Wednesday, November 11, 2026

    நிலவும் நுரையும்

    பக்கத்து அறையில் உறக்கம் தொலைத்திருந்தான் மகிழ்நன். மனைவி இப்போது வருவாள் அப்போது வருவாள் என எதிர்பார்த்து காத்திருந்தவனை அதிகம் யோசிக்கவிடவில்லை உமையாள். அவனுடன் விளையாடுவதில் ஆர்வம் காட்டினாள். “அம்மா வர்றதுக்குள்ள தூங்கு செல்லம்.” என சொல்லிப் பார்த்தான். அவளுக்கு என்ன புரியப்போகிறது? எப்போதும் தாயின் அரவணைப்பில் உறங்குபவள் இன்றும் அவள் வரவிற்கு காத்திருந்தாள். உமையாளுக்கு என்னவோ...
    “சமையல் முடிஞ்சிருச்சுல? நான் எக் பாயில் பண்ணிக்குறேன்.” என்று அவள் பாட்டிற்கு ஒரு அடுப்பை பிடித்துக்கொள்ள, உடனே வெளியேறிவிட்டாள் சமுத்திரா. முட்டையின் வாசம் அவளுக்கு சுத்தமாய் ஆகாது. அவளுக்கு மட்டுமல்ல, அவ்வீட்டில் யாருக்கும் ஆகாது. குடும்பமே சைவம், நன்மதி மட்டுமே முட்டை எடுத்துக்கொள்வாள்.  “என்ன முட்டை அவிக்குறாளா? இவளை என்னனு சொல்றது? சொன்னாலும் கேக்குறளா? அவ...
    பிடித்த உணவுகள் வழமையில் இடம்பெறுவது எதர்ச்சையாக வந்ததில்லை, கவனம் எடுத்து தனக்காக மனைவி செய்திருக்கிறாள். அதுவும் பத்மாவின் உணவு கோரிக்கைளை கருத்தில் கொண்டு மற்றவர்களின் பிடித்ததையும் கணக்கில் எடுத்து அவர்கள் விடுபடாமல் இருப்பது போல் சமாளித்து வந்திருக்கிறாள். தலை சுற்றியது. உலுக்கிக்கொண்டான். சண்டை முடிவது போல் தெரியவில்லை, குரல் உயர்த்திவிட்டான். “எனக்கு புடிச்சதை சாப்புடுற நிலைமைலயா...
    யோசனையுடன் வரவேற்ற கலைவாணி மகளை கூப்பிட, என்னவோ என்று வந்த சமுத்திராவும் அங்கு நன்மதியை சுத்தமாய் எதிர்பார்க்கவிலை. அவளைத் தொடர்ந்து ஓடி வந்த உமையாள் நன்மதியை பார்த்து அறிமுகச் சிரிப்பு சிரித்தாள்.  “சும்மா உன்னை பாத்துட்டு போலாம்னு வந்தேன் சமு.” சங்கடமாய் நன்மதி சொல்ல, புரியாமல் நின்றாள் சமுத்திரா. கலைவாணி மரியாதைக்கு காபி போட்டு கொடுக்க, “உன்கிட்ட...
    *12* அந்த வாரத்தில் தொடர்ந்து வந்த நாட்களும் சமுத்திரா நேரத்திற்கு எழாமல் போக  மகனை பிடித்துவிட்டார் பத்மா. “என்னடா பிரச்சனை சமுவுக்கு? உன் அண்ணிதான் குடும்பத்தோட ஒத்துப்போகாம அவ ஒருபக்கம் இருக்கான்னா ஒழுங்கா இருந்த சமுவும் இப்போ ஒன்னும் சரியில்லை. காலையில நீங்க கிளம்புனதும் சாப்பிட்டு கோவிலுக்குனு அவளும் கிளம்பிடுறா. கூட வரேன்னு சொல்ற என்னையும் ஏதாச்சு...
    *18* “எங்க கிளம்பிட்ட?” காலையே வெளியே செல்வது போல் தயாராகி நின்ற பத்மாவை பார்த்துக் கேட்டார் கந்தவேல். “என்ன கேள்வி இது? நம்ம பேத்தி பெரியவளாகிட்டா போய் பாக்க வேணாமா. செழியனும் மகிழும் ஒன்னும் சொல்லல அதுக்காக மூணாவது மனுஷங்க மாதிரி அவங்க விஷேஷம் வைக்குற அன்னைக்கு போய் நிக்க முடியுமா?” அங்கலாய்ப்பாக அவர் கேட்க, கந்தவேலின்...
    *14* திடுமென தனித்து வந்து நிற்கும் மகளைப் பார்த்து அதிர்ந்துவிட்டார் கலைவாணி. “என்னடி ஆச்சு? தனியாவா வந்த? மாப்பிள்ளை எங்க? ஏன் முகம் ஒருமாதிரி இருக்கு?” அரக்க பரக்க வாசலை எட்டிப்பார்த்து பேத்தியை வாங்கிக்கொண்டார். அத்தனை நேரம் இறுக்கமாக இருந்த உடல் தளர்ந்துவிட்டது. மகளை பாதுகாப்பாக கொடுத்துவிட்டு அங்கேயே ஒரு ஓரமாய் அமர்ந்துவிட்டாள் சமுத்திரா.  “என்னமா ஆச்சு?” அந்நேரம் வீட்டிலிருந்த...
