“எல்லாம் பல வருஷ பழக்கம் தம்பி. எனக்கும், அண்ணனுக்கும் குடும்பம் இல்லை. இவங்க தான் நிறைய நேரம் எங்களுக்கு துணையா இருந்திருக்காங்க. நமக்கு ஒண்ணுன்னா ஓடி வர ஆள் இருக்கிறதே பெரிய விஷயம் தானே” என்று மாசிலாமணி சொல்ல, ஆமோதிப்பாக தலையசைத்தான் நாயகன்.

“துணைக்கு ஆள் வைச்சுக்க வேண்டியது தானே?” என்று இந்த கடைசிக்கும், அந்த கடைசிக்கும் அலைந்த குணாவிடம் கேட்க,

“சார். முதல் நாள் தான் கொஞ்சம் கஷ்டமா இருந்தது. இப்போ பரவாயில்லை” என்றான் குணா.

“முதல் நாள்ன்னா?”

“சார். இது நாலாவது நாள், நீங்க மறுவீடு வர வரைக்கும் பந்தி தான்” என்றுவிட்டு சென்றான் குணா.

“நீ? நீங்க இங்க என்ன பண்றீங்க?” என்று குருமூர்த்தி மருமகனிடம் ஓடி வர,

“இது நல்ல ஏற்பாடு” என்றான் மருமகன் மெச்சுதலாக.

“சரி. நீ, நீங்க உள்ள வந்து சாப்பிடுங்க. நேரம் ஆச்சு” என்று அவனை கையோடு அழைத்து சென்று மகளுடன் அமர வைத்தார்.

“ப்பா. நீங்களும் எங்களோட உட்காருங்க” என்று சம்யுக்தா இருவருக்கும் பரிமாறி, தானும் உணவுடன் அமர்ந்தாள்.

குருமூர்த்திக்கு இப்போது தான் பசித்தது போல. சம்யுக்தா உண்பதை நிறுத்திவிட்டு தந்தைக்கு பரிமாற ஆரம்பித்தாள். அவளின் முகமும் மாறிவிட்டது.

“உன் அப்பா காலையில் இருந்து ஒன்னுமே சாப்பிடலை. மண்டபத்துல ஏதோ உங்களோட கொஞ்சம் சாப்பிட்டது தான்” என்றார் கற்பகம் பாட்டி.

சம்யுக்தா கலங்கி போக, “உடனே நீ வாடாத. மருமகப்புள்ள இருக்கார். சிரிச்ச முகமா இரு. உன் அப்பா தானாவே சரியாகிடுவார்” என்றவர், தொடர்ந்து,

“கண்ணு. என்ன இது முறையில்லாம் இந்த நேரத்துக்கு வந்திருக்கீங்க? தப்பு பாப்பா” என்று கண்டித்தார் பாட்டி.

“அவர்,  அவர் தான் சட்டுன்னு”

“உன் புகுந்த வீட்டுல என்ன நினைப்பாங்க கண்ணு. ஆம்பிளைங்க அதை எல்லாம் கண்டுக்க மாட்டாங்க. இனி நீதான் இதையெல்லாம் சமாளிக்கணும்”

“சரி பாட்டி”

“அவ்வளவு சொன்னேன் நான். நீ முதல் நாளே கோட்டை விட்டிருக்க” என்று பாட்டி அதிருப்தி கொண்டார்.

‘இந்த பாட்டியை அவர்கிட்ட பேச விடணும். அப்போதான் இவங்களுக்கு தெரியும்’ சம்யுக்தா ஆதங்கம் கொண்டாலும், அவர் அறிவுரையை ஏற்று கொண்டாள்.

“என்னாச்சு?” என்று சர்வாச்சார்யா பெண்ணை கவனித்து கேட்க,

“அப்பா ரூம்லே தான் இருந்திருக்கார், சாப்பிடவும் இல்லை” என்றவள், சட்டென அதிர்ந்து. “உங்களுக்கு இது தெரியும் தானே. கடவுளே இங்க இருக்கிற சிசிடிவி உங்களுக்கு கனெக்ட்ல இருக்கு. நான் அதை பார்க்க கூட மறந்துட்டேன்” என்று நெற்றியை தட்டி கொண்டாள் சம்யுக்தா.

