என் இரவின் பொன் நிலவே
அகனின் அறைக்குள் நுழைந்தவள் ஏதோ ஒரு உணர்வில் ஆட்பட்டிருக்க, அவளைப் பின்னிருந்து அணைத்தவன் அவள் காதோரத்தில் ‘யுகா’ என்று ஆழ்ந்த குரலில் அழைக்க, அதில் சிலிர்த்தவள்,
“அகன் இந்த வீட்ல நமக்கு இந்து மாதிரி நல்ல மெம்மரீசும் இருக்கு. சில வேண்டாத மெம்மரீசும் இருக்கு. பட் இந்த ரூம், அதுல நீங்க என்னை இப்படி யுகான்னு...
அத்தியாயம் 11 :
அறைக்குள் பதட்டத்துடன் அமர்ந்திருந்தவளின் முகம் கண்டு வேணியும் பூமிநாதனும் யோசனையுடன் பார்க்க,
“அப்பா” என்றாள் பாவமாய்.
“என்னடா?” என்றார் பரிவுடன்.
“இல்ல, நான் எடுத்த முடிவு சரிதான? ஏதோ அகன் பீல் பண்ணுவானேன்னு சட்டுன்னு டிசைட் பண்ணிட்டேன். இப்போ ஒரு மாதிரி எம்பேரிசிங்கா இருக்கு” என்றாள் பாவமாய்.
“அப்பாகிட்ட பேசும் போது அவ்வளவு தெளிவா பேசுனியே தாரா”...
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே சந்தான லட்சுமியுடன் வந்தான் அகன்.
“தாரா எங்க பூமி?” என்றார் லட்சுமி.
“இப்போத்தான் ரூம்க்கு போனா பெரியத்தை” என்றார் வேணி.
“என்னாச்சு பெரியம்மா?” என்றார் பூமி.
“என்ன பூமி இப்படி கேட்குற? பிள்ளைக்கு கேக் வெட்ட வேண்டாமா? அதோ அங்க எல்லாம் ரெடி பண்ணியாச்சு. வேணி நீ போய் தாராவைக் கூட்டிட்டு வாம்மா” என்றார்...
“தாரா” என்றவருக்கு மேற்கொண்டு வார்த்தைகள் வரவில்லை. அவள் இப்படி பட்டென்று பேசுவாள் என்று அவர் நினைக்கவில்லை.
“என்னம்மா இப்படி பேசுற?” என்றார் லட்சுமி இறங்கிய குரலில்.
“வேற எப்படி பாட்டி பேச சொல்றிங்க? இப்போ கூட உங்களுக்கு என்னைப் பத்தி கவலையில்லை. உங்க கவலையெல்லாம் ஆஸ்திரேலியா போற உங்க பேரனை தடுத்து நிறுத்தனும். அதுக்கு இந்த தாரா...
அத்தியாயம் 18:
அகனின் முகம் இறுகிப் போனதைப் பார்த்து வாயை மூடிக் கொண்டாள் தாரா.சில விஷயங்களைப் பேசினால் அவன் தன் இயல்பை இழக்கிறான் என்பது வரையிலும் அவளுக்கும் புரிந்து தான் இருந்தது. ஏனோ அவனின் முகம் சற்று கசங்கினாலும் அவளால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.
அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவனோ லேப்டாப் திரையை வெறித்திருந்தான்.சில நிமிடங்கள்...
அத்தியாயம் 13:
“என்ன சித்தி நடக்குது இங்க? கார்த்தியும் அந்த தாராவும் இருக்குறதைப் பார்த்தா, நேத்து முடிவாகி இன்னைக்கு கல்யாணம் பண்ணவங்க மாதிரி தெரியலையே? என்னமோ ரெண்டு பெரும் லவ் பண்ணி கல்யாணம் பண்ண மாதிரி இருக்கு. லவ் மேரேஜ் பண்ண நாங்க கூட இப்படி இல்லை” என்றாள் மகிமா, வசந்தியிடம்.
“எனக்கும் அது தான் புரியலை...
அத்தியாயம் 6:
அந்த இரவு நேரத்தில் வீடு வண்ண விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது. இரவு உணவுக்கான வேலைகள் நடந்து கொண்டிருக்க, அதையெல்லாம் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்த யுகந்தாராவிற்கு மனம் முழுவதும் அகனைப் பற்றிய யோசனைகள் மட்டுமே.
“இப்படி ஒரு பஞ்சாயத்தைக் கூட்டி, இந்த வருஷப் பிறந்த நாளை எந்த வருஷமும் மறக்க முடியாமே பண்ணிட்டான் இந்த AP”...
“அகனுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே தான் பாட்டி. குலதெய்வ கோவிலுக்கு போறதைப் பத்தி பிரச்சனை இல்லை. அங்க சிலர் வாயை வச்சுகிட்டு சும்மா இருக்கணுமே” என்றாள்.
“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராதுடா” என்றார் லட்சுமி.
அவள் அகனைப் பார்க்க,
“தாரா வீடு சம்பந்தப்பட்ட சம்பிரதாயங்களை மட்டும் செய்யுங்க பாட்டி. வேற எங்கயும் என்னால வர முடியாது” என்றான் அகன்.
“பொள்ளாச்சி...
அத்தியாயம் 2 :
வெளியே வந்து அங்கிருந்த சேரில் அமர்ந்தவளுக்கு ஏனோ கேள்விப்பட்ட விஷயத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சில வினாடிகளில் அவனை பற்றிய தவறான அபிப்பிராயத்தை வளர்த்தற்காக தன் மீதே அவளுக்கு கோபம் வந்திருந்தது.
‘செம்ம பிகரா இருக்கானேன்னு நினைச்சு முடிக்கலை, அதுக்குள்ளே அவனுக்கு இப்படி ஒரு பிரச்சனைன்னு சொல்லிட்டாங்களே? ஆனா அவனைப் பார்த்தா அப்படி...
சற்று யோசித்த வசந்தியின் அக்கா, அரைமனதாக தலையை ஆட்டியிருந்தார்.
“அப்போ கார்த்தி பேர்ல மாத்துறதுக்கு ஏற்பாடு பண்ணுங்க வக்கீல் சார்” என்றான் நகுலன்.
“அவர் பேருக்குன்னா, பேப்பர் ரெடி பண்ணிட்டு நாளைக்கு வர்றேன் லட்சுமி மேடம்” என்ற வக்கீல் அங்கிருந்து கிளம்பி செல்ல, வசந்தியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. மகிமாவின் நிலைமையோ அதற்கு மேல்.
“நகுலா என்ன...
அங்கிருந்த யாருடனும் ஒட்டாமல் அகன் கார்த்திகேயன் விலகி இருப்பதைப் போன்றே இருந்தது தாராவிற்கு.
“நான் தான் தேவையில்லாம யோசிக்கிறேனா?” என்றவளுக்கு அவனைப் பற்றி யோசித்தாலே குழப்பமும் தலை வலியும் தான் மிஞ்சியது.
அன்று முழுவதும் தனித்தே இருந்தவனிடம் செல்ல முற்பட்ட கால்களை அடக்கிக் கொண்டு அறைக்குள் அடைந்திருந்தாள். நகுலனின் சத்தம் அதிகமாக கேட்பதைப் போல் தோன்ற அறைக்கதவைத்...
அங்கே அறையில் மகனைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த தயாளனோ வெகுவாய் சோர்ந்திருந்தார். இங்கு வந்து இத்தனை நாட்களாகியும் மகன் தன்னுடன் பேசாதது தயாளனை வெகுவாய் பாதித்திருந்தது. இத்தனை வருடங்களாக அவன் பேசாமல் இருந்தாலும் அவன் அருகில் இல்லாததால் எப்படியோ பொறுத்துக் கொண்டார். ஆனால் இத்தனை வருடங்கள் கழித்து வந்தும் தன்னிடம் பாராமுகமாய் இருக்கும் மகனை...
அவனிடமிருந்து வேகமாய் விலகியவள், சட்டென்று கண்கள் கலங்க தலையைக் குனிந்து கொண்டாள்.
“தாரா”
“நான் இப்படியெல்லாம் இல்லை அகன். எதையும் மனசுல வச்சுக்காம பேசி சிரிச்சுட்டு அம்மா அப்பான்னு ஒரு கூட்டுக்குள்ள சந்தோஷமா வாழ்ந்த சாதாரண பொண்ணு நானு. எல்லார் மாதிரியும் எனக்கும் நிறைய கல்யாண கனவுகள் எல்லாம் இருந்தது. இந்த வீட்டுக்கு வரும் போது உன்னை...
“இல்ல தூங்கும் போது, நான் சம் டைம்ஸ் ரெஸ்ட்லெசா பீல் பண்ணுவேன். இப் யு டோன்ட் மைன்ட், உனக்கு பிரச்சனையில்லையே” என்றான் யோசித்து.
