Saturday, May 18, 2024

    மாயம் ~ 20

    மாயம் ~ 19

    மாயம் ~ 18

    மாயம் ~ 17

    எமபுர மாயமும் அபயனும்!

    மாயம் ~ 15.2

    சசிதரனுடன் வெளியே வந்த அபய்தேவ் இவனைப் பார்த்து நக்கலுடன், “வாங்கினது பத்தலையா! ஒரு முறை தான் உயிர் பிச்சை கொடுக்க முடியும்” என்றான். ‘டேய்’ என்று கத்த முயற்சித்தபடி வெகுண்ட குற்றாசு அபய்தேவ் மீது பாய, அவன் பாயும் முன் அவனை தடுத்து நிறுத்திய சசிதரன், “யாருணா?” என்று கேட்டான். சசிதரனின் பிடியில் திமிறியபடி தன்னை வெறியுடன் பார்த்துக்...

    மாயம் ~ 15.1

    வைத்தியரிடம் கனகப்ரியாவின் அன்னை, தான் உலக்கையை எடுக்கும் பொழுது கை தவறி கீழே போட்டுவிட, அது தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த குற்றாசு கழுத்தின் மீது விழுந்துவிட்டது என்று கூறினார். நம்பாத பார்வை பார்த்த வைத்தியர் மேற்கொண்டு எதுவும் கேட்காமல் காயத்தை ஆராய்ந்தார். பரிசோதித்துவிட்டு நிமிர்ந்த வைத்தியரை கண்ணில் எதிர்பார்ப்புடன் அவன் அன்னை நோக்க, அவரோ, “மனச தளர...

    மாயம் ~ 14

    கண்ணில் சிறு கோபம் கலந்த மகிழ்ச்சியுடனும், உதட்டோர சிறு அலட்சிய வளைவுடன் வெற்றிப் புன்னகை புரிந்த அபய்தேவை குற்றாசு வலியை மீறி வன்மத்துடன் முறைத்தான். அவனது முறைப்பில், விரிந்த புன்னகையை சிந்திய அபய்தேவ் சட்டைப் பையில் இருந்த கைபேசியை எடுத்து ஏதோ செய்தான். பின் கனகப்ரியாவைப் பார்த்து, “இப்போ அபிக்கு வீடியோ காள் போடுறேன்.. அவனைப் பார்த்து...

    மாயம் ~ 13

    குற்றாசின் கூற்றில் ஒரு நொடி அதிர்ந்த அமிர்தவள்ளி பின் கோபத்துடன், “அய்யா இப்புடி ஒரு காரியத்த ஒரு நாளு செய்ய மாட்டாவ.. நீயி தப்பிக்க அய்யா மேல பழி போடாத” என்று சீறினாள். “அந்த எடுபட்ட நாயி ஐயாவ பாக்க வந்தானா இல்லயானுட்டு பெரிமா கிட்டக்க நீயே கேளு”  “அவுரு அய்யாவ பாக்க வந்து இருக்கலாம்.. ஆனா...

    மாயம் ~ 12

    பிற்பகலில் செந்தில்வேல் வீட்டின் முதல் மாடியில் இருக்கும் கூடத்தில் கதிரும் அமிர்தவள்ளியும் அமர்ந்திருந்தனர். கதிர் பள்ளி சென்று திரும்பி இருந்தான். தேர்வு நடைபெறுவதால் அரை நாள் தான் பள்ளிக்கூடம். அவள், “செல்லு(mobile) பாத்தது போதும்லே, படிக்க வா” என்று அவனை அழைத்தாள். கதிர் அவளை முறைக்கவும், அவள், “என்னலே மொறப்பு?” என்று மிரட்டினாள். அவனோ முறைப்புடன், “என்ன இது?”...

    மாயம் ~ 11

    அமிர்தவள்ளி சென்று சிறிது நேரம் கழித்தே அபய்தேவும் சசிதரனும் கிளம்பினர். அவர்கள் மாந்தோப்பை விட்டு வெளியே வந்த பொழுது, அவர்கள் எதிரே செந்தில்வேலும், ஒரு வேலையாளும் வந்தனர். செந்தில்வேல் மென்னகையுடன், “பட்டணத்து தம்பிகெளுக்கு எங்கூரு புடிச்சி இருக்குங்கெலா?” என்று கேட்டார். அபய்தேவும் மென்னகையுடன், “அருமையான ஊர் சார்” என்றான். “அதென்ன சாரு மோருனுட்டு! மொற வெச்சி அழைங்கெ தம்பி”...