“என்கிட்ட சொல்லியிருக்கலாம், நான் அப்பாகிட்ட பேசியிருப்பேன். அதைவிட்டு இங்க வந்து”

“ஏன் இப்போ இங்க வந்தததால என்னாச்சு?”

“உங்க வீட்ல என்ன நினைப்பாங்கன்னு நாம பார்க்கணும்”

“எங்க வீட்ல யார் என்ன நினைச்சா உனக்கு என்ன?”

“அதெப்படி எனக்கென்ன? புரிஞ்சது, புரிஞ்சது. நம்ம வீட்ல”

“உன் அப்பா அளவுக்கு நீ விவரம் இல்லை”

“அப்பா கூட என்னை வைச்சு பார்க்காதீங்க. அவர் ரொம்ப சூப்பர்”

“ஆமா. ஆமா. உன் அப்பா படுபயங்கமரமான சூப்பர் தான்” என்றான் நாயகன் சத்தமாக.

பாதம் பாலுடன் இவர்களிடம் வந்த குருமூர்த்தி மருமகன் வார்த்தையில், “என்ன?” என்று கேட்டார்.

“நீங்க ரொம்ப விவரமாம்! சூப்பரா யோசனை பண்ணுவீங்களாம்! எனக்கே சொல்றா உங்க பொண்ணு”

“உங்களுக்கேவா? என்னை விட அப்பாவை தெரியுமா உங்களுக்கு?” மகளுக்கு ரோஷம்  வந்துவிட்டது.

“தெரியுமே! உங்க அப்பாவை கூட கேளு, சொல்லுங்க. உங்க பொண்ணுகிட்ட சொல்லுங்க”

“இப்போ எதுக்கும்மா அந்த பேச்சு? இந்தாங்க சூடா குடிங்க” என்று குருமூர்த்தி வேகமாக பாதம் பாலை கொடுக்க,

“ஒரு வாரத்துக்கு முன்னாடி ஒரு யோசனை சொன்னார் பாரு. நான் ஆடி போயிட்டேன். அசந்து போயிட்டேன்” என்றான் வில்லன்.

“அப்படியென்ன சொன்னார்?” மகள் கேட்க,

“சம்யுக்தா” என்றார் தந்தை.

“இப்போ எதுக்கு என் பொண்டாட்டியை அதட்டுறீங்க?” உடனே சண்டைக்கு வந்தான் சண்டைக்காரன்.

டேய் டேய் உன்னோட முடியலைடா!

இருவருக்குள்ளும் ஏதோ ரகசியம்  என்று புரிந்து கொண்ட சம்யுக்தா, கணவனை தான் சந்தேகமாக பார்த்தாள்.

குருமூர்த்தி மருமகனை தனியே இழுத்து கொண்டு வந்தவர், “என் பொண்ணுகிட்ட அதை பத்தி சொல்லிடாத” என்றார்.

சர்வாச்சார்யா அவரை கைகளை கட்டி கொண்டு பார்க்க, “ரொம்ப வருத்தப்படுவா. அவளை சமாதான படுத்தவும் எனக்கு வராது. என் பொண்ணே சமாளிச்சு வருவா. எனக்கு அது தாங்காது” என்று நீண்ட விளக்கம் கொடுத்தார் மனிதர்.

“ம்ம்ஹ்ம், யோசிக்கிறேன்” என்று கெத்தாக சொன்ன சர்வாச்சார்யா, உள்ளுக்குள் புன்னகைத்து கொண்டான்.

ஆட்கள் விடைபெற்று கொண்டிருக்க, சர்வாச்சார்யா மாமனாருடன் நின்று எல்லோருக்கும் கைகுவித்தான்.

