அத்தியாயம் 16:

அகன் குளித்து முடித்து வரும் வரை அதே இடத்தில் தான் நின்றிருந்தாள் தாரா. அவன் அப்படி சொல்லி விட்டு சென்றதை அவளால் இயல்பாய் எடுத்துக் கொள்ள முடியவில்லை.

‘நான் அவனுக்காகத் தான் சொல்றேன்னு ஏன் புரிஞ்சுக்காம பேசிட்டு போறான்? அவனுக்கு வலிச்சா எனக்கும் வலிக்கும்னு ஏன் அகனுக்கு புரிய மாட்டேங்குது?’ என்று தனக்குத் தானே யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு அப்போது தான் தன் மனம் செல்லும் திசையின் நோக்கமும் அர்த்தமும் புரிந்தது.

‘அகனுக்கு வலிச்சா எனக்கும் வலிக்குமா? ஏன்?” என்று யோசித்தவளுக்கு, அதற்கான பதில் தெரிவதற்கு அதிக நேரமெல்லாம் எடுக்கவில்லை.

“ஏன்னு உனக்குத் தெரியாதா தாரா? உனக்குத் தான் அவனைப் பிடிச்சிருக்கே. அகனை நீ லவ் பண்ற? இது கூட தெரியாத முட்டாளா நீ? எல்லா இடத்துலையும் எதுக்காக அவனுக்காக நீ துடிக்கனும்? அவன் மேல காதல் இல்லாமலா?” என்று மனதிடம் இருந்து பதில் கிடைக்க,

“அகன் மேல அன்பு தான் இருக்கு எனக்கு” என்றாள் மனதிடம்.

“எல்லா மண்ணாங்கட்டியும் ஒண்ணுதான்” என்று அவள் மனம் அவள் பாணியிலேயே நக்கல் அடித்தது.

தன்மேல் பட்ட நீர்த்துளியில் சிந்தனை கலைந்தாள் யுகந்தாரா.

குளித்து முடித்து வந்தவன் தலையை துவட்டிக் கொண்டிருக்க, அவனைப் பார்த்தவளுக்கு, இவ்வளவு நேரம் இல்லாத தயக்கம் முதன் முறையாக வந்து ஒட்டிக் கொண்டது. தயக்கமெல்லாம் அவன் நனைந்த கையை பார்க்கும் வரை தான்.

“நான் என்ன சொன்னேன்? நீங்க என்ன பண்ணி வச்சிருக்கங்க அகன். கையில ஈரம் படாம குளிக்கச் சொன்னேன். நீங்க என்னடான்னா இப்படி பண்ணி வச்சிருக்கிங்க?” என்றாள்.

“கையில ஈரம் படாமா எப்படி குளிக்க முடியும்? இதெல்லாம் பெரிய இஞ்சுரிஸ் இல்லை. நான் பார்த்துக்கிறேன்” என்றவனை முறைத்தாள் தாரா.

“இப்போதான் அவ்வளவு தூரம் பர்ஸ்ட் எய்ட் பண்ணேன். இப்போ மறுபடியும் ஈரத்தை எல்லாம் துடைச்சு எல்லாமே பண்ணனும்” என்றாள்.

“நான் பார்த்துக்கிறேன் தாரா. நீ சிரமப்பட வேண்டாம். ஐ கேன் மேனேஜ் மை செல்ப். ஐ டோன்ட் நீட் எனி ஒன்ஸ் ஹெல்ப்” என்றான் பட்டும் படாமல்.

“ஏன் இப்படி பேசுறிங்க அகன்? எதுக்காக அப்படி சொல்லிட்டு போனிங்க? சைக்கியாட்ரிஸ்ட்டை பாக்குறது அப்படி ஒன்னும் பெரிய விஷயமே இல்லையே. ஒரு கௌவுன்சிலிங் போறதால என்ன ஆகிடப் போகுது அகன்?” என்றாள் தெளிவுடன்.

அகன் அவளையே தீர்க்கமாய் பார்த்துக் கொண்டிருக்க,

“அதுக்காக மத்தவங்க உங்களைப் பத்தி நினைக்கிற மாதிரி நானும் நினைக்கிறேன்னு அர்த்தம் கிடையாது. யாரும் உங்களை அப்படி நினைச்சிடக் கூடாதுன்ற அக்கறை தான். அது உங்களுக்கு தப்பா தெரிஞ்சா, நீங்க வர வேண்டாம்” என்றாள் குரலில் வருத்தத்துடன்.

“இதெல்லாம் இன்னைக்கே பேசியாகனுமா?” என்றான் உள்ளார்ந்த குரலில். அவன் குரலில் இருந்த அமைதி அவளை யோசனைக்கு உள்ளாக்கியது.

“என்ன சொல்ல வர்றீங்க?” என்றாள்.

“இதெல்லாம் பேச வேண்டிய நாள் இது இல்லை தாரா. ஏற்கனவே உன் அம்மா அப்பா ரெண்டு பேரும் உன்னை எனக்கு மேரேஜ் பண்ணி வச்சு ஏதோ செய்யக் கூடாத தப்பை செஞ்ச மாதிரி தவிச்சு போய் நிக்கிறாங்க. இதுல ஒரே நாள்ல எல்லா ஷாக்கையும் அவங்களுக்கு குடுக்க வேண்டாம்னு சொல்றேன். அஸ் அ பேரன்ட்டா அவங்களோட இடத்துல இருந்து பார்த்தா, அவங்க நினைக்குறதும் சரி தான்” என்றான் அகன்.

