Wednesday, November 11, 2026

    நிலவும் நுரையும்

    *16* மகிழ்நன் புரியாமல் விழிக்க, கலைவாணி பழத்தை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றார். மனைவியை குழப்பமாய் பார்த்து அவளிடம் என்னவோ கேட்கப்போனவனை மகள் இடையிட்டு தடுத்தாள். அவன் முகத்தினில் தட்டி அவன் கன்னங்களை தன் பிஞ்சு விரல்களால் ஏந்திக்கொண்டு அப்பா அப்பா என்று அரற்ற, பெற்றவனுக்கு சகலமும் மகள் ஆனாள். வெளியே கை காட்டி அவள் என்னவோ...
    “சின்ன க்ளாஸ்கு இல்லை டென்த் பசங்களுக்கு அவ க்ளாஸ் எடுக்குறா அக்கா. அதோட நீட் கோச்சிங் அவங்க ஸ்கூல்ல ஸ்டார்ட் பண்ணியிருக்காங்க, அந்த டீம்ல மதியும் ஒருத்தி. அதுக்கான ஒர்க் லோட் இருக்கும்ல.” “அப்போ நீ சீக்கிரம் வந்துட்டு அவளை பஸ்ல வர சொல்லாம்ல. அவ க்ளாஸ் எடுக்குறான்னு நீயும் ஏன்டா அங்க உக்காந்து காயுற?”...
    *14* திடுமென தனித்து வந்து நிற்கும் மகளைப் பார்த்து அதிர்ந்துவிட்டார் கலைவாணி. “என்னடி ஆச்சு? தனியாவா வந்த? மாப்பிள்ளை எங்க? ஏன் முகம் ஒருமாதிரி இருக்கு?” அரக்க பரக்க வாசலை எட்டிப்பார்த்து பேத்தியை வாங்கிக்கொண்டார். அத்தனை நேரம் இறுக்கமாக இருந்த உடல் தளர்ந்துவிட்டது. மகளை பாதுகாப்பாக கொடுத்துவிட்டு அங்கேயே ஒரு ஓரமாய் அமர்ந்துவிட்டாள் சமுத்திரா.  “என்னமா ஆச்சு?” அந்நேரம் வீட்டிலிருந்த...
    “சமையல் முடிஞ்சிருச்சுல? நான் எக் பாயில் பண்ணிக்குறேன்.” என்று அவள் பாட்டிற்கு ஒரு அடுப்பை பிடித்துக்கொள்ள, உடனே வெளியேறிவிட்டாள் சமுத்திரா. முட்டையின் வாசம் அவளுக்கு சுத்தமாய் ஆகாது. அவளுக்கு மட்டுமல்ல, அவ்வீட்டில் யாருக்கும் ஆகாது. குடும்பமே சைவம், நன்மதி மட்டுமே முட்டை எடுத்துக்கொள்வாள்.  “என்ன முட்டை அவிக்குறாளா? இவளை என்னனு சொல்றது? சொன்னாலும் கேக்குறளா? அவ...
    என்ன பேச்சு பேசிவிட்டாள்? மகிழ்நனின் காதுகள் சிவந்தது. தாடை இறுக, கைமுஷ்டிகளை மடக்கியவன், கண்கள் மூடி வேக மூச்சுக்கள் எடுத்து தன்னை நிதானப்படுத்திக்கொள்ளப் பார்த்தான். வெளிவர சில நிமிடங்கள் தேவைப்பட்டது அவனுக்கு. ஆனாலும் அவள் வார்த்தை கொடுத்த குற்றச்சாட்டு அவனைப் போட்டு அழுத்த, “இவ்ளோதான் நீ என்னை புரிஞ்சி வச்சிருக்கியா? என்னை பார்த்தா அப்படியாடி தெரியுது...
    *1* பார்வை சென்று சேரும் இடமெல்லாம் இளம்பச்சையும் அடர்பச்சையும் இடையிடையே மலர்ந்து குலுங்கும் மலர்களுமாய் விரிந்திருந்த அவ்விடம் கண்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது போலிருந்தது. பஞ்சென மேனி தீண்டிய பொடி மழைத்தூறல்கள் அவ்விடத்திற்கு இன்னும் குளுமை சேர்த்து மனதை குளிர வைத்தது. ஆரவாரமின்றி மென்மையாக வீசும் தென்றல் தேகம் உரசிச் செல்ல, கைகளை பரபரவெனத் தேய்த்து சூடேற்றி...
    *5* சமைத்து முடித்துவிட்டு ஏதோவொரு சிந்தையில் கொல்லைப்புறத்திலே அமர்ந்துவிட்டவளை உசுப்பியது அவள் அலைபேசி அழைப்பு. “உன் போன்தான் அடிக்குது சமு. என்ன யோசனையில இருக்க நீ? கூப்பிட்டுட்டே இருக்கேன்.” என்று அவள் அலைபேசியை வந்துக்கொடுத்தான் கணவன். “ப்ச்…” நெற்றியில் அடித்துக்கொண்டவள், “சாரிங்க கவனிக்கல.” பரபரப்பாக அலைபேசியை வாங்கிப் பார்த்தவள், “அம்மாதான் கூப்பிடுறாங்க. அப்புறம் பேசிக்குறேன்.” என்றபடியே அவனை கவனித்தவள்,...
