“இன்னைக்கும் சீக்கிரம் போகணுமா? என்ன பாப்பா நீ, முதல்லே சொல்லியிருந்தா வேகமா டிபன் ரெடி பண்ணியிருப்போம் இல்லை” என்று கற்பகம் பாட்டி கேட்க,
“பாட்டி. டிபன் நான் வெளியே பார்த்துகிறேன். நீங்க டென்க்ஷன் ஆக வேண்டாம். எனக்கு லேட் ஆகிடுச்சு. பை” என்று பெண் வேகமாக கிளம்ப,
“குணா எங்க? அவனை கூட்டிட்டு தானே போற?” என்று கற்பகம் பாட்டி கேட்க,
“நான் தனியா தான் போறேன் பாட்டி. குணாக்கு அப்பா வேற வேலை கொடுத்திருக்கார்” என்றாள் சம்யுக்தா.
“உன் அப்பாவை இன்னும் ஊட்டி விடலையா என்ன?” என்று பாட்டி சடைத்து கொள்ள,
“பாட்டி. வேலை இல்லாம அப்பா அங்க இருக்க மாட்டார். வந்திடுவார்” என்ற சம்யுக்தாவை ஆதங்கத்துடன் பார்த்த பாட்டி,
“உன் அப்பாவை கொஞ்சம் கூட விட்டு கொடுத்திடாத. இழுத்து பிடிச்சுட்டே இரு. நல்லா இருக்கும், ரொம்ப நல்லா இருக்கும்” என்றார் கற்பகம் பாட்டி.
“பாட்டி” என்று அதிருப்தி அடைந்த பெண்ணின் கையை வாஞ்சையாக பற்றி கொண்ட கற்பகம் பாட்டி,
“நான் நைட் சொன்னதை பத்தி யோசிச்சியா கண்ணு? சிலது எல்லாம் நம் கையை விட்டு போனா போனது தான். திரும்ப கிடைக்காது பாப்பா” என,
பைல் எடுத்து கொண்டிருந்த சம்யுக்தா விரல்கள் சில நொடி நின்று பின், “இப்போ நேரம் இல்லை பாட்டி. நான் வந்ததும் பேசிக்கலாம், பை” என்று காரில் ஏறிக்கொண்டாள்.
சென்னையின் காலை நேர பரபரப்பில், சம்யுக்தாவின் கார் நேரம் எடுத்து தான் எம்பையரை அடைந்தது.
சம்யுக்தாவிற்கான தனி பாதையில் அவளின் அலுவலகம் அடைந்தவள், அன்றய நாளிற்கான வேலையை வேகமாக முடிக்க ஆரம்பித்தாள்.
“மேம். மீட்டிங் இருக்கு” என்று அவளின் காரியதரிசி வர,
“எஸ். எஸ். போலாம்” என்றவள், அடுத்த ஒரு மணி நேரத்தை மீட்டிங்கிலே கழித்தாள்.
“என்ன சொல்றாங்கமா?” என்று குருமூர்த்தி மகளுக்கு அழைத்து கேட்க,
“அடுத்த ஆறு மாசத்துக்குள்ள அவங்களுக்கு ஆபிஸ் வேணுமாம்ப்பா” என்றாள் மகள்.
“மேஜிக் பண்ணியா கட்டிடத்தை எழுப்ப முடியும்? வேலை நடந்துட்டு தானே இருக்கு. அப்படி அவங்களுக்கு அவ்வளவு அவசரம்ன்னா வேற இடத்தை பார்த்துக்க சொல்லு” என்றார் குருமூர்த்தி கோவமாக.
“ப்பா. அவங்க நம்மகிட்ட ரெகுவஸ்ட் தான் பண்றாங்க. நானும் ஆறு மாசத்துக்குள்ள வாய்ப்பில்லை. கூட இரண்டு ,மூணு மாசம் ஆகும்ன்னு சொல்லிட்டேன்” என்றாள் மகள் நிதானத்துடன்.