    “உன்னை தேடி உடனே வராம இருந்ததுகூட உன்னை மேல மேல நோகடிக்க வேண்டாம்ங்குறது ஒரு காரணம். இன்னொன்னு நீ சொன்னதெல்லாம் எனக்கு புரிஞ்சுக்கவே நேரம் தேவைப்பட்டுச்சு.” என்று அவன் பேச, அவள் வேறு பேசினாள். “வீட்ல இருக்குறவங்களை விட்டுட்டு எனக்கு மட்டும் தனியா செய்யுணும்னு இல்லை. பொதுவா ரெண்டு முறை எல்லாரோடையும் போறோமா ஒரே ஒரு...
    “சின்ன க்ளாஸ்கு இல்லை டென்த் பசங்களுக்கு அவ க்ளாஸ் எடுக்குறா அக்கா. அதோட நீட் கோச்சிங் அவங்க ஸ்கூல்ல ஸ்டார்ட் பண்ணியிருக்காங்க, அந்த டீம்ல மதியும் ஒருத்தி. அதுக்கான ஒர்க் லோட் இருக்கும்ல.” “அப்போ நீ சீக்கிரம் வந்துட்டு அவளை பஸ்ல வர சொல்லாம்ல. அவ க்ளாஸ் எடுக்குறான்னு நீயும் ஏன்டா அங்க உக்காந்து காயுற?”...
    *10* மாலை கணவன் வரும் நேரம் கூடத்தில் அமர்ந்து மகளுக்கென பிரத்தியேகமாக வாங்கியிருந்த புத்தகங்களைப் பரப்பி வைத்து அதிலிருந்த படங்களை உமையாளுக்கு காட்டி கதை சொல்லிக்கொண்டிருந்தாள் சமுத்திரா. சுவாரசியமாக கேட்டுக்கொண்டிருந்த உமையாளும் ஈடுபாட்டுடன் பதில் சொல்லிக்கொண்டிருக்க, உள்ளே தந்தை நுழையவும் புத்தகத்தோடு அவனிடம் ஓடிச் சென்றாள். புத்தகத்தில் இருந்ததை சுட்டிக்காட்டி சமுத்திரா சொல்லிக்கொடுத்ததை அவனுக்கு சொல்லிக்கொடுத்தாள். “அவனை உக்காரவிடேன்...
    “உங்களுக்கு கல்யாணமாகி அஞ்சு வருஷமாகிடுச்சுடா. இன்னும் அண்ணிக்கு நீ வண்டி கூட ஓட்ட சொல்லித்தரல.” என அண்ணனின் வயிற்றி லேசாக குற்ற, “நீ மட்டும் சமுத்திராவுக்கு சொல்லிக் கொடுத்தியாடா?” என கேட்டபடி தம்பியை தடுத்தான் செழியன்.  “அதான் டிரைவரா நான் இருக்கேனே. அப்புறம் அவ வேற தனியா கத்துக்கணுமா? அண்ணி மாதிரி அவ தினம் வெளில போயிட்டா...
    இரண்டு மூன்று நாட்கள் சென்றதும் வீட்டு ஆண்களின் நாக்குக்கு ருசி தேவைப்பட்டது.  “இன்னொரு சட்னியாச்சு அரைக்கலாம்ல? உப்புமாதான் வச்ச, சரின்னு சாப்பிட்டா அதுக்கு சட்னி கூட தனியா இல்லை.” கந்தவேல் மனைவியிடம் கேட்க, “உப்புமா வேண்டாம் ம்மா, உப்பு கம்மியா இருக்கு.” என்றான் மகிழ்நன். இளையவனுக்கு தோசை ஊற்றுகிறேன் என்று சென்றார் பத்மா. ஏதோ சொல்ல வாய் திறந்த...
    உடை மாற்றி வந்த நன்மதி சமையலறையைப் பார்க்க, பத்மா தோசை ஊற்றிக் கொண்டிருந்தார். “வந்துட்டியா, சமுத்திரா ஊருக்கு போயிருக்கா. ஒருவாரம் நீதான் சமைக்கணும் பாத்துக்கோ.” படபடவென பொரிந்தார்.  கண்களைச் சுருக்கிய நன்மதி எதுவும் சொல்லவில்லை.  “தோசை ஊத்தியிருக்கேன். எல்லாருக்கும் எடுத்து வச்சிடு.” என அடுப்பை அணைத்தவர், “ஹப்பப்பா என்ன வேர்வை. வயசு ஏற ஏற கொஞ்சம் வேர்த்துவிட்டாலே படபடன்னு...