குணா, மணி ஓய்ந்து போய் அமர, சம்யுக்தா அவர்களுக்கு சுட, சுட உணவை கொண்டு வந்து கொடுத்தாள்.

“ஏன் பானுமா. உடனே ஊட்டிக்கு போயிட்டாங்க?” என்று குணாவிடம் கேட்க,

“அந்த சொத்து பிரச்சனைக்காக தான்” என்றார் மாசிலாமணி.

“தேவையில்லாத வேலை அம்மா பார்க்கிறது, விட்டுடுங்கனு சொன்னா கேட்க மாட்டேங்கிறாங்க” குணா சலித்து கொண்டான்.

“சும்மா இருடா, உனக்கென்ன தெரியும்? மகனுக்கு சொத்து இல்லைன்னு உன் அம்மா எத்தனை நாள் வேதனைப்பட்டிருக்கா தெரியுமா? உன் அப்பா பங்கா உனக்கு உரிமையுள்ள சொத்து வருது, ஏன் விடணும்” என்றார் கற்பகம் பாட்டி.

“சொத்து பத்தில்லாம வாழ முடியாதா என்ன?” குணா கேட்க,

“முடியும். ஆனா சந்தோஷமா வாழ முடியாது” என்றான் சர்வாச்சார்யா.

“சார்”

“எனக்கு பாஸ் பணம் தான். அது என்கிட்ட இருக்கிறதால தான் நான் பல ஆயிரம் பேருக்கு பாஸ்! குணம், மணம் எல்லாம் பேச்சுக்கு மட்டும் தான். வாழ்க்கைக்கு உதவாது” என்றான் நாயகன்.

குணா தலையசைக்க, “உன் முதலாளியே தொழில், பணத்துல ரொம்ப விவரம். மத்ததுல தான் கொஞ்சம்” என்று இழுக்க,

“சம்யுக்தா. நேரம் ஆச்சு பாரு. தூங்க போங்க” என்றார் குருமூர்த்தி.

“எனக்கு காபி வேணும்” என்றான் நல்வன்.

“இப்போ காபி குடிச்சா எப்படிடா தூங்குவ? கிளம்பு போ” குருமூர்த்தி விரட்ட,

தூங்கணுமா? யோவ் இன்னைக்கு என்ன நாள்? சர்வாச்சார்யா கடுப்பாகி போனவன்,

“பேரன், பேத்தி எல்லாம் வேணாமா?” என்று குருமூர்த்தியிடம் கேட்டு வைத்தான்.

மனிதர் திகைத்து போனவர், சங்கடம் கொண்டு, அங்கிருந்தவர்கள் முகம் பார்க்க முடியாமல், “நீ, நீங்க அது, என், பாருங்க” என்று குத்து மதிப்பாக கற்பகம் பாட்டி பக்கம் பார்த்து சொன்னவர், குடுகுடுவென ஓடிவிட்டார்.

“ஹாஹா” என்று குணா சிரிக்க, மணியும் அடக்க முடியாமல் சிரித்துவிட்டார்.

சம்யுக்தா கணவன் அந்த கேள்வி கேட்ட நேரமே, கிச்சனுக்கு பறந்து விட்டாள்.

“கண்ணு. நீ போ. தம்பி ரூமுக்கு போக சொன்னா போகாம  ஹால்ல தான் இருக்கார்” என்று கற்பகம் பாட்டி வர,

சம்யுக்தா மூச்சிழுத்துவிட்டு கொண்டு ஹாலுக்கு வந்தாள்.

போன் பேசி கொண்டிருந்தவன், மனைவியை முறைத்து அவளின் கரம் பற்றி கொண்டான்.

நல்லவேளை ஒருவரும் இல்லை. வீடே அமைதியாக இருந்தது.

சம்யுக்தா அறை மாடியில் இருக்க, போனை வைத்தவன், பட்டென மனைவியை கைகளில் அள்ளி கொண்டான்.

