வஞ்சிக்கொடியும்! வத்தலகுண்டின் ரகசியமும்!!
திருட்டு பூனை கருவாட்டு குழம்பை திருட வருவதைப் போல் பதுங்கி பதுங்கி சுற்றும் முற்றும் பார்த்து வீராவின் அறைக்கு வந்தான் சித்து. எல்லாம் எதற்கு அவன் காதல் ஏக்கத்தை கால் வாசியாவது தீர்த்துக்கொள்ள தான்.
'மெல்ல திறந்தது கதவு' என கூறும்படி அவ்வளவு மெல்லமாய் அவள் அறை கதவை தள்ளி வைத்து உள்ளே...
சிலுசிலுவென இயற்கை காற்று, கத்திரி வெயில் வெளியே மண்டையை பிளந்தாலும் அது தெரியாத அளவுக்கு குளிர்ச்சி அந்த இடத்தை சூழ்ந்திருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நல்ல உயரமான தென்னை மரங்கள், நடுநடுவே மா, கொய்யா மரங்கள் என எங்கு பார்த்தாலும் கண்ணுக்கு விருந்தாகவே இருந்தது அக்காட்சி. அதை எல்லாம் வாயை பேவென...
கிழக்கே உதிக்கும் சூரியன் தன் செங்கதிர்களால் இந்த பூமித்தாயை நிரப்பி தன் கடமையை செவ்வனே செய்து நிற்க, வத்தலகுண்டின் ஊர் மக்கள் காலை எழுந்து எப்போதும் போல் பரபரப்பாக தங்கள் அன்றாட பணிகளை செவ்வனே செய்ய துவங்கினர்.
அந்த ஊரின் சலசலப்புக்கு சற்றும் சம்பந்தம் இன்றி சித்தார்த்தின் வீடு மட்டும் அமைதியாய் இருந்தது....
கண்ணாத்தா பேய் தன்னுடைய வாழ்வில் நடந்த மீதி நிகழ்வுகளை, தான் சொல்லாமல் விட்டதை மீண்டும் சொல்ல தொடங்கியது.
அரவிந்தின் தாத்தா கண்ணாத்தாவை திருமணம் செய்து கொண்டபோது, கண்ணாத்தாவின் வீட்டில் அவள் அண்ணன் அந்த திருமணத்துக்கு ஒத்துக் கொள்ளவில்லை. எனவே கண்ணாத்தாவை இழுத்து சென்று தான் கல்யாணம் செய்திருந்தார் அந்த மனிதர். அதனால் தன்...
சித்தார்த் தன்னுடைய ஒருபுறம் வீரா, மறுபுறம் கதிர் என இருவரையும் அணைவாய், அதேநேரம் திடமாய் பிடித்திருந்தான். அவனுடைய செய்கையே சொல்லாமல் சொன்னது, அவர்களை எந்தவித ஆபத்து வந்தாலும் என்னைதான்டியே வரவேண்டுமென.
அதுவும் அந்த பாட்டி பேய் வீராவின் ரத்தத்தை கேட்டதில், விட்டால் கேப்டன் ஸ்டைலில் ஓங்கி அடிச்சிடுவேன்டா என்பதை போன்ற ஒரு போசில்...
கண் முன்னால் நிற்கும் உருவத்தை திறந்த வாய் மூடாமல் பார்த்த சித்துவிறகு, மூளையில் டொய்ங்கென ஒரு அலார மணி அடித்தது.
அவன் மூளையின் ஓரத்தில் இருந்த ஒரு சிறிய நினைவை அவன் தூசு தட்ட, அப்போதுதான் அந்த புகைப்படத்தை அவர்கள் இருந்த பெரிய வீட்டில் எங்கோ ஓர் சந்தில் போட்டோவோடு ஒரு போட்டோவாக...
இடி மின்னல் சூறாவளி என மொத்தமாய் தாக்கியதில் பிஞ்சு பீசுவாங்கி போன காய்ந்த ரொட்டிப்போல் மாதவனும் ஷங்கரும் நட்ட நடுவீட்டில் தலை மீது கை வைத்து வாழ்க்கையை வெறுத்த நிலையில் அமர்ந்திருந்தனர்.