    மாயம் ~ 10.2

    மறுப்பாக தலை அசைத்த அபய்தேவ், “மதுரை ஹாஸ்பிடலில் இருந்து போனில் தான் பேசினேன்.. அந்த நேரத்தில் உன்னோட அப்பத்தாவுக்கு உடம்பு சரி இல்லைன்னு நேரில் வர முடியலை சொன்னாங்க.. ராம் அங்கிள் தான் வந்தாங்க” என்றான். “ஓ பேரக் கூட சொல்லுலியா?”  “ஹ்ம்ஹும்.. அபி பிரெண்ட் பேசுறேன்னு தான் சொன்னேன்”  “ஓ” என்றவள் சிறு சந்தேகத்துடன், “நெசமாலு நீயி...

    மாயம் ~ 10.1

    அபய்தேவ் அமிர்தவள்ளியைப் பார்த்து, “உனக்கு என்ன தெரியனும்?” என்று கேட்டான். “ஓ கூட்டாளி எப்புடி இருக்காவுகெ?”  சட்டென்று முகம் இறுகிவிட, “உயிரோட தான் இருக்கான்” என்றான். “ஒழுங்கா சொல்லு”  அவன் கோபத்துடன், “என்ன சொல்லனும்? உயிரோட இருக்கான்.. அவ்ளோ தான் சொல்ல முடியும்” என்றான். சசிதரன் அவன் கையைப் பற்றியபடி, “அண்ணா” என்றான். கோபத்தைக் கட்டுபடுத்தியவன் அவளைப் பார்த்து, “மதுரை ஹாஸ்பிடலில் அவனை...

    மாயம் ~ 9

    அபய்தேவும் சசிதரனும் மாந்தோப்பை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தனர். சசிதரன், “அண்ணியைப் பார்க்க போறப்ப நான் எதுக்குணா?” என்று வினவ, அபய்தேவ், “அமிர்தாவைப் பார்த்துட்டு வயல் வரப்பைப் பார்க்கிற மாதிரி போய் ராமையாவைப் பார்த்து பேசணும்.. அண்ட் தனியா போறப்ப என் மேல் அதிக கவனம் விழும்.. அதை தவிர்க்கவும் தான்” என்றான். “ஓ!” என்றவன், “எனக்கு ஒரு சந்தேகம்”...

    மாயம் ~ 8

    ராமலிங்கம் வீட்டில் தங்கள் அறையில் மெத்தையில் சசிதரனை கிடத்திய அபய்தேவ் அவனது முகத்தில் தண்ணீரைத் தெளித்தான். “சசி” என்று அழைத்த அபய்தேவ் இரண்டு முறை அவனது கன்னத்தில் தட்டிவிட்டு மீண்டும் தண்ணீரைத் தெளித்தான். சசிதரனிடம் சிறு அசைவு தெரியவும், மீண்டும் அவன் கன்னத்தில் தட்டியபடி, “டேய் சசி!” என்று அழைத்தான். மெல்ல மயக்கம் தெளிந்து கண்களைத் திறந்த சசிதரன்...

    மாயம் ~ 7

    அபய்தேவ் சத்தமின்றி வெளியே சென்று பார்த்த போது அழுக்கு சட்டைக்காரன் நின்றுக் கொண்டிருந்தான். அபய்தேவைக் கண்டதும் அவன் அதிரவில்லை. தனது பற்களை காட்டி இளித்தான். “இங்க என்ன செய்ற?” என்ற அபய்தேவின் குரலில் சசிதரன் வெளியே வந்தான். அழுக்கு சட்டைக்காரன் தனது தலையை ஆட்டி ஆட்டி, ‘வேணுமா? சாப்புடுறியா?’ என்பது போல் தான் பாதி கடித்திருந்த மாங்கனியை...

