Wednesday, July 22, 2026

    என் இரவின் பொன் நிலவே

    அத்தியாயம் 17 : ஏனோ அவ்விடத்தில் யாரையும் தெரியாமல் யாருடனும் பேச முடியாமல் அமைதியாய் அமர்ந்திருந்தான் அகன் கார்த்திகேயன். பூமிநாதன் அவ்வப்போது அவனிடம் வந்து பேசி, அவனுக்கு என்ன தேவை என்பதைக் கேட்டுக் கொண்டே இருந்தார். அவனோ தாராவையே பார்த்திருக்க, பூமிநாதனுக்கு மகளின் மேல் முதன் முறையாக கோபம் வந்தது. அதை மற்றவர்கள் அறியாதவாறு மறைத்தவர்,தாராவை தனியே...
    “அது அகன்...! இல்ல, அதை மட்டும் தான் கேட்டிங்களா? இல்லை நான் புலம்புனது எல்லாத்தையுமே கேட்டிங்களா?” என்றவளுக்கு ‘அய்யோ’ என்றிருந்தது. அவனுக்கு கேட்காது என்ற தைரியத்தில் என்னென்னவோ பேசி வைத்திருக்கிறாளே? “கேட்டுச்சு கேட்டுச்சு” என்றான் சிரிப்பை அடக்கியபடி. “என்னவெல்லாம் கேட்டுச்சு?” என்றாள் பரிதாபமாய். “நான் இங்க வந்த நாள்ல இருந்து இதோ இப்போ ஹார்மோன்ஸ் கதக்களி ஆடும்ங்கிற வரைக்கும்...
    அத்தியாயம் 16: அகன் குளித்து முடித்து வரும் வரை அதே இடத்தில் தான் நின்றிருந்தாள் தாரா. அவன் அப்படி சொல்லி விட்டு சென்றதை அவளால் இயல்பாய் எடுத்துக் கொள்ள முடியவில்லை. ‘நான் அவனுக்காகத் தான் சொல்றேன்னு ஏன் புரிஞ்சுக்காம பேசிட்டு போறான்? அவனுக்கு வலிச்சா எனக்கும் வலிக்கும்னு ஏன் அகனுக்கு புரிய மாட்டேங்குது?’ என்று தனக்குத் தானே...
    தூங்கி எழுந்ததில் கலைந்திருந்த தோற்றமும், அகனின் நிலை கண்டு பதறிய முகமுமாய் பார்ப்பதற்கே பரிதாப நிலையில் இருந்தாள் யுகந்தாரா. தன்னுடைய பயம் பதட்டத்தை எல்லாம் வெளிக்காட்டிக் கொண்டது என்னவோ ஒரு நிமிடம் தான். சட்டென்று அனைத்தையும் தனக்குள் மறைத்தவள் தந்தையைப் பார்க்க, அவரின் பார்வையில் மகளின் வாழ்க்கை மீதான பரிதவிப்பே மிஞ்சி நின்றது. “நான் கூட...
    அத்தியாயம் 15 : அதுவரை நார்மலாய் பேசிக் கொண்டிருந்தவனுக்கு, அவரின் அருகாமை ஏதோ செய்து அவன் ஆக்ரோஷ உணர்வுகளைத் தூண்ட, “நகுலா இவரை தள்ளிப் போக சொல்லு” என்றான் மறுபுறம் திரும்பியபடி. “கார்த்தி நான் சொல்றதைக் கேளுப்பா” என்றார் தயாளன் மீண்டும். “தள்ளிப் போங்கன்னு சொல்றேன்ல. எதுக்கு பக்கத்துல வந்து என்னை மிருகமா மாத்துறிங்க? தள்ளிப் போங்க” என்று அவன்...
    “இப்போ எதுக்கு முகத்தை மூணு முழத்துக்கு தூக்கி வச்சிருக்கிங்க? நியாயப்படி பார்த்தா நான் தான் இப்படி இருக்கணும். நீங்க தான் வந்து சமாதானப்படுத்தனும். பாவம் சாப்பிடலையேன்னு எடுத்துட்டு வந்தா ஓவரா சீன் போடுறிங்க நீங்க” என்றாள் கடுப்புடன். “எனக்காக பாவப்பட்டு இரக்கப்பட்டு நீ எதுவும் செய்ய வேண்டாம் தாரா” என்றான் பட்டென்று. அவன் பதிலில் தொய்ந்தவள், “இங்க பாருங்க...