     *17* மனைவி மகளுடன் நேரம் செலவழித்துவிட்டு வீடு வந்தவனை வரவேற்பாக பார்த்தனர் நன்மதி வீட்டினர். அவர்கள் அருகில் இருந்த பைகளே தீபாவளிச் சீர் செய்ய வந்திருக்கின்றனர் என்று காட்டிக்கொடுத்தது. அறிமுகப் புன்னகை சிந்தி வரவேற்றவனிடம், “சமுத்திராவும் உமையாளும் ஊருக்கு போயிருக்காங்கனு அண்ணி சொன்னாங்க. எப்படி இருக்காங்க தம்பி?” என்று விசாரிக்க, ஒருநொடி தயக்கம் வந்துபோனது மகிழ்நனுக்கு. இங்கு...
    *11* “உடம்பு முடியலையா சமு?”  சமுத்திரா பழக்கி வைத்திருந்த பழக்கம் அப்படி கேட்க வைத்தது. உடல் உபாதை என்றால் மட்டுமே சமுத்திரா வேலை செய்ய இயலாது ஓய்வெடுப்பாள் என்பதால் அவள் உடல்நிலையை பற்றி கேட்டுக்கொண்டே பின்தொடர்ந்த பத்மாவிற்கு பதில் சொல்ல விழையாதவள் மகளுக்கு கஞ்சி காய்ச்சும் வேலையில் இறங்க, அவளை பார்த்துக்கொண்டே இன்னொரு அடுப்பில் இட்லி ஊற்ற...
    சாலையில் நிற்கும் அவன் வண்டியை ஆச்சர்யமாக பார்க்க,  “நம்ம வீட்டுக்கு போலாமா தங்கம்? தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா எல்லாரும் பாப்பா எப்போ வருவான்னு பாத்துட்டு இருக்காங்க.” பேச்சு கொடுத்தபடி வண்டியின் முன்னே அவளை அமரவைத்து வண்டியை உயிர்பித்தவன் அதனை உருமவிட, திடுக்கிட்டு அவன் பின் ஏறிக்கொண்டாள் சமுத்திரா. என்னவோ சரியில்லை என்று உள்மனம் கூற,...
    “இன்னும் தூங்கலையா நீ?” என்ற மகிழ்நனை சங்கடமாகப் பார்த்த செழியன், “டிஸ்டர்ப் பண்ணிட்டேனாடா?” “எதுவும் பிராப்லமா செழியா? இந்த நேரம் வந்திருக்க?” அக்கறையாக கேட்ட மகிழ்நன் கூடத்தில் நிலவும் இருளுக்கு தன் கண்களை பழக்கினான். “பேங்க் போயிருந்தேன், இதை வச்சிக்கோ.” பணத்தை மகிழ்நன் கையில் கொடுக்க, குழப்பமாக பார்த்த மகிழ்நன் தெளிந்து அதனை மீண்டும் அண்ணன் கையிலேயே திணிக்கப்பார்த்தான். “உனக்கே...
    *16* மகிழ்நன் புரியாமல் விழிக்க, கலைவாணி பழத்தை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றார். மனைவியை குழப்பமாய் பார்த்து அவளிடம் என்னவோ கேட்கப்போனவனை மகள் இடையிட்டு தடுத்தாள். அவன் முகத்தினில் தட்டி அவன் கன்னங்களை தன் பிஞ்சு விரல்களால் ஏந்திக்கொண்டு அப்பா அப்பா என்று அரற்ற, பெற்றவனுக்கு சகலமும் மகள் ஆனாள். வெளியே கை காட்டி அவள் என்னவோ...
    *4* “இந்த ஆரமும் நெக்லெஸும் செட்டா கிடைக்கும்னு நினைக்கவே இல்லை. இந்த பூ டிசைன் அழகா வந்துருக்கு.” வீட்டிற்கு வந்ததும் வாங்கியதை பிரித்துப் பார்த்து சொல்லிக்கொண்டிருந்தாள் கல்யாணி. கடையில் அம்மாவும் பிள்ளைகளும் தேர்ந்தெடுக்க, இறுதிவரை அவர்கள் தெரிவில் தலையிடவில்லை அவள். செழியன் சார்பாய் ஒரு ஆரமும் அதற்கு தோதாக அமைந்துவிட்ட நெக்லெஸ் மகிழ்நன் கணக்கிலும் வந்தது. இரண்டும்...
    கதவை லேசாக சாற்றிவிட்டு பின்னோடே வந்த பத்மா, “தனியா எப்படி போவ? சாயந்திரம் மகிழ் வந்ததும் சேர்ந்து போங்க.” காதில் வாங்கினாலும் வாங்காதது போல் உள்நுழைந்துகொண்டவள் வேகமாக உடைமாற்றி உமையாளையும் தயார் செய்து அவளுக்கு மாற்றுடை ஒன்றை எடுத்துக்கொண்டு வெளியேறினாள். “இப்போவே போகணும்னு என்ன அவசரம் சமு? அவ அழுவுறா பாரு.” என்று பேத்தியை தூக்க வந்தவரிடம், “வெளில...
    error: Content is protected !!