Wednesday, July 22, 2026

    என் இரவின் பொன் நிலவே

    அங்கு சந்தானலட்சுமி அனைவரையும் வரவேற்று உள்ளே அழைத்துக் கொண்டு செல்ல, “என்னம்மா வீடே மாறியிருக்கு?” என்றார் சுகந்தி. “சும்மாவே அந்த பொம்பளை பணக்காரத் திமிரைக் காட்டும். இப்போ கார்த்தி கல்யாணம் வேற? சொல்லவா வேணும்” என்றார் பரமேஸ்வரி. “நம்ம வீட்டு பையன் கல்யாணத்துக்கு இப்படி மூணாவது மனுஷங்க மாதிரி வர வச்சுட்டாங்களே? பொண்ணைக் கூட போட்டோவுல காட்டினதோட சரி....
    அங்கே அறையில் மகனைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த தயாளனோ வெகுவாய் சோர்ந்திருந்தார். இங்கு வந்து இத்தனை நாட்களாகியும் மகன் தன்னுடன் பேசாதது தயாளனை வெகுவாய் பாதித்திருந்தது. இத்தனை வருடங்களாக அவன் பேசாமல் இருந்தாலும் அவன் அருகில் இல்லாததால் எப்படியோ பொறுத்துக் கொண்டார். ஆனால் இத்தனை வருடங்கள் கழித்து வந்தும் தன்னிடம் பாராமுகமாய் இருக்கும் மகனை...
    தூங்கி எழுந்ததில் கலைந்திருந்த தோற்றமும், அகனின் நிலை கண்டு பதறிய முகமுமாய் பார்ப்பதற்கே பரிதாப நிலையில் இருந்தாள் யுகந்தாரா. தன்னுடைய பயம் பதட்டத்தை எல்லாம் வெளிக்காட்டிக் கொண்டது என்னவோ ஒரு நிமிடம் தான். சட்டென்று அனைத்தையும் தனக்குள் மறைத்தவள் தந்தையைப் பார்க்க, அவரின் பார்வையில் மகளின் வாழ்க்கை மீதான பரிதவிப்பே மிஞ்சி நின்றது. “நான் கூட...
    அகனின் பார்வை நிதானமாய் அந்த வீட்டினை அளவெடுத்தது. எண்ணங்களின்  இடுக்களில் பழைய ஞாபகங்கள் வந்து போக, அதை நினைவுகளாகவே தனக்குள் சேமித்துக் கொண்டவன், வேகமாய் மாடியேறி தனது அறைக்குள் சென்றான். அவன் இல்லாவிட்டாலும் அவனின் அறை அப்படியே தான் இருந்தது. மேலே சென்றவன் சில நிமிடங்களிலேயே கீழே வந்தான். “என்னாச்சு கார்த்தி? இப்போத்தான வந்த? அதுக்குள்ள...
    அங்கிருந்த யாருடனும் ஒட்டாமல் அகன் கார்த்திகேயன் விலகி இருப்பதைப் போன்றே இருந்தது தாராவிற்கு. “நான் தான் தேவையில்லாம யோசிக்கிறேனா?” என்றவளுக்கு அவனைப் பற்றி யோசித்தாலே குழப்பமும் தலை வலியும் தான் மிஞ்சியது. அன்று முழுவதும் தனித்தே இருந்தவனிடம் செல்ல முற்பட்ட கால்களை அடக்கிக் கொண்டு அறைக்குள் அடைந்திருந்தாள். நகுலனின் சத்தம் அதிகமாக கேட்பதைப் போல் தோன்ற அறைக்கதவைத்...
    “தாரா” என்றவருக்கு மேற்கொண்டு வார்த்தைகள் வரவில்லை. அவள் இப்படி பட்டென்று பேசுவாள் என்று அவர் நினைக்கவில்லை. “என்னம்மா இப்படி பேசுற?” என்றார் லட்சுமி இறங்கிய குரலில். “வேற எப்படி பாட்டி பேச சொல்றிங்க? இப்போ கூட உங்களுக்கு என்னைப் பத்தி கவலையில்லை. உங்க கவலையெல்லாம் ஆஸ்திரேலியா போற உங்க பேரனை தடுத்து நிறுத்தனும். அதுக்கு இந்த தாரா...
    “பாட்டி, உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா, அகனை எனக்கே குடுத்துடுங்களேன், நான் அவனை நல்லா பார்த்துப்பேன்” என்றாள் லட்சுமியிடம்.அவள் கூறிய வார்த்தைகளை கிரகித்துக் கொள்ளவே அவருக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது. “தாரா” என்றவர் சின்னக் குழந்தை போல அழ ஆரம்பித்து விட்டார். “பாட்டி” “அய்யோ ராஜாத்தி, நிஜமாவா? பூமி, தாரா என்ன சொல்றா? உனக்கும் வேணிக்கும்?” என்றவருக்கு பேச்சே வரவில்லை. “எங்க...
