Advertisement

     திருட்டு பூனை கருவாட்டு குழம்பை திருட வருவதைப் போல் பதுங்கி பதுங்கி சுற்றும் முற்றும் பார்த்து வீராவின் அறைக்கு வந்தான் சித்து. எல்லாம் எதற்கு அவன் காதல் ஏக்கத்தை கால் வாசியாவது தீர்த்துக்கொள்ள தான்.
     ‘மெல்ல திறந்தது கதவு’ என கூறும்படி அவ்வளவு மெல்லமாய் அவள் அறை கதவை தள்ளி வைத்து உள்ளே எட்டிப்பார்த்தான் பையன். அவன் நல்ல நேரமோ என்னவோ அவனின் காதலி முதுகை காட்டிக் கொண்டு நின்று கட்டிலில் துணி மடித்துக் கொண்டிருந்தாள்.
     ‘ஆஹா என்னங்கடா இது உலக அதிசயமா இருக்கு என் வீரா செல்லம் ரூம்ல தனியா உக்காந்திருக்கா. சித்து அடிச்சதுடா லக்கி சான்ஸ் டிஸ்டர்ப் பண்ணுற நைனாவும் எதோ மைனாவ பாக்க கெளம்பி போயிருச்சு. மிஸ் பண்ணீடாதடா கமான் உள்ள போலாம்’
     இப்படி ஒரு எண்ணம் மனதிற்குள் வந்த மறுநிமிடமே ‘இல்லையே இப்படிலாம் டக்குனு நமக்கு நல்லது நடக்க வாய்ப்பு இல்லையே. எதுக்கும் யாராவது ரூம்ல இருக்காங்கலான்னு பாக்கலாம்’ என உஷாரானான்.
     என்னதான் சித்து எவ்வளவு உஷாராக அடியெடுத்து வைத்தாலும் ‘சைனா சிக்கன் வாய்க்கு வராமல் சைடு கேப்பில் புடுங்கப்படும்” என்பது அவன் விதியாய் இருந்தால் யாரால் மாற்றமுடியும்.
     சித்து அப்படியே தன் லேசர் கண்களை அந்த அறை முழுக்க ஸ்கேன் செய்து பார்த்து, அங்கு வீராவை‌ தவிர யாரும் இல்லை என்பதை நன்கு உறுதி செய்தபின்னரே நிம்மதி பெருமூச்சு விட்டான்.
     ‘ஹப்பாடி வீராவ தவிர யாரும் இல்லை கண்பார்ம். உள்ள போறோம் அசத்தறோம்’
     புல் லவ் பாமுக்கு வந்த சித்து கோழியை சாக்கு பையில் போட்டு அமுக்க செல்வதைப்போல் மெல்ல மெல்ல சென்று வீராவை அவளின் பின்னிருந்து ஒரு கையால் அணைத்து மற்றொரு கையால் அவளின் வாயை அடைத்து விட்டான் ஒரு சேப்டிக்கு.
     “வீராம்மா கத்திப்புடாதடி நான்தான் சித்து”
     காதில் ஹஸ்கி வாய்சில் சித்து கூற “ம்ம்ம் ம்ம்” என்ற குரல் வீராவிடமிருந்து பதிலாக வர “என்ன செல்லம் பேசாம ம்ம் ம்ம்னு சைகை பண்ற” அவள் வாயை அவன்தான் மூடியிருக்கிறான் என்ற பேசிக் புத்திக்கூட இல்லாது அந்த பைத்தியம் கேட்டு வைத்தது.
     “ம்ம்ம் ம்ஹூம் ம்ம்” மீண்டும் வீரா சத்தம் செய்து தலையை இங்கிட்டும் அங்கிட்டும் அசைத்து ‘வேண்டாம்’ என சித்துவிற்கு புரியவைக்க பார்க்க, அவள் என்ன சொல்லவருகிறாள் என மூளை பாதி வெந்ததும் வேகாது இருக்கும் அந்த அரை மெண்டலுக்கு புரியவில்லை.
     வீராவின் முதுகில் தன் மூக்கால் உரசி அவளின் வாசத்தை உள்ளிழுத்த சித்துவிற்கு சரக்கடிக்காமலே போதை உச்சந்தலைக்கு ஏறியது.
     “ம்ம் என்னா லவ்லி ஸ்மெல். வீரா அப்புடியே ஆள அசத்துறடி”
     சித்து இப்போது கண்டபடி உளறும் போது கூட “ம்ஹூம்” என வீரா தலையை அசைக்க
     “என்னடா என்ன ஆச்சு. ஏன் தலைய தலைய ஆட்டுற தலை எதுவும் வலிக்குதா. சூடா நான் காபி போட்டு தரேன் எல்லாம் சரியாப்போயிரும் என்னம்மா.