“லைட் ஆப் பண்ணிட்டு வந்து தூங்குங்க அகன்” என்றவள் அவனுக்கு முதுகு காட்டி படுத்துவிட்டாள்.
கட்டிலின் மறுபுறம் அமர்ந்த அகனுக்கு, முதன் முறையாக வாழ்க்கை மீதான சிறு பயம் தோன்றியது. அவனிடமிருந்த மன...
அவள் வெளியே செல்வதைப் பார்த்த சுகந்தியோ,
“இந்த பொண்ணு என்னத்தை நம்ம கார்த்தி ரூம்ல இருந்து போகுது?” என்றார் சந்தான லட்சுமியிடம்.
“நான் தான் கார்த்திக்கு லஞ்ச் எடுத்துட்டு போய் குடுக்க சொன்னேன். அதுல உனக்கு எதுவும் பிரச்சனையா சுகந்தி?” என்றார் நேர்பார்வையாய்.
“அவனுக்கு அடுத்த வாரம் கல்யாணம். இப்போ இப்படி வயசுப் பொண்ணை அவன் ரூம்க்கு அனுப்புறது...
அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகில் வந்தவன்,
“அப்பறம்?” என்றான் ஆழ்ந்த பார்வையுடன்.
“என்ன அப்பறம்? ஒன்னுமில்லையே?” என்றவள் கிட்சன் கவுன்ட்டர் டாப்பிலிருந்து குதித்து இறங்கப் பார்க்க, அவளுக்கு இருபுறமும் கைகளை ஊன்றி அவள் இறங்குவதைத் தடுத்திருந்தான்.
“ரொம்ப நேரமா மேடம் என்னையவே பார்த்துட்டு இருந்திங்களே அதான் கேட்டேன்” என்றான் சிரிப்பை அடக்கியபடி.
“நான் அப்படியெல்லாம் பார்க்கவே இல்லையே?” என்று நிறுத்தியவள்,...
அவளை அறைக்குள் அழைத்துச் சென்ற லட்சுமி பாட்டியோ,
“அவங்க பேசுனதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்மா” என்றார். அவள் அவரை சங்கடமாக பார்க்க,
“எல்லாத்தையும் கேட்டுட்டுத் தான் வந்தேன்” என்றார் சந்தான லட்சுமி நிதானமான குரலில்.
“கோபமில்லைன்னு பொய் சொல்ல மாட்டேன் பாட்டி. கொஞ்ச நேரத்துல நானே சரியாகிடுவேன். சொல்றனேன்னு தப்பா நினைச்சுக்காதிங்க, நீங்க அகனுக்கு அலையன்ஸ் பார்த்ததை இன்னும்...
அத்தியாயம் 19 :
அன்று ரத்னா நண்பனைத் தேடிக் கொண்டு வீட்டிற்கே வர, போதையில் இருந்த அவரைக் கண்டு முகம் சுளித்தார் அகல்யா.
“அவர் வீட்ல இல்லைண்ணா. போயிட்டு அப்பறம் வாங்க” என்றார்.
தன்னைக் கண்டு முகத்தை சுளித்த அகல்யாவின் மேல் வைத்த பார்வையை மாற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ரத்னா. தன்னை விட்டுச் சென்ற மனைவி தன்னைப் பார்த்து...
தயாளனும் ரேவதியும் மேடையேறி வரும் போதே பட்டென்று எழுந்திருந்தான் அகன். தாரா அவனை அதிர்ச்சியுடன் பார்க்க, அவளின் முகத்தைப் பார்த்து, அவள் கண்களில் இருந்த அதிர்ச்சியைக் கண்டவன், முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு மீண்டும் அமர்ந்தான்.
அவன் தனக்காகத்தான் தன்னைக் கட்டுபடுத்திக் கொண்டிருக்கிறான் என்பது வரை அவளுக்கும் புரிந்து தான் இருந்தது.
வசந்தியோ அவன் பிரச்சனை செய்வதைப்...
அத்தியாயம் 5:
ரோப் காரில் வரும் பெண்கள் அணி இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை. சூரியனோ சுள்ளென்று எறிக்க, வெப்பத்தின் வேட்கையை தாங்க முடியாமல் அகனின் முகம் முழுவதும் சிவந்து விட்டிருந்தது. அவனை அப்படி பார்த்த யுகந்தாராவிற்கு பாவமாய் இருந்தது.
அவர்கள் வரும் வழி நோக்கி இவர்கள் விழி வைத்துக் காத்திருக்க, கூட்டம் வேறு அதிகமாக இருந்தது. ஒரு...