    “மிஸ் யுகந்தாரா” என்றவன், “மிஸ் தானே” என்றான் வேண்டுமென்றே. “மிஸ் யுகந்தாரா தான் டாக்டர். எந்த பைத்தியத்தையும் நம்பி கழுத்தை நீட்டி, மிஸ்சஸ் ஆகி, அந்த பைத்தியம் என்னை விட்டுட்டு போய், நான் அவனை நினைச்சு பைத்தியம் ஆகுற அளவுக்கு முட்டாள் இல்லை டாக்டர்” என்றவளை அயர்ந்து போய் பார்த்தான் அகன். ‘ஆத்தி ஆரம்பிக்கவே இல்லை. இந்த போடு...
    “அகன் கண்ணா, நீ சொன்னப்பவே அம்மா கேட்டிருக்கணும். பெரிய தப்புப் பண்ணிட்டேன். அப்படி போயிருந்தா இப்போ நீயாவது நல்லா இருந்திருப்ப அகன். இப்போ என்னால தான் உனக்கும் இந்த நிலைமை” என்று பழியை தன் மீதே போட்டுக் கொண்டார் அகல்யா. விளைவு அனைத்தில் இருந்தும் ஒதுங்க ஆரம்பித்தார். தயாளனை அறவே வெறுத்தார். தனக்கு ஆதரவாய்,...
    “அகனுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே தான் பாட்டி. குலதெய்வ கோவிலுக்கு போறதைப் பத்தி பிரச்சனை இல்லை. அங்க சிலர் வாயை வச்சுகிட்டு சும்மா இருக்கணுமே” என்றாள். “அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராதுடா” என்றார் லட்சுமி. அவள் அகனைப் பார்க்க, “தாரா வீடு சம்பந்தப்பட்ட சம்பிரதாயங்களை மட்டும் செய்யுங்க பாட்டி. வேற எங்கயும் என்னால வர முடியாது” என்றான் அகன். “பொள்ளாச்சி...
    அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகில் வந்தவன், “அப்பறம்?” என்றான் ஆழ்ந்த பார்வையுடன். “என்ன அப்பறம்? ஒன்னுமில்லையே?” என்றவள் கிட்சன் கவுன்ட்டர் டாப்பிலிருந்து குதித்து இறங்கப் பார்க்க, அவளுக்கு இருபுறமும் கைகளை ஊன்றி அவள் இறங்குவதைத் தடுத்திருந்தான். “ரொம்ப நேரமா மேடம் என்னையவே பார்த்துட்டு இருந்திங்களே அதான் கேட்டேன்” என்றான் சிரிப்பை அடக்கியபடி. “நான் அப்படியெல்லாம் பார்க்கவே இல்லையே?” என்று நிறுத்தியவள்,...
    அத்தியாயம் 2 : வெளியே வந்து அங்கிருந்த சேரில் அமர்ந்தவளுக்கு ஏனோ கேள்விப்பட்ட விஷயத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சில வினாடிகளில் அவனை பற்றிய தவறான அபிப்பிராயத்தை வளர்த்தற்காக தன் மீதே அவளுக்கு கோபம் வந்திருந்தது. ‘செம்ம பிகரா இருக்கானேன்னு நினைச்சு முடிக்கலை, அதுக்குள்ளே அவனுக்கு இப்படி ஒரு பிரச்சனைன்னு சொல்லிட்டாங்களே? ஆனா அவனைப் பார்த்தா அப்படி...
    அத்தியாயம் 13: “என்ன சித்தி நடக்குது இங்க? கார்த்தியும் அந்த தாராவும் இருக்குறதைப் பார்த்தா, நேத்து முடிவாகி இன்னைக்கு கல்யாணம் பண்ணவங்க மாதிரி தெரியலையே? என்னமோ ரெண்டு பெரும் லவ் பண்ணி கல்யாணம் பண்ண மாதிரி இருக்கு. லவ் மேரேஜ் பண்ண நாங்க கூட இப்படி இல்லை” என்றாள் மகிமா, வசந்தியிடம். “எனக்கும் அது தான் புரியலை...