“ஹேய்” என்று பெண் அதிர்ந்து போனவள்,

“கேமரா இருக்கு” என்று பதற, சர்வாச்சார்யா போனை தூக்கி காட்டினான். பத்து நிமிடம் அணைத்து வைக்க பட்டிருந்தது.

சம்யுக்தா கொஞ்சம் சுதந்திரமாக கணவனின் கழுத்தில் கைகளை மாலையாக கோர்த்து கொண்டாள்.

காதலிக்கும் நாட்களில் ஒரு நினைவு கூட இல்லை.

கணவன், மனைவி ஆகியும் அப்படியே இருக்க முடியுமா என்ன?

அடக்கி வைக்கும் ஆசைகளுக்கு தான் வேகம் அதிகம்!

இவர்களும் அடக்கி வைக்கப்பட்டிருந்த காதல் தானே! வேகம் இருக்காதா என்ன?

சம்யுக்தா நெற்றியில் நெற்றி முட்டி, அவளின் மூக்கை கடித்து, கன்னத்தில் முத்தம் வைத்து என்று அறைக்குள் செல்லும் நொடிகள் கூட அவர்களுக்கு முக்கியமானதாக தான் இருந்தது.

பெண்ணின் அறைக்குள் நுழைந்த நிமிடம் கண்களை சுழல விட்டான்.

“என்ன?” என்று சம்யுக்தா கேட்க,

“அந்த போஸ்டர் இங்க இல்லை” என்று உதடு பிதுக்கினான்.

சம்யுக்தா சாம்ராஜ்யம்!

கட்டிலில் பெண்ணுடன் விழுந்தவன், அவளின் மேல் வெய்ட் கொடுக்காமல், கைகளை இரு பக்கமும் ஊன்றி கொண்டவன், “உன் முகம் இப்படி பார்க்கும் போது எப்படி இருக்கும்ன்னு நிறைய நாள் யோசிச்சிருக்கேன்” என்றான்.

சம்யுக்தா அவன் கைகளில் அடி போட்டவள், “நல்லதா ஒன்னு கூட யோசிக்கலை” என்றாள்.

“ஹேய். நிமிர்ந்து படுக்கும் போது, திரும்பி படுக்கும் போது, குப்புற படுக்கும் போதெல்லாம் வேற, வேற ரசனை. உனக்கு புரியாது” என்றான்.

“அப்படியென்ன  ரசனை, முகம் ஒன்னு தானே?”

“ஆனா மத்தது எல்லாம் வேற தானே”

“மத்தது?”

சர்வாச்சார்யா கண்கள் அவளை மேலிருந்து கீழ் பார்க்க, பெண்ணின் கண்கள் விரிந்து போனது.

அடப்பாவி!

இந்த உன்னோட அழகு செம! என்றான் கேடிப்பையன் கண்ணடித்து.

சம்யுக்தா அவனை தள்ளிவிட்டு திரும்பி படுத்து கொள்ள, “ஹப்பா. என்ன ஸ்ட்ரக்ச்சர்டி உனக்கு?” என்று அவளின் வளைவுகளில், மேடுகளில் கையை இழுத்தான்.

சம்யுக்தா சிவந்து விட்டவள் அவன் கையை தள்ள, “குட்டி இடுப்பு ரொம்ப எடுப்பா தெரியுதுடி” என்று அவளின் காதில் கிசுகிசுத்தான்.

சம்யுக்தா உடல் மொத்தமும் சிலிர்த்து போக, சட்டென திரும்பி அவன் கண்களை மூடினாள் பெண்.

நாயகன் அமைதியாகிவிட்டது போல் தான் தெரிந்தது. சட்டென அவளின் இடை குளிர்ச்சியை உணர, வெளிச்சம் அவளின் இடையை குறுகுறுக்க வைத்தது.

இடைச்சேலையை ஒதுக்கி இருந்தான் கள்ளன்!

“ஹேய்” என்று சம்யுக்தா இழுக்க முயல,

சர்வாச்சார்யா அவளின் கரத்தை தனக்குள் அடக்கி கொண்டவன், “இடுப்பு வழுக்கும் போலடி” என்று விரலை வைத்து லேசாக, மிக லேசாக கோடிழுத்தான்.