    மாயம் ~ 6

    “என்..ன..டி சொல்..ற!” என்று அரண்ட நிலையில் இருந்த சசிதரன் திணறலாக கூறியபடி பின்னால் திரும்பிப் பார்த்தான். அவன் கண்களுக்கு எதுவும் புலப்படாமல் போகவும், சட்டென்று மனைவியின் விளையாட்டு புரிந்து பயம் நீங்கியவனாக அவளை முறைத்தான். பின், “எதுல விளையாடுறதுனு இல்லையா பக்கி!” என்று சசிதரன் கோபமாக கூற, வினோதா வாய்விட்டு சிரித்தபடி, “என்னை பேய்னு சொன்னதுக்கு சின்னதா திகில்...

    மாயம் ~ 5

    மகளைப் பார்த்த செந்தில்வேல் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வேகமாக அவள் அருகே வந்தார். “இப்போ என்னாத்துக்கு இந்த வெயில்ல இங்குட்டு வந்த ராசாத்தி!” என்றபடி தோளில் இருந்த துண்டைக் கொண்டு அவள் முகத்தில் துளிர்த்திருந்த வேர்வையை ஒற்றி எடுத்தார். “வெயில் அப்புடி ஒன்னு இல்லங்கெ அய்யா.. மணி தா நாலரையாவ போவுதே” என்றாள். கதிர் சற்று தள்ளி...

    மாயம் ~ 4

    “யக்கா என்ன யோசன?” என்று கதிர் வினவவும் சட்டென்று சுதாரித்த அமிர்தவள்ளி, “அந்த மைதாமாவு ஆருலே?” என்று கேட்டாள். கதிர் சிறு முறைப்புடன், “அவென பத்தி நீயி ஏ கேக்க?” என்று கேட்டான். “திரியாத் தனமா அவென் கையில மயங்கினாப்புல வுழுந்துபுட்டேன்.. அதுக்காண்டி இப்புடி வெறைப்பாவே பேசுவியோ! ஊருக்கு புதுசா வந்த ஆள பத்தி வெசாரிக்க கூடாதா? ரொம்பத்தேன்...

    மாயம் ~ 3

    கடந்த இரண்டு நாட்களாக ஊரே அமைதியாக இருக்கிறது. செந்தில்வேலின் வீட்டிலும் காமாட்சியின் சத்தம் கேட்பதில்லை. மகளின் செயலிலும் கணவரின் வார்த்தைகளிலும் காமாட்சி மௌனமானார். வெறும் வாய் வார்த்தையாக தான் மகள் மிரட்டுகிறாள் என்று நினைத்தவரின் எண்ணத்தை பொய்யாக்குவதைப் போல் செய்த அமிர்தவள்ளியின் செயலில் அவர் சற்று ஆடித் தான் போனார். கூடவே விளையாட்டு வினையாகும் என்பதை...

    மாயம் ~ 2

    மாயம் 2 நான்கு ஆண்டுகள் வேகமாக கடந்திருந்தது. விளம்பர வடிவழகனைப்(Model) போல் இருந்த ஒருவன் தனது விலை உயர்ந்த படமியில்(camera) அந்த புலர் காலை வேளையில் சிற்றூரின் அழகை படம் பிடித்துக் கொண்டிருந்தான். அவனது நடை, உடை, பாவனை அனைத்துமே அவன் அந்த சிற்றூருக்கு புதியவன் என்பதை எடுத்துக் கூறியது. அவன் அபய்தேவ், தனது புத்துணர்ச்சி கலந்த புன்னகையால்...

    மாயம் ~ 1

    மாயம் 1 புலர்ந்தும் புலராத அழகான வைகறை வேளையில் அந்த சிற்றூர் மொத்தமும் விழிக்கத் தொடங்கியது. சில வீடுகளில் குமரிகள் வாசல் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருக்க, அவர்களை ரகசியப் பார்வை பார்த்தபடி சில இளைஞர்கள் வேப்பம் குச்சியினால் பல்லை துலக்கியபடி கொலக்காடு(கொல்லைக்காடு) நோக்கி சென்று கொண்டிருந்தனர். மெல்ல கதிரவன் தனது தங்க கதிர்களால் ஒளி வீச,...
    error: Content is protected !!