    அத்தியாயம் 14: தன் முன் இலையில் இருந்த பதார்த்தங்களை வெறித்துக் கொண்டிருந்தாள் யுகந்தாரா. எதையும் சாப்பிடும் மனநிலையில் அவள் இல்லை. ஆனால் பசி வேறு அவள் வயிற்றை கிள்ளியது.. “என்னாச்சு ராஜகுரு? எதுக்காக இப்படி எல்லாத்தையும் வெறிக்க வெறிக்க பார்த்துட்டு இருக்கீங்க? யாரும் பிடுங்கிக்க மாட்டாங்க. கண்டிப்பா உங்களுக்குத் தான், சாப்பிடுங்க” என்றான் ஹரீஷ். “டேய்..! உனக்கு இன்னைக்கு...
    “அவங்களுக்கு கார்த்தி முக்கியம்னா அது அவங்களோட. அதுக்காக என்னை எதுக்கு பேசணும்? அதுவும் எதோ கார்த்தி வாழ்க்கையையே நான் தான் கெடுக்கப் பார்க்குறேன்ற மாதிரி? அப்படி சொன்னா கோபம் வராத? இப்போ நீங்களும் மன்னிப்பு கேட்டு என்னைத்தான் குற்றவாளி ஆக்குறிங்க” என்றாள் மகிமா. “நகுலனையும் கார்த்தியையும் நாங்க என்னைக்குமே பிரிச்சு பார்த்ததில்லம்மா. ரெண்டு பேருமே என்...
    அத்தியாயம் 13: “என்ன சித்தி நடக்குது இங்க? கார்த்தியும் அந்த தாராவும் இருக்குறதைப் பார்த்தா, நேத்து முடிவாகி இன்னைக்கு கல்யாணம் பண்ணவங்க மாதிரி தெரியலையே? என்னமோ ரெண்டு பெரும் லவ் பண்ணி கல்யாணம் பண்ண மாதிரி இருக்கு. லவ் மேரேஜ் பண்ண நாங்க கூட இப்படி இல்லை” என்றாள் மகிமா, வசந்தியிடம். “எனக்கும் அது தான் புரியலை...
    தயாளனும் ரேவதியும் மேடையேறி வரும் போதே பட்டென்று எழுந்திருந்தான் அகன். தாரா அவனை அதிர்ச்சியுடன் பார்க்க, அவளின் முகத்தைப் பார்த்து, அவள் கண்களில் இருந்த அதிர்ச்சியைக் கண்டவன், முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு மீண்டும் அமர்ந்தான். அவன் தனக்காகத்தான் தன்னைக் கட்டுபடுத்திக் கொண்டிருக்கிறான் என்பது வரை அவளுக்கும் புரிந்து தான் இருந்தது. வசந்தியோ அவன் பிரச்சனை செய்வதைப்...
    அத்தியாயம் 12: அதற்கடுத்து அனைத்தும் ஜெட் வேகத்தில் நடக்க, மணப் பெண்ணிற்கான சர்வ அலங்காரங்களுடன் தயாராகி நின்றவளைப் பார்த்த பூமிநாதனுக்கும் வேணிக்கும் தன் பெண்ணின் முகத்தை விட்டு கண்களை எடுக்க முடியவில்லை. “என்னம்மா அப்படி பார்க்குறிங்க? இந்த புடவை கொஞ்சம் வெயிட்டா இருக்கு” என்றாள் பாவமாய். “அழகா இருக்கடா. புடவையும் அவ்வளவு அழகா இருக்கு. இது நாம எடுத்ததுட்டு...
    “என்னாச்சு டாடி? ஏன் அகன் அப்படி அதே இடத்துல இருக்கார்?” என்றாள் புரியாமல். “தெரியலைடா. ஆனா நீ போனப்ப இருந்து அங்க தான் இருக்கார்” என்றார் பூமி. “நான் போய் பேசிட்டு வரேன்” என்றவளை, “நேரம் என்னாகுது தாரா. தூங்க வேண்டாமா?” என்றார். “ம்மா பத்து நிமிஷம். நீங்க போங்க நான் வர்றேன்” என்றவளின் கால்கள் தன்னால் அவனை நோக்கி...
    அத்தியாயம் 11 : அறைக்குள் பதட்டத்துடன் அமர்ந்திருந்தவளின் முகம் கண்டு வேணியும் பூமிநாதனும் யோசனையுடன் பார்க்க, “அப்பா” என்றாள் பாவமாய். “என்னடா?” என்றார் பரிவுடன். “இல்ல, நான் எடுத்த முடிவு சரிதான? ஏதோ அகன் பீல் பண்ணுவானேன்னு சட்டுன்னு டிசைட் பண்ணிட்டேன். இப்போ ஒரு மாதிரி எம்பேரிசிங்கா இருக்கு” என்றாள் பாவமாய். “அப்பாகிட்ட பேசும் போது அவ்வளவு தெளிவா பேசுனியே தாரா”...