புள்ளி, புள்ளியாய் இடுப்பு மொத்தமும் சிலிர்த்து போக, உதட்டால் ஊதினான்.

“ஸ்ஸ்” சம்யுக்தா முனகி அவனை தள்ளி விட்டு திரும்ப, “இடுப்பை தூக்கி காட்டுறது எது தெரியுமாடி?” என்று அவளின் காதில் கேட்டான்.

சம்யுக்தா எது என்று யோசிக்க, பட்டென பின்னால் அடி ஒன்று விழுந்தது.

பிராடு! பெண் திகைத்து அவன் நெஞ்சில் கை வைத்து தள்ள, பெண்ணை மொத்தமாக திருப்பி போட்டு அவளின் மேல் ஏறி படுத்துவிட்டான் கெட்டபையன்.

“ஏங்க, ஹேய். என், என்ன இப்படி?” சம்யுக்தா தவித்து போக,

“வாவ்” என்றான் அவன் வெகுவான ரசனையுடன்.

“உன் மேடு பள்ளம் என்னை தூக்கி போடுதுடி” என்று ஹஸ்கி குரல் வேறு.

அயோ. இவனை! பெண்ணுக்கு சிவந்து போக இடமே இல்லை.

“மூ, மூச்சு விட முடியலை” என்று சம்யுக்தா திமிறி அவனை கீழிறக்கிய பின்னே நன்றாக மூச்சை விட முடிந்தது.

ராஸ்கல் பேச்சிலே உயிரை குடித்துவிடுவான் போல!

சர்வாச்சார்யா குறும்பான புன்னகையுடன் மூச்சு வாங்கும் மனைவியை பார்த்தவன், “லூஸ் பண்ணி விடலாம் இல்லை. நல்லா மூச்சு விடலாம்” என்றான்.

“என், என்ன லூஸ்”

“இதைத்தான்” என்று சட்டென அவளின் முந்தானையில் கை வைத்தான்.

“இல்,  இல்லை. பேசணும்” பெண் வேகமாக சொல்ல,

“பேசு. நான் உன்கிட்ட தானே இருக்கேன். இதோ இங்க இருப்பேன், அப்புறம் இங்க போவேன், ரொம்ப நேரம் கழிச்சு இங்க போவேன்” என்று கை வைத்து அவன் காட்டிய இடங்கள் அத்தனையும் வில்லங்கம் தான்.

சம்யுக்தா ஏதோ சொல்ல வர, “ராட்சசி. நாம இங்க வைச்சு பேசி ஒன்னும் கிழிக்க போறதில்லை. என்னை வெறியேத்தாத. அப்புறம் உனக்கு தான் கஷ்டம் பார்த்துக்கோ” என்று மிரட்டிவிட்டான் பெண்ணை.

“கையில் ஐஸ்கிரீம் வைச்சுக்கிட்டு எந்த மடையன்டி பேசுவான்? ஒழுங்கா என்னை என் போக்குல சாப்பிட விடு” என்றவனின் மார்பிலே ஒன்று போட்டாள் பெண்.

“ரொம்ப கெட்ட பையனா இருக்க நீ?” என்று பெண் சொல்ல,

“ரொம்ப ரொம்ப கெட்ட பையன்டி என் பட்டர்” என்றவன் சட்டையை கழட்டி வீசிவிட்டு பெண்ணின் மேல் படர்ந்துவிட்டான்.

சம்யுக்தா உதடுகள் மட்டுமில்லை அவளே மொத்தமாக அவன் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டாள்..

அதுவும் நல்லவனுக்கு ம்ஹூம் இல்லை கெட்ட பையனுக்கு போதவில்லை.

“என்னமோ குறையுதுடி. இப்போ கண்டுபிடிச்சிடலாம்” என்று சொல்லி, சொல்லியே பெண்ணை இரவு முழுதும் தூங்கவிடவில்லை.