“ம்ம்ம். குணா நாளைக்கு தான் வருவான், நீ தனியா சமாளிச்சுக்குவியா?” என்றார் கேட்டார் குருமூர்த்தி.
“ப்பா. எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை” என்ற மகள், “ஏதும் முக்கியமான வேலையாப்பா?” என்று கேட்டாள்.
“நம்ம எஸ்டேட் சம்மந்தமான வேலை தான்மா. கொஞ்ச நாள் தான் இந்த பக்கம் வரலை. அதுக்குள்ள ஏகப்பட்ட குளறுபடி பண்ணி வைச்சிருக்காங்க. மெஷின் வர வேண்டியதும் வழியில மாட்டிகிட்டு நிக்குது. அதை பார்க்க சொல்லி தான் குணா வை அனுப்பியிருக்கேன்” என்றார் குருமூர்த்தி.
“சரிங்கப்பா. நீங்க வேலை முடிச்சுட்டே வாங்க. மணி அங்கிள் எப்படி இருக்கார்?” என்று கேட்டாள் சம்யுக்தா.
“ப்பா. உங்களோட இருந்து தான் அவருக்கு பழக்கம். விடுங்க” என்றாள் சம்யுக்தா.
“ம்ப்ச். இப்போ நீ அங்க தனியா இருக்க இல்லை. நைட்டுக்குள்ள வேலை முடிஞ்சா பார்க்கிறேன், இல்லை நான் கிளம்பி வரேன். குணா பார்த்துக்கட்டும்” என்ற குருமூர்த்தி,
“பாட்டி நீ சாப்பிடாம கிளம்பிட்டேன்னு சொன்னாங்க. ஆர்டர் போட்டுட்டேன். மீட்டிங் முடிஞ்சது இல்லை. சாப்பிடு போ” என்று வைத்தார்.
சம்யுக்தா சில நொடி அந்த இருக்கையிலே தலை சாய்த்திருந்தவள் அதன் பின் கான்பிரன்ஸ் ஹாலை விட்டு வெளியேறினாள்.
அவளின் தினசரி வேலைகளுக்கு இடையில், எம்பையரில் சில தொழில் நுட்ப கோளாறுகளும் ஏற்பட்டுவிட்டது.
அத்தனை ஆட்கள் சிஸ்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். சிறு தொந்தரவும் அதிகமான பாதிப்பை உண்டாக்கும் என்பதால், சம்யுக்தா உடனே அதை சரிசெய்ய உத்தரவிட்டாள்.
அவளின் அதிகபட்ச பதட்டமே, சர்வாச்சார்யா அலுவலகத்தை நினைத்து தான்.
மாதத்தின் தொடக்கத்திலே, “மேம். ரொம்ப முக்கியமான ப்ரொஜெக்ட் எடுத்திருக்கோம், இந்த ஒரு மாசமும் எங்களுக்கு சின்ன தடங்கல் கூட வராம பார்த்துக்கோங்க” என்று, அலுவலகத்தின் முதன்மை செயல் அதிகாரி தனிப்பட்ட முறையில் சம்யுக்தாவை சந்தித்து பேசியிருந்தார்.
“சரி சார். எங்க பக்கம் இருந்து உங்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் இல்லாம பார்த்துகிறோம்” என்று சம்யுக்தாவும் உறுதியளித்திருந்தாள்.
அதற்கு, “மெயில் அனுப்பினா போதாதா சார் நீங்களே போய் பேசணுமா?” என்று முதன்மை செயல் அதிகாரியின் உதவியாளர் கொஞ்சம் கடுப்புடன் கேட்க,
“எம்பையர் பொறுத்தவரை அப்படி தான். என்னவா இருந்தாலும் நான் போய் பெர்சனலா தான் பேசணும்” என்றார் அவர்.
