நின் வசமானேன்
அத்தியாயம் - 5
அலுவலகம் அமைதியாக இருந்தது. நிரஞ்சனும் பார்த்தியும் இல்லாததில் மூன்று வாரங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த வேலைகளை முடிப்பதில் முனைப்பாக ஈடுபட்டிருந்தாள் ஜெயந்தி.
இருவரும் அவளிடம் நேற்றிலிருந்து பேசவில்லை. விட்டதடா தொல்லை என்று இவளும் கண்டுகொள்ளவில்லை. நிரஞ்சன் ஏதோ விவரம் ஈமெயில் வழியாக கேட்டிருக்க, அவளும் அதன் வழியே அனுப்பியிருந்தாள்.
பின் மதியம் போல் மீட்டிங் என்று...
மூன்று வாரங்கள் கழித்து ஒரு வழியாக அலுவலகம் வந்தாள் ஜெயந்தி. அவளது அருமை திறமையை முற்று முதலாக உணர்ந்திருந்தார்கள் நிரஞ்சனும், பார்த்தியும். காலாண்டிற்கான ரிப்போர்ட்கள் தாமதமாக அனுப்பி, அதிலும் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு என்று நொந்து போயிருந்தார்கள். இதில் இன்னும் இரண்டு சேல்ஸ் ப்ரபோசல்கள் வேறு வந்துவிட ஒரு நாளைப்போல பத்து மணியாகிற்று கிளம்ப. இதில்...
அத்தியாயம் – 4
தி வால்ட் என்ற அந்த நிறுவனம் பிரம்மாண்டமான அந்த கட்டிடத்தின் ஒரு மாடியில் பெரிதான அரவமோ ஆடம்பரமோ இல்லாதிருந்தது.
குறித்த நேரத்திற்கு சற்று முன்னரே வந்தவளை ரிசெப்ஷனில் அமர வைத்திருந்தாள் ரிசெப்ஷனிஸ்ட். பத்து நிமிடம் சென்று ஒரு மீட்டிங் அறைக்கு அழைத்துச் சென்று அமரச் சொல்லி விடைபெற்றாள்.
அடுத்து சில நொடிகள் அமைதியில், “நான்...
அடுத்த மூன்று நாட்கள் அமைதியாகக் கழிந்தது. வீடு , ஆஃபீஸ், இடையில் ஒரு முறை ரமா சித்தி வீடு என்று சென்றது தவிர்த்து ஒன்றும் நடக்கவில்லை.
அலுவலகத்திலும் அன்று நடந்ததைப்பற்றி எதுவும் பேசவில்லை. மதிய உணவின்போது அஞ்சலி அனத்தத் தொடங்கியிருந்தாள்.
“சொன்னேன்ல மாசக் கடைசில நீ ரிப்போர்ட் அனுப்பக்கூடாது, சிக் லீவ் எடுக்கணும்னு. செய்யப் போறியா இல்லையா?”
“அட...
அத்தியாயம் – 3
உற்சாகமாக வீட்டுக்குள் நுழைந்தாள் ஜெயந்தி. கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக்கொண்டதில் வந்த மகிழ்ச்சி. சேல்ஸ் ஹெட் மட்டுமல்ல, கிளையன்ட் கூட திடீரென்று வந்தாலும், எல்லா கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் உடனுக்குடன் விளக்கம் கூறியதை பாராட்டியிருந்தனர்.
சூட்டோடு சூடாக அவளைப் பற்றி நல்லவிதமாக ஒரு மின்னஞ்சலும் நிரஞ்சனுக்கும், அவன் உயர் அதிகாரிக்கும், ஹெச்.ஆர்க்கும் கூட எழுதியிருந்தார்...
“எந்த விவரமும் கேட்கலைன்னு சொல்றேன். திருப்பி திருப்பி அதையே கேட்டா? போய் நான் சொன்னதை செய் சித்தி. ஏற்கனவே ஆஃபீஸ் கடுப்பு. அது பத்தாதுன்னு நீ வேற ஏழரையை கூட்டாத!”, இணைப்பை துண்டித்தாள்.
“துர்கைக்கு இவளுக்காக விளக்கு போட்ட இரண்டாவது வாரமே யாரோ நேராவே போய் பார்க்கற அளவுக்கு ஆர்வமா இருக்காங்க. இவ என்னடான்னா…”, என்று...
அத்தியாயம் – 2
ஜெயந்தி கண் விழித்த போது, சோஃபாவில் பாதி உடலும், கால்கள் தரையிலுமாக இருந்தாள். விலுக்கென்று நிமிர்ந்து பார்க்க, ஒற்றை சோஃபா காலியாக இருந்தது. மெல்ல எழுந்து அமர்ந்து ஹாலைச் சுற்றி பார்வையை ஓட்டினாள். பெரியவர் கண்களுக்குத் தட்டுப்படவில்லை.
‘போயிட்டாரா?’, வாயிற்கதவை நோக்க, அது பூட்டியிருந்தது. மெதுவாக எழுந்து, படுக்கையறை குளியலறை அவளது அலுவலக...
“மண்ணாங்கட்டி”, என்று முணுமுணுத்தவள், “இப்ப நிரஞ்சன் சர் அவங்களோட லன்ச் போயிருக்காரா?”
“ஆமாம். அவர் டீம்ல ப்ளஸ் ஒன்னா பார்த்திபன் போயிருக்கார்”,வசந்த் சொல்லவும், “கேட்டுச்சா? இப்பவாச்சம் மயக்கம் தெளிஞ்சுதா உனக்கு?” அடிக்குரலில் சீறினாள் அஞ்சலி.
“வசந்த். ஸ்லைட்ஸ் ப்ரிப்பேர்ட்னு என் பேர்தான போட்டிருந்துச்சு? நல்லா தெரியுமா அதுல ஜெயந்தி பேர் இல்லைன்னு?”, சற்றே குழப்பமாக ஜெயந்தி கேட்க,...
அத்தியாயம் – 1
கார்ப்பரேட் அலுவலகம் என்பதற்கான சர்வ லட்சணங்களும் பொருந்தியிருந்த அந்த குளிரூட்டப்பட்ட விரிந்து பரந்த அறை, அனேகமாக காலியாக இருந்தது. மதிய உணவு நேரம் என்பதால் ஆங்கிலம், இந்தி, தமிழ் என்று பலதரப்பட்ட மொழிகளின் இரைச்சல் இல்லாது, அமைதியை தத்தெடுத்திருந்தது.
ஒரு புறம் இருந்த கண்ணாடி அறைக்குள் லாப் டாப்பை தவிர்த்து இன்னும் இரண்டு...