இருக்க,
“உங்களைத்தான், காது கேட்குதா இல்லையா?” என்றாள் மீண்டும். ஆதியோ காதில் இருந்த செல்லை எடுத்து மீண்டும் ஒரு முறை உறுதிபடுத்திக் கொண்டான்.
“வேலை வேலைன்னு அதுக்கு பின்னாடி ஓடிட்டு இருக்குற உங்களுக்கு எதுக்கு கல்யாணம், பொண்டாட்டி எல்லாம். இப்போ வீட்டுக்கு வர முடியுமா முடியாதா?” என்றாள் பட்டாசாய். தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த சுபத்ராவிற்கோ புரையேறியது அவள் பேச்சைக் கேட்டு.
ஆதியோ உள்ளுக்குள் இனிமையாய் அதிர்ந்தான். அவள் பேசியதில் அவனுக்கு தான் இப்போது வார்த்தைகள் மறந்திருந்தது.
“தீர்த்தா” என்றவனுக்கு அதற்குமேல் பேச முடியவில்லை.
“இப்ப உடனே கிளம்பி வீட்டுக்கு வரீங்க” என்றவள் போனை வைத்து விட்டுத்தான் மூச்சு வாங்கினாள்.
கண்ணை விரித்து பார்த்துக் கொண்டிருந்த ரேணுகாவைப் பார்த்து சிரித்தவள்,
“எப்புடி?” என்றாள்.
“என் ராஜாத்தி” என்று ரேணுகா திருஷ்டி கழிக்க, அவர்களை சற்று பொறாமையுடன் பார்த்திருந்தார் சுபத்ரா. ஆனால் மனதிற்குள் மகிழ்ச்சியாகத் தான் இருந்தது.
அவளை புடவையில் பார்த்த விசாலாட்சி,
‘இந்த பயம் இருக்கட்டும்’ என்ற ரீதியில் அவளைப் பார்த்து வைக்க,
“ம்க்கும் இன்னும் இந்த கிழவிக்கு பயந்து, சேலை கட்டியிருக்கேன்னு நினைச்சுகிட்டு இருக்கு பாரு. எல்லாம் என் நேரம்” என்று எண்ணியவள்,
“அப்படியே விடக் கூடாதே” என்றபடி விசாலாட்சியின் அருகில் சென்றவள்,
“பாட்டி” என்றாள்.
அவளின் பாட்டி என்ற அழைப்பில் அவர் நெஞ்சில் கை வைத்தபடி,
“உனக்கு நான் பாட்டியா?” என்றார் கோபமாய்.
“அப்பறம் நீ என்ன குமரியா? கிழவி தான? சரி மரியாதையா பாட்டின்னு சொல்லுவோம்னு பார்த்தா விட மாட்டியே? அப்போ கிழவின்னே சொல்லவா?” என்றாள் தலையை ஆட்டியபடி.
அவரின் அருகில் அமர்ந்து அவர் தோளோடு கை போட்டவள், புடவையை ஒன்னும் நீ சொன்னதுக்காக கட்டலை கிழவி. உன் பேரனை, இல்லயில்ல என் புருஷனை முந்தானையில முடிஞ்சு வச்சுக்கனும்ல. அதான் கட்டியிருக்கேன்” என்றவளை அவர் பேயறைந்தார் போல் பார்த்து வைத்தார்.
“கிழவி உன்னை இனி தெளியவே விட மாட்டேன். நீ இப்படி ஷாக்லயே இரு” என்று சிரித்துக் கொண்டாள்.
அவள் அழைத்த பத்தாவது நிமிடத்தில் வீட்டில் இருந்தான் ஆதி கேசவன். வந்தவன் கண்டது என்னவோ விசாலாட்சியின் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த சிவாவைத் தான்.
அவளுக்கு பதில் சொல்லாதவனின் பார்வை என்னவோ அவள் முந்தானை சொருகி இருந்த இடத்திற்கு தான் சென்றது.