     வீரா நான் ஒரு ரொம்ப முக்கியமான விஷயத்தை உன்கிட்ட சொல்லத்தான் வந்தேன்‌. அது என்ன விஷயம்னு தெரியுமா?”
     காதல் போதையில் புத்தி பேதலித்தது போல் மேலும் சித்து பேசிக்கொண்டே செல்ல ‘இதுவரை பொறுத்தது போதும் பொங்கி எழு’ என்று நினைத்தாளோ என்னவோ வீரா,
     சித்து அமுக்கி பிடித்திருந்த அவள் இரு கைகளையும்  வெடுக்கென அவன் பிடியிலிருந்து உருவியவள் அவன் அசந்த நேரம் அவன் அணைப்பிலிருந்தும் வெளியே வந்து கும்பூ ஸ்டைலில் லஜக்கென வயிற்றிலே ஓங்கி ஒரு குத்தை வைத்தாள்.
     வீரா விட்ட குத்தின் வேகத்தில் அவன் மூளையில் இருந்த காதல் மயக்கம் எல்லாம் துண்டை காணோம் துணியை காணோம் என ஓடிட, இவனோ “அம்மே” என அலறிக் கொண்டு ஐந்தடி அப்பால் விழுந்தான்.
     ‘ஏன் எப்படி எதற்கு வொய்?’ வீரா தள்ளிவிட்டதில் பல கேள்விகளை கண்ணில் வைத்து பல வர்ணஜாலத்தை அவன் கண்களில் நிகழ்த்தி சித்து வீராவை பார்த்து வைத்ததில், அவன் விழுந்த நேரம் தூங்கி எழுந்து கட்டிலில் அமர்ந்து “மாமா” என குழப்பமாய் அழைத்திருந்த கதிரை கவனிக்கவில்லை.
     காதல் போதையில் இருந்த அந்த தீவெட்டு தலையன் துணி மடித்து கொண்டிருந்த வீராவை மட்டுமே கண்டு வந்திருக்க, அங்கே கட்டிலில் தூங்கி கொண்டிருந்த கதிரை பார்க்காது போனான். வழக்கம் போல் சிறு டெக்னிக்கல் பால்ட் ஆகிவிட வீராவிடம் ஒரு முத்தம்கூட வாங்காமல் இந்த முறையும் சித்து வெற்றிகரமாக தோல்வியை தழுவினான்.
     “ஏன்டி?” ஒரு சட்டி சாம்பார் வடியும் முகத்தை வைத்து சித்து பாவமாய் கேட்டு வைக்க, வீரா கதிரின் புறம் தன் கண்ணை காட்டினாள்.
     அந்த ஹிண்ட் புரியாத அந்த பரதேசியோ “கண்ணு வலியா வீராம்மா?” என்று வேறு கேட்டு வைக்க வீராவின் சரியான முறைப்பை பரிசாய் பெற்றான்‌. ஆனால் இன்னும் அந்த அறையில் கதிரும் இருக்கிறான் என அந்த அரைகிருக்கனுக்கு தெரியாதது ஆச்சர்யமே.
     ‘இங்க என்ன நடக்குது. ஒன்னுமே புரியலையே?’
     கதிர் இன்னும் கரண்ட் அடித்த வவ்வால் போல் கிடந்த சித்துவையும் எதையோ வேண்டாததை மிதித்தது போல் முகத்தை வைத்திருந்த வீராவையும் மாற்றி மாற்றி பார்த்து குழம்பினான்.
     ‘இதுக்கு மேல நமக்கு பொறுமை இல்ல’ என்று நினைத்த கதிர் “அக்கா மாமா” என ஷாக்கில் நின்றிருந்த இருவரையும் கத்தி அழைத்து நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தான்.
     ‘என்னடா இது புதுசா ஒரு ஆள் சத்தம் கேக்குது’ லேட்டாக வந்த ஞானோதயத்தில் சத்தம் வந்த பக்கம் திரும்பி, அங்கே கட்டிலில் கதிரை பார்த்து மிக லேட்டாக அதிர்ந்தான் அரவிந்தின் அருமை புதல்வன்.
     “க… க.. கதிரு நீ எப்படா வந்த?” பிட்ஸ் வந்த காக்கா போல் திக்கி திக்கி சித்து கேட்க
     “நான் எப்ப வெளிய போனேன் வரதுக்கு. நான் காலைல இருந்து அக்காக்கூட ரூம்லதான் மாமா இருக்கேன்‌‌. காலைல மாத்திரை போடவும் கொஞ்ச நேரம் தூங்குனேன். எந்திரிச்சு பாத்தா நீங்க கீழ விழுந்து கிடக்குறீங்க அக்கா என்னவோ பேய பாத்த மாதிரி முழிச்சுட்டு நிக்கிறாங்க. என்னதான் ஆச்சு ரெண்டு பேருக்கும்”
     கதிர் சித்துவின் கேள்விக்கு பதில் தந்து அவன் சந்தேகத்தையும் கேட்டு வைத்தான். அப்போதுதான் சித்துவின் மூளையின் டூயூப்லைட் மெல்ல மெல்ல பிரகாசமானது.