    “பாட்டி, உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா, அகனை எனக்கே குடுத்துடுங்களேன், நான் அவனை நல்லா பார்த்துப்பேன்” என்றாள் லட்சுமியிடம்.அவள் கூறிய வார்த்தைகளை கிரகித்துக் கொள்ளவே அவருக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது. “தாரா” என்றவர் சின்னக் குழந்தை போல அழ ஆரம்பித்து விட்டார். “பாட்டி” “அய்யோ ராஜாத்தி, நிஜமாவா? பூமி, தாரா என்ன சொல்றா? உனக்கும் வேணிக்கும்?” என்றவருக்கு பேச்சே வரவில்லை. “எங்க...
    அத்தியாயம் 10 : “பிரச்சனை நாம நினைச்ச அளவுக்கு சின்னது இல்லை போலயே?” என்றவளின் முகம் விளையாட்டுத் தனத்தில் இருந்து சட்டென்று மாறியிருந்தது. அதுவரை ஏதோ சிறு பிரச்சனை என்று எண்ணியிருந்தவள், அப்போது தான் நிலைமையை கவனித்தாள். “என்ன பிரச்சனைன்னு எனக்குத் தெரியனும் ஹரீஷ்” என்றாள் இறுகிய குரலில். “என்னாச்சு ராஜ குரு, சட்டுன்னு டெரரா மாறிட்டிங்க” என்றான்...
    வசந்தியை உறுத்து விழித்தவன், நேராக லட்சுமியின் அறைக்குள் செல்ல, தாய்மாமன்கள் இருவரும் அங்கிருக்க, வசந்தி சொல்வதில் உண்மை இருப்பதைப் போன்றே அகனுக்கும் தோன்றியது. வசந்திக்கும் அது தானே வேண்டும். அதனால் தானே சமயம் பார்த்து அவனிடம் விஷயத்தை கூறியிருந்தார். கார்த்திகாவின் பெற்றோரும் இருக்க, யாரையும் சட்டை செய்யாமல் லட்சுமிக்கு எதிரே வந்து கால்மேல் கால் போட்டு...
    “எல்லாம் தாங்கள் செய்த மாயம் தான் அரசே” என்றவள், “நானே எடுத்துட்டுப் போறேன் டாடி” என்று போனால் போகுது என்பதைப் போல் அவனுக்கான உணவை எடுத்துக் கொண்டு சென்றாள். “அப்படி என்ன கார்த்தி மாமாக்கு மட்டும் ஸ்பெஷல் லஞ்ச்?” என்றான் ஹரீஷ். “ம்ம்..! ஆஸ்திரேலியா ஸ்பெஷல். வெளிநாட்டு துரை, அவங்க குடுத்த மெனுல இருக்குற ஐட்டம்ஸ் மட்டும் தான்...
    சற்று யோசித்த வசந்தியின் அக்கா, அரைமனதாக தலையை ஆட்டியிருந்தார். “அப்போ கார்த்தி பேர்ல மாத்துறதுக்கு ஏற்பாடு பண்ணுங்க வக்கீல் சார்” என்றான் நகுலன். “அவர் பேருக்குன்னா, பேப்பர் ரெடி பண்ணிட்டு நாளைக்கு வர்றேன் லட்சுமி மேடம்” என்ற வக்கீல் அங்கிருந்து கிளம்பி செல்ல, வசந்தியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. மகிமாவின் நிலைமையோ அதற்கு மேல். “நகுலா என்ன...
    அத்தியாயம் 8: குடும்ப வக்கீல் வந்திருக்க காரணம் தெரியாமல் குழம்பிப் போயிருந்தனர் சேதுராமனும் புவியரசும். “இப்ப எதுக்குக்கா வக்கீல் வந்திருக்காரு? உங்களுக்கு எதுவும் தெரியுமா?” என்று தாமரையின் காதைக் கடித்தார் வசந்தி. “எனக்கும் எதுவும் தெரியாது வசந்தி” என்றார் தாமரை. “உங்களுக்கு என்னைக்கு எது தான் தெரிஞ்சிருக்கு? எல்லாம் நம்ம மாமியார்கார அம்மா தான் வர சொல்லியிருப்பாங்க” என்றார் வசந்தி....
    அங்கிருந்த யாருடனும் ஒட்டாமல் அகன் கார்த்திகேயன் விலகி இருப்பதைப் போன்றே இருந்தது தாராவிற்கு. “நான் தான் தேவையில்லாம யோசிக்கிறேனா?” என்றவளுக்கு அவனைப் பற்றி யோசித்தாலே குழப்பமும் தலை வலியும் தான் மிஞ்சியது. அன்று முழுவதும் தனித்தே இருந்தவனிடம் செல்ல முற்பட்ட கால்களை அடக்கிக் கொண்டு அறைக்குள் அடைந்திருந்தாள். நகுலனின் சத்தம் அதிகமாக கேட்பதைப் போல் தோன்ற அறைக்கதவைத்...
    error: Content is protected !!