Monday, April 29, 2024

    Kannamaavin Kaanthan

    செழியன், தான் மடிக்கணினியில் பார்த்து கொண்டிருந்த வேலையை, ஓர் அளவுக்கு முடித்து நிமிரும் போது, மணி அதிகாலை நான்கை நெருங்கி கொண்டிருந்தது. கண்காணிப்பு அறைக்கு சென்று பார்க்க, வெற்றியும், தமிழும் அவர்கள் வேலை பார்த்து கொண்டிருந்த மேசையின் மீதே, தலை கவிழ்த்து உறங்கி கொண்டிருந்தனர்.
    நங்கையின் சித்தி முகவரியை கண்டுபிடிக்க தான் எடுத்து கொண்ட இந்த இரண்டு நாட்களில், நங்கைக்கு ஒரு வரனுடன் அவர் வருவார், என்று சற்றும் எதிர்பாக்காத செழியனுக்கு ஆயாசமாக இருந்தது. "முறைப்படி பொண்ணு பார்க்க கூட வரல, வெறும் பேச்சு வார்த்தை தானே"
    ஆக சிறந்த துன்பம் என்பது எதுவெனில், நமது அன்புக்கு உற்றவர் வருந்தும் போது, அவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல், மூன்றாம் மனிதர் போல தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது தான். செழியனும் அப்படி பட்ட, அடிபட்ட மனநிலையில் தான் இருந்தான். தேவி பாட்டியிடம்...
    நங்கையின் சித்தி, நங்கைக்கு அவள் சொன்ன நிபந்தனைகளுக்கு உட்பட்ட வரனுடன் தான் வந்திருப்பதாக சொல்ல, அதை கேட்ட, தேவி பாட்டி தான் அதிக அதிர்ச்சியில் இருந்தார். தேவி பாட்டி இரண்டு நாள் முன்னர் தான் முத்தையா தாத்தாவிடம், செழியனை பற்றிய தகவலை கறந்து இருந்தார்.
    செழியன், வெற்றி, தமிழ் மூவரும் தீவிரமாக ஆலோசித்து கொண்டிருக்கும் போது, கதவு தட்டும் ஓசை கேட்க, மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். செழியனின் கண்ணசைவில், தமிழ் சென்று கதவிடுக்கில் பார்க்க, கதவை தட்டிய நபர் கதவுக்கு முதுகை காட்டியபடி நிற்க, முகம் தெரியவில்லை.
    செழியன் சொற்ப பொருட்களையே கொண்டு வந்து இருந்தாலும், அதை அந்த சிறிய வீட்டில் ஒதுக்கி வைக்கவே, அவனுக்கு மதியத்திற்கு மேல் ஆகிவிட்டது. மதிய உணவை வீட்டிற்கே தருவித்து உண்டவன்,  முன்மாலை பொழுதில் வெளியே செல்ல கிளம்ப, சரியாக அந்த நேரம், தேவி பாட்டியின்...
    "பி.எஸ்" இன் மன இறுக்கத்தை உணர்ந்தது போலவே, வீசிக்கொண்டு இருந்த காற்றும் சற்று நின்று, நண்பர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. அந்த அந்தகார இரவில், வேலை செய்து களைத்து போய் வந்து இருந்த விஜய்க்கோ, அவன் நண்பனின் வார்த்தைகள் புரிந்தாலும், அதன் அர்த்தம் தான்...
    உள்ளத்தின் உளைச்சல் உடலில் தெரிவது இயல்பு தானே. செழியன் ஒன்றும் அதற்கு விதிவிலக்கல்லவே. ஏதோ தேவி காலனியில் இருந்து நடந்தே வந்தது போல, கலைத்து ஓய்ந்து போய், அந்த தனி வீட்டிற்கு வந்து சேர்ந்தான் செழியன். உள்ளே நுழைந்த செழியன், எதுவும் பேசாமல்,...
    சாதாரண கடைநிலை, இடைநிலை ஊழியர்கள் எல்லாம் அரக்கப்பறக்க அலுவகலம் சென்று அழுவலில் மூழ்கியிருக்க, அவர்களை மேற்பார்வையிடம் மேல்நிலை ஊழியர்கள், நிதானமாக வேலைக்கு, கிளம்பி கொண்டிருக்கும் நேரம். காலை பத்து மணி. 'தேவி காலனி' அது 'ப' வடிவத்தில்...
    இருப்பதில் நிறையாமல், இன்னும் இன்னும் என பல சந்ததியினருக்கும் சேர்த்து உழைக்கும் பணக்காரர்களும், அடுத்த வேளை உணவிற்கு என்ன செய்வது என்று மருளும் அடித்தட்டு மக்களும் அசந்து உறங்கும் அர்த்தசாமம் தாண்டிய வேளை அது. பௌணர்மி முடிந்து சில நாட்கள் தான் ஆகி இருக்க வேண்டும் என கட்டியம் கூறும் வகையில், சற்று கரைந்து இருந்தாலும், ஒரு...
    செழியன் தேவி பாட்டியிடம் பேசிவிட்டு வெளியே கிளம்பி செல்ல, சரியாக அதே சமயம், வீட்டிற்கு திரும்பி வந்தான் நன்மாறன். காலையில் வெயிலுக்கு முன்பே தன் நண்பர்களுடன், மட்டை பந்து விளையாட என்று சென்றிருந்த நன்மாறன், கலைத்து போய் அப்போது தான் வந்து சேர்ந்தான்.
    இரவு மணி எட்டை தாண்டி ஓடி கொண்டிருக்க, செழியன் அப்போது தான் வீட்டிற்கு வந்தான். அவன் மாடியேற போக, நங்கை வீட்டிற்குள் இருந்து, அவனுக்காகவே காத்திருந்தது போல, வெளியே வந்தார் தேவி பாட்டி. தேவி பாட்டியை பார்த்ததும், நேற்று அவரிடம் வலிய சென்று வாங்கியது எல்லாம் நினைவு...
    error: Content is protected !!