'சோதனை வேதனை; இன்னும் ரெண்டு நாளு நாம உயிரோட இருந்தோம்னா அது மிகப்பெரிய சாதனை' அவர்கள் மைண்ட் வாய்சோ ரைமிங்காக...
கண்ணாத்தா கிழவி தன்மேல் சுமத்தப்பட்ட கடமையை அப்பாவி ஜீவன்களை பாடாய்படுத்தி, குட்டிக்கரணம் அடித்து வெற்றிகரமாய் நிறைவேற்றிவிட்டு, காற்றில் கரைந்து போவதை அனைவரும் ஆவென பார்த்திருந்தனர்.
"ஹப்பாடா ஒருவழியா பிரச்சினையும் முடிஞ்சது. நம்மல ராப்பகலா போட்டு படுத்தி எடுத்த அந்த கெழவியும் ஒழிஞ்சது, இப்பதான் நிம்மதியா இருக்கு"
வாய்விட்டே மாதவன் சொல்லி நிம்மதி பெருமூச்சுவிட்டான்....
காரிருள் சூழ்ந்த அமாவாசை இரவு நேரம். நிலா இருந்தாலே பலர் இரவில் அஞ்சி நடுங்குவர். அப்படி இருக்க அந்த அமாவாசை இருட்டு மனிதர்களை பயம் கொள்ள செய்வதில் ஆச்சரியம் இல்லை. ஒரு போன் கால் வர வீட்டினுள் சிக்னல் கிடைக்காத காரணத்தால் அதை தூக்கிக் கொண்டு பேசுவதற்கு அந்த இருட்டில் வந்து நின்றார்...
அரவிந்தின் வீடு என்றும் இல்லாமல் அன்று மிக அமைதியாக இருக்க 'நம்ம வீடு இப்படி இவ்ளோ அமைதியா இருக்காதே. ஒருவேளை வீடு எதுவும் மாறி வந்துட்டோமா?' என எண்ணிக் கொண்டே வீட்டின் கதவை மெல்ல திறந்து உள்ளே பார்த்தாள் வீரசுந்தரி. அங்கே சோபாவின் ஒரு மூலையில் சித்து முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு...
நிலவு மகள் தன் பொன் ஒளியை பரப்பி அந்த இருள்காரிகையை சற்று தள்ளி நிற்க செய்திருக்க, சில்லென்ற இளங்காற்று மெல்லமாய் சுழன்று கொண்டிருந்தது அந்த இரவு வேளையிலே.
அதற்கு மேலும் இனிமை சேர்க்கும் வண்ணம் லேசாக தூரலும் வந்து சேர்ந்தது. ஆனால் அதை துளியும் ரசிக்கும் எண்ணம் இல்லாது மூன்று உருவங்கள் அந்த...
அங்கே நின்றிருந்த யார் முகத்திலும் சற்றும் தெளிவில்லை. அதுபோக முன்னால் சென்றால் கத்தி வந்து பின்னால் குத்துமே, அதனால் எப்படி உள்ளே செல்வது, இன்னும் இங்கே என்ன புதுவித டுவிஸ்ட் இருக்கிறது என பயந்து போய் நின்றிருந்தனர் நம் சித்து கேங்.
"டேய் மவனே அந்த மேப்ல எதாவது குளூ போட்டுக்கான்னு பாருடா....
மாலை நேர காற்று இதமாக வீசிக் கொண்டிருக்க, அதை எதையும் உணராமல் அந்த ரயில் நிலையத்தில் இருந்த மக்கள் பரபரவென நகர்ந்து சென்றுக் கொண்டிருந்தனர்.
கல்லூரி முடிந்து செல்லும் மாணவர்கள், அலுவலகம் முடிந்து செல்லும் அலுவலர்கள் என பலர் அவர்களின் இல்லங்களுக்கு செல்ல ஒருவரை ஒருவர் முட்டி மோதி ரயிலில் ஏறிக் கொண்டிருந்தனர்.
...