     ‘அப்ப கதிர் இருக்கான்னு தான் என் செல்லம் என்னை தள்ளிவிட்டாளா. அடக்கொடுமையே! என் ஆளுக்கூட ஒரு டைட் ஹக்குக்கே வழியில்லாம இருக்கே அப்ப ஒரு லிப் கிஸ் மேற்படி இது எல்லாம் எப்ப நடக்கிறது ஆண்டவா ஏன்டா என்னை இந்த உலகத்தில படைச்ச படைச்ச படைச்ச’
     சித்துவின் மைண்ட் வாய்ஸ் கதறி கண்ணீர் சிந்தி அவனை காரி துப்பி வைக்க, அதற்குமேல் அவனுக்கு சொல்றதுக்கு ஒன்றும் இல்லை. ‘சரி ரைட்டு நாம இனிமே இங்க இருந்து ஒன்னும் ஆகப் போறது இல்ல கிளம்புவோம்’
     இப்போது சட்டுபுட்டுனு ஒரு முடிவை எடுத்து அவன் வெளியே செல்லும் நேரம், வீரா என்னும் சிலைக்கு உயிர் வந்து “சித்து ஏதோ முக்கியமான விஷயம் பேசனும்னு சொல்லிட்டு இருந்தீங்க. அது என்னன்னு சொல்லீட்டு போங்க” என்றிட்டாள்.
     ‘ஓ.. ஆமால்ல சொல்ல வந்ததை சொல்லாம போறமே’ கடைசி நொடியில் உணர்ந்து அவர்கள் வீட்டு வாசல் வரை புரளி புரண்டு வந்த கதையை ஆசையாய் கூறி அதற்கு வரும் ரியாக்ஷனை தெரிந்துக் கொள்ள வீராவின் முகம் பார்க்க
     “ப்ச் இவ்ளோதானா நான் கூட என்னவோ ஏதோன்னு நினைச்சேன். இது இப்படி பரவும்னு எனக்கு நல்லாவே தெரியும் போய் வேற வேலைவெட்டி இருந்தா பாருங்க”
     ஒரே பாலில் அவனை நாக்அவுட் ஆக்கி மொத்தமாக வைத்து செய்யதாள் அவன் வீரா. ‘இதுவரை வாங்குன மொக்க இன்னைக்கு போதும். நெக்ஸ்ட் டே மீட் பண்ணுவோம்’ என சித்து தலையை கவுத்து அவுட்ஆப் போக்கசில் வெளியேறினான்.
     “அக்கா மாமாக்கு என்ன ஆச்சு? அவரோட முகமே சரியில்லையே, நான் தூங்குரப்ப அவரோட சண்டை எதுவும் போட்டியா அக்கா” கதிர் அவன் மாமனுக்காய் கேட்க
     “ஆமா அப்படியே போட்டுட்டாலும் ஏன்டா நீ வேற. உன் மாமா எதோ புத்தி கொட்டுப்போய் சுத்துறாரு. அவரை எல்லாம் கண்டுக்காம நீ படுத்து இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு. உன் மாமா வந்து இன்னைக்கு சீக்கிரமே உன்னை எழுப்பிவிட்டுட்டு போய்ட்டாரு. பொழப்பில்லைனா இப்படிதான் எதாவது கிருக்குதனம் பண்ணத்தோணும்”
     வீரா இன்னும் கொஞ்சம் சித்துவை திட்டி டேமேஜ் செய்ய, அறை வாயிலுக்கு சென்றிருந்த சித்துவிற்கு ஒருவரி மாறாது காதுகளில் எல்லாம் அப்படியே விழுந்து இன்னும் மனது பஞ்சர் ஆகியது. அந்த காயத்தை ஆற்ற வயிற்றுக்குள் எதாவதை போட்டு வைப்போம் என சோகமாக சோற்றை திங்க கிட்சனுக்குள் நுழைந்துவிட்டான்.
     அவன் சென்ற பொசிஷனை பார்த்து சிரித்து விட்டாள் வீரா. அப்படி சிரிக்கும் நேரமே அங்கிருந்த சூழலில் எதுவோ ஒன்று மிஸ் ஆவது போல் வீரா உணர, அவள் மனது அது அரவிந்த் என கணநேரத்தில் நினைவுபடுத்தியது.
