Wednesday, July 15, 2026

    Kadanthu Sel Kaathaludan

    கடந்து செல் காதலுடன்! 31 எம்பையர் அப்ரூவலுக்காக வந்திருந்த குருமூர்த்தி, அங்கிருந்த சண்முகத்தை கண்டு கேள்வியாக லிங்கத்தை பார்த்தார். "நான் வேணாம்ன்னு தான் சொன்னேன் மூர்த்தி" என்று லிங்கம் சொல்ல, "அப்பாயிண்ட்மெண்ட் என் பேர்ல தான் வாங்கியிருக்கேன்" என்றார் சண்முகம். மிகப்பெரிய பதவியில் அமர்ந்திருக்கும் அதிகாரியை சந்திக்க வந்திருக்கிறார்கள். அவர் இடத்தில் வைத்து அமைச்சர் பதவியில் இருக்கும் சண்முகத்தை நீ...
    ஒரு நாளுக்காக பெங்களூர் சென்று திரும்பி வர முடியாது என்பதால், வீட்டில் இருந்து வேலை பார்க்க கேட்டாள். நிச்சயம் கோவம் கொள்வார் என்று தெரியும். ஆனால் அவரோ எடுத்ததும் ஹைபிட்சில் ஆரம்பித்து வைத்தார். "என்ன சொல்றார்?" மகளின் பாவனையில் தந்தை முகம் மாறியது. "ஒன்னுமில்லை. நீங்க கிளம்புங்க" என்று தந்தைக்கு கையசைத்தாள். "நீ பேசி முடி முதல்ல" அங்கேயே நின்றார்...
    கடந்து செல் காதலுடன்! 30 குருமூர்த்தி அமைதியாக அமர்ந்திருக்க, "கடைசியா கேட்கிறேன். சண்முகத்தை கூப்பிடுவியா மாட்டியா?" என்று லிங்கம் கேட்டார். "அவரை மீட் பண்ணனும். அந்த பையன் விஷயமா. ஏற்பாடு பண்ணுங்க" குருமூர்த்தி சொல்ல, "முடியாது. பண்ண மாட்டேன்" என்றார் லிங்கம் கோவமாக. "அய்யா" குருமூர்த்தி அவரிடம் சமாதானமாக பேச வர, "உனக்காக சண்முகம் நிறைய உதவி பண்ணியிருக்கான். உனக்கு தெரிஞ்சு...
    "சர்வா. ஏன் தங்கம் இப்படி?" என்ற வசுந்தரா மகனின் முதுகை வருடி கொடுத்தார். தவறு செய்தால் கேட்கலாம், திருத்தலாம். ஆனால் மகன் செய்யும் எதையும் தவறு என்ற வட்டத்திற்குள் அடக்கி விட முடியாது. வசுந்தராவின் தடுமாற்றத்திற்கு காரணம் இதுவே! "சரி, என்னவா இருந்தாலும் பொறுமையா பேசு. நமக்காக உன் அத்தைங்க, மாமாங்க நிறைய சப்போர்ட் பண்ணியிருக்காங்க. அதையும்...
    கடந்து செல் காதலுடன்! 29 "இப்போ முடிவா நீ என்னதான் சொல்ற?" குருமூர்த்தி கேட்க, "நான் லடாக் போயே தீருவேன்" என்றான் சர்வாச்சார்யா. "லடாக் போறன்னு ஏன் சொல்ற? சண்டைக்கு போறேன்னு சொல்லுங்க சார்" குருமூர்த்தி சொல்ல, "அதுவும் ஒரு காரணம். அவ்வளவு தான்" என்றான் நாயகன். "ச்சு. போறவன் அமைதியா போய் தொலைய வேண்டியது தானே? ஏன் என்கிட்ட சொல்லி...
    கடந்து செல் காதலுடன்! 28 சர்வாச்சார்யா கார் எம்பையர் வளாகத்திற்குள் நுழைந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் புடை சூழ, கட்டிடத்திற்குள் நுழைந்தவன், நேரே குருமூர்த்தி இருக்கும் தளத்திற்கு சென்றான். குருமூர்த்தி நடந்து கொண்டிருந்தவர், கதவை திறந்து வருபவனை கண்டதும் நின்றார். ம்ஹ்ம். நன்றாகவே வளர்ந்திருக்கிறான். முகத்தில் முதிர்ச்சி கூடி, நடையில் வேகம் வந்திருந்தது. இரண்டடியில் இவருக்கு முன் வந்து நின்றிருந்தவனை அமைதியாக பார்த்தார்...
    "மெஷின் கட்டிங் பண்ணி எடுக்க பாருங்க" என்று மணி திரும்ப கேட்க, "சுவர் எல்லாம் அரைகுறையா நிக்கிறதோட வீட்டோட அழகும் போயிடும்" "அப்போ மொத்த வீட்டையே இடிச்சு போடு" என்றார் குருமூர்த்தி. "அண்ணா" என்று வந்தவர்கள் திகைக்க, "ஏன் பண்ண முடியாதா? இல்லை அதுக்கும் எதாவது காரணம் சொல்ல போறியா?" குருமூர்த்தி பாய்ந்ததில், "ண்ணா. என்னண்ணா நீங்க சொன்னா நாங்க செய்ய...
    கடந்து செல் காதலுடன்! 26 குருமூர்த்தி அமைதியாக கண்களை மூடியபடி இருக்கையில் சாய்ந்திருந்தார். அந்த நான்காம் தளத்தில் அவர் ஒருவர் மட்டுமே! கண்ணாடி கதவுகளுக்கு பின் பாதுகாப்பு அதிகாரிகள் காவலுக்கு இருந்தார்கள். "சார் டீ" என்று ஒருவன் வந்து பணிவுடன் வைத்து சென்றான். தொடர்ந்து அவருக்கான பலகாரமும் சுட சுட வந்தது. குடிக்க தண்ணீர் சில்லென, சாதாரணமாக, சூடாக என்று மூன்றும்...
    கடந்து செல் காதலுடன்! 1 "கந்தன் துணை" மெலிதாக இதழ்கள் விரிந்தது. தினமும் இந்த வாசகத்தை நூறு முறையேனும் படித்துவிடுவாள் சம்யுக்தா. பக்தியில் என்றால் இல்லை. ஒரு விதத்தில் கட்டாயம் என்றே சொல்லலாம்.  அவள் வலம் வரும் காரில் இருக்கும் வாசகம். கல்லூரிக்கு செல்லும் போதும், திரும்பும் போதும் இதை வாசிப்பதை கடமையாக செய்யும் பெண். ஏதும் செய்யாமல் இருப்பதற்கு, இதையாவது...
    error: Content is protected !!