“நம்ம என்ன கேட்டுட்டு இருக்கோம் இவங்க பார்வை எங்க போகுது பாரு” என்று முகச்சிவப்புடன் பல்லைக் கடித்தவள்,
“ம்ம்க்கும்..!உங்களைத்தான்” என்றாள்.
“வேலைமா” என்றான்.
“வேலை இருந்தாலும் இல்லைன்னாலும் நேரத்தோட வீடு வந்து சேருங்க. என்னமோ ராவுல திருட வர்ற திருடன் மாதிரி வந்துட்டு போக வேண்டியது” என்றாள் கடுப்புடன்.
“எப்போது தன்னிடம் பேசுவாள் என்று எதிர்பார்த்திருந்தவனுக்கு இப்போது விடாமல் பேசிக் கொண்டிருப்பவளைக் கண்டதும் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்தே அவன் இன்னும் மீளவில்லை.
விசாலாட்சிக்கு மூச்சே நின்று விடுவதைப் போல் இருக்க, அறைக்குச் சென்ற ஆதி கேசவனோ யோசனையின் பிடியில் இருந்தான்.
“நிஜமாவே இது சிவா தானா அண்ணி” என்றார் சுபத்ரா.
“ஏன் சுபா உனக்கு இப்படி ஒரு சந்தேகம்?” என்றார் ரேணுகா.
“இல்ல இடையில ஒரு வாரம் நல்லா இருந்தா. அப்பறம் எதையோ பறிகொடுத்த மாதிரி இருந்தா. இன்னைக்கு ஒரு மாதிரி இருக்கா. அதான் அண்ணி கேட்டேன்” என்றார் சுபத்ரா.
“சின்னப் பொண்ணு சுபா. எல்லா நேரமும் தெளிவாவே இருக்கணும்னு அவசியம் இல்லையே. தைரியம் அதிகம். அதே சமயம் மனசுக்குள்ள அந்த குழந்தைத் தனம் அப்படியே இருக்கு. சின்ன வயசுல இருந்து பொறுப்பா இருக்குற மாதிரி சூழ்நிலை இருந்ததால, அவளோட குழந்தைத் தனம் கூட அவளுக்குள்ளயே மறைஞ்சு போய்டுச்சு போல. அன்பா ரெண்டு வார்த்தை பேசுனாலே அவ கண்ல அப்படி ஒரு ஏக்கம் தெரியுது. ஆனா அது அவளுக்கே தெரியலை” என்று பெருமூச்சு விட்டவர்,
“எனக்கும் தான்டி புரியலை. என்ன திடீர்ன்னு? எவ்வளவு தடவை என்கிட்ட பேசச் சொல்லி கெஞ்சியிருப்பேன். அப்பல்லாம் பேசாம இப்போ என்ன திடீர்ன்னு? மறுபடியும் பாட்டியை வெறுப்பேத்த இப்படி பண்றியா?” என்றான் கேள்வியாய்.
அவனின் கேள்வியில் அதுவரை இருந்த அவளின் இதமான மனநிலை சட்டென்று மறைந்திருந்தது. கண்கள் கலங்க, அவனை முறைத்தவள்,
“என்னைப் பார்த்தா நடிக்கிற மாதிரியா இருக்கு? நடிக்கிறது எல்லாம் உங்க குடும்ப புத்தி. எனக்கு வராது” என்றாள் பட்டென்று.
அவளின் கோபத்தைப் பார்த்தவன்,
“ஸ்ஸ்..! சொதப்பிட்டியே ஆதி” என்று சிகையைக் கோதிக் கொண்டவன்,
“தீர்த்தா சாரி. அது நான் வரும் போது பாட்டி இருந்தாங்களா? அதான் அப்படி யோசிச்சுட்டேன்” என்றான்.