     “அட ஆமா அங்கிளை காலைல இருந்து காணோம். எங்க போனாரு?”
     சித்து இங்கு வருவது தெரிந்திருந்தால் சித்துக்கு முன்னே அரவிந்த் அங்கு தன் அட்டணன்ஸை போட்டிருப்பாரே. அப்படி இருக்கும் போது எங்கு போயிருப்பார் என இப்போது நினைத்த வீரா சரி அவரின் அறைக்கு சென்று பார்த்து வரலாம் என கிளம்பினாள்.
     அரவிந்தின் அறை கதவு பெப்பெரப்பா என நன்றாக திறந்தே இருக்க ‘சவுரியமா போச்சு’ என தன் ரைட் லெக் எடுத்து வைத்து உள்ளே வந்தாள் வீரா. இதிலும் மாமனாரும் மருமகளும் நல்ல ஒற்றுமையை கொண்டிருப்பர் போல்‌.
     இதுவரை அரவிந்தின் பரம்பரையை சேர்ந்தவர்கள் வந்த அறை அதுவும் அவர் தாய் தந்தை தாத்தா பாட்டி என ஒரு சிலரே பயன்படுத்திய அறை. வெளி ஆட்கள் என யாரும் அந்த அறைக்குள் இதுவரை காலடி எடுத்து வைத்தது இல்லை, உள்ளே வந்து உயிரோடு சென்றதும் இல்லை. இல்லை வெளியே சென்றால் உயிரை தவிர வேறெதுவும் மிச்சம் இருந்ததில்லை.
     அப்படிப்பட்ட அறைக்குள் நம் வீரா காலடி எடுத்து வைத்த நிமிடம் எப்போதும் உள்ளே வரும் நபர்களுக்கு பேய் வைபை தரும் மரபொம்மைக்கே ஒரு ஸ்ட்ராங்கான வைப் வந்து பலமாக தாக்கியது.
     அதுவரை காலாட்டியபடி கபோர்டின் விட்டத்தை வெறித்து பார்த்து படுத்திருந்த பொம்மை வெடுக்கென எழுந்து ஆக்டிவ் ஆகி யார் வருவது என ஆர்வமாய் பார்க்க ஆரம்பித்தது. அந்த வைபை வைத்து வந்தது யாரென ஓரளவு யூகித்தாலும் அது சரியாய் இருக்க வேண்டுமே என மரபொம்மையின் மனம் கடவுளிடம் சட்டென ஒரு வேண்டுதலை போட்டது.
     இங்கு உள்ளே நுழைந்த வீராவோ அந்த அறையை சுற்றி பார்க்க, நல்ல விசாலமான அறைதான். “ம்ம் பரவாயில்லை அங்கிள் ரூம் பர்ஸ்ட் கிளாஸ்தான். ம்ம் ஆனா இந்த அங்கிள் எங்க போனாரு… அங்கிள் அங்கிள்…”
     அரவிந்தை கூப்பிட்டு பார்க்க ஒரு பதிலும் இல்லை‌‌. மனிதரின் அடையாளம் அந்த அறையில் ஒரு பர்சண்ட் கூட இல்லை என்று உணர்ந்து “சரி வெளியே எங்கையாவது இருப்பார் போய் பார்ப்போம்” என வெளியேற திரும்பிவிட்டாள்.
     “ஐயையோ என் செல்லாக்குட்டி போறாளே! இப்ப என்ன பண்றது. ஐயோ எதாவது பண்ணனுமே. எப்படி என்ன பாக்க வைக்கிறது”
     சில நிமிடங்களில் படபடப்பான பொம்மை எப்படியாவது வீரசுந்தரியை கவர் செய்ய “ஐயோ பாப்பா இங்க வாமா‌. ஐயோ என் செல்லாக்குட்டி போகாத போகாத என்னை பாரு இங்க பாரு” என கதறோ கதறென கதறி தீர்க்க ம்ஹும் வீராவிற்கு எதுவும் கேட்கவில்லை.
     “போச்சே போச்சே! எல்லாம் போச்சே” மரபொம்மை உயிர் போவதைப் போல் கத்திவிட்டு டங்கு டங்குனென அந்த கபோர்டில் இடித்துக் கொள்ள வீரசுந்தரி வாசல் வரை சென்றுவிட்டாள்.
     மரபொம்மை எதற்காக வீராவை பார்த்து இவ்வளவு மகிழ்ந்தது? எதற்கு அவளை தன்னை பார்க்க வைக்க இவ்வளவு போராடுகிறது? அதன் மைண்ட் வாய்ஸ் புரிந்து வீரா மரபொம்மையை காண்பாளா பார்ப்போம்.
-ரகசியம் தொடரும்

Advertisement