“சார். அது முன்ன ஏதோ! இப்போதான் ஒன்னுமில்லயே, அப்புறம் ஏன் இவங்களுக்கு இவ்வளவு மரியாதை கொடுக்கணும்? மத்தவங்களை மாதிரி இவங்களை நாம டீல் பண்ணா போதாதா?” என்று அவர் கேட்டுவிட,
“உனக்கு இந்த வேலை முக்கியம் இல்லையா என்ன?” என்று அவர் கோவமாக கேட்டார்.
“சார்” என்று அவர் பம்ம,
“என் பாஸ் சொல்றதை தான் நான் செய்வேன். அவரோட ஆர்டர் தான் எனக்கு வேதவாக்கு. உனக்கு அப்படி இல்லைன்னா நீ இப்போவே கிளம்பலாம்” என்றுவிட்டார் அவர்.
“ஸாரி சார், ஸாரி சார். இனி இப்படி பேச மாட்டேன்” என்று அவர் மன்னிப்பை வேண்ட, முதன்மை செயல் அதிகாரியோ, உதவியாளரை உடனே மாற்றிவிட்டார்.
“சார். சார், ப்ளீஸ் இப்படி பண்ணாதீங்க?” என்று அந்த உதவியாளர் கெஞ்ச,
“முதலாளியோட நெருங்கின வட்டத்துல இருக்கிற பத்து பேர்ல நானும் ஒருத்தன். என் பக்கத்துல இருக்கிறவங்க என்னை விட லாயலா இருக்கணும். ஆனா நீ இல்லை”
“சார், என் வேலைக்கு நான் உண்மையா தான் இருக்கேன்”
“அதனாலதான் வேலையை விட்டு தூக்காம ட்ரான்ஸ்பர் மட்டும் பண்றேன். அப்புறம் வேலைக்கு மட்டுமில்லை வேலை கொடுக்கிற முதலாளிக்கும் உண்மையா இருக்கணும்” என்று முடித்துவிட்டார் அவர்.
அடுத்த சில நிமிடங்களில் மொத்த அலுவலகத்திற்கும் விஷயம் பரவிவிட, சிலரின் முகம் இருளடைந்துவிட்டது.
“எம்பையர் பக்கமே சர்வாச்சார்யா வருவதில்லை. சம்யுக்தாவிற்கும், அவனுக்கும் இனி எந்த சம்மந்தமும் இல்லை. ஆரம்பித்த திருமண ஏற்படும் அன்றே நிறுத்தப்பட்டுவிட்டது. அவர்களிடையே எல்லாம் முடிந்தது!” இப்படியான பேச்சுக்கள் வெளியுலகத்தில் மட்டுமில்லை, எம்பையரிலும் பரவியிருந்தது.
எம்பையர் திறப்பு விழாவில் சர்வாச்சார்யா கைகளில் நெருக்கமாக நின்ற சம்யுக்தாவின் புகைப்படம் கிட்டதட்ட எல்லோரின் மொபைலிலும் இருந்தது.
“அழகான பொண்ணு தான். ஆனா நம்ம பாஸை கட்டிக்க தகுதி இல்லையே”
“ஆமா அவங்க அப்பா எம்பையரை கட்டிட்டா மட்டும் கௌரவம் கிடைச்சிடுமா என்ன? நம்ம முதலாளியோட அந்தஸ்து, பாரம்பரியத்துக்கு முன்னாடி இவங்க எல்லாம் ஒண்ணுமே கிடையாது”
“என்னமோ பாஸ்’க்கு நல்ல நேரம். இவங்ககிட்ட வந்து சிக்கிகலை. இந்த குருமூர்த்தி பெரிய ரௌடியாம். என் அப்பா சொன்னார். பத்து வருஷம் ஜெயிலுக்கு எல்லாம் கூட போய்ட்டு வந்திருக்கார்”
“என்ன சொல்ற நீ?”