‘ஆக இந்த பம்பரக்கட்டை மண்டையன், குளிக்க உள்ள போயிட்டு கீழ நடந்த எல்லாத்தையும் ரீகால் பண்ணி பார்த்திருக்கான். இதுல எல்லாம் தெளிவு தான்டா நீ’ என்று மனதிற்குள் பேசிக் கொண்டிருக்க,

“உனக்கு ஏதாவது நான் ஹெல்ப் பண்ணனுமா?” என்றான் அழுத்தி.

“என்ன ஹெல்ப்?”

“ஐ மீன், நீ ரெப்ரஷ் ஆகணுமே? இந்த காஸ்டியூம்ஸ் ரிமூவ் பண்ணனும். தென் இந்த அக்ஸசரீஸ் எல்லாம் ரிமூவ் பண்ணனும். நீயா எப்படி பண்ணுவ?” என்றான்.

“இருந்த டென்ஷன்ல இதை மறந்துட்டேன் அகன். மம்மி பண்ணி விடுவாங்க. நான் அங்கயே போய் ரெப்ரஷ் ஆகிக்கிறேன்” என்றவள் கிளம்ப முயற்சிக்க, அவளை அப்படியே குஷனில் அமர வைத்தான் அகன்.

“என்னாச்சு?” என்றாள் புரியாமல்.

“நீ கொண்டு வந்த திங்க்ஸ் எல்லாம் இங்க இருக்கு தாரா. இப்போ அங்க போய் என்ன பண்ண போற?” என்றான்.

“ஆமாம்ல! காட், எனக்கு என்னமோ ஆயிடுச்சு அகன். மனசுக்குள்ள ஏதோ டென்ஷன். அதுக்கு ஏத்த மாதிரி நீங்களும் அப்படி பேசிட்டு போகவும், எனக்கு வேற எந்த சிந்தனையும் இல்லை” என்றாள்.

“என்னை சொல்லிட்டு மேடம் தான் இப்போ குழப்பத்துலையே இருக்கீங்க போல” என்று பேசிக் கொண்டே அவள் அணிந்திருந்த நகைகளை கழற்றிக் கொண்டிருந்தான்.

“பரவாயில்ல அகன். உங்களுக்கே கைல காயம் இருக்கு” என்றாள் தயக்கத்துடன்.

“நோ இஷ்யூஸ்..! ஜஸ்ட் வீக்கம் தான்” என்றவன் அவளின் சிகை அலங்காரத்தை கலைத்துக் கொண்டிருக்க, தலையிலிருந்த பெரிய பாரமே அகன்றதைப் போல் இருந்தது தாராவிற்கு.

“மை காட்..! இப்போ தான் ரிலாக்ஸா இருக்கு” என்றவளுக்கு அப்போது தான் அவன் நெருக்கமே உறைத்தது.

“ஆத்தி இவன் என்ன ட்ரஸ் சேன்ஞ் கூட பண்ணாம வந்து இப்படி பக்கத்துல நிக்கிறான். ம்ம்க்கும், நல்ல நாள்லயே இவன் பக்கத்துல வந்தா ஹார்மோன்ஸ் கதக்களி ஆடும். இப்போ லைசென்ஸ் வேற வாங்கிட்டேன். சொல்லவா வேணும்” என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

பழைய தாராவாக மாறி அவள் முணுமுணுத்தைக் கேட்டவன், இதழ்மடித்து வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான். கண்ணாடி வழியே அவள் முகம் பார்த்தவன்,

“புதுசா பேர் எதுவும் வைக்கலையா?” என்றான் குறுஞ்சிரிப்புடன்.

“என்ன பேர்? யாருக்கு?” என்றாள் புரியாமல்.

“எனக்கு எத்தனை நேம் வச்சிருக்கன்னு உனக்கே தெரியலை இல்லையா? நான் வேணும்னா சொல்லட்டுமா?” என்றான் அவளை மார்க்கமாய் பார்த்தபடி.

அவனை அதிர்ச்சியாய் பார்த்தபடி, “அது எப்படி உங்களுக்கு தெரியும்?” என்று கேட்டவள், நாக்கை கடித்துக் கொண்டாள்.

அவன் அவளை பொய்யாய் முறைக்க,

“ஹி..ஹி..! அதெல்லாம் ஒரு புளோல வர்றது தான் அகன். உங்களுக்கு கேட்காதுன்னு நினைச்சு வச்சுட்டேன்” என்றாள் அகப்பட்டுக் கொண்ட சுவாரஸ்யத்துடன்.

“அப்போ எனக்குக் கேட்கும்னு தெரிஞ்சிருந்தா வச்சிருக்க மாட்டியா?” என்றான் புருவத்தை உயர்த்தி.

“யார் சொன்னா? கேட்கும்னு தெரிஞ்சிருந்தா இன்னும் சேர்த்து வச்சிருப்பேன்” என்றவளுக்கு டென்ஷன் ஏறியது.

“இப்போ என்ன டென்ஷன் உனக்கு?” என்றான் அகன். அவள் என்ன யோசிக்கிறாள் என்று அவனுக்கும் தெரிந்து தான் இருந்தது.