    வசந்தியை உறுத்து விழித்தவன், நேராக லட்சுமியின் அறைக்குள் செல்ல, தாய்மாமன்கள் இருவரும் அங்கிருக்க, வசந்தி சொல்வதில் உண்மை இருப்பதைப் போன்றே அகனுக்கும் தோன்றியது. வசந்திக்கும் அது தானே வேண்டும். அதனால் தானே சமயம் பார்த்து அவனிடம் விஷயத்தை கூறியிருந்தார். கார்த்திகாவின் பெற்றோரும் இருக்க, யாரையும் சட்டை செய்யாமல் லட்சுமிக்கு எதிரே வந்து கால்மேல் கால் போட்டு...
     அத்தியாயம் 5: ரோப் காரில் வரும் பெண்கள் அணி இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை. சூரியனோ சுள்ளென்று எறிக்க, வெப்பத்தின் வேட்கையை தாங்க முடியாமல் அகனின் முகம் முழுவதும் சிவந்து விட்டிருந்தது. அவனை அப்படி பார்த்த யுகந்தாராவிற்கு பாவமாய் இருந்தது. அவர்கள் வரும் வழி நோக்கி இவர்கள் விழி வைத்துக் காத்திருக்க, கூட்டம் வேறு அதிகமாக இருந்தது. ஒரு...
    அவள் அவனைத் திகைத்தபடி பார்க்க, அவனோ அவள் மொபைலைப் பார்க்கும் படி புருவத்தை உயர்த்தினான். “ஹேப்பி பெர்த்டே பெஸ்ட்டி” என்று வாட்சப்பில் வந்த செய்தியைப் பார்த்து அவள் முட்டக் கண்ணை விரிக்க, “பெஸ்ட்டியா?” என்றாள் வாயைத் திறந்து. “ம்ம்.. கேர்ள் பெஸ்ட்டி” என்று அனுப்பியிருந்தான். “கேர்ள் பெஸ்ட்டினா பிரண்டுக்கு மேல, லவ்வருக்கு கீழ” என்று என்றோ தோழிகள் சொன்னது ஞாபகத்திற்கு...
    தயாளனும் ரேவதியும் மேடையேறி வரும் போதே பட்டென்று எழுந்திருந்தான் அகன். தாரா அவனை அதிர்ச்சியுடன் பார்க்க, அவளின் முகத்தைப் பார்த்து, அவள் கண்களில் இருந்த அதிர்ச்சியைக் கண்டவன், முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு மீண்டும் அமர்ந்தான். அவன் தனக்காகத்தான் தன்னைக் கட்டுபடுத்திக் கொண்டிருக்கிறான் என்பது வரை அவளுக்கும் புரிந்து தான் இருந்தது. வசந்தியோ அவன் பிரச்சனை செய்வதைப்...
    அவனின் செயலில் மொத்தக் குடும்பமும் அதிர்ந்து நிற்க, “கார்த்தி என்ன பண்ற?பெத்த தகப்பனை கை நீட்டி அடிக்கிறது எல்லாம் என்ன பழக்கம்?” என்று லட்சுமி அதிர்ச்சி தாங்க முடியாமல் கேட்டிருந்தார். கீழே விழுந்த தயாளனை மீண்டும் அவன் ஆக்ரோஷமாய் தூக்க, அடுத்த அடி அவன் அடித்தால் கண்டிப்பாய் அவர் செத்துவிடுவார் என்பதை போல் இருந்தது தயாளனின் நிலைமை. “அவங்க...
    அத்தியாயம் 3 : “அய்யோ பார்க்குறானே! பார்க்குறானே!” என்று வேகமாய் மறுபுறம் திரும்பிக் கொண்டவளுக்கு இதயம் வேகமாய் அடித்துக் கொண்டது. “என்னா பார்வைடா சாமி? எப்பவும் பொண்ணுங்க தான் இப்படி ஆளை மயக்குற பார்வை எல்லாம் பார்ப்பாங்க. இங்க என்ன இவன் இப்படி பார்த்து வைக்கிறான்?” என்று தனக்குத் தானே அவள் பேசிக் கொண்டிருக்க, “தாராம்மா, இதை கார்த்தி...
    அவள் வெளியே செல்வதைப் பார்த்த சுகந்தியோ, “இந்த  பொண்ணு என்னத்தை நம்ம கார்த்தி ரூம்ல இருந்து போகுது?” என்றார் சந்தான லட்சுமியிடம். “நான் தான் கார்த்திக்கு லஞ்ச் எடுத்துட்டு போய் குடுக்க சொன்னேன். அதுல உனக்கு எதுவும் பிரச்சனையா சுகந்தி?” என்றார் நேர்பார்வையாய். “அவனுக்கு அடுத்த வாரம் கல்யாணம். இப்போ இப்படி வயசுப் பொண்ணை அவன் ரூம்க்கு அனுப்புறது...
    error: Content is protected !!