“ஏதோ கொலை கேஸுல சம்மந்தப்பட்டுன்னு சொன்னாங்க”
“டேய். அது யாருன்னு நினைச்ச? நம்ம மினிஸ்டர் சண்முகம் இருக்கார் இல்லை அவரோட தம்பி தான்”
“இது என்னடா எங்கெங்கோ போகுது”
“உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா இந்த சம்யுக்தாவும் தீரஜ் கேஸுல சம்மந்த பட்டிருக்காங்க”
“நம்ம முதலாளிக்கு நல்ல நேரம்ன்னு தான் சொல்லணும். அப்பாவும், மகளும் சேர்ந்து ஏதோ பெரிய திட்டம் போட்டுத்தான் முதலாளியை வளைக்க பார்த்திருக்காங்க”
“இருக்கும். இல்லைன்னா அவர் ரேஞ்சுக்கு இவங்களை எப்படி தெரியும். எங்க அவரை பிடிச்சாங்களோ தெரியலை” என்று அலுவலகத்தில் கூடி, ரகசிய, ரகசியமாக இத்தனை நாட்கள் பேசியதின் விளைவு தான் அந்த உதவியாளர் வாய் விட்டதிற்கு காரணம்.
முதன்மை செயல் அதிகாரியின் உதவியாளராக இருந்து கொண்டு அவர் இந்த வேலையை செய்திருக்க கூடாது. ஆனால் என்ன செய்ய? சிறு புத்தி இல்லாத மனிதன் உண்டோ என்ன?
அந்த உதவியாளருடன் சேர்ந்து ரகசியம் பேசிய ஆட்களில் இருவர் மட்டும் அதிகமே பயந்துவிட்டனர்.
சம்யுக்தாவை கடக்கும் நேரத்தில் வேண்டுமென்றே சத்தமாக சிரித்து, “போட்ட திட்டம் எல்லாம் ஊத்திக்கிச்சா மச்சான்” என்று ஜாடையும் பேசியிருந்தார்கள்.
இந்த தைரியம் சம்மந்தப்பட்டவர்களின் அமைதியில் தான் கிடைத்தது போல.
சம்யுக்தாவிற்கு ஜாடை பேச்சுக்கள் புரிந்தாலும் கண்டு கொள்வது கிடையாது. சர்வாச்சார்யா காதிற்கு இது போன்ற விஷயங்கள் செல்வதில்லை.
ஒருவேளை குருமூர்த்தியிடம் இதை செய்திருந்தால், அந்த தைரியம் காணாமலே போயிருக்கும்.
இல்லை! முதலில் அது தைரியமே இல்லை. எறும்பென நினைத்து, அதை துன்புறுத்தி பார்க்க நினைக்கும் எண்ணத்திற்கு பெயர் கயமை தனம். அதற்கு பதில் சொல்லத்தான் வேண்டுமா என்ன?
பேசுபவர்கள் பேசி கொள்ளட்டும். நாம் நம் வேலையை பார்ப்போம் என்று சம்யுக்தா அந்த உதவியாளர் மாற்றிய செய்தியையும் கடந்துவிட்டாள்.
அதன் பின்னான நாட்களில் சம்யுக்தா பக்கமே யாரும் வருவதில்லை. முதல் சில நாட்கள் அவளை வம்பிழுக்க நினைத்த கூட்டமும், அவளை பார்த்தாலே பத்தடி ஒதுங்கி செல்ல ஆரம்பித்துவிட்டனர்.
இப்போது நடந்த தொழில் நுட்ப கோளாறுக்கும், கோவமாக பெண்ணிடம் பேச முடியாமல், “இன்னொரு முறை இப்படி நடக்காம பார்த்துக்கோங்க மேம், ப்ரொஜெக்ட் முடியற ஸ்டேஜ்ல இருக்கு. பல கொடிகளை இன்வெஸ்ட் பண்ணியிருக்கோம். ப்ளீஸ்” என்று மட்டும் சொன்னார் முதன்மை செயல் அதிகாரி.
“சார். உங்க சூழ்நிலை தெரிஞ்சுதால தான், அவசரக்காலத்துல மட்டுமே பயன்படுத்துற வசதியை உங்களுக்கு உடனே கிடைக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணேன்” என்றாள் சம்யுக்தா.