"நாட்டாம தீர்ப்பை மாத்து....!" என்று ஒரு குரல் கேட்க பழைய துருப்பிடித்த பீரோ கதவை திறந்தது போல் தன் தலையை மெதுவாக திருப்பினார் கார்மேகம்.
"டேய் இங்க என்ன பஞ்சாயத்தா நடக்குது. ஏன்டா அந்த மனுஷன கடுப்பேத்துற" கடுமையாக முறைத்துக் கொண்டிருந்த கார்மேகத்தின் மனைவி அலமேலு பேசிய தன் மகனை கடிந்தார்.
"பின்ன...
காலை இளந்தென்றல் காற்று மேனியை உரசி செல்ல, அந்த காலை வேளையில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான் அவன்.
"அரவிந்தா" என்ற அழைப்பு மென்மையாக எங்கோ தூரத்தில் கேட்பது போல் அவன் காதுகளில் விழ, லேசாக தூக்கம் கலைந்தது.
தொடர்ந்து அதே பெயர் ஏலமிடுவதை போல் காதில் வந்து விழ அடித்து பிடித்து...
ஒரு துண்டு பேப்பர். அந்த துண்டு பேப்பரில் வட்டம் சதுரம் என பல வடிவங்கள் இருக்க, அதை மேலிருந்நு கீழாக தலைகீழாக இப்படி அப்படி என எப்படி வைத்து பார்த்தும் அது என்னவென புரியாது முழித்துக் கொண்டிருந்தார்கள் கண்ணாத்தாவும் அவள் கணவனும்.
"என்னங்க இது என்னான்னுட்டு உங்களுக்கு வெளங்குதா?"
கண்ணாத்தா மெல்ல அவள்...
அரவிந்தின் கேவலமான சிரிப்பில் அவரை முறைத்து வைத்து 'தூதூ...' என மெதுவாக துப்பியே விட்டான் சித்தார்த். 'ச்சே என்னா இது அசிங்கமா போச்சு!' என நொந்து போய் நின்றார் அரவிந்த்.
"என்ன தம்பி என்னாச்சு?" சித்து துப்பியதை பார்த்து அலமேலு கேட்க
"அது ஒன்னும் இல்லைங்க. பல்லு இடுக்குல ஒரு துரும்பு சிக்கி...
அன்று காலையிலே வானம் தூரல் வீசி மக்களை குளிர்வித்துக் கொண்டிருக்க அதை ரசித்தபடி தன் வீட்டின் வராண்டாவில் அமர்ந்து அந்த குளிரை போக்கும் விதமாக தன் கையில் இருந்த காபியை உறிஞ்சி கொண்டிருந்தான் சித்து.
"காலைல இப்படி மழைச்சாரல்ல உக்காந்து காபி குடிக்கிறதும் ஒருமாதிரி நல்லா சுகமா தான்யா இருக்கு" என்றபடி அந்த...
"ஐயோ பாவம்! யாரு பெத்த புள்ளையோ. இப்படி என் வீட்ல வந்து மயங்கிருச்சே. டேய் மகனே மூச்சு பேச்சு இருக்கான்னு கொஞ்சம் பாருடா" அரவிந்த் சித்துவிடம் புலம்பி தள்ள
"கொஞ்சம் உன் வாய மூடிட்டு நில்லு ப்பா. உட்டா நீயே கொன்னுருவ போல. மூச்சுலாம் இருக்கு எதோ அதிர்ச்சியில மயங்கின மாதிரி தான்...
"அதான் சாப்டு முடிச்சிட்டியே. இந்த நாலு நாள் என்ன செஞ்ச. சொல்லு சொல்லு"
சித்து கேட்டதிற்கு அரவிந்தும் தன் அரும் பெரும் சாதனைகளை எடுத்துரைக்க தலையிலே அடித்துக் கொண்டான் சித்து. திடீரென எதோ தோன்ற
"அப்போ காலைல என் ஆபிஸ்ல கலாட்டா செஞ்சது நீதானா?" பல்லை கடித்து கொண்டு சித்து கேட்க "ஹீஹீஹீ..."...