    “ஆசை ஆசையா வளத்துக் கட்டிக்கொடுத்த என் பொண்ணை ராணி மாதிரி நடத்தலைனாலும் போகட்டும்னு விடலாம், வேலைக்காரி மாதிரில்ல அந்த வீட்ல கிடந்து அல்லாடுறா. அதை சரிபண்ண துப்பில்லாம நாதியத்து நிக்குறேனே நானு. மூணு வேலை நெய்யும் பாலும் கொடுத்து வளத்தேன். கலகலன்னு இருக்குற பொண்ணு இன்னைக்கு குரல்ல சுரத்தே இல்லை. பேசிட்டு இருக்குறப்போவே தூங்கிட்டா....
    *4* “இந்த ஆரமும் நெக்லெஸும் செட்டா கிடைக்கும்னு நினைக்கவே இல்லை. இந்த பூ டிசைன் அழகா வந்துருக்கு.” வீட்டிற்கு வந்ததும் வாங்கியதை பிரித்துப் பார்த்து சொல்லிக்கொண்டிருந்தாள் கல்யாணி. கடையில் அம்மாவும் பிள்ளைகளும் தேர்ந்தெடுக்க, இறுதிவரை அவர்கள் தெரிவில் தலையிடவில்லை அவள். செழியன் சார்பாய் ஒரு ஆரமும் அதற்கு தோதாக அமைந்துவிட்ட நெக்லெஸ் மகிழ்நன் கணக்கிலும் வந்தது. இரண்டும்...
    “பாப்பாவுக்கு இந்த பாவாடை சட்டை நல்லாயிருக்கு சமு.” என்ற நன்மதியை பார்த்து சமுத்திரா புன்னகைக்க, கலைவாணி மகளிடம் வந்துவிட்டார். அவள் கையை பிடித்து சுரண்டி தனியே அழைத்து வந்தவர், “என்னடி நடக்குது இங்க?” “என்ன ம்மா?” மேடையிலிருந்து கீழிறங்கி வந்து சுற்றும் முற்றும் பார்த்தபடி இருந்தாள் சமுத்திரா. “எல்லாம் சரியாகிடுச்சுனு நான் கனவு கண்டுட்டு இருந்தா புள்ளையையும் தூக்கி...
    காலை இவள் வைத்திருந்த அலாரம் அடிக்கும் முன்னமே சமையலறையில் கச்சேரி சத்தம் கேட்க விழிப்பு வந்துவிட்டது சமுத்திராவுக்கு. சோம்பலுடன் புரண்டுப் படுத்தவள் மகளை நெருங்கி அணைத்துக்கொள்ளப் பார்க்க, தன் மீது பாரத்தை உணர்ந்தாள். விழிகள் பட்டென்று திறந்துகொண்டது. பாரமென உணர்ந்தது தன் கணவனின் கை என்றதும் நிமிர்ந்து பார்த்தாள் சமுத்திரா. நிர்மலமான உறக்கத்துடன் நடுவில் இருந்த...
    *6* “உன் வீட்டுக்காரர் வந்து கூட்டிட்டு போற வரைக்கும் இங்கேயே இரு. கொஞ்சமாச்சும் அந்த மனுஷனுக்கு தன் குடும்பங்குற எண்ணம் வரட்டும்.  தூரமாவா இருக்கோம் பக்கம்தான, வரட்டும்.” மகளை அமர வைத்து காலையிலேயே வீட்டுப்பாடத்தை துவங்கிவிட்டார் கலைவாணி. கணவனை அம்மா தவறாக சித்தரிப்பதில் சுத்தமாய் உடன்பாடில்லை சமுத்திராவுக்கு. பரிதவிப்பாக அம்மாவைப் பார்த்தாள். “நீ இப்படி பாக்குறதாலதான் சுலபமா நினைச்சுக்கிறாங்க...
    அன்று தீபாவளி சீர் செய்ய வந்திருந்தனர் கலைவாணியும் அய்யாவுவும். மாலை மகிழ்நன் வீட்டிற்கு வரும் நேரம் கணக்கிட்டு வந்துவிட, ஒரு மாதம் கழித்து பெற்றோரை பார்த்த மகிழ்வில் பம்பரமாய் சுழன்றாள் சமுத்திரா. காபி, தீனி கொடுத்து உபசரித்து மகளும் பெற்றோரும் விளையாடுவதை பார்த்துக்கொண்டிருந்தவளை, “நேரமே நைட் சாப்பாடு ரெடி பண்ணிட்டா அப்பாவும் அம்மாவும் சாப்பிட்டு போவாங்க...