“ஏன் தினமும் உங்க பாட்டி இங்க தான் இருப்பாங்க. அதுக்காக என்னை தினமும் நடிக்கிறியான்னு கேட்பிங்களா?” என்றாள் கோபமாய்.
“ஹேய் சாரிடி” என்றவன் அவளை இழுத்து அணைத்துக் கொள்ள முற்பட,
“தீர்த்தா” என்றவன் அவளை இடுப்போடு இழுத்து விடாமல் பிடித்துக் கொள்ள,
“விடுங்கன்னு சொல்றேன்ல” என்றவள் கோபத்தில் கத்தியிருந்தாள். அவளின் கோபத்தில் ஆதியின் முகம் துணுக்குற்றது. அவளின் இந்த கோபம் அவனுக்கு புதிது.
“வீட்ல என்ன நடந்தது?” என்றான் கூர் பார்வையுடன். அவனின் கேள்வியில் அவள் முகம் அதிர்ந்தது.
“என்ன நடந்ததுன்னு கேட்டேன்?” என்றான் அழுத்தமாய்.
“இப்ப எதுக்கு பேச்சை மாத்துறிங்க? நீங்க ஏன் சந்தேகப்பட்டு அப்படி கேட்டிங்க?” என்றாள் பேச்சை திசை திருப்பும் பொருட்டு.
“நீயா சொல்றியா? இல்ல நானே கீழ போய் கேட்கவா?” என்றான் ஆதி.
“நீங்களா எதையாவது கற்பனை பண்ணாதிங்க” என்றாள்.
“கற்பனை எல்லாம் இல்லை. நீ இப்படி ஆக்ரோஷமா கத்தினாலே அன்னைக்கு வீட்ல ஏதோ நடந்திருக்குன்னு அர்த்தம். வீட்ல ஏதாவது நடந்தா தான் நீ இப்படி வித்யாசமாவும் நடந்துக்கிற? எதை நிரூபிக்க இப்படி நடந்துக்கிற?” என்றான் கோபமாய்.
“நான் ஒன்னும் வித்யாசமா நடந்துக்கலை. நீங்க தான் சரியா வீட்டுக்கே வரலை. நான் தான் உங்களை நினைச்சுகிட்டே இருக்கேன். உங்களுக்கு என்னோட நினைப்பு கொஞ்சமும் இல்லை. நானா வந்து பேசுனா நடிக்கிறனான்னு கேட்க வேண்டியது. என்னைப் பார்த்தா நடிக்கிற மாதிரியா இருக்கு. இன்னைக்கு வீட்ல எதுவும் நடக்காம இருந்திருந்தாலும் நான் உங்களுக்கு போன் பண்ணியிருப்பேன்” என்று கோபத்தில் பேசிக் கொண்டே போனவள், வாயை அப்படியே மூடிக் கொண்டாள்.
“அப்போ ஏதோ நடந்திருக்கு, அது உண்மை தான?” என்றான் முகத்தில் கோபம் தாண்டவமாட, அவளுக்கு அவன் மேல் இருந்த கோபம் போய் இப்போது பயம் பிடித்துக் கொண்டது.
“நீ வாயைத் திறந்து எதுவும் சொல்ல மாட்ட, நானே போய் கேட்டுக்கிறேன்” என்றவன் இரண்டெட்டு எடுத்து வைக்க,
விடாமல் மறைத்தவளோ, அவனை இறுகக் கட்டிக் கொண்டாள்.
“தீர்த்தா நகரு” என்றான் இறுகிய குரலில்.
“மாமா பிளீஸ் வேண்டாம்” என்றவளின் கண்ணீர் அவன் மார்புச் சட்டையை நனைக்க,
அவளின் ‘மாமா’ என்ற அழைப்பில் அவனின் கோபமும் முழுவதும் வடிந்திருக்க, அவளின் அணைப்பிலும், அழைப்பிலும் கரைந்தவன், நிதானத்திற்கு வந்திருந்தான்.