    யோசனையுடன் வரவேற்ற கலைவாணி மகளை கூப்பிட, என்னவோ என்று வந்த சமுத்திராவும் அங்கு நன்மதியை சுத்தமாய் எதிர்பார்க்கவிலை. அவளைத் தொடர்ந்து ஓடி வந்த உமையாள் நன்மதியை பார்த்து அறிமுகச் சிரிப்பு சிரித்தாள்.  “சும்மா உன்னை பாத்துட்டு போலாம்னு வந்தேன் சமு.” சங்கடமாய் நன்மதி சொல்ல, புரியாமல் நின்றாள் சமுத்திரா. கலைவாணி மரியாதைக்கு காபி போட்டு கொடுக்க, “உன்கிட்ட...
    “உன்னை தேடி உடனே வராம இருந்ததுகூட உன்னை மேல மேல நோகடிக்க வேண்டாம்ங்குறது ஒரு காரணம். இன்னொன்னு நீ சொன்னதெல்லாம் எனக்கு புரிஞ்சுக்கவே நேரம் தேவைப்பட்டுச்சு.” என்று அவன் பேச, அவள் வேறு பேசினாள். “வீட்ல இருக்குறவங்களை விட்டுட்டு எனக்கு மட்டும் தனியா செய்யுணும்னு இல்லை. பொதுவா ரெண்டு முறை எல்லாரோடையும் போறோமா ஒரே ஒரு...
    *10* மாலை கணவன் வரும் நேரம் கூடத்தில் அமர்ந்து மகளுக்கென பிரத்தியேகமாக வாங்கியிருந்த புத்தகங்களைப் பரப்பி வைத்து அதிலிருந்த படங்களை உமையாளுக்கு காட்டி கதை சொல்லிக்கொண்டிருந்தாள் சமுத்திரா. சுவாரசியமாக கேட்டுக்கொண்டிருந்த உமையாளும் ஈடுபாட்டுடன் பதில் சொல்லிக்கொண்டிருக்க, உள்ளே தந்தை நுழையவும் புத்தகத்தோடு அவனிடம் ஓடிச் சென்றாள். புத்தகத்தில் இருந்ததை சுட்டிக்காட்டி சமுத்திரா சொல்லிக்கொடுத்ததை அவனுக்கு சொல்லிக்கொடுத்தாள். “அவனை உக்காரவிடேன்...
    *13* விரல்கள் நடுங்க உள்ளங்கைக்குள் அதனை மடக்கி, அடக்க முயன்றுகொண்டிருந்தாள் சமுத்திரா. உள்ளம் உதறல் எடுத்தது. என்ன பேசினோம் எப்படி பேசினோம் என்று மனதிற்குள் ஓட்டிப்பார்த்தவளுக்கு தானா இப்படி பேசியது என்றெண்ணம் அச்சமும் ஆச்சர்யமும் கொடுத்தது. அதோடு அத்தனை வருத்தம், இப்படி பேசும்படி ஆகிவிட்டதே. பேச வைத்துவிட்டார்களே. சச்சரவுகளின்றிய ஒரு வாழ்வை வேண்டியவளே சர்ச்சையாக மாற...
    *11* “உடம்பு முடியலையா சமு?”  சமுத்திரா பழக்கி வைத்திருந்த பழக்கம் அப்படி கேட்க வைத்தது. உடல் உபாதை என்றால் மட்டுமே சமுத்திரா வேலை செய்ய இயலாது ஓய்வெடுப்பாள் என்பதால் அவள் உடல்நிலையை பற்றி கேட்டுக்கொண்டே பின்தொடர்ந்த பத்மாவிற்கு பதில் சொல்ல விழையாதவள் மகளுக்கு கஞ்சி காய்ச்சும் வேலையில் இறங்க, அவளை பார்த்துக்கொண்டே இன்னொரு அடுப்பில் இட்லி ஊற்ற...
    “வேதா பங்ஷனுக்கு டேட் பிக்ஸ் பண்ணிட்டாங்க சமு. எப்போ வந்து உன்னை கூட்டிக்க?”  அவன் கேள்வியில் அவள் முறைக்க, “நாமதான முன்ன நின்னு செய்யணும்.” குரல் இறங்கியது. சென்றாக வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தே இருந்தாள் சமுத்திரா. பிறந்த வீட்டிற்கு வந்தும் நாட்கள் ஓடியிருக்க, இப்போது புகுந்தகம் சென்றே ஆகவேண்டும். விசேஷத்தில் முன்னே நிற்கவில்லை என்றால் தேவையின்றிய பேச்சுக்கள் வரும்....
    *9* இரவு பிரித்து வைத்திருந்த காய்கறிகளை அலசி எடுத்து மதியத்திற்காக மளமளவென நறுக்க ஆரம்பித்தாள் சமுத்திரா.  வாசல் தெளித்து வந்த பத்மா, “நைட்டே சொல்ல மறந்துட்டேன். புலியை கொஞ்சம் கூட ஊற போடு. வத்த குழம்பும் வடை பாயசமும் சேர்த்து செஞ்சிடலாம்.” “யாரும் வராங்களா அத்தை?” விஷேஷ நாட்களில், கல்யாணி வரும் சமயங்களில் மட்டுமே இதுபோன்று உணவுப் பட்டியல்...